உங்கள் வாகனத்தில் சிஎன்ஜி கிட்டை பொருத்துவது அல்லது முன்பே பொருத்தப்பட்ட சிஎன்ஜி வண்டியை வாங்குவது என்பது இன்றைய எரிபொருள் விலையேற்ற சூழ்நிலைக்கு ஒரு சிறந்த மாற்றுத்தீர்வாக இருக்கும்.
உங்கள் காரை சிஎன்ஜியில் இயங்கும் வகையில் மாற்றுவதற்கு முன்பு ஒரு புதிய சிஎன்ஜி காருக்கான இன்சூரன்ஸ் வாங்குவதைத் தவிர, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னும் சில தகவல்கள் உள்ளன. அவை:
எரிபொருள் கிடைக்கும் தன்மை
உங்கள் காரை சிஎன்ஜி)க்கு மாற்ற வேண்டும் என்று நீங்கள் முடிவெடுப்பதற்கு முன்பு, நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் சிஎன்ஜி எரிபொருள் கிடைக்கிறதா என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இதோடு சிஎன்ஜி எரிபொருள் கிடைக்கும் இடத்தை அடைய நீங்கள் எவ்வளவு தூரம் செல்ல வேண்டியதிருக்கும் என்பதையும் பாருங்கள். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் எரிபொருள் நிரப்ப அதிக எரிபொருளைச் செலவழிக்க வேண்டிய நிலை இருக்கக்கூடாது!
விலையும் செயல்திறனும்
சிஎன்ஜியில் இயங்கும் வண்டியானது அதிக எரிபொருள் திறன் (ஃப்யூல் எஃபிசியன்சி) கொண்டது. அதாவது, குறைந்த அளவிலான எரிபொருளை பயன்படுத்தும் வண்டிகள் ஆகும். ஆனால், பெட்ரோல் எஞ்சினுடன் ஒப்பிடும் போது வண்டியின் செயல்திறனானது குறைவானதாக இருக்கும்.
சிஎன்ஜியில் காரை இயக்குவதினால் அதிக எரிபொருள் செயல்திறனை (ஃப்யூல் எஃபிசியன்சி) அளிக்கும், ஆனால், இதில் இருக்கும் ஒரு முக்கிய குறைபாடு என்னவென்றால், இது காரின் செயல்திறனை பாதிக்கும்.
பெட்ரோல் எஞ்சினுடன் ஒப்பிடும் போது, த்ரோட்டிலுக்கான ரெஸ்பான்ஸ் குறையும்; சிஎன்ஜியில் இயங்கும் மோட்டாரிலிருந்து அந்த அளவிலான சரியான ரெஸ்பான்ஸை பெற முடியாது. மேலும், உங்கள் காரை அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டியிருக்கும்.
ஏனென்றால், எரிபொருளானது வால்வு மற்றும் சிலிண்டருக்கும் இடையே லூபிரிகன்டாக செயல்படும், ஆனால், சிஎன்ஜி ஆனது அப்படி செயல்படாது. இதுவே சீக்கிரமாக துருப்பிடிப்பதற்கான காரணமாக இருக்கலாம்.
வெளிப்புறமாக அல்லது உட்புறமாக பொருத்தப்படும் சிஎன்ஜி(CNG) கிட்கள்
உங்கள் வண்டியில் சிஎன்ஜி கிட்-ஐ பொருத்துவதற்கு இரண்டு வழிகள் உள்ளன - பழைய காரில் கிட்-ஐ பொருத்துவது அல்லது முன்பே பொருத்தப்பட்டிருக்கும் வண்டியை வாங்குவது. ஆனால் இதில் எது சிறந்தது? என்று ஒப்பிடும் போது, நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வண்டியில் புதிய சிஎன்ஜி கிட்டை பொருத்துவது மலிவானதாக இருந்தாலும், அதை செய்வதற்கு முன்பு கிட்-க்கும் வண்டிக்கும் இடையேயான இணக்கத்தன்மையை முதலில் சரிபார்க்க வேண்டும். தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் உடன் வண்டியை பயன்படுத்துமாறு பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில், அவை உத்தரவாதத்தோடு வருவதோடு மட்டுமல்லாமல் அவற்றை சர்வீஸ் செய்வதற்கு என்று கூடுதலாக ஆகும் செலவுகள் அனைத்தும் அதில் அடங்கிவிடும் போன்ற கூடுதல் நன்மையும் இருக்கிறது.
பராமரிப்பிற்கு ஆகும் செலவு
பெட்ரோலில் இயங்கும் வண்டியைக் காட்டிலும் சிஎன்ஜி வண்டியை பராமரிக்க ஆகும் செலவானது அதிகமாக இருக்கும். லீக்கேஜ், வையரில் இருக்கும் இன்சுலேஷன் சேதம் ஆவது போன்றவற்றைத் தடுக்க, உங்கள் வண்டியை அவ்வப்போது சரிபார்க்க வேண்டியிருக்கும்.