ஆன்லைனில் தேர்டு பார்ட்டி (மூன்றாம் தரப்பு) கார் இன்சூரன்ஸ் பெறுதல்

தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசியை 2 நிமிடத்தில் புதுப்பிக்கவும்

Third-party premium has changed from 1st June. Renew now

தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் என்பது, தேர்டு பார்ட்டி லையபிலிட்டி (பொறுப்பு) இன்சூரன்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது. இது தேர்டு பார்ட்டியினரின் வாகனம், நபர் அல்லது சொத்திற்கு ஏற்படும் எந்தவொரு இழப்பு அல்லது சேதத்திற்கான பொறுப்பினை நீங்கள் ஏற்பதிலிருந்து உங்களை பாதுகாக்கும் இன்சூரன்ஸ் ஆகும். துருதிருஷ்டவசமாக, இது உங்கள் சொந்த வாகனத்தின் சேதங்களிலிருந்து உங்களை பாதுகாப்பதில்லை.

இந்திய மோட்டார் வாகனச் சட்டப்படி, தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் என்பது கட்டாயமான ஒன்றாகும். மேலும், இது இல்லையெனில் உங்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும்; அதோடு உங்கள் கார் ஏதேனும் தேர்டு பார்ட்டி வாகனம், நபர் அல்லது சொத்தினை சேதப்படுத்தி விட்டால், அதனால் ஏற்படவிருக்கும் இழப்புக்களிலிருந்து உங்களை பாதுகாப்பதற்கும் இந்த இன்சூரன்ஸ் உதவுகிறது.

உதாரணத்திற்கு, நீங்கள் தவறுதலாக மற்றொருவருடைய காரின் ஹெட்லைட்டினை (headlight) சேதப்படுத்திவிட்டால், இந்த விபத்தினால் தேர்டு பார்ட்டியினருக்கு நேரக்கூடிய இழப்புக்களை உங்கள் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் ஏற்றுக் கொள்கிறது.

கார் இன்சூரன்ஸ் ஒப்பீடு பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.

தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் விலை

காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் போலல்லாமல், தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் என்பது, உங்கள் என்ஜின் CC-ஐப் பொறுத்தே அமையும். மேலும், அதற்குரிய பிரீமியம்கள் இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையினால் (IRDAI) முன்பே தீர்மானிக்கப்படுகிறது.

பிரைவேட் கார்களின் என்ஜின் ஆற்றல் பிரீமியம் விலை
1000cc-க்கு மிகாதது ₹2,072
1000cc-க்கு மேற்பட்டது, ஆனால் 1500cc-க்கு மிகாதது ₹3,221
1500cc-க்கு மேற்பட்டது ₹7,890

தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸில் என்னவெல்லாம் உள்ளடக்கப்பட்டுள்ளது?

தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸில் எவையெல்லாம் உள்ளடக்கப்படவில்லை?

உங்கள் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசியில் எவையெல்லாம் உள்ளடக்கப்படவில்லை என்பதையும் அறிந்து கொள்வது முக்கியமாகும், அப்போது தான் நீங்கள் கிளைம் செய்யும் நேரத்தில் உங்களுக்கு எந்த சங்கடங்களும் நேராது. இது குறித்து கீழே சில சந்தர்ப்பங்கள் விளக்கப்பட்டுள்ளன:

ஓன் டேமேஜஸ்/சொந்த சேதங்கள்

தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசியில் உங்கள் சொந்த காருக்கு ஏற்படும் சேதங்களுக்கு பாதுகாப்பளிக்கப்படாது.

மது அருந்தி விட்டு கார் ஓட்டுவது அல்லது லைசென்ஸ் இன்றி கார் ஓட்டுவது

நீங்கள் மது அருந்திவிட்டு வண்டி ஓட்டியிருந்தாலோ அல்லது செல்லத்தக்க 4-வீலர் லைசென்ஸ் இன்றி வண்டி ஓட்டியிருந்தாலோ உங்கள் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் எந்த சேதத்திற்கும் பொறுப்பேற்காது.

