ஷாப் இன்சூரன்ஸ் பாலிசி ஆன்லைன்

ஸிரோ பேப்பர் ஒர்க். ஆன்லைன் செயல்முறை

ஷாப் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

ஒரு கடையின் சொத்து மற்றும் அதிலுள்ள உடமைகளுக்கு காப்புறுதி வழங்கும் ஒரு வகையான பாலிசி தான் ஷாப் இன்சூரன்ஸ். டிஜிட்டில், பாரத் சூக்ஷமா உதயம் சுரக்ஷா பாலிசி மூலமாக தீ விபத்து மற்றும் வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களுக்கு எங்களது ஷாப் இன்சூரன்ஸ் காப்புறுதி வழங்குகிறது (IRDAN158RP0080V01202021). 

எனினும், கடைகள் போன்ற சொத்துகளில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் அரங்கேற வாய்ப்புள்ளது என்பதால், நாங்கள் தனியாகவே பர்க்கலரி பாலிசியை வழங்குகிறோம். அதாவது, ஷாப் இன்சூரன்சுடன் இணைந்து டிஜிட் பர்க்கலரி இன்சூரன்ஸ் பாலிசி (IRDAN158RP0019V01201920). இதன் மூலம் உங்கள் கடையானது தீ விபத்து மற்றும் இயற்கை சீற்றங்கள் போன்றவற்றில் இருந்து பாதிகாக்கப்படுவது மட்டும் அல்லாமல், கொள்ளை சம்பவத்தால் உங்கள் கடைக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கும் காப்புறுதி வழங்குகிறது. 

ஷாப் இன்சூரன்ஸ் ஏன் முக்கியமானதாக கருதப்படுகிறது?

1

2021-ல் மட்டுமே 1.6 மில்லியன் தீ விபத்துகள் நாட்டில் பதிவிடப்பட்டுள்ளது.(1)

2

இந்திய அபாய கணக்கெடுப்பு, 2021ன்படி தீயானது நான்காவது மோசமான அபாயமாக கருதப்படுகிறது .(2)

3

இந்தியாவில், 2020 ஆம் ஆண்டில் மொத்தமாக 9,329 தீ விபத்து நிகழ்வுகள் அறிக்கையிடப்பட்டுள்ளது.. (3)

டிஜிட்-ன் ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பாலிசி எந்த வகையில் சிறந்தது?

முழுமையான பாதுகாப்பு: வெள்ளம், நிலநடுக்கங்கள் மற்றும் தீ விபத்தில் இருந்து; எங்களது ஷாப் இன்சூரன்ஸ் ஒரே ஒரு பாலிசி மூலமாகவே அனைத்து விதமான நன்மைகளை வழங்கும் ஒரு ஒட்டுமொத்த பேக்கேஜாக கிடைக்கிறது. 

இன்சூர் செய்யப்பட்ட தொகை: நீங்கள் செய்யும் தொழிலின் வகை மற்றும் அளவைப் பொறுத்து, நீங்கள் உங்களின் இன்சூர் செய்யப்பட்ட தொகையை தனிப்பயனாக்கும் ஆப்ஷன் உங்களுக்கு உண்டு! 

ஆன்லைன் மூலமாக விரைவில் கிளைம் செய்யலாம்:  எங்களின் ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் ஆனது தொழிற்நுட்பத்தினால் இயக்கப்படுகிறது. எனவே, கிளைம் செய்வதும் சுலபம், இழப்பீட்டை பெறுவதும் சுலபம். ஸ்மார்ட்ஃபோன் மற்றும் எங்களின் டிஜிட் ஆப் மட்டும் இருந்தால் போதும் நீங்கள் எளிதில் கிளைம் செய்துவிடலாம். டிஜிட் ஆப், செல்ஃப் இன்ஸ்பெக்ஷன் செயல்முறைக்குத் தேவையான வழிகாட்டுதல்களை உங்களுக்கு அளிக்கும் (குறிப்பு: ஐஆர்டிஏஐ(IRDAI) நிர்ணயித்த சட்டங்களின்படி ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான கிளைம் தொகைக்கு நேரடி மதிப்பீடு கட்டாயமாகும்). 

பணத்துக்கு ஏற்ற மதிப்பு: ஒரு வணிகத்தில் வரவுகள், செலவுகள், லாபம் மற்றும் நஷ்டம் ஆகிய அனைத்தும் அடங்கும். இது எங்களுக்கும் தெரியும். அதனால்தான், உங்கள் கடையின் பட்ஜெட்டுக்குத் தகுந்தாற்போல் ஷாப் இன்சூரன்ஸ் பிரீமியத்தை தேர்வு செய்யும் வசதியை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். 

எல்லா விதமான வணிகங்களையும் பாதுகாக்கிறது : நீங்கள் ஒரு சிறிய பொது அங்காடியின் உரிமையாளரோ அல்லது பெரிய உற்பத்தி ஆலையின் உரிமையாளரோ; உங்களின் வணிகம் எதுவாயினும் ஒவ்வொரு வணிகத்தின் வகை மற்றும் அதன் அளவிற்கு ஏற்ப எங்கள் ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பாலிசியை தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்.

டிஜிட்-ன் ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பாலிசி எந்தெந்த இழப்புகளுக்குக் காப்பீடு அளிக்கிறது?

எவ்வித காரணங்களுக்கு இழப்பீடுகளை பெற முடியாது?

பின்வருவனவற்றுக்கு டிஜிட்டின் ஷாப் இன்சூரன்ஸ் பாலிசி காப்புறுதி வழங்காது:  

  • வேண்டும் என்றே அல்லது நோக்கத்துடன் யாரேனும் ஒரு நபரால் செய்யப்படும் சேதத்திற்கு காப்புறுதி வழங்காது.
  • விளைவினால் ஏற்படும் சேதங்களுக்கு காப்புறுதி கிடைக்காது.
  • மர்மமான முறையில் மறைந்த அல்லது விவரிக்கப்படாத இழப்புகளுக்கு காப்புறுதி இல்லை. 
  • அருங்கலைப் பொருள், கலைப்பொருள், அல்லது விலைமதிப்பற்ற கற்கள் போன்ற கூடுதல் மதிப்பு மிகுந்த பொருட்களுக்கு காப்புறுதி இல்லை. 
  • இயற்கை சீற்றம், வெடிப்பு, கசிவு மற்றும் பலவற்றால் இல்லாமல் இயந்திரங்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு காப்புறுதி கிடைக்காது.  
  • போர், அல்லது அணு ஆயுதப் பேரழிவு காரணமாக ஏற்படும் சேதங்களுக்கு காப்புறுதி கிடைக்காது.  

