ஜீரோ டிப்ரிஸியேஷன்‌ கார் இன்சூரன்ஸ்

ஜீரோ டிப்ரிஸியேஷன் இன்சூரன்ஸிற்கான விலையை பெற்று ஒப்பிட்டு பாருங்கள்
Happy Couple Standing Beside Car

Third-party premium has changed from 1st June. Renew now

I agree to the  Terms & Conditions

Don't know Registration number?
Renew your Digit policy instantly right

ஜீரோ டிப்ரிஸியேஷன் கார் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

டிப்ரிஸியேஷன் (தேய்மானத்தினால் ஏற்படும் மதிப்பிழப்பு) என்றால் என்ன?

வாகனங்களின் ஏற்படும் தேய்மான %

வாகனத்தின் வயது

தேய்மானத்தின் %

6 மாதங்களுக்கு மேல் இல்லாதவை

5%

6 மாதங்களுக்கு மேற்பட்டவை ஆனால் 1 வருடத்திற்கு உட்பட்டவை

15%

1 வருடத்திற்கு மேற்பட்டவை ஆனால் 2 வருடத்திற்கு உட்பட்டவை

20%

2 வருடத்திற்கு மேற்பட்டவை ஆனால் 3 வருடத்திற்கு உட்பட்டவை

30%

3 வருடத்திற்கு மேற்பட்டவை ஆனால் 4 வருடத்திற்கு உட்பட்டவை

40%

4 வருடத்திற்கு மேற்பட்டவை ஆனால் 5 வருடத்திற்கு உட்பட்டவை

50%

வாகனங்களின் தேய்மானத்திற்கான % (இரும்பு பாகங்கள்)

வாகனத்தின் வயது

வாகனத்தின் வயது %

6 மாதங்களுக்கு கீழ்

Nil

6 மாதங்களுக்கு மேற்பட்டவை ஆனால் 1 வருடத்திற்கு உட்பட்டவை

5%

1 வருடத்திற்கு மேற்பவை ஆனால் 2 வருடத்திற்கு உட்பட்டவை

10%

2 வருடத்திற்கு மேற்பட்டவை ஆனால் 3 வருடத்திற்கு உட்பட்டவை

15%

3 வருடத்திற்கு மேற்பட்டவை ஆனால் 4 வருடத்திற்கு உட்பட்டவை

25%

4 வருடத்திற்கு மேற்பட்டவை ஆனால் 5 வருடத்திற்கு உட்பட்டவை

35%

5 வருடத்திற்கு மேற்பட்டவை ஆனால் 10 வருடத்திற்கு உட்பட்டவை

40%

10 வருடத்திற்கு மேற்பட்டவை

50%

ஜீரோ டிப்ரிஸியேஷன் கார் இன்சூரன்ஸ் ஆட்-ஆனின் சிறப்பு பயன்கள்

பணத்தை சேமித்திடுங்கள்

ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்-ஆன் கவர் இருந்தால், கிளைம் செய்யும்போது  உதிரிபாகங்களின் தேய்மானச் செலவிற்கு உங்கள் பாக்கெட்டில் இருந்து நீங்கள் பணம் செலவழிக்க வேண்டியதில்லை என்பது உறுதி, ஒருவேளை ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்-ஆன் கவர் இல்லையெனில் அதற்கான முழு செலவையும் நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் ஜீரோ டிப்ரிஸியேஷன்  ஆட் ஆன் கவர் இருந்தது எனில், அச்செலவு உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தாலேயே கவனித்துக்கொள்ளப்படும்.

அதிக கிளைம் தொகையைப் பெறுங்கள்

ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்-ஆன் மூலம் உங்கள் காரைப் பாதுகாப்பது என்றால் உங்கள் காரின் பாகங்களில் உள்ள தேய்மானம் கணக்கிடப்படாது, எனவே கிளைமின் போது அதிக தொகையைப் பெறுவீர்கள்.