செல்லத்தக்க டிரைவிங் லைசென்ஸ் உடையவர் இன்றி வண்டி ஓட்டுவது

உங்களிடம் பழகுநர் லைசென்ஸ் (learner license) இருந்து, முன் பயணி இருக்கையில் செல்லத்தக்க டிரைவிங் லைசென்ஸ் உடையவர் இன்றி நீங்கள் வண்டி ஓட்டியிருந்தால் - இது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் செய்யும் கிளைம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

டிஜிட் வழங்கும் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள் டிஜிட் பலன்கள்
பிரீமியம் ரூ. 2072/-லிருந்து தொடங்குகிறது
வாங்குகின்ற செயல்முறை ஸ்மார்ட் ஃபோன் மூலம் செய்யக்கூடிய எளிதான செயல்முறை. ஐந்தே நிமிடத்தில் முடித்து விடலாம்!
கிளைம் செட்டில்மெண்ட் பிரைவேட் கார்களின் 96% கிளைம்கள் செட்டில் செய்யப்படுகின்றன
தேர்டு பார்ட்டியினருக்கு ஏற்படும் தனிப்பட்ட சேதங்கள் வரம்பற்ற லையபிலிட்டி/பொறுப்புக்கள்
தேர்டு பார்ட்டியினருக்கு ஏற்படும் சொத்து சேதங்கள் 7.5 லட்சம் வரை
பர்சனல் ஆக்சிடன்ட் கவர் 15 லட்சம் வரை
பர்சனல் ஆக்சிடன்ட் கவர் பிரீமியம் ₹220/-

தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸிற்கு எவ்வாறு கிளைம் செய்வது?

  • விபத்து நிகழும் பட்சத்தில், உரிய தேர்டு பார்ட்டி முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்து, குற்றப்பத்திரிகையை பெற வேண்டும்.
  • நஷ்ட ஈடு வழங்க வேண்டி இருந்தால், உங்கள் சார்பில் அதனை நாங்கள் பார்த்துக் கொள்வோம். 1800-103-4448 என்ற எண்ணில் எங்களை தொடர்பு கொள்ளவும்.
  • விதிமுறைகள் மீறப்பட்டிருக்காத பட்சத்தில், உங்கள் சார்பில் பணச் செலவின்றி தீர்த்து வைப்பதற்கு நாங்கள் முயற்சி செய்வோம். அவசியமான சூழ்நிலையில், நீதிமன்றத்தில் உங்களுக்காக நாங்கள் ஆஜராவோம்.
  • முக்கியமாக, நீங்கள் நல்லதொரு குடிமகனாக இருந்து உங்களின் அலட்சியத்தினால் ஏற்பட்ட தவற்றினை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோரும் பட்சத்தில், உங்கள் டிஜிட் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் உங்களுக்கு உதவ தயாராகவே இருக்கும்.
  • பர்சனல்-ஆக்சிடன்ட்/தனிப்பட்ட-விபத்து சம்பந்தமாக கிளைம் செய்யும் பட்சத்தில், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், 1800-258-5956 என்ற எண்ணில் எங்களை தொடர்பு கொள்ள வேண்டியது மட்டுமே. மற்ற அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்வோம்!

தேர்டு-பார்ட்டி கார் இன்சூரன்ஸ் கிளைம் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