ஷாப் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்

ஆப்ஷன் 1 ஆப்ஷன் 2 ஆப்ஷன் 3
உங்கள் கடையில் இருக்கும் உள்ளிருப்பு பொருட்களுக்கு மட்டும் காப்பீடு அளிக்கும். உங்கள் கடையின் கட்டிடம்/கட்டமைப்பு மற்றும் உங்கள் கடையில் இருக்கும் உள்ளிருப்பு பொருட்கள் ஆகிய இரண்டிற்கும் காப்பீடு அளிக்கும். கட்டிடத்திற்கு காப்புறுதி வழங்குகிறது.

 

ஷாப் இன்சூரன்ஸ் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை

  • ஷாப்கீப்பர் இன்சூரன்ஸின் ‘கன்டண்ட்’ என்றால் என்ன?  : ஷாப்கீப்பர் இன்சூரன்ஸின் ‘கன்டண்ட்’ என்பது உங்கள் கடையில் உள்ள முதன்மையான பொருட்களைக் குறிக்கிறது. உதாரணமாக, நீங்கள் ஒரு துணிக்கடையை நடத்தி வந்தால், இங்கே கூறப்பட்டுள்ள கன்டண்ட் என்பது விற்பனைக்காக கடையில் உள்ள அனைத்து இரகமான துணிகளைக் குறிக்கும்.  

 

  • ஷாப்கீப்பருக்கான இன்சூரன்ஸ்-இல் ‘கட்டிடம்/கட்டமைப்பு’ என்றால் என்ன?- ஷாப்கீப்பருக்கான இன்சூரன்ஸ்-இல் ‘கட்டிடம்/கட்டமைப்பு’ என்பது உங்கள் கடை இருக்கும் இடத்தைக் குறிக்கும். இது ஒரு தனிக்கடையாகவோ  அல்லது ஒரு அறையாகவோ, பெரிய மால் அல்லது கூட்டமைப்பு கட்டிடத்தின் ஒரு அங்கமாகவோ  இருக்கலாம். 

கிளைம் செய்வது எப்படி?

நீங்கள் எங்களின் ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கிய பின், நீங்கள் எந்தவொரு டென்க்ஷனும் இல்லாமல் இருக்கலாம். ஏனெனில் எங்களிடம் மிக எளிமையான டிஜிட்டல் கிளைம்களைக் கொண்டுள்ளது!

படி 1

எங்களை 1800-258-5956 என்ற எண்ணில் அழைக்கவும் அல்லது hello@godigit.com என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்புகொள்ளவும், இதன் மூலம் உங்களின் இழப்பை நாங்கள் பதிவு செய்வோம்.

படி 2

செல்ஃப் இன்ஸ்பெக்ஷன் லிங்க் ஒன்று உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் மூலம் உங்கள் கடைக்கோ அல்லது கடையில் உள்ள பொருட்களுக்கோ ஏற்பட்ட இழப்புகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

படி 3

நீங்கள் செல்ஃப் இன்ஸ்பெக்ஷன் செயல்முறையை முடித்ததும், உங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடப்படும், பின்பு அது சரிபார்க்கப்படும். அவசியம் ஏற்பட்டால் (இழப்புகளை டிஜிட்டல் முறையில் ஆய்வு செய்ய முடியாத சூழ்நிலைகளில்), இழப்பு மதிப்பீட்டாளர் ஒருவர் நியமிக்கப்படலாம்.

படி 4

எப்ஐஆர், கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற அறிக்கை (நான் டிரேஸபில் ரிப்போர்ட்) , தீயணைப்புப் படை அறிக்கை (தீ விபத்து ஏற்பட்டால்), இன்வாய்ஸ்கள், கொள்முதல் ஆவணங்கள், விற்பனை அறிக்கைகள் போன்ற கூடுதல் ஆவணங்கள் ஏதேனும் எங்களுக்கு தேவைப்பட்டால், எங்கள் வாடிக்கையாளர் சேவை அதிகாரி ஒருவர் உங்களை தொடர்பு கொள்வார்.

படி 5

அனைத்து படிகளையும் சரியாக கடந்து விட்டால், உங்களுக்கு ஏற்பட்ட இழப்பு அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின் உங்களுக்கு ஏற்பட்ட அந்தந்த சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு இழப்பீட்டுத் தொகை பெறுவீர்கள்.

படி 6

NEFT மூலமாக பணம் உங்களை வந்து சேரும்.

ஷாப்கீப்பருக்கான இன்சூரன்ஸ் பாலிசி யாருக்கு தேவைப்படும்?

குடும்ப தொழில் செய்யும் முதலாளிகள்

நீங்கள் சொந்தமாக ஒரு கடையை வைத்து நடத்துபவராகவோ, துணிகள், பொம்மைகள், வீட்டு உபயோக பொருட்கள், ஆக்சஸரிகள், மற்றும் பல போன்ற பொருட்களை விற்பனை செய்யும் நபராகவோ இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஏதேனும் தொழில் ரீதியான இழப்புகளில் இருந்து உங்கள் கடையை காப்புறுதி செய்ய உங்களுக்கு ஷாப் இன்சூரன்ஸ் தேவைப்படும்.

