பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டர்

இன்றே பைக் இன்சூரன்ஸின் தோராய மதிப்பீட்டினை பெற்றிடுங்கள்
search

I agree to the  Terms & Conditions

It's a brand new bike

பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் என்றால் என்ன?

பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டரை எப்படி உபயோகிப்பது?

எங்கள் பிரீமியம் கால்குலேட்டர் பயன்படுத்தி நீங்கள் எப்படி உங்கள் பைக்கிற்கு ஏற்ற சரியான பைக் இன்சூரன்ஸை பெறலாம் என்பதற்கான படி படியான விளக்கம் பின்வருமாறு!

படி 1

உங்கள் பைக்கின் மேக் மற்றும் மாடல், வகை, பதிவு தேதி மற்றும் நீங்கள் உங்கள் பைக்கை ஓட்டும் நகரம் போன்றவற்றைப் பதிவிடவும்.

படி 2

தோராய மதிப்பீட்டினை பெறவும் (Get Quote)’ என்பதை அழுத்தி உங்கள் விருப்பத்திற்கேற்ற பிளானை தேர்வுசெய்யுங்கள்.

படி 3

தேர்டு பார்ட்டி பைக் பாலிசி அல்லது ஸ்டாண்டர்ட் /காம்ப்ரிஹென்சிவ் பாலிசி இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

படி 4

உங்கள் கடைசி பைக் இன்சூரன்ஸ் பாலிசியின் - காலாவதியாகும் தேதி, கிளைம் ஹிஸ்டரி, என்சிபி(NCB) போன்ற விவரங்களை எங்களிடம் கூறுங்கள்.

படி 5

இப்போது நீங்கள் பக்கத்தின் கீழ் வலதுபுறத்தில் உங்கள் பாலிசி பிரீமியத்தைப் பார்ப்பீர்கள்.

படி 6

ஒருவேளை நீங்கள் ஸ்டாண்டர்ட் பிளானை தேர்ந்தெடுத்திருந்தால், உங்கள் ஐடிவியை ( IDV) அமைத்து, ஜீரோ டிப்ரிஸியேஷன்‌,ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ், எஞ்சின் மற்றும் கியர் புரொட்டெக்ஷன் போன்ற ஆட்-ஆன்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் பிளானை மேலும் தனிப்பயனாக்கலாம்.

படி 7

நீங்கள் இப்போது பக்கத்தின் வலது புறத்தின் உங்கள் இறுதி பிரீமியம் கணக்கிடப்படுவதை காண்பீர்கள்.

பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டரின் பயன்கள்

  • சரியான ஐடிவியை(IDV) தீர்மானிக்க உதவுகிறது - சரியான ஐடிவியை(IDV) உடைய  உங்கள் பைக் ஒருவேளை மொத்த இழப்புக்கு உட்பட்டாலோ அல்லது திருடப்பட்டுவிட்டாலோ,,உங்கள் பைக்கின் சந்தை மதிப்பிற்கு ஏற்ற இழப்பீட்டுத் தொகை உங்களுக்குக் கிடைக்கும். பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டரைப் பயன்படுத்துவது உங்கள் பைக்கின் விவரக்குறிப்புகளின் அடிப்படையில் சரியான ஐடிவியை(IDV) தீர்மானிக்க உதவுகிறது.

  • சரியான ஆட்-ஆன்ஸை தேர்ந்தெடுப்பது - உங்கள் பைக் இன்சூரன்ஸ் பாலிசிக்கான சரியான ஆட்-ஆன் இன்சூரன்ஸ்களைத் தேர்ந்தெடுப்பது, உங்களுக்கு ஏற்படக்கூடிய அனைத்து விதமான இக்கட்டான சூழ்நிலைகளிலும், உங்களுக்கு அதிக இன்சூரன்ஸ் கவரேஜ் மற்றும் கூடுதல் புரொட்டெக்ஷன் கிடைப்பதையும் உறுதிசெய்கிறது. பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் என்பது உங்கள் பிரீமியத்தை வெவ்வேறு விதமான ஆட்-ஆன் இன்சூரன்ஸ்கள் எவ்வாறு பாதிக்கிறது என்பதைத் தீர்மானிக்க உதவுகிறது, அதன்படி நீங்கள் உங்கள் பைக்கிற்கு சரியான கலவையில் ஆட்-ஆன் இன்சூரன்ஸ்களைத் ​தேர்ந்தெடுக்க முடியும்.

