நீங்கள் உங்களுக்கென்று பைக் வாங்க வேண்டும் ஆனால் அதற்கு அதிகம் செலவழிக்க கூடாது என்று சூழ்நிலை வரும் போது, பயன்படுத்தப்பட்ட பைக்கை வாங்குவது ஒரு சிறந்த தேர்வு. உங்கள் மனதை நிலைப்படுத்தி நீங்கள் விரும்பும் பைக்கில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். நீங்கள் சாலையில் பல மைல் தூரம் ஒட்டி சாகசம் செய்து மகிழ்வதற்கு ஏற்றதொரு பைக்கை உங்களுக்காக வாங்குங்கள்.
என்ன பார்க்க வேண்டும், எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதில் குழப்பமாக இருக்கிறதா? கவலை வேண்டாம், நாங்கள் உங்களை வழிநடத்துகிறோம்.
நீங்கள் பயன்படுத்தப்பட்ட பைக்கை வாங்குவதற்கு முன்பு நீங்கள் சரிபார்க்க செய்யவேண்டிய செக்லிஸ்ட்
நீங்கள் ஓட்ட திட்டமிடும் முறைக்கு ஏற்ற பொருத்தமான பைக்கை வாங்க பாருங்கள்- உங்களை நீங்களே பைக்கை எப்படி மற்றும் என்ன நோக்கத்திற்காக பயன்படுத்துவீர்கள் என்று கேட்டுக்கொள்ளுங்கள, அதன் பின்னர் உங்கள் தேடலை அதற்கேற்றவாறு அமைத்திடுங்கள்.
ஆராய்ச்சி அவசியம் - பைக்குகள் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள விரும்பும் அனைத்தையும் குறிப்பாக நீங்கள் எந்த வகை பைக்கைத் தேர்வு செய்ய விரும்புகிறீர்களோ, அதைப் பற்றி அறிந்துக்கொள்ள ஆன்லைனில் நிபுணர்களிடம் பேசுங்கள்
பைக்கை சோதித்தால் - அதில் அடித்திருக்கும் பெயிண்ட், ஸ்க்ராட்சஸ், ஏதேனும் ப்ளூயிட் லீக்கேஜ், டயர்கள் அல்லது ஏதேனும் தேய்மானம் மற்றும் கீறல் ஆகியவை உள்ளனவா என்பதைப் பார்க்கவும். அதன் பொதுவான வெளிப்புறத் தோற்றத்தைப் பார்க்கவும். ஏதேனும் சேதம் இருக்கிறதா என்பதை தெளிவாக பார்க்கவும். ஸ்க்ராட்சஸ் மிக ஆழமாக இல்லாமல் இருந்தால் அதைப் பரவாயில்லை என ஏற்றுக்கொள்ளலாம்.
பிரேக்குகள்- ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான பைக்குகளுக்கு ட்ரம் பிரேக்குகள் இருக்கும். எனவே, பிரேக்குகளை நன்கு சோதித்து நீங்கள் அதை வைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா அல்லது மாற்ற விரும்புகிறீர்களா என்பதை தீர்மானிக்கவும். சர்வீஸ்-உம் பரிந்துரை செய்யப்படலாம்.
சர்வீஸ் ரெக்கார்ட் - மேற்கூறிய பைக் எத்தனை முறை சர்வீஸ்க்கு போயிருக்கிறது மற்றும் என்ன நோக்கத்திற்காக போயிருக்கிறது என்பதை முந்தைய உரிமையாளரிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளவும். .
ஏதேனும் பிழை இருந்தால் பைக்கின் VIN எண்ணை ஸ்கேன் செய்யவும் - ஒரு வண்டியின் அடையாள எண் என்பது வண்டியை சட்டபூர்வமாக அடையாளம் காணுவதற்கான ஒரு தனித்துவம் வாய்ந்த சீரியல் எண்ணாகும். பெரும்பாலான வண்டிகளில், ஹெட்லைட்டிற்கு பின்பு ஸ்டியரிங்கின் கழுத்து பகுதியில் VIN எண் பதிவிடப்பட்டிருப்பதை நீங்கள் கண்டறியலாம். இந்த எண் அபிஷியல் டைட்டிலுடன் பொருந்துகிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
விளக்குகள் - ஹெட்லைட் பல்ப், இண்டிகேட்டர்ஸ் மற்றும் டெயில் லயிட்ஸ் அனைத்தும் எரியும் நிலையில் இருத்தல் வேண்டும் அது மட்டுமின்றி போதியளவு பிரகாசமாகவும் நன்கு எரியும் நிலையில் இருத்தல் வேண்டும். அப்படியில்லையெனில், பல்புகளை மாற்றுங்கள்.
ஆவணங்களை சரிபார்க்கவும் - RC புக், பைக் இன்சூரன்ஸ், பைக் இன்சூரன்சின் காலாவதி தேதி, மாசுபாட்டு சான்றிதழ், ஒரிஜினல் இன்வாய்ஸ், நீட்டிக்கப்பட்ட வாரண்டி (ஏதேனும் இருந்தால்)
டெஸ்ட் டிரைவ் - வேகம், மைலேஜ் மற்றும் அதன் செயல்திறன் உங்களுக்குத் பிடித்திருக்கிறதா என்பதை சரிபார்க்க விரைவான ஒரு ரைட் செல்லுங்கள்.
உங்கள் லோக்கல் மெக்கானிக்கிடம் பேசி விரிவான மதிப்பாய்விற்கு திட்டமிடவும். நீங்கள் ஒரு தனியாரிடமிருந்து செகண்ட்-ஹேண்ட் பைக்கை வாங்க முடிவுசெய்துவிட்டாலும், நீங்கள் ஒப்பந்தம் போடுவதற்கு முன்பு ஒரு மூன்றாம் தரப்பினரால் அதை நன்கு ஆராய்வது சாலச்சிறந்தது.
நீங்கள் பயன்படுத்தப்பட்ட பைக்கை வாங்கியப்பிறகு, உங்களுக்கு மெக்கானிக்கல் பணி அவ்வளவாக தெரியவில்லையெனில் அதை அருகாமையில் இருக்கும் பைக் ஷாப்பிற்கு எடுத்து சென்று சோதிப்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். இதெல்லாம் முடிந்த பிறகு, எல்லா பேப்பர் ஒர்க்குகளையும் முடிப்பதற்கான நேரமிது, இதில் குறிப்பாக உரிமை மற்றும் இன்சூரன்ஸை உங்கள் பெயரின் கீழ் மாற்றுவது அடங்கும்.