  • விபத்து நேரும் பட்சத்தில், உரிய தேர்டு பார்ட்டி சேதம் ஏற்பட்ட சமயத்தில் FIR தாக்கல் செய்ய வேண்டும் - அதன் பின் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் தெரிவிக்கப்பட வேண்டும். இது இல்லாமல், தேவையான இழப்பீடு வழங்கப்பட முடியாது.
  • விபத்து ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், எதிர் தரப்பினரின் தவற்றினை நிரூபிப்பதற்கு தேர்டு பார்ட்டியினரிடம் சரியான சாட்சியம் இருப்பது முக்கியமாகும்.    
  • சிறிய அளவிலான சேதங்கள் மற்றும் இழப்புக்கள் நேரும் சூழ்நிலையில், நீதிமன்றத்திற்கு வெளியிலேயே அதனை தீர்த்துக் கொள்வதற்கு முயற்சி செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. ஏனென்றால், FIR தாக்கல் செய்வது மற்றும் மோட்டார் வாகன நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்வது போன்றவைகளுக்கு அதிக நாட்கள் ஆகும். 
  • ஐஆர்டிஏஐ (IRDAI)-இன் விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் படி, கிளைம் தொகை மோட்டார் விபத்து கிளைம்ஸ் நீதிமன்றத்தினால் முடிவு செய்யப்படும். தேர்டு பார்ட்டியினருக்கு ஏற்படும் தனிப்பட்ட சேதங்களுக்கு மேல் வரம்பு எதுவும் இல்லையென்றாலும், தேர்டு பார்ட்டி வாகனம் அல்லது சொத்திற்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புக்களுக்கு ரூ.7.5 இலட்சம் வரையில் இழப்பீடு வழங்கப்படுவதற்கான வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு சீக்கிரமாக செட்டில் செய்யப்படுகின்றன? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தினை மாற்றும் நேரத்தில் உங்கள் மனதில் எழ வேண்டிய முதல் கேள்வி இது தான். நீங்கள் இவ்வாறு செய்வது சரி தான்! டிஜிட் கிளைம்ஸ் ரிப்போர்ட் கார்டினை வாசிக்கவும்

எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களைப் பற்றி கூறுவதென்ன

ரவி மிஷ்ரா
★★★★★

இடைவிடாத ஆதரவினையும், துரிதமான பதில்களையும் நல்கிய கோ டிஜிட் குழுவினை நான் மனமார பாராட்டுகிறேன். என்னுடைய காரை பின்னாலிருந்து ஒரு மோட்டார்சைக்கிள் இடித்து விட்டது. பின்புற பம்பர், நடுப்பகுதி மற்றும் பின்பக்க விளக்கு (tail light) போன்றவை உடைந்து விட்டன. நீங்கள் துரிதமாக செயல்பட்டு, பணமின்றியும், ஆவணங்களுமின்றியும் அனைத்து செயல்முறையையும் எளிமையாக்கிவிட்டீர்கள். அருமை நண்பர்களே. உங்கள் சேவைத் தொடர என் வாழ்த்துக்கள்!

தீபக் கோட்டியன்
★★★★★

அருமையான சேவை! ஆம், எந்த ஆவணங்களும் இன்றி, கிளைம் பதிவு செய்யப்படுவதில் இருந்து இழப்பீடு செட்டில் செய்யப்படும் வரை அனைத்துமே விரைவில் முடிந்தது. இடைவிடாத ஆதரவு மற்றும் துரிதமாக செயல்பட்டு அனைத்திற்கும் உறுதுணையாக இருந்த திரு.அரவிந்த் ரெட்டி மற்றும் குழுவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றி. இது மிகுந்த அர்ப்பணிப்புடன் திறம்பட செயல்படுவதால், கோ டிஜிட் கார் இன்சூரன்ஸை நான் உங்ளுக்கும் பரிந்துரைக்கிறேன்.

திரிஷாந்த் வர்மா
★★★★★

டிஜிட் மூலமாக நான் இரண்டாம் முறை என்னுடைய பாலிசியை புதுப்பித்துக் கொண்டேன். டிஜிட் நிர்வாகியான கோகுல் ஐயங்கார் என்பவர், என்னை திருப்திப்படுத்தும் ஒவ்வொன்றையும் செய்து கொடுத்து, எனக்கான சிறந்த சலுகையையும் அளித்தார். வருடம் முழுமைக்கும் இதே போன்ற ஆதரவினையும், சேவையையும் பெறுவேன் என நம்புகிறேன்.

