நீங்கள் புதுச் சட்டை வாங்க எண்ணும் போது, ஜவுளிக் கடைக்கு சென்று ஏதோ ஒரு சட்டையை வாங்குவீர்களா? இல்லை, என்பது தான் உண்மை! நீங்கள் அங்கிருக்கும் எல்லா சட்டைகளையும் பார்ப்பீர்கள், ஒப்பிடுவீர்கள், அதில் ஒன்றை தேர்வு செய்து டிரையல் ரூமிற்கு சென்று, அது உங்களுக்கு பொருத்தமாகவும், சரியான அளவிலும் இருக்கிறதா எனவும் சோதித்துப் பார்ப்பீர்கள்.
பணம் செலுத்துமிடத்திற்கு செல்வதற்கு முன், அந்த சட்டை எந்த சேதமும் இல்லாமல் இருக்கிறதா என்பதை பரிசோதித்துப் பார்த்து விட்டு தான் நீங்கள் பணம் செலுத்துவீர்கள். நீங்கள் பைக் இன்சூரன்ஸ் வாங்குவதற்கு முன்னும் கூட இதையே தான் செய்ய வேண்டும், கிடைக்கப்பெறும் விருப்பத்தேர்வுகளை சரிபார்த்து, உங்களுக்குப் பொருந்தும் பாலிசியையே நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால், பிற்காலத்தில் பாலிசிக்கு பணம் செலுத்திய பிறகு, உங்களுக்குச் சாதகமல்லாத விதிமுறைகள் ஏதேனும் இருப்பின் உங்களுக்குச் சங்கடங்கள் நேரக் கூடும்.
உங்கள் தேவைகளுக்கேற்றவாறு பொருந்துகின்ற, விலை மலிவாகவும் கிடைக்கிற பாலிசி இருப்பது பின்னர் உங்களுக்குத் தெரிய வந்தால், நீங்கள் வருந்தக்கூடும். எனவே நீங்கள் பாலிசியை வாங்குவதற்கு முன்பு பல்வேறு பைக் இன்சூரன்ஸ் பாலிசிக்களை ஆய்வு செய்து, ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமாகும்.