உங்கள் நெருங்கிய நண்பரிடமிருந்து, 10 வருடத்திற்கு மேல் உபயோகப்படுத்திய, பழைய இராயல் என்ஃபீல்டு புல்லட்-ஐ நீங்கள் வாங்குவதாக வைத்துக் கொள்ளுங்கள். பைக் ஓட்டுவதில் நீங்கள் மிகவும் ஆர்வமுள்ளவர், ஆனால் நீங்கள் பயன்படுத்த தொடங்குவதற்கு முன், அதற்கு இன்சூரன்ஸ் எடுக்க விரும்புகிறீர்கள்.
நீங்கள் புத்திசாலியாக இருப்பதினால், சவால்களை விடவும் உங்கள் பாதுகாப்பினை பெரிதாக விரும்புகிறீர்கள். ஆனால் நீங்கள் பழைய பைக் வாங்கும் போது வாங்கவிருக்கும் இன்சூரன்ஸ் பாலிசியின் நடைமுறையானது முற்றிலும் வேறானதாகும். அதற்கு நீங்கள் கீழ்க்கண்டவற்றில் ஒன்றை தேர்வு செய்யலாம்:
4 எளிமையான படிகளில் பழைய பைக் இன்சூரன்ஸை வாங்கவும்/புதுப்பிக்கவும்
படி 1 - பைக் இன்சூரன்ஸ் பக்கத்திற்கு செல்லவும். உங்கள் வண்டியின் அமைப்பு, மாடல், மாற்றுரு, பதிவீட்டு தேதி ஆகியவற்றை பூர்த்தி செய்யவும். ‘தோராய மதிப்பீட்டினை(quote) பெறவும்’ என்பதை அழுத்தி, உங்கள் பிளானை தேர்ந்தெடுக்கவும்.
படி 2 - தேர்டு பார்ட்டி பொறுப்பு மட்டும் அல்லது ஸ்டான்டர்ட் தொகுப்பு(காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ்) ஆகிய இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
படி 3 - உங்கள் முந்தைய இன்சூரன்ஸ் பாலிசி பற்றிய விபரங்களை அளிக்கவும் - காலாவதியான தேதி, கடந்த வருடம் செய்யப்பட்ட கிளைம், ஈட்டிய நோ கிளைம் போனஸ்
படி 4 - உங்கள் பிரீமியத்திற்கான தோராய மதிப்பீட்டினை(quote) நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் ஸ்டான்டர்ட் பிளானை தேர்ந்தெடுத்திருந்தால், ஐடிவி-ஐ(IDV) அமைத்து, ஆட்-ஆன்களை உங்கள் பிளானில் சேர்த்து அதனை மேலும் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம். அடுத்த பக்கத்தில் நீங்கள் இறுதி பிரீமியத்தை பார்ப்பீர்கள்.
பழைய பைக் இன்சூரன்ஸிற்கு எவ்வாறு பிரீமியம் கணக்கிடப்படுகிறது?
எந்தவொரு வாகனத்தின் பிரீமியமும், அதன் ஐடிவி(IDV), முந்தைய கிளைம் அனுபவம், பொருத்தியிருக்கும் துணைப்பொருள்கள், ஏதேனும் இருப்பின் மற்றும் பிற காரணிகளை கொண்டே கணக்கிடப்படுகிறது. பழைய பைக்-கிற்கு, இன்சூரன்ஸ் பிரீமியம் கீழ்க்கண்ட காரணிகளை கொண்டே கணக்கிடப்படும்: