இந்தியாவில், டூ-வீலர்கள் மிகவும் பிரபலமான வாகனங்களில் ஒன்றாகும். இது செலவு குறைந்ததாக இருக்கிறது என்பது மட்டுமே காரணமல்ல; குறிப்பாக கடுமையான டிராஃபிக்குடன் போராடும் நகரங்களில் இது உண்மையில் மிகவும் வசதியான போக்குவரத்து முறைகளில் ஒன்றாகும். நம் தினசரி பயணங்களுக்கு மத்தியில், உங்கள் அன்புக்குரிய டூ-வீலரை ஓட்டுவதற்கு மிகவும் அவசியமான ஒன்று அதன் டூ-வீலர் இன்சூரன்ஸ்.
டூ-வீலர் இன்சூரன்ஸ் உங்கள் பைக்கை சாத்தியமான இழப்புகள் மற்றும் சேதங்களிலிருந்து கவர் செய்யவும் பாதுகாக்கவும் உதவுவதோடு மட்டுமல்லாமல், சட்டத்தின் குட்புக்கிலும் உங்களை வைத்துக்கொள்கிறது. இந்தியாவில் குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் வைத்திருப்பது கட்டாயம் என்பதால், இது ஒன்று இல்லாததற்காக நீங்கள் அதிக அபராதம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என்பதையும் உறுதிசெய்கிறது.
கடந்த மூன்று வாரங்களாக நாம் கடைபிடித்து வரும் ஊரடங்கின் காரணமாக, பெரும்பாலான பைக் உரிமையாளர்கள் தங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸை புதுப்பிக்க மறந்துவிடக் கூடும். சிலர் இது இப்போதைக்குத் தேவையில்லை என்று கருதலாம், அல்லது நாம் அனைவரும் விரும்புவதுபோல் - அடுத்த முறை டூ-வீலர்களைப் பயன்படுத்தும் வரை இதைத் தள்ளிப்போடலாம்.
இருப்பினும், அடுத்த முறை உங்கள் பைக் இன்சூரன்ஸை புதுப்பிக்கும்போது இது நீண்ட செயல்முறைகளுக்கு வழிவகுப்பதோடு, உங்கள் பைக் இன்சூரன்ஸ் ஏற்கனவே காலாவதியாகியிருந்தால், உங்களின் நோ க்ளைம் போனஸையும் இழப்பீர்கள். இதை தெளிவுபடுத்த, உங்கள் பைக் இன்சூரன்ஸ் காலாவதியாகும்போது என்ன நடக்கும் என்பதைப் அறிந்துகொள்வோம்.