உங்கள் குழந்தைப் பருவம் நினைவிருக்கிறதா? அதாவது, நீங்கள் 5 அல்லது 6 வயதாக இருந்த போது, உங்கள் தந்தை உங்களிடம் நீங்கள் அன்று முழுவதும் நல்லபடியாக நடந்து கொண்டால், நன்றாக படித்தால், எந்த விதமான தொந்தரவும் செய்யவில்லையென்றால், உங்களுக்கு மிட்டாய் வாங்கித் தருவதாக சொல்லியிருப்பார். அது போலவே, நோ கிளைம் போனஸ்(NCB) என்பது, நல்லதொரு கட்டுப்பாடான பைக் ஓட்டுநராக இருப்பதற்காக உங்களுக்குக் கொடுக்கப்படும் பரிசு போன்றது.
நல்லபடியாக பைக் ஓட்டுவதற்கும், போனஸிற்கும் என்ன சம்பந்தம் என்று இப்போது நீங்கள் கேட்கலாம். நீங்கள் பைக் இன்சூரன்ஸ் வாங்கியிருந்து, பாதுகாப்பாக வண்டி ஓட்டி, பைக்-ஐயும் சரியாக பராமரித்து வந்தால், நீங்கள் இன்சூரன்ஸ் கிளைம் செய்ய அவசியமிருக்காது. ஏனென்றால் கிளைம் செய்வதற்கு எந்த சேதமும் ஏற்பட்டிருக்காது!
பைக் இன்சூரன்ஸ்-இல் NCB என்றால் என்ன?
நீங்கள் பாதுகாப்பாக வண்டி ஓட்டி, ஒரு வருடத்திற்கு எந்த கிளைம்-உம் செய்யவில்லையென்றால், உங்கள் பாலிசியின் புதுப்பிப்பின்(renewal) போது, பிரீமியத்தில் உங்களுக்குத் தள்ளுபடி கிடைக்கும் என்று இப்போது இன்சூரர்கள் கூறுகிறார்கள். இந்த தள்ளுபடி தான் நோ கிளைம் போனஸ் எனப்படுகிறது.
வழமையாக, பாலிசி ஆண்டின் போது பாலிசிதாரர் எந்தவொரு கிளைம்-உம் செய்யாமல் இருக்கும் பட்சத்தில், அவருக்கு பிரீமியத்தில் வழங்கப்படும் தள்ளுபடியே NCB என்று பொருள் வரையறுக்கப்பட்டிருக்கிறது. மோசடியான கிளைம்களை தடுப்பதற்கும், ஒரு விதமான கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கும், நோ கிளைம் போனஸ் என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (இருப்பினும் நாங்கள் கிளைமையும், மக்களுக்கு உதவி செய்வதையும் விரும்புகிறோம்.)
இதில் நல்ல செய்தி என்னவென்றால், நீங்கள் தொடர்ச்சியாக இது போல் நல்லமுறையில் நடந்து வந்து, எந்தவொரு பிரச்சினைகள், சேதங்கள் அல்லது விபத்துக்களும் உங்கள் பைக்கிற்கு ஏற்படவில்லையென்றால், நீங்கள் உங்களுடைய நோ கிளைம் போனஸ்-ஐ சில வருடங்கள் சேர்ந்த பிறகு பெற்றுக் கொள்ளலாம். இது உங்களுக்கு எந்த அளவிற்கு உதவியாக இருக்கிறது என்பதை பின்னர் பார்க்கலாம்.
நீங்கள் புது பைக்-ஐ வாங்கும் போது உங்கள் NCB-ஐ புது பைக்-கிற்கு மாற்றிக் கொள்ள முடியுமா?
இன்னொரு நற்செய்தி என்னவென்றால், திரட்டப்பட்ட NCB போனஸ் அந்த பிரபலமான நாய்க்குட்டியை போன்றது, நீங்கள் போகுமிடமெல்லாம் அது கூடவே வரும். அதாவது, நீங்கள் பாலிசிதாரராக இருக்கும் சமயத்தில், நீங்கள் புது பைக் வாங்க முடிவு செய்தால், பழைய வாகனத்திலிருந்து உங்கள் புது வாகனத்திற்கு NCB-ஐ மாற்றிக் கொள்ளலாம். பாலிசிதாரர் என்ற முறையில் உங்கள் NCB உங்களுக்குத் தான், உங்கள் பைக்-கிற்கு அல்ல.