தனித்து இயங்கும் கடைகாரர்கள்

தாங்கள் நடத்தி வரும் கடையே தங்களது முதன்மை வருமானத்தின் மூலமாக இருந்தால், கடை முதலாளிகள் கண்டிப்பாக ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம். உங்கள் கடையை இழக்க நேர்ந்தாலோ அல்லது நிதி இழப்புகளை அனுபவித்து வரும் அபாயத்தில் இருக்கும் சமயத்தில் இந்த பாலிசி  உங்களை பாதுகாக்கும். 

முக்கியமான பகுதிகளில் கடையை நடத்தும் கடைகாரர்கள்

நகரத்தின் மிகவும் பிரபலமான பகுதிகளில் கடையை நடத்தி வரும் தொழிலதிபராக இருக்கும் பட்சத்தில்,    இது போன்ற கடைகளில் அபாயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். 

பல கடைகளுக்கு சொந்தமான முதலாளிகள்

பல கடைகளுக்கு சொந்தமான முதலாளிகள் தங்களின் ஒவ்வொரு கடைக்கும் ஷாப்கீப்பர்ஸ் இன்சூரன்ஸ் பாலசி எடுக்க வேண்டி இருக்கும். உங்கள் தொழிலை இன்சூர் செய்வது என்பது எதிர்பாராத சூழ்நிலைகளால் உங்கள் கடைக்கும், அதிலுள்ள பொருட்களுக்கும் காப்புறுதி வழங்காது. ஆனால் திட்டமிடப்படாத நிதி இழப்புகளால் உங்கள் தொழிலின் நிலைத்தன்மை பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்கிறது. 

அதிக-அபாயங்கள் கொண்ட தொழில்கள்

ஒரு சில தொழில்கள் பிறவற்றுடன் ஒப்பிடுகையில் அதிக அபாயங்களை சந்திக்க நேரிடும். உதாரணமாக, ஒரு நகைக்கடை மளிகைக்கடையைக் காட்டிலும் திருடு போவதற்கான வாய்ப்பு அதிகம்.  இது போலவே, தொழிற்சாலைகளில் அலுவகத்தை விட தீ விபத்து ஏற்படுவதற்கான அபாயம் அதிகம். ஆகவே, நீங்கள் என்ன மாதிரியான தொழிலை செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் கடைக்கு இன்சூரன்ஸ் தேவைப்படுமா இல்லையா என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்.  

இதில் பாதுகாக்கப்படும் கடைகளின் வகைகள்

மொபைல் மற்றும் மற்ற மின்னணு சாதனனங்கள்

மொபைல் ஃபோன்கள், மொபைல் பாகங்கள் அல்லது பிற மின்னணு பொருட்களை பிரதானமாக விற்கும் கடைகள். அதாவது குரோமா, ஒன்பிளஸ், ரெட்மி ஸ்டோர்கள் மற்றும் இது போன்ற கடைகள் இதற்கு சிறந்த உதாரணம் ஆகும். இது போன்ற கடைகளில் திருட்டு ஏற்படுவது சகஜம் ஆகும். இது போன்ற கடைகளையும், கடைகளில் இருக்கும் பொருட்களையும் இழப்புகள் மற்றும் சேதங்களிலிருந்து பாதுகாக்க ப்ராபர்டி இன்சூரன்ஸ் ஆனது மிகவும் உதவியாக இருக்கும். 

மளிகை மற்றும் ஜெனரல் ஸ்டோர்கள்

அக்கம் பக்கத்தில் இருக்கும் அண்ணாச்சி கடை முதல் மலிவான விலையில் பொருட்களை விற்கும் சூப்பர்மார்க்கெட்கள் மற்றும் ஜெனரல் ஸ்டோர்கள் வரை;அனைத்து மளிகைக் கடைகள் மற்றும் ஜெனரல் ஸ்டோர்கள் அனைத்தும் ப்ராபர்டி இன்சூரன்ஸில் பாதுகாக்கப்படுகின்றன. பிக் பஜார், ஸ்டார் பஜார் மற்றும் ரிலையன்ஸ் சூப்பர்மார்க்கெட்கள் இது போன்ற கடைகளுக்கு சிறந்த உதாரணம் ஆகும். 

அலுவலகங்கள் மற்றும் கல்விக்கூடங்கள்

இது அலுவலக வளாகம் மற்றும் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், மற்றும் பயிற்சி வகுப்புகள் போன்ற கல்விக்கூடங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சொத்தை இன்சூர் செய்வது, அதனை இழப்புகளில் இருந்து மட்டும் பாதுகாக்காமல், உங்கள் ஊழியர்கள் அல்லது மாணவர்களுக்கு உங்களின் அமைப்பு குறித்த நம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்யும். 

உற்பத்தி மற்றும் செயலாக்கம்

உங்கள் தொழில் சார்ந்த இறுதி பொருட்களை உற்பத்தி செய்யும் உங்களின் தொழிற்சாலைகள் மற்றும் மில்கள் இதில் அடங்கும். அது ஒரு டெக்ஸ்டைல் மில் அல்லது இரசாயன உற்பத்தி நிலையமாக இருந்தாலும் சரி, டிஜிட்டின் ஷாப்கீப்பர்ஸ் இன்சூரன்ஸ் இவை அனைத்திற்கும் காப்புறுதி அளிக்கிறது. 

தனிநபர் வாழ்க்கைமுறை மற்றும் உடற்தகுதி

உங்களுக்குப் பிடித்த மால்கள் மற்றும் துணிக்கடைகள் முதல் ஸ்பாக்கள், ஜிம்கள் மற்றும் பிற கடைகள் வரை; வாழ்க்கைமுறைக்குத் தேவையான பொருட்கள் மற்றும் உடற்பயிற்சி சாரந்த துறைகள் அனைத்து வணிகங்களுக்கும் டிஜிட்-ன் ப்ராப்பர்டி இன்சூரன்ஸ் பாதுகாக்கும். என்ரிச் சலூன்கள், கல்ட் ஃபிட்னஸ் சென்டர்கள், ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மற்றும் இது போன்ற கடைகள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

உணவகங்கள் மற்றும் உணவு சார்ந்த தொழில்

இது போன்ற இடங்களை பிடிக்காதவர்களே இருக்க முடியாது! கஃபே , ஃபுட் டிரக்கள் முதல் ரெஸ்டாரண்ட் மற்றும் பேக்கரிகள் போன்ற அனைத்து விதமான உணவு சார்ந்த தொழில்கள் அனைத்தும் டிஜிட்-ன் ப்ராப்பர்டி இன்சூரன்ஸ் பாதுகாக்கும். ஃபுட் கோர்ட்டில் இருக்கும் ரெஸ்டாரண்ட்கள், சாய் பாயிண்ட் மற்றும் சய்யோஸ் போன்ற டீ கடைகள் மற்றும் பர்கர் கிங், பீட்ஸா ஹட் போன்ற ஃபாஸ்ட் ஃபுட் கிடைக்கும் இடங்கள் அனைத்தும் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

ஹெல்த்கேர்

இது பாதுகாக்கப்பட வேண்டிய மிக முக்கியமான தொழில் ஆகும்; மருத்துவமனைகள், கிளினிக்குகள், நோயை கண்டறியும் மையங்கள் அதாவது டையக்னஸ்டிக் சென்டர்கள் மற்றும் மருந்தகங்கள் / பார்மசீக்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பிற கடைகள் அனைத்தையும் டிஜிட்-ன் ப்ராப்பர்டி இன்சூரன்ஸ் பாதுகாக்கும்.

வீட்டை பழுதுபார்க்கும் சேவைகள்

தச்சு வேலை / கார்பென்டரி, பிளம்பிங் வேலை முதல் மோட்டார் கேரேஜ்கள் , இன்ஜினியரிங் ஓர்க்ஷாப்கள் வரை போன்ற அனைத்து தொழில்களும் இதில் அடங்கும். 

மற்றவைகள்

மேலே குறிப்பிடப்படாத தொழில்களைத் தவிர வேறு எந்த வித தொழில்களையும் டிஜிட்-ன் ப்ராப்பர்டி இன்சூரன்ஸ் பாதுகாக்கும். அந்தத் தொழிலானது எந்த அளவிலும் இருக்கலாம் அதே சமயம் அதன் தன்மை எதுவாகவும் இருக்கலாம்.

உங்கள் ஷாப்கீப்பருக்கான இன்சூரன்ஸ் பாலிசிக்கான சரியான காப்பீட்டுத் தொகையைத் தேர்வு செய்வது எப்படி?

ஏதாவது கஷ்டமான சூழலைப் பற்றி சிந்தியுங்கள் (அதாவது பழுது பார்க்க முடியாத அளவிற்கு உங்கள் கடை சேதம் அடைந்துவிட்டது என்று நினைத்து கொள்ளுங்கள்) இந்த இழப்பினை நீங்கள் எப்படி சமாளிப்பீர்கள்? இந்த கேள்விக்கான பதில் என்னவென்றால் நீங்கள் உங்கள் கடையை எவ்வளவு பாதுகாத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு பாதுகாத்துக் கொள்ளுங்கள். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் நீங்கள் ஒரு பொம்மைக் கடையின் உரிமையாளர் என்று வைத்துக் கொள்வோம், அதில் இருக்கும் ஒவ்வொரு பொம்மையின் விலையானது ரூ. 1000 இருக்கும் என்று வைத்துக் கொள்வோம். தற்போது உங்கள் கடையில் 1000 பொம்மைகள் இருக்கிறது. இந்த சூழலில் நீங்கள் ரூ. 1,000x 1000 அதாவது ரூ.10,00,000க்கு இன்சூர் செய்ய வேண்டும். இதைப் பற்றிய புரிதல் இன்னும் தேவைப்பட்டால், கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்.

 
முக்கியக் குறிப்பு: உங்கள் கடையில் பொருத்தப்பட்டுள்ள சாமான்கள், லேப்டாப் மற்றும் ஃபோன் போன்ற சாதனங்கள் எதையும் இந்த ஷாப் இன்சூரன்ஸ் பிளான் கவர் செய்யாது. எனவே உங்கள் காப்பீட்டுத் தொகையைக் ( இன்சூர் செய்யப்பட்ட தொகையை) கணக்கிடும் போது அதன் விலையை இதில் சேர்க்காதீர்கள்.

இந்தியாவில் கிடைக்கும் ஷாப் இன்சூரன்ஸ் பிளான்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்

ஷாப் இன்சூரன்ஸ் பிளான்கள் ஏன் முக்கியமானது?

அதன் மூலமாக வருமானம் ஈட்டும் பலர் நபர்கள் உள்ளனர். நீங்கள் என்ன வகையான கடையை நடத்திபவராக இருந்தாலும் சரி, அது உங்களுக்கு விலைமதிப்பற்றதாகும். எதிர்பாராத மற்றும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகள் காரணமாக ஏற்படும் இழப்புகளுக்கு எதிராக உங்களை பாதுகாப்பதால், ஷாப்கீப்பர்ஸ் இன்சூரன்ஸ் பாலிசி மிகவும் முக்கியமானது ஆகும். இதன் மூலம் நீங்கள் உங்களின் இலாபங்கள் மற்றும் சேமிப்புகளை பாதுகாத்து, அது குறித்த எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கலாம். மேலும்  உங்கள் தொழிலின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதன் மூலமாக உங்கள் கடையை அடுத்தடுத்த உயரங்களுக்கு இட்டு செல்லலாம். 

அதன் மூலமாக வருமானம் ஈட்டும் பலர் நபர்கள் உள்ளனர். நீங்கள் என்ன வகையான கடையை நடத்திபவராக இருந்தாலும் சரி, அது உங்களுக்கு விலைமதிப்பற்றதாகும். எதிர்பாராத மற்றும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகள் காரணமாக ஏற்படும் இழப்புகளுக்கு எதிராக உங்களை பாதுகாப்பதால், ஷாப்கீப்பர்ஸ் இன்சூரன்ஸ் பாலிசி மிகவும் முக்கியமானது ஆகும். இதன் மூலம் நீங்கள் உங்களின் இலாபங்கள் மற்றும் சேமிப்புகளை பாதுகாத்து, அது குறித்த எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கலாம். மேலும்  உங்கள் தொழிலின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதன் மூலமாக உங்கள் கடையை அடுத்தடுத்த உயரங்களுக்கு இட்டு செல்லலாம். 