மன அமைதி

ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்-ஆனை தேர்ந்தெடுப்பதன் மூலம் கிளைமின் போது நீங்கள் உங்கள் பாக்கெட்டில் இருந்து தேவையில்லாத செலவு செய்வதற்கான அவசியமிருக்காது. மேலும் உங்கள் துரதிர்ஷ்டவசமான நேரங்களில் யாரோ ஒருவர் உங்கள் பின்னால்  உறுதுணையாக இருக்கிறார்கள் என்பது மிகுந்த திருப்தியையும் மனநிம்மதியும் தரும் என்று  உறுதியளிக்கப்படுகிறது.

ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்-ஆன் கவரில் உட்படாதவை எவை?

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

உங்களிடம் காருக்கான சரியான ஓட்டுநர் உரிமம் இல்லையென்றால், ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்-ஆனின் பயன்களை உங்களால் பெற முடியாது.

5 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட கார்கள்

துரதிர்ஷ்டவசமாக, உங்கள் கார் ஐந்து வருட வயதுடைய காராக இருந்தால், உங்களால் ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்-ஆனை தேர்வுசெய்ய முடியாது

மது அருந்தி வாகனம் ஓட்டுதல்

போதைப்பொருள் அல்லது மதுவின் போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், கிளைமின் போது ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர் மூலம் பயனடைவதிலிருந்து  விலக்கப்படுவார்கள்.

கட்டாய விலக்குகளை கவர் செய்யாது

ஜீரோ டிப்ரிஸியேஷனில் உங்கள் கார் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள உங்கள் கட்டாய விலக்குகள்(ஏதேனும் இருந்தால்) உள்ளடங்காது.

இயந்திர சார்ந்த பிரச்சனைகளை(மெக்கானிக்கல் பிரேக் டவுன்) கவர் செய்யாது

ஒரு நிலையான விதியாக, ஜீரோ டிப்ரிஸியேஷன் உங்கள் காரின் மெக்கானிக்கல் செயலிழப்புகள் அல்லது இயற்கையான தேய்மானம் ஆகியவற்றிற்கு பொருந்தாது.

என்ஜின் ஆயிலின் விலை

என்ஜின் ஆயில், கிளட்ச் ஆயில், கூலன்ட் போன்ற செலவுகளுக்கு இந்த ஆட்-ஆன் ஈடுசெய்யாது.

ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட் -ஆன் கவருக்கு எவ்வளவு செலவாகும்? அது அந்த விலைக்கேற்ற மதிப்புடையதா?

உங்கள் ஜீரோ டிப்ரிஸியேஷன் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கும் காரணிகள் யாவை?

உங்கள் ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்ஆன் கவரின் பிரீமியத்தைப் பாதிக்கும் காரணிகள் பின்வருமாறு:

உங்கள் காரின் வயது

ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்ஆன் என்பது உங்கள் கார் மற்றும் அதன் பாகங்களின் வயதுடன்  நேரடியாக தொடர்புடையது என்பதால், உங்கள் ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்ஆனுக்கான பிரீமியத்தை நிர்ணயிப்பதில் உங்கள் காரின் வயது ஒரு பெரிய காரணியாக உள்ளது.

உங்கள் காரின் மாடல்

ஒரு கார் இன்சூரன்ஸ், உங்கள் காரின் மாடல் மற்றும் வகையைப் பொறுத்தது. ஏனெனில் அதன் பாகங்களின் விலையும் அதைப் பொறுத்தது. எனவே, உங்கள் ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்ஆன் கவரின் விலையை நிர்ணயிப்பதில் நீங்கள் வைத்திருக்கும் கார் ஒரு பெரிய காரணியாக உள்ளது.

உங்கள் காரின் இடம்

ஒவ்வொரு நகரமும் எதிர்கொள்ளும் ஆபத்துகளும் வேறுபட்டவை. எனவே, கார் இன்சூரன்ஸில், உங்கள் பிரீமியம்- உங்கள் ஜீரோ டிப்ரிஸியேஷன்த்தின் ஆட்-ஆன் பிரீமியம் உட்பட அனைத்தும், நீங்கள் வாகனம் ஓட்டும் நகரத்தைப் பொறுத்தது.

காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசியை விட ஜீரோ டிப்ரிஸியேஷன் கார் இன்சூரன்ஸ் ஏன் சிறந்தது?

விரிவான கார் இன்சூரன்ஸ் மற்றும் ஜீரோ டிப்ரிஸியேஷனிற்கு இடையிலிருக்கும் வேறுபாடு

ஜீரோ ப்ரிஸியேஷன் உடைய கார் இன்சூரன்ஸ்

காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ்

அப்படியென்றால் என்ன?

ஜீரோ டிப்ரிஸியேஷனிற்கான இன்சூரன்ஸ் என்பது உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியில் நீங்கள் விரும்பினால் தேர்வுசெய்யக்கூடிய ஒரு ஆட்-ஆன் ஆகும். உங்கள் திட்டத்தில் இந்த ஆட்-ஆன் இருப்பதால், கிளைம்களின் போது உங்கள் காரின் தேய்மானத்திற்கு உங்கள் இன்சுரர் கட்டணம் வசூலிக்க மாட்டார் என்பதை இது உறுதிசெய்கிறது. எனவே, கிளைம்களின் போது உங்கள் காரின் உதிரிபாகங்களின் தேய்மானச் செலவை நீங்கள் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

ஒரு காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசி என்பது உங்கள் காரின் சொந்த சேதங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு சேதங்களை உள்ளடக்கும் ஒரு வகை கார் இன்சூரன்ஸ் பாலிசி ஆகும். மேலும் இவ்வகையை சேர்ந்த பாலிசியை விரிவான காப்பீட்டிற்காக தனிப்பயனாக்கவும் செய்யலாம்.

பிரீமியம்

இந்த ஆட்-ஆனைத் தேர்வுசெய்தால், உங்கள் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பிரீமியம் தோராயமாக 15% அதிகரிக்கும்.

காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியம், ஆட் ஆன் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசியை விடக் குறைவு.

தேய்மான கட்டணம்

ஜீரோ டிப்ரிஸியேஷனிற்கான ஆட் ஆன் இருந்தால், உங்கள் கார் இன்சூரன்ஸ் கிளைம்களின் போது தேய்மானச் செலவுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசியில், கார் இன்சூரன்ஸ் கிளைம்களின் போது உங்கள் காரின் உதிரிபாகங்களின் தேய்மானத்திற்கான பணத்தை நீங்கள் அவசியம் செலுத்த வேண்டும்.

காரின் வயது

ஐந்து வருடங்களுக்கும் குறைவான அனைத்து கார்களுக்கும் ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட் ஆனை தேர்வு செய்யலாம்.

பதினைந்து வருடங்களுக்கும் குறைவான அனைத்து கார்களுக்கும் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்யலாம்.

நீங்கள் எவ்வளவு சேமிப்பீர்கள்?

நீங்கள் கொஞ்சம் அதிக பிரீமியத்தைச் செலுத்துவதினால், ​​உங்கள் காரின் தேய்மானத்திற்கான செலவுகளை கிளைம்களின் போது நீங்கள் செலுத்த வேண்டியதில்லை என்பதால், உங்கள் நீண்ட கால சேமிப்பு அதிகமாக இருக்கும்.

ஆட்ஆன்களைத் தேர்வு செய்யாததினால் நீங்கள் அதில் சேமிக்கும் எக்ஸ்ட்ரா பிரீமியமே உங்களிடம் இருக்கும் ஒரே சேமிப்பு.

கிளைம் செட்டில்மென்டின் போது ஜீரோ டிப்ரிஸியேஷன் கவரின்‌ பங்கு

ஜீரோ டிப்ரிஸியேஷன் பற்றி நினைவில் கொள்ள வேண்டியவை

ஜீரோ டிப்ரிஸியேஷன் கவரை யாரெல்லாம் தேர்வு செய்யலாம்?

கார் இன்சூரன்ஸில் ஜீரோ டிப்ரிஸியேஷன் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்