  • சரியான பிரீமியத்தைத் தேர்வு செய்யவும் - ஒரு பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டரைப் பயன்படுத்தி, நீங்கள் வெவ்வேறு பைக் இன்சூரன்ஸ் பிரீமிய மதிப்பீட்டினை ஒப்பிடலாம். அவ்வாறு செய்வது, உங்கள் தேவைக்கேற்ற பிரீமியத் தொகை கொண்டுள்ள சிறந்த பிளானை நீங்கள் தேர்ந்தெடுக்க உதவும்.

பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டரை பயன்படுத்தவது ஏன் முக்கியம்?

பைக் இன்சூரன்ஸை வாங்குதல் என்று வரும் போது, நம்மில் பெரும்பாலோர் அதை முடிந்தவரை விரைவாக செய்ய விரும்புகிறோம். எனவே, நீங்கள் உடனடியாகக் கிடைக்கும் மலிவான பைக் இன்சூரன்ஸை வாங்க விரும்புவீர்களா அல்லது சிறிது நேரம் எடுத்து ஆராய்ந்து உங்கள் பைக்கு பொருத்தமான இன்சூரன்ஸ் ஒன்றைத் தேர்வு செய்ய விரும்புவீர்களா? இரண்டாவதாக கூறப்பட்டுள்ளதை செய்வதே உங்களுக்கு உகந்ததாக இருக்கும். அவ்வாறு, நீங்கள் ஆராய்ந்து தேர்ந்தெடுக்க  உதவுவதற்கு பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் ஏன் பயன்படுத்த வேண்டும் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பின்வருமாறு:

குறைந்த விலை, அதிக சேமிப்பு

டூ-வீலர் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரின் வேலை என்பது உங்களுக்கு மலிவான பிரீமியத்தை தேர்வு செய்ய உதவுவது அல்ல, நீங்கள் மிகவும் குறைந்த விலையில் சிறந்த இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்க உதவுவதே ஆகும். இது ஏனென்றால், வெவ்வேறு காரணிகள் உங்கள் பைக் காப்பீட்டு பிரீமியத்தை எவ்வாறு பாதிக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் பைக்கை உகந்த முறையில் பாதுகாக்கும் ஒரு பிளானைத் தேர்வு செய்யும் காரணிகளின் சரியான கலவை எவ்வாறு உதவும் என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.

பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தை குறைக்கும்

டூ-வீலர் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரை பயன்படுத்தும் போது, காரணிகளில் செய்யப்படும் சில மாற்றங்களினால் உங்கள் பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தை எவ்வாறு அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம் என்பதை நீங்கள் கவனிப்பீர்கள். நீங்கள் அதன்படி வெவ்வேறு விருப்பங்களை முயற்சித்து  உங்களுக்கும், உங்கள் பைக்கிற்கும் எது சிறந்தது என்பதை தெரிந்துக்கொள்ள முடியும்!

தெரியப்படுத்திய முடிவு செய்ய உங்களுக்கு உதவும்

எல்லாவற்றிற்கும் மேலாக, அது உங்களது அன்பான பைக் மற்றும் நீங்கள் அதை குறைந்தபட்சம் எல்லா ஆபத்திலிருந்தும் பாதுகாக்க உதவும் ஒரு சிறந்த தெரியப்படுத்தப்பட்ட முடிவை எடுக்கலாம். ஒரு பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் அதன் கணக்கீடுகளில் வெளிப்படையானது மட்டுமின்றி உங்கள் பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதை நீங்களே பார்க்க அனுமதிக்கிறது.

புதிய மற்றும் பழைய பைக்குகளுக்கான இன்சூரன்ஸ் கால்குலேட்டரை பயன்படுத்தவும்

இந்தியாவிலிருக்கும் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்

தேர்டு பார்ட்டி

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் என்பது பைக் இன்சூரன்ஸின் மிகவும் பொதுவான வகைகளில் ஒன்றாகும்; இதில் தேர்டு பார்ட்டியை சேர்ந்தவரின், வாகனம் அல்லது சொத்துக்கு ஏற்படும் இழப்புகள் மற்றும் சேதங்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் கவர் செய்யப்படுகின்றன.