Show all Reviews

தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸின் நன்மைகள்

நேரத்தையும், ஆற்றலையும் மிச்சப்படுத்தும்

தொழில்நுட்பத்திற்கு நன்றி, ஆன்லைனில் தேர்டு-பார்ட்டி கார் இன்சூரன்ஸை வாங்குவதற்கு சில நிமிடங்கள் மட்டுமே ஆகிறது. உங்கள் கார் பற்றிய அடிப்படை தகவல்கள் (கார் பதிவீட்டு எண்/கார் அமைப்பு மற்றும் மாடல்) மற்றும் அடையாள சான்று (ஆதார்/பான்) போன்றவை மட்டுமே தேவைப்படும். உங்கள் பாலிசி உங்களுக்கு மெயிலில் அனுப்பப்படும்!

தனிப்பட்ட சேதங்கள் ஏற்படும் பட்சத்தில் தேர்டு-பார்ட்டி நபருக்கு இழப்பீடு வழங்குகிறது

துருதிர்ஷடவசமான தருணத்தில், நீங்கள் வண்டி ஓட்டும் போது விபத்துக்குள்ளாகி, யாரோ ஒருவர் காயமடைந்து விடுகிறார், அல்லது எதிர்பாராத விதமாக அவர் இறந்து விடுகிறார். இப்பேற்பட்ட சூழ்நிலையில் ஏற்படும் இழப்புக்களுக்கு, பொறுப்பு வரம்பின்றி உங்கள் தேர்டு-பார்ட்டி கார் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்குகிறது.

தேர்டு-பார்ட்டி சொத்து அல்லது வாகன சேதங்களுக்கு இழப்பீடு வழங்குகிறது

ஒரு வேளை நீங்கள் யாரோ ஒருவரின் சொத்து அல்லது வாகனத்தை சேதப்படுத்தி விட்டால், உங்கள் தேர்டு-பார்ட்டி கார் இன்சூரன்ஸ் ரூ.7.5 லட்சம் வரையில் அவர்களின் இழப்பிற்கு இழப்பீடு வழங்குகிறது.

உடல்ரீதியான காயங்கள் ஏற்படும் சூழ்நிலைகளில் உங்களை பாதுகாக்கும்

ஒரு வேளை ஏற்கனவே உங்களிடம் வேறு ஏதேனும் பாலிசியின் (உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் போன்ற) பர்சனல் ஆக்சிடன்ட் கவர்/தனிப்பட்ட விபத்து காப்பீடு இல்லையெனில், தேர்டு-பார்ட்டி கார் இன்சூரன்ஸ் இதனை தேர்வு செய்து கொள்ள வாய்ப்பளிக்கிறது. இது உங்களுக்கு விபத்து ஏதும் நேரும் பட்சத்தில், அதனால் ஏற்படும் நிரந்தர ஊனம் அல்லது மரணத்திலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு உதவுகிறது.

எதிர்பாராத இழப்புக்களிலிருந்து உங்களை பாதுகாக்கும்

ரோட்டில தினமும் பல கார்கள் செல்கின்றன. அதோடு தற்போது இருக்கும் போக்குவரத்து நெரிசலில் தவறுகள் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புள்ளது. சில சமயங்களில், தவறுதலாக உங்கள் கார் இன்னொருவரையோ அல்லது அவர்களின் வாகனம்/சொத்தினையோ சேதப்படுத்தி இருந்தாலோ - அந்த சேதங்களுக்கு செலுத்த வேண்டிய பணச் செலவினை உங்கள் தேர்டு-பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசி ஏற்றுக் கொள்கிறது. எனவே, இதனால் நீங்கள் எதிர்பாராத செலவினங்களை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை.

உங்களை சட்டப்பூர்வமாக வண்டி ஓட்டுவதற்கு அனுமதியளிக்கும்

மோட்டார் வாகன சட்டப்படி, ஒவ்வொரு கார் உரிமையாளரிடமும் குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் இருப்பது அவசியம். நீங்கள் உங்களுடைய கார்-ஐ மேலும் பாதுகாக்க விரும்பினால், நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்ந்தெடுக்கலாம். இது தேர்டு-பார்ட்டி பொறுப்புகளிற்கும் மற்றும் உங்கள் சொந்த காரிற்கும் பாதுகாப்பு வழங்குகிறது.