நான் ஏன் ஷாப் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் வாங்க வேண்டும்?

மற்ற இன்சூரன்ஸ் நிறுவனங்களின் ஷாப் இன்சூரன்ஸ் பாலிசிக்களை ஆப்லைனில் / நேரடியாக வாங்கலாம். இருப்பினும் ஆன்லைனில் வாங்குவதன் மூலம் நீங்கள் பின்வரும் நன்மைகளை அடையலாம்:  நேரத்தை மிச்சப்படுத்தும்:  ஆன்லைனில் ஷாப் இன்சூரன்ஸ் பாலிசியை சில நிமிடங்களில் வாங்கிவிடலாம். விரைவாக கிளைம் செய்யலாம்: நாங்கள் ஷாப் இன்சூரன்ஸை ஆன்லைனில் வழங்குவது போல நீங்கள் உங்கள் கிளைம்-ஐ எளிதில் செய்து முடிக்கலாம்,மேலும் கிளைமும் விரைவாக தீர்க்கப்படும். செல்ஃப் இன்ஸ்பெக்ஷன் செயல்முறையானது ஸ்மார்ட் ஃபோன் மூலமாக செய்யப்படுகிறது. எனவே நாம் ஸ்மார்ட் ஃபோனுக்கே நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.  பேப்பர்ஓர்க் எதுவும் இல்லை: டிஜிட்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் என்பதால் பேப்பர் ஓர்க் எதுவும் இல்லை. எல்லா செயல்முறைகளுக்கும் சாஃப்ட் காப்பிகளே போதுமானதாக இருக்கும். அவசியம் ஏற்பட்டால் ஒன்றிரண்டு ஆவணங்களை நாங்கள் உங்களிடத்தில் கேட்கலாம்.

மற்ற இன்சூரன்ஸ் நிறுவனங்களின் ஷாப் இன்சூரன்ஸ் பாலிசிக்களை ஆப்லைனில் / நேரடியாக வாங்கலாம். இருப்பினும் ஆன்லைனில் வாங்குவதன் மூலம் நீங்கள் பின்வரும் நன்மைகளை அடையலாம்: 

  • நேரத்தை மிச்சப்படுத்தும்:  ஆன்லைனில் ஷாப் இன்சூரன்ஸ் பாலிசியை சில நிமிடங்களில் வாங்கிவிடலாம்.
  • விரைவாக கிளைம் செய்யலாம்: நாங்கள் ஷாப் இன்சூரன்ஸை ஆன்லைனில் வழங்குவது போல நீங்கள் உங்கள் கிளைம்-ஐ எளிதில் செய்து முடிக்கலாம்,மேலும் கிளைமும் விரைவாக தீர்க்கப்படும். செல்ஃப் இன்ஸ்பெக்ஷன் செயல்முறையானது ஸ்மார்ட் ஃபோன் மூலமாக செய்யப்படுகிறது. எனவே நாம் ஸ்மார்ட் ஃபோனுக்கே நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். 
  • பேப்பர்ஓர்க் எதுவும் இல்லை: டிஜிட்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் என்பதால் பேப்பர் ஓர்க் எதுவும் இல்லை. எல்லா செயல்முறைகளுக்கும் சாஃப்ட் காப்பிகளே போதுமானதாக இருக்கும். அவசியம் ஏற்பட்டால் ஒன்றிரண்டு ஆவணங்களை நாங்கள் உங்களிடத்தில் கேட்கலாம்.

ஷாப் இன்சூரன்ஸ் பிளான்கள் அளிக்கும் நன்மைகள்

எதிர்பாராத சூழ்நிலைகளால் ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாப்பு  - .தீ விபத்து,கொள்ளை, இயற்க்கை பேரிடர்கள்,வெடி விபத்து மற்றும் இது போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளால் ஏற்படும் இழப்புகள், பாதிப்புகளிலிருந்து உங்கள் கடையை பாதுகாக்கிறது.  எதிர்பாராத இழப்புகளுக்கான காப்புறுதி -  திட்டமிடப்படாத செலவுகள் எந்த ஒரு நபருக்கும் நிதி சார்ந்த சிக்கல்களை அளிக்கும். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும், உங்கள் சம்பாத்தியத்தை பாதுகாக்கவும் ஷாப்கீப்பர்ஸ் இன்சூர்னஸ் உங்களுக்கு உடனடியாக உதவும்.  மன அமைதி - உங்களுக்கு தேவையான காப்புறுதியை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்ற காரணத்தால், உங்கள் கடை மற்றும் அதன் பாதுகாப்பு குறித்த எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கலாம். 

  • எதிர்பாராத சூழ்நிலைகளால் ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாப்பு  - .தீ விபத்து,கொள்ளை, இயற்க்கை பேரிடர்கள்,வெடி விபத்து மற்றும் இது போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளால் ஏற்படும் இழப்புகள், பாதிப்புகளிலிருந்து உங்கள் கடையை பாதுகாக்கிறது. 
  • எதிர்பாராத இழப்புகளுக்கான காப்புறுதி -  திட்டமிடப்படாத செலவுகள் எந்த ஒரு நபருக்கும் நிதி சார்ந்த சிக்கல்களை அளிக்கும். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும், உங்கள் சம்பாத்தியத்தை பாதுகாக்கவும் ஷாப்கீப்பர்ஸ் இன்சூர்னஸ் உங்களுக்கு உடனடியாக உதவும். 
  • மன அமைதி - உங்களுக்கு தேவையான காப்புறுதியை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்ற காரணத்தால், உங்கள் கடை மற்றும் அதன் பாதுகாப்பு குறித்த எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கலாம். 

ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரை பயன்படுத்தி பிரீமியத்தைக் கணக்கிடுங்கள்

உங்கள் கடைக்கான இன்சூரன்ஸ் தொகை மற்றும் அதற்க்கான பிரீமியம் குறித்த விவரங்களை ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரை பயன்படுத்தி அறியலாம். ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் ஏன் முக்கியமானது ஏன்? ஒவ்வொரு கடையும், தொழிலும், சில்லறை விற்பனையும் வேறுபடும். தொழிலின் தன்மை, அதன் அளவு, செலவுகள் ஆகியவையும் இதில் அடங்கும். அதேபோல் எந்த இரண்டு ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பாலிசிகளும் ஒரே விலையில் கிடைக்காது. கடையின் தன்மை, அளவு, பொருட்களின் எண்ணிக்கை, இருக்கும் நகரம் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பிரீமியம் கணக்கிடப்படுகிறது. ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் உதவியுடன் உங்கள் கடைக்கான அபாயத்தை புரிந்துகொண்டு அதை பாதுகாப்பதற்குத் தேவையான சரியான பிரீமியத்தை கணக்கிடுங்கள்.  ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பாலிசி பிரீமியத்தைத் தீர்மானிக்கும் காரணிகள் மேலே கூறியபடி, இரண்டு கடைகளுக்குமான ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பாலிசி பிரீமியமானது ஒன்றாக இருக்காது. இது எதனால் என்றால் ஒவ்வொரு கடையின் தொழிலும் வேறுபடும் என்பதே இதற்கு காரணம் ஆகும். பின்வரும் காரணிகள் உங்கள் ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பிரீமியத்தைப் பாதிக்கும்: a. கடை/தொழிலின் தன்மை: ஒவ்வொரு தொழிலும் வித்தியாசமானது மேலும் கடையில் பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்யப்படுகிறது. சில பொருட்களின் மதிப்பானது மற்ற பொருட்களை விட அதிகமாக இருக்கலாம். எனவே, தொழிலின் தன்மையானது உங்கள் பிரீமியத்தை பாதிக்கும் காரணியாக இருக்கிறது. உதாரணத்திற்கு: ஒரு நகைக் கடையின் பிரீமியமானது சாதாரணக் கடையை விட அதிகமாக இருக்கும். b. கடையின் அளவு: உங்கள் கடை பெரியதாக இருந்தால், அதன் மதிப்பும் அதிகமாகத் தான் இருக்கும். எனவே, இன்சூர்  செய்யப்படும் கடையின் அளவைப் பொறுத்தே உங்கள் ஷாப்கீப்பருக்கான இன்சூரன்ஸ் பிரீமியமும் இருக்கும். c. கை இருப்பு சரக்கின் அளவு: உங்கள் இன்சூர்ட் / இன்சூர் செய்யப்பட்டத் தொகை இதைப் பொறுத்து தான் அமையும். அதிக எண்ணிக்கையிலான பொருட்களை நீங்கள் இன்சூர் செய்ய வேண்டுமென்றால் , உங்கள் காப்பீட்டுத் தொகை அதிகமாக இருக்கும். எனவே, உங்கள் காப்பீட்டு பிரீமியமும் இதை பொறுத்து தான் அமையும். d. நகரம்: இன்சூரன்ஸ் பாலிசி போலவே, நீங்கள் வசிக்கும் நகரம் அல்லது உங்கள் கடையை இன்சூர் செய்யும் நகரத்தை பொறுத்து கணக்கிடப்படும். அதாவது உங்கள் ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பிரீமியமானது இடத்திற்கு ஏற்ப வேறுபடும். ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு விதமான சவால்கள் இருப்பதால் அங்கிருக்கும் ஆபத்துக்களும் வேறுபடும். அது இயற்கையான ஆபத்தாகவும் இருக்கலாம் அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதாகவும் இருக்கலாம். உதாரணத்திற்கு; அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட ஒரு நகரத்தில் அமைந்துள்ள ஒரு கடையின் பிரீமியத் தொகையானது பாதுகாப்பான நகரத்தில் உள்ள அதே கடையின்  பிரீமியத் தொகை விட அதிகமாக இருக்கும்.

உங்கள் கடைக்கான இன்சூரன்ஸ் தொகை மற்றும் அதற்க்கான பிரீமியம் குறித்த விவரங்களை ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரை பயன்படுத்தி அறியலாம்.

ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் ஏன் முக்கியமானது ஏன்?

ஒவ்வொரு கடையும், தொழிலும், சில்லறை விற்பனையும் வேறுபடும். தொழிலின் தன்மை, அதன் அளவு, செலவுகள் ஆகியவையும் இதில் அடங்கும். அதேபோல் எந்த இரண்டு ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பாலிசிகளும் ஒரே விலையில் கிடைக்காது.

கடையின் தன்மை, அளவு, பொருட்களின் எண்ணிக்கை, இருக்கும் நகரம் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பிரீமியம் கணக்கிடப்படுகிறது. ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் உதவியுடன் உங்கள் கடைக்கான அபாயத்தை புரிந்துகொண்டு அதை பாதுகாப்பதற்குத் தேவையான சரியான பிரீமியத்தை கணக்கிடுங்கள். 

ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பாலிசி பிரீமியத்தைத் தீர்மானிக்கும் காரணிகள்

மேலே கூறியபடி, இரண்டு கடைகளுக்குமான ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பாலிசி பிரீமியமானது ஒன்றாக இருக்காது. இது எதனால் என்றால் ஒவ்வொரு கடையின் தொழிலும் வேறுபடும் என்பதே இதற்கு காரணம் ஆகும். பின்வரும் காரணிகள் உங்கள் ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பிரீமியத்தைப் பாதிக்கும்:

a. கடை/தொழிலின் தன்மை: ஒவ்வொரு தொழிலும் வித்தியாசமானது மேலும் கடையில் பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்யப்படுகிறது. சில பொருட்களின் மதிப்பானது மற்ற பொருட்களை விட அதிகமாக இருக்கலாம். எனவே, தொழிலின் தன்மையானது உங்கள் பிரீமியத்தை பாதிக்கும் காரணியாக இருக்கிறது. உதாரணத்திற்கு: ஒரு நகைக் கடையின் பிரீமியமானது சாதாரணக் கடையை விட அதிகமாக இருக்கும்.