காம்ப்ரிஹென்சிவ்

ஒரு காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் என்பது தேர்டு பார்ட்டயை சேர்ந்தவரின் பொறுப்புகள் மற்றும் உங்கள் சொந்த பைக்கிற்கு ஏற்படும் சேதங்கள் இரண்டையும் உள்ளடக்கிய பைக் இன்சூரன்ஸின் மிகவும் மதிப்புமிக்க வகைகளில் ஒன்றாகும்.

காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர்

காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் முக்கியமான கூறுகளைப் பற்றி தெரிந்துகொள்ள மேலும் படிக்கவும்

சொந்த சேதங்கள்

இது அனைத்து காம்ப்ரிஹென்சிவ் மற்றும் ஓன் டாமேஜ் பைக் இன்சூரன்ஸ் பாலிசிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நன்மை உங்கள் ஓன் டாமேஜினால் ஏற்படும் இழப்புகளை கவர் செய்கிறது. உதாரணமாக; நீங்கள் ஒரு விபத்தில் சிக்கினால் அல்லது வெள்ளம் காரணமாக உங்கள் பைக் சேதமடைவது போன்றவைகள். உங்கள் காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் இந்த கவரேஜ் நீங்கள் ஓட்டும் பைக் (மேக், மாடல், ஆண்டு, சிசி) மற்றும் நீங்கள் ஓட்டும் நகரத்தை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ

(ஐடிவி-IDV) உங்கள் பைக்கின் ஐடிவி(IDV) என்பது உங்கள் பைக்கின் மார்க்கெட் மதிப்பு. ஒருவேளை உங்கள் பைக் திருடப்பட்டாலோ அல்லது பழுதுபார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்தாலோ ஏற்படும் செலவுகளை ஈடுசெய்யக்கூடிய தொகையை தீர்மானிக்கிறது. டிஜிட்டின்  காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரில், உங்கள் பைக்கின் விவரக்குறிப்புகளின் அடிப்படையில் உங்கள் ஐடிவியை(IDV) நீங்களே தனிப்பயனாக்கலாம்.

ஆட் -ஆன் கவர்ஸ்

தனிப்பயனாக்கல்கள் என்பது அற்புதமானவை. அதுவே காம்ப்ரிஹென்சிவ் பைக் பாலிசியை சிறப்புக்குரியதாக்குகிறது. நீங்கள் உங்கள் பைக்குக்கு தேடும் புரொடெக்ஷனின் அடிப்படையில், ஜீரோ-டிப்ரிஷியேஷன் கவர், ரிட்டர்ன் டு இன்வாய்ஸ், பிரேக்டவுன் ஆசிஸ்டன்ஸ் போன்ற ஆட்-அன் கவர்களுடன் உங்கள் காம்ப்ரிஹென்சிவ் பைக் பாலிசியை தனிப்பயனாக்கிக்கொள்ளலாம்.

டிடக்டபிள்ஸ்

டிடக்டபிள்ஸ் என்பது கிளைமின் போது, நீங்கள் செலுத்தும் தொகையே ஆகும். ஒரு காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் பாலிசியில், உங்கள் பங்கின் அளவு என்பது நீங்கள் விருப்பப்பட்டால் செலுத்தலாம். நீங்கள் எவ்வளவு அதிக சதவீகத்தை தேர்வு செய்கிறீர்களோ, காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸின் பிரீமியம் அவ்வளவு குறைவாகவும் அதற்கு நேர்மாறாகவும் இருக்கும்.

நோ கிளைம் போனஸ்

ஒவ்வொரு கிளைம் இல்லாத ஆண்டிற்கும், உங்கள் பைக் இன்சூரர் உங்கள் முதல் கிளைம் இல்லாத வருடத்திற்கு 20% தள்ளுபடியிலிருந்து தொடங்கி, தள்ளுபடியுடன் உங்களுக்கு வெகுமதியும் வழங்குவார். நீங்கள் எவ்வளவு அதிகமாக என்சிபி (NCB) வைத்திருக்கிறீர்களோ, உங்கள் காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸின் பிரீமியம் அவ்வளவு குறைவாக இருக்கும்.

தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள்

தேர்டு பார்ட்டியை சேதங்கள் மற்றும் இழப்புகளில் இருந்து பாதுகாக்கும் பொறுப்பு சட்டத்தை பொறுத்த வரை அவசியமான ஒன்றாகும். எனவே, உங்கள் காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸின் இந்த அம்சம் நிலையானது, மேலும் ஐஆர்டிஏஐஇ(IRDAI) ஆல் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது

உங்கள் பைக்கின் மேக் அண்ட் மாடல்

தேர்டு பார்ட்டியை சேதங்கள் மற்றும் இழப்புகளில் இருந்து பாதுகாக்கும் பொறுப்பு சட்டத்தை பொறுத்த வரை அவசியமான ஒன்றாகும். எனவே, உங்கள் காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸின் இந்த அம்சம் நிலையானது, மேலும் ஐஆர்டிஏஐஇ(IRDAI) ஆல் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது

உரிமையாளர்-டிரைவருக்கான பர்சனல் ஆக்சிடென்ட் கவர்

தேர்டு பார்ட்டியை சேதங்கள் மற்றும் இழப்புகளில் இருந்து பாதுகாக்கும் பொறுப்பு சட்டத்தை பொறுத்த வரை அவசியமான ஒன்றாகும். எனவே, உங்கள் காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸின் இந்த அம்சம் நிலையானது, மேலும் ஐஆர்டிஏஐஇ(IRDAI) ஆல் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது

உங்கள் பைக்கின் பயன்பாட்டுக் காலம்

பைக் எவ்வளவுக்கு எவ்வளவு புதிதோ அவ்வளவு ஆபத்தையும் அது எதிர்கொள்கிறது. எனவே, நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸை கணக்கிட உங்கள் பைக்கின் வயதும் உதவிப்புரிகிறது.

தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர்

தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் என்பது மோட்டார் வாகனச் சட்டத்தின்படி உங்களுக்குத் தேவையான குறைந்தபட்ச பைக் இன்சூரன்ஸ் ஆகும். இது உங்கள் பைக் ஒருவேளை நபரையோ, ஒருவருக்கு சொந்தமான சொத்தையோ அல்லது மற்றொரு வாகனத்தையோ மோதுதல் போன்ற தேர்டு பார்ட்டிக்கு எதிரான சேதங்கள் மற்றும் இழப்புகளை மட்டுமே உள்ளடக்கியது.

தேர்டு-பார்ட்டி சேதங்கள்

தேர்டு-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் என்பது தேர்டு-பார்ட்டி தொடர்பான சேதங்கள் மற்றும் இழப்புகளை மட்டுமே கவர் செய்யும்.எ னவே, உங்கள் தேர்டு-பார்ட்டி இன்சூரன்ஸ் பிரீமியம் தேர்டு-பார்ட்டி பொறுப்புகளை மட்டுமே சார்ந்திருக்கும், இதன் வரம்பு ஐஆர்டிஏஐ(IRDAI) ஆல் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாக இருக்கிறது.

ஓனர்-டிரைவருக்கான பர்சனல் ஆக்சிடென்ட் கவர்

நீங்கள் பைக் ஓட்டும் போது உங்களை பாதுகாத்துக்கொள்ள ஹெல்மெட் அணிந்து செல்வது எவ்வளவு அவசியமோ, அதேபோல் உங்கள் பைக் இன்சூரன்ஸில் பர்சனல் ஆக்சிடென்ட் கவரை உட்படுத்துவதும் அவசியமாகும்.

உங்கள் பைக் காப்பீட்டில் தனிப்பட்ட விபத்து காப்பீட்டை சேர்ப்பதும் கட்டாயமாகும்.

உங்கள் வண்டியின் CC

உங்கள் பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தை கணிப்பதில் உங்கள் பைக்கின் சிசி ஒரு பெரிய காரணியாக உள்ளது. இது ஏனெனில் உங்கள் பைக் அதிக சிசியை கொண்டிருந்தால்  அதனால் வேகமாக செல்ல முடியும்,இதன் விளைவாக ஆபத்து அதிகரிக்கிறது. தேர்டு-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் துறையில், பல்வேறு சிசி வரம்புகளின் அடிப்படையில் பிரீமியம் என்பது ஐஆர்டிஏஐயால்(IRDAI) முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது.

