ஸ்டெப் 1 - பைக் இன்சூரன்ஸ் பக்கத்திற்குச் சென்று, உங்கள் வண்டியின் தயாரிப்பு, மாடல், வேரியண்ட், பதிவு செய்த தேதி ஆகியவற்றை நிரப்பவும் (புதிய பைக்கைத் தேர்ந்தெடுக்கவும்). 'மதிப்பீட்டினைப் பெறவும்' என்பதை கிளிக் செய்து, உங்களுக்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 2 - தேர்டு பார்ட்டி லையபிலிட்டி மட்டும் அல்லது ஸ்டாண்டர்டு பேக்கேஜ் (காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) இன்சூரன்ஸ்) ஆகியவற்றிற்கு இடையே உங்களுக்கு வேண்டியதைத் தேர்வு செய்யவும்.
ஸ்டெப் 3 - நீங்கள் வைத்துள்ள முந்தைய நோ கிளைம் போனஸ் குறித்த விவரங்களை உள்ளிடவும்.
ஸ்டெப் 4 - உங்கள் பிரீமியத்திற்கான தோராய மதிப்பீட்டினைப் பெறுவீர்கள். நீங்கள் ஒரு ஸ்டாண்டார்டு பிளானைத் தேர்ந்தெடுத்து இருந்தால், தேவையான ஆட்-ஆன்களைத் தேர்ந்தெடுத்து, ஐடிவி-யை உங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து கொண்டு நீங்கள் அதனை மேலும் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம். இறுதியான, பிரீமியத்தை நீங்கள் அடுத்த பக்கத்தில் காண்பீர்கள்.