b. கடையின் அளவு: உங்கள் கடை பெரியதாக இருந்தால், அதன் மதிப்பும் அதிகமாகத் தான் இருக்கும். எனவே, இன்சூர்  செய்யப்படும் கடையின் அளவைப் பொறுத்தே உங்கள் ஷாப்கீப்பருக்கான இன்சூரன்ஸ் பிரீமியமும் இருக்கும்.

c. கை இருப்பு சரக்கின் அளவு: உங்கள் இன்சூர்ட் / இன்சூர் செய்யப்பட்டத் தொகை இதைப் பொறுத்து தான் அமையும். அதிக எண்ணிக்கையிலான பொருட்களை நீங்கள் இன்சூர் செய்ய வேண்டுமென்றால் , உங்கள் காப்பீட்டுத் தொகை அதிகமாக இருக்கும். எனவே, உங்கள் காப்பீட்டு பிரீமியமும் இதை பொறுத்து தான் அமையும்.

d. நகரம்: இன்சூரன்ஸ் பாலிசி போலவே, நீங்கள் வசிக்கும் நகரம் அல்லது உங்கள் கடையை இன்சூர் செய்யும் நகரத்தை பொறுத்து கணக்கிடப்படும். அதாவது உங்கள் ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பிரீமியமானது இடத்திற்கு ஏற்ப வேறுபடும். ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு விதமான சவால்கள் இருப்பதால் அங்கிருக்கும் ஆபத்துக்களும் வேறுபடும். அது இயற்கையான ஆபத்தாகவும் இருக்கலாம் அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதாகவும் இருக்கலாம். உதாரணத்திற்கு; அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட ஒரு நகரத்தில் அமைந்துள்ள ஒரு கடையின் பிரீமியத் தொகையானது பாதுகாப்பான நகரத்தில் உள்ள அதே கடையின்  பிரீமியத் தொகை விட அதிகமாக இருக்கும்.

சரியான ஷாப் இன்சூரன்ஸ் பிளானைத் தேர்வு செய்வது எப்படி?

உங்கள் தொழிலை பாதுகாக்கும் செயல்முறையில் உங்களுக்கு குழப்பம் ஏற்படுவது சாதாரணமான ஒன்று தான். ஆகவே, இந்த செயல்முறையை உங்களுக்கு எளிமையாக்க, சரியான ஷாப்கீப்பர்ஸ் இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களைப் பார்க்கலாம்: முக்கியக்குறிப்பு: இன்சூர்ட் / இன்சூர் செய்யப்பட்டத் தொகை உயர உயர உங்கள்  ஷாப் கீப்பருக்கான இன்சூரன்ஸ் பிரீமியமும்அதிகம்ஆகும்.ஆனால் பிரீமியத் தொகையை வைத்து உங்கள் இன்சூரன்ஸை தேர்வு செய்யாமல், உங்கள் கடையின் பொருட்களின் மதிப்பின் அடிப்படையில் முடிவு  செய்யுங்கள். இன்சூர் செய்யப்பட்டத் தொகை::  எதிர்பாராத நிகழ்வு நடந்து, அதற்காக  நீங்கள் கிளைம் செய்வதினால்  நீங்கள் பெறக்கூடிய அதிகபட்ச காப்பீட்டுத் தொகையே இன்சூர்ட் / இன்சூர் செய்யப்பட்டத் தொகை ஆகும். உங்கள் கடையில் உள்ள பொருட்கள் மற்றும் உள்ளடக்கங்களின் மொத்த மதிப்பின் அடிப்படையில் உங்கள் இன்சூர்ட் / இன்சூர் செய்யப்பட்டத் தொகையைத் தனிப்பயனாக்க அனுமதிக்கும் ஷாப் இன்சூரன்ஸை  தேர்ந்தெடுங்கள். எளிமையாக செய்யப்படும் கிளைம்கள்: எந்த ஒரு இன்சூரன்ஸ் பாலிசியாக இருந்தாலும் சரி, அவற்றில் கிளைம்கள் மிகவும் முக்கியமானவை. நீங்கள் ஏதேனும் இழப்புகளை சந்திக்கும் போது, கிளைம்களை தாக்கல் செய்ய வேண்டும்! எனவே, ஒரு ஷாப்கீப்பர்ஸ் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் முந்தைய கிளைம் செட்டில்மெண்ட் பதிவேடுகள் மற்றும் செயல்முறைகள் பற்றி தெரிந்து கொண்ட பின் வாங்கவும்.  கவரேஜ்: உங்கள் ஷாப் இன்சூரன்ஸ் பாலிசி எந்த மாதிரியான விஷயங்களுக்கு காப்புறுதி வழங்குகிறது? அது உங்கள் கடையை மட்டுமே பாதுகாக்குமா அல்லது கடையில் உள்ள பொருட்களுக்கும் காப்புறுதி வழங்குமா? வெவ்வேறு வகையான ஷாப்கீப்பர்ஸ் இன்சூரன்ஸ் பாலிசிகள் பல்வேறு கவரேஜ்களை வழங்குகிறது. பாலிசி ஆவணங்களை கவனமாக படித்து, உங்கள் கடைக்கு தேவையான அனைத்திற்கும் பாதுகாப்பு வழங்கும் சரியான ஷாப்கீப்பர்ஸ் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கவும். பணத்திற்கு ஏற்ற மதிப்பு: இறுதியில், இன்சூரன்ஸ்  செய்யப்பட்ட தொகை முதல்  பிரீமியம் வரை, அதில் இருக்கும் கவரேஜ்கள் உட்பட அனைத்து காரணிகளையும் ஒன்றாக மதிப்பீடு செய்யுங்கள். பின்பு பணத்திற்கு ஏற்ற மதிப்பை வழங்கும்  ஷாப்கீப்பர்  இன்சூரன்ஸை வாங்குங்கள்.