தேர்டு-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை

என்ஜின் கொள்ளளவுடன் டூ வீலர்ஸ்

பிரீமியம் தொகை

75ccக்கு உட்பட்டது

₹538

75cc மேற்பட்டது ஆனால் 150ccக்கு உட்பட்டது

₹714

150cc மேற்பட்டது ஆனால் 350cc க்கு உட்பட்டது

₹1,366

350ccக்கு மேற்பட்டது

₹2,804

பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தை குறைப்பதற்கான டிப்ஸ்

உங்கள் பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தை குறைக்க உதவும் டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் பின்வருமாறு

உங்கள் வாலன்டரி டிடக்டபிள்களை அதிகரித்துக்கொள்ளுங்கள்

நீங்கள் ஒரு பாதுகாப்பான ஓட்டுனராகவும், பெருமளவில் சுத்தமான கிளைம் நிலையைக் கொண்டிருந்தாலும், உங்கள் பைக் காப்பீட்டு பிரீமியத்தை குறைக்க உதவும் வகையில் வகையில் நீங்கள் உங்கள் வாலன்டரி டிடக்டபிள்களை அதிகரிப்பது குறித்து நீங்கள் பரிசீலிக்கலாம்.

நன்றாக வண்டி ஓட்டுவதற்கான பதிவை பராமரித்தல்

இது மிகவும் வெளிப்படையானது. பாதுகாப்பாக வண்டி ஓட்டுவதன் மூலம் நீங்கள் பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கியிருப்பது மட்டுமின்றி கிளைம்களையும் தவிர்க்க முடியும். அதனால் ஒவ்வொரு பைக் இன்சூரன்ஸ் ரினிவலின் போதும் நோ கிளைம் போனஸ்க்கான வெகுமதியையும் பெறுவீர்கள்.

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் பேசுங்கள்

வெளிப்படையாக பேசுவது என்பது எப்போதும் உதவுகிறது. உங்கள் கவலைகள் என்னவாக இருந்தாலும் சரி, அதை உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் வெளிப்படையாக கூறுங்கள், உங்களுக்குத் தெரியாது, அவர்கள் உங்களுக்கு மிகவும் பொருத்தமான தீர்வை வழங்கலாம் அல்லது ஒருவேளை குறைந்த பிரீமியம் தொகை உள்ள திட்டத்தை கூட  கொடுக்கலாம்!

உங்கள் பாலிசியை சரியான நேரத்தில் புதுப்பிக்கவும்

நாம் அனைவரும் சில விஷயங்களை தள்ளிப்போடுவது சகஜமே, ஆனால் இந்த விஷயத்தில் அதை செய்யாதீர்கள். உங்கள் பைக் இன்சூரன்ஸ் பாலிசி காலாவதியாகும் தேதிக்கு முன்பே புதுப்பிக்கவும். இது பைக் ஆய்வு செயல்முறையை மட்டும் நீக்குவதில்லை, நீங்கள் நோ கிளைம் போனஸ் மற்றும் தள்ளுபடி பெறவதையும் உறுதி செய்யும்.

பொறுத்தமான ஆட்-ஆன்களை தேர்வு செய்யவும்

ஆட்-ஆன்கள் மற்றும் கவர்கள் உங்கள் பைக்கிற்கு கூடுதல் பாதுகாப்பு அடுக்கை சேர்க்கும் ஒரு அற்புதமான வழியாகும், ஆனால் அது உங்கள் பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தை அதிகரிக்கிறது. எனவே,நாங்கள் உங்களை பொறுத்தமான ஆட்-ஆன்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.

டிஜிட் மூலம் ஏன் பைக் இன்சூரன்ஸை தேர்வு செய்கிறோம்?

உங்கள் பைக் இன்சூரன்ஸ் ஒரு சூப்பரான எளிமையான கிளைம் செயல்முறையுடன் மட்டுமல்லாமல், கேஷ்லெஸ் செட்டில்மென்டைத் தேர்வு செய்யும் விருப்பத்துடனும் வருகிறது

கேஷ்லெஸ் ரிப்பெயர்ஸ்

கேஷ்லெஸ் ரிப்பெயர்ஸ்

இந்தியா முழுவதும் 4400+ கேஷ்லெஸ் நெட்ஒர்க் கேரேஜசிலிருந்து நீங்கள் தேர்வுசெய்யலாம்