உங்களை டிராஃபிக் சம்பந்தமான தேவையில்லாத கட்டணங்கள் மற்றும் அபராதங்களிலிருந்து காக்கும்

குறைந்தபட்சம் ஒரு தேர்டு-பார்ட்டி கார் இன்சூரன்ஸ் இன்றி நீங்கள் சாலையில் பிடிபட்டால், உங்களுக்கு ரூ.2000 அபராதத் தொகை விதிக்கப்படும் மற்றும்/அல்லது மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.

தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸின் பாதகங்கள்

சொந்த சேதங்களுக்கு பாதுகாப்பளிக்கப்படாது

கெடுவாய்ப்பாக, உங்கள் சொந்த காருக்கு ஏற்படும் சேதங்களுக்கும், பாதிப்புகளுக்கும் தேர்டு-பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பாதுகாப்பளிக்காது.

இயற்கை பேரிடர்களுக்கு பாதுகாப்பளிக்கப்படாது

ஒரு வேளை, ஏதேனும் இயற்கை பேரிடர் நேரும் பட்சத்தில், உங்கள் 4-வீலருக்கு இதன் மூலம் ஏற்படும் சேதங்களுக்கு தேர்டு-பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பாதுகாப்பளிக்காது.

தனிப்பயனாக்கப்பட்ட திட்டங்கள் கிடையாது

தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் என்பது, உங்கள் 4-வீலருக்கு கிடைக்கப்பெறும் ஒரு அடிப்படையான திட்டமாகும், எனவே இதனை கூடுதல் பலன்கள் மற்றும் திட்டங்களினால் தனிப்பயனாக்கிக் கொள்ள முடியாது. ஆயினும், நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸில் இதனை மேற்கொள்ளலாம்.

இந்தியாவிலுள்ள கார் இன்சூரன்ஸ் திட்ட வகைகள்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ் (முழுமையானது)

விபத்தின் காரணமாக சொந்த காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புக்கள்

×

தீவிபத்து காரணமாக சொந்த காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புக்கள்

×

இயற்கை பேரிடர் நேரும் பட்சத்தில் சொந்த காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புக்கள்

×

தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள்

×

தேர்டு பார்ட்டி சொத்திற்கு ஏற்படும் சேதங்கள்

×

தனிப்பட்ட விபத்து காப்பீடு (பர்சனல் ஆக்சிடன்ட் கவர்

×

தேர்டு பார்ட்டியினருக்கு ஏற்படும் காயங்கள்/மரணம்

×

உங்கள் கார் திருடு போவது

×

வீட்டு வாசலிலேயே பிக்-அப் மற்றும் டிராப் செய்வது

×

உங்கள் ஐடிவி-ஐ(IDV) தனிப்பயனாக்குவது

×

தனிப்பயனாக்கப்பட்ட ஆட்-ஆன்களுடன் (add-ons) கூடுதல் பாதுகாப்பு வழங்குவது

×
Get Quote Get Quote

காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) இன்சூரன்ஸ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸுக்குமான வேறுபாடுகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் வாங்குவது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

செல்லத்தக்க தேர்டு-பார்ட்டி லையபிலிட்டி (பொறுப்பு) இன்சூரன்ஸ் பாலிசியின்றி வண்டி ஓட்டி நான் மாட்டிக் கொண்டால் என்ன ஆகும்?

செல்லத்தக்க தேர்டு-பார்ட்டி லையபிலிட்டி (பொறுப்பு) இன்சூரன்ஸ் பாலிசியின்றி வண்டி ஓட்டி நீங்கள் மாட்டிக் கொண்டால், நீங்கள் ரூ.2000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். கூடுதலாக, உங்கள் லைசென்ஸும் தள்ளுபடி செய்யப்படலாம், மற்றும்/அல்லது 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் வழங்கப்படலாம்.

நீங்கள் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸில் கிளைம் செய்தால், உங்கள் என்சிபி (NCB)-ஐ நீங்கள் இழக்க நேரிடுமா?