உங்கள் தொழிலை பாதுகாக்கும் செயல்முறையில் உங்களுக்கு குழப்பம் ஏற்படுவது சாதாரணமான ஒன்று தான். ஆகவே, இந்த செயல்முறையை உங்களுக்கு எளிமையாக்க, சரியான ஷாப்கீப்பர்ஸ் இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களைப் பார்க்கலாம்:

முக்கியக்குறிப்பு: இன்சூர்ட் / இன்சூர் செய்யப்பட்டத் தொகை உயர உயர உங்கள்  ஷாப் கீப்பருக்கான இன்சூரன்ஸ் பிரீமியமும்அதிகம்ஆகும்.ஆனால் பிரீமியத் தொகையை வைத்து உங்கள் இன்சூரன்ஸை தேர்வு செய்யாமல், உங்கள் கடையின் பொருட்களின் மதிப்பின் அடிப்படையில் முடிவு  செய்யுங்கள்.

  • இன்சூர் செய்யப்பட்டத் தொகை::  எதிர்பாராத நிகழ்வு நடந்து, அதற்காக  நீங்கள் கிளைம் செய்வதினால்  நீங்கள் பெறக்கூடிய அதிகபட்ச காப்பீட்டுத் தொகையே இன்சூர்ட் / இன்சூர் செய்யப்பட்டத் தொகை ஆகும். உங்கள் கடையில் உள்ள பொருட்கள் மற்றும் உள்ளடக்கங்களின் மொத்த மதிப்பின் அடிப்படையில் உங்கள் இன்சூர்ட் / இன்சூர் செய்யப்பட்டத் தொகையைத் தனிப்பயனாக்க அனுமதிக்கும் ஷாப் இன்சூரன்ஸை  தேர்ந்தெடுங்கள்.
  • எளிமையாக செய்யப்படும் கிளைம்கள்: எந்த ஒரு இன்சூரன்ஸ் பாலிசியாக இருந்தாலும் சரி, அவற்றில் கிளைம்கள் மிகவும் முக்கியமானவை. நீங்கள் ஏதேனும் இழப்புகளை சந்திக்கும் போது, கிளைம்களை தாக்கல் செய்ய வேண்டும்! எனவே, ஒரு ஷாப்கீப்பர்ஸ் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் முந்தைய கிளைம் செட்டில்மெண்ட் பதிவேடுகள் மற்றும் செயல்முறைகள் பற்றி தெரிந்து கொண்ட பின் வாங்கவும். 
  • கவரேஜ்: உங்கள் ஷாப் இன்சூரன்ஸ் பாலிசி எந்த மாதிரியான விஷயங்களுக்கு காப்புறுதி வழங்குகிறது? அது உங்கள் கடையை மட்டுமே பாதுகாக்குமா அல்லது கடையில் உள்ள பொருட்களுக்கும் காப்புறுதி வழங்குமா? வெவ்வேறு வகையான ஷாப்கீப்பர்ஸ் இன்சூரன்ஸ் பாலிசிகள் பல்வேறு கவரேஜ்களை வழங்குகிறது. பாலிசி ஆவணங்களை கவனமாக படித்து, உங்கள் கடைக்கு தேவையான அனைத்திற்கும் பாதுகாப்பு வழங்கும் சரியான ஷாப்கீப்பர்ஸ் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கவும்.
  • பணத்திற்கு ஏற்ற மதிப்பு: இறுதியில், இன்சூரன்ஸ்  செய்யப்பட்ட தொகை முதல்  பிரீமியம் வரை, அதில் இருக்கும் கவரேஜ்கள் உட்பட அனைத்து காரணிகளையும் ஒன்றாக மதிப்பீடு செய்யுங்கள். பின்பு பணத்திற்கு ஏற்ற மதிப்பை வழங்கும்  ஷாப்கீப்பர்  இன்சூரன்ஸை வாங்குங்கள்.

ஷாப் இன்சூரன்ஸ் பாலிசி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஷாப் இன்சூரன்ஸ் பிளான் வாங்க எவ்வளவு செலவாகும்?

இது உங்கள் கடை, வியாபாரம் மற்றும் அதன் தன்மையைப் பொறுத்தது. தேவையான விவரங்களை பகிர்ந்து உங்களின் ஷாப் இன்சூரன்ஸ் பிரீமியத்தை நீங்கள் கணக்கிடலாம்.

ஷாப்கீப்பருக்கான இன்சூரன்ஸ் வைத்திருக்க வேண்டியது கட்டாயமா?

இது வைத்திருக்க வேண்டியது கட்டாயமில்லை என்றாலும் கடை உரிமையாளர்கள் ஷாப்கீப்பர் இன்சூரன்ஸை வைத்திருக்க பரிந்துரைக்கப்படுகிறார்கள். இதை வைத்திருப்பதன் மூலம் எதிர்பாராத சூழ்நிலை உருவாகும்போது, உங்கள் கடை மற்றும் அதில் இருக்கும் பொருட்களை பாதுகாக்கும். மேலும் தொழிலுக்கு ஏற்படும் அபாயங்களையும் இழப்புகளையும் குறைக்க வழிவகுக்கும்.

என் கடையில் சில லேப்டாப்கள் வைத்திருக்கிறேன், ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் -ல் இது கவர் ஆகுமா?

இது உங்கள் வியாபாரத்தின் தன்மையைப் பொறுத்தது. உங்களின் தொழிலானது (அதாவது விற்பனை ) லேப்டாப்கள் வைத்து இல்லை என்றால் இந்த இன்சூரன்ஸ் -ல் கவர் ஆகாது. 

நகரின் பல இடங்களில் எனக்கு கடைகள் உள்ளன. இவை அனைத்திற்கும் ஒரு பாலிசி போதுமானதா?

ஆம், உங்களால் முடியும். ஆனால் இன்சூர் செய்யப்பட்ட நபர் கடைகள் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து லொகேஷன்களையும், அவை ஒவ்வொன்றிற்குமான இன்சூர் செய்யப்பட்ட தொகை எவ்வளவு என்பதையும் தனித்தனியாக தெரிவிக்க வேண்டும்.