ஸ்மார்ட்போன் எனேபிள்ட் சுய மதிப்பீடு (செல்ப் இன்ஸ்பெக்க்ஷன்)

ஸ்மார்ட்போன் எனேபிள்ட் சுய மதிப்பீடு (செல்ப் இன்ஸ்பெக்க்ஷன்)

ஸ்மார்ட்போன் எனேபிள்ட் சுய மதிப்பீடு (செல்ப் இன்ஸ்பெக்க்ஷன்) மூலம் விரைவான பேப்பர்லெஸ் கிளைம்ஸ்

சூப்பர்-பாஸ்ட் கிளைம்ஸ்

சூப்பர்-பாஸ்ட் கிளைம்ஸ்

டூ-வீலர் கிளைம்களின் சராசரியான டர்ன் அரௌண்ட் டைம் 11 நாட்கள்

உங்கள் வாகனத்தின் ஐடிவி(IDV)யை தனிப்பயனாக்கலாம்

உங்கள் வாகனத்தின் ஐடிவி(IDV)யை தனிப்பயனாக்கலாம்

எங்களுடன் நீங்கள் உங்கள் வாகனத்தின் ஐடிவி-(IDV)யை உங்கள் விருப்பத்திற்கேற்ப தனிப்பயனாக்கலாம்

24*7 மணி நேர வாடிக்கையாளர் சேவை

24*7 மணி நேர வாடிக்கையாளர் சேவை

24*7 அழைப்பு வசதி தேசிய விடுமுறை நாட்களிலும் உண்டு

டிஜிட் மூலம் பெறும் பைக் இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

டிஜிட்டின் பயன்கள்

பிரீமியம்

₹714 லிருந்து துவங்கிறது

நோ கிளைம் போனஸ்

50% வரையிலான தள்ளுபடி

தனிப்பயனாக்கும் ஆட்-ஆன்கள்

5 ஆட்-ஆன்கள் கிடைக்கும்

கேஷ்லெஸ் ரிப்பெயர்ஸ்

4400+ க்கும் மேற்பட்ட கேரேஜ்கள் இருக்கின்றன

கிளைம் ப்ராஸஸ்

ஸ்மார்ட்போன் எனேபிள்ட் கிளைம் ப்ராஸஸ். ஆன்லைனில் ஏழே நிமிடங்களில் செய்து முடிக்கலாம்

சொந்த சேதத்திற்கான கவர்

கிடைக்கிறது

தேர்டு பார்ட்டிக்கான சேதங்கள்

தனிநபர் சேதங்களுக்கு அன்லிமிடெட் லயபிளிட்டி , சொத்து / வாகன சேதங்களுக்கு 7.5 லட்சம் வரை

எங்களுடன், VIP(விஐபி) கிளைம்களுக்கான அணுகலை பெறுங்கள்

நீங்கள் எங்கள் டூ வீலர் இன்சூரன்ஸ் பிளானை வாங்கிய பிறகோ அல்லது ரினிவ் செய்த பிறகோ, முற்றிலுமான டிஜிட்டல் கிளைம்ஸ் ப்ராஸஸ் 3 ஏ -படியில் இருப்பதால் நீங்கள் டென்க்ஷன் ப்ரீயாக வாழலாம்!

படி 1

வெறும் 1800-258-5956 அழைத்தால் போதும். எந்த படிவங்களும் நிரப்ப தேவையில்லை.

படி 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு சுய ஆய்வுக்கான(செல்ப் இன்ஸ்பெக்க்ஷன்) இணைப்பைப் பெறுங்கள். படிப்படியான செயல்முறை மூலம் வழிகாட்டப்பட்ட படி உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து உங்கள் வாகனத்திற்கு ஏற்பட்டிருக்கும் சேதங்களை புகைப்படமாக எடுக்கவும்.

படி 3

நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் பழுதுபார்க்கும் முறையைத் தேர்வு செய்யவும். அதாவது எங்களது நெட்ஒர்க் கேரேஜ்களின் மூலம் ரீஎம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் என்பதை தேர்வுசெய்யலாம்.

Report Card

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்ஸ் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படும்?

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதை செய்வது பாராட்டுதலுக்குரியது!

டிஜிட் கிளைமின் ரிப்போர்ட் கார்டுகளை படிக்கவும்

பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் தொடர்பான எப்ஏகியூக்கள்