இல்லை, நீங்கள் இழக்க மாட்டீர்கள். உங்கள் என்சிபி (NCB) அல்லது நோ கிளைம் போனஸ் அப்படியே இருக்கும்.

தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் கட்டாயமானதா?

ஆம், மோட்டார் வாகனச் சட்டம், 1988-இன் படி, குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பது கட்டாயமாகும்.

விபத்து நேர்ந்த சமயத்தில் என்னுடைய காரை வேறு யாரேனும் ஓட்டியிருந்தால், என்னுடைய இழப்புகளுக்கு டிஜிட் பாதுகாப்பளிக்குமா?

ஆம், விபத்து நேர்ந்த சமயத்தில் யார் கார் ஓட்டியிருந்தாலும் டிஜிட் இன்சூரன்ஸ் உங்கள் இழப்புகளுக்கு பாதுகாப்பளிக்கும். ஆனால், ஒரு வேளை ஓட்டுநரிடம் செல்லத்தக்க லைசென்ஸ் இல்லையென்றாலோ அல்லது பழகுநர் லைசென்ஸ் வைத்துக் கொண்டு உடன் இணை-ஓட்டுநர் இருக்கையில் லைசென்ஸ்தாரரின்றி வண்டி ஓட்டியிருந்தாலோ, பாதுகாப்பளிக்கப்படாது. மேலும், உங்கள் கிளைம் தள்ளுபடி செய்யப்படும்.

என்னுடைய காருக்கு தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் போதுமானதா?

உங்கள் சொந்த காருக்கு ஏற்படும் அனைத்து சேதங்களுக்கும் நீங்கள் செலவு செய்யத் தயாராக இருக்கிறீர்களா? ஆம், அதற்கு அதிக செலவாகும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். தேர்டு பார்ட்டி, வரையறைப்படி, இது தேர்டு பார்ட்டியினருக்கு மட்டுமே பாதுகாப்பளிக்கிறது, தேர்டு பார்ட்டி என்பது நீங்கள் ஏற்படுத்திய விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களைக் குறிக்கிறது. காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) பாலிசி என்பது தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸினால் பாதுகாப்பளிக்கப்படாத சேதத்திற்கும் பாதுகாப்பளிக்கிறது.  தேர்டு பார்ட்டி மற்றும் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸிற்குமான வேறுபாட்டினை புரிந்து கொள்வதற்கு இந்த கட்டுரையை வாசிக்கவும்.

ஒரு வேளை நான் வேற்று நகரம்/மாநிலத்தில் விபத்தில் சிக்கிக் கொண்டால் என்ன செய்வது?

விபத்து எந்தவொரு நகரம் அல்லது மாநிலத்தில் நிகழ்ந்திருந்தாலும், டிஜிட் இன்சூரன்ஸ் உங்களுக்கு பாதுகாப்பளிக்கிறது.

இந்த பாலிசியில் அதிகபட்சமாக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை எவ்வளவு?

தேர்டு பார்ட்டியினருக்கு நேரும் தனிப்பட்ட சேதங்களுக்கு, அதிகபட்ச இழப்பீடு என்பது கிடையாது. ஆனால், தேர்டு பார்ட்டியினரின் சொத்து அல்லது வாகனத்திற்கு சேதங்கள் ஏற்படும் பட்சத்தில், அதிகபட்சமாக ரூ.7.5 லட்சம் வரை இழப்பீட்டுத் தொகை கிடைக்கப்பெறும்.

ஆன்லைனில் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸிற்கு நான் கிளைம் செய்யும் போது நான் என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்?

தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் கிளைமிற்கு, கேட்டாலேயொழிய தனிப்பட்ட முறையில் எந்தவொரு ஆவணங்களும் உங்களுக்குத் தேவைப்படாது. தேர்டு பார்ட்டி கிளைம் செய்யும் பட்சத்தில், உரிய தேர்டு பார்ட்டி தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் மற்றும் சேதங்களுக்கு நஷ்ட ஈடு பெற விரும்பினால், FIR குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும்.