ஜெனரல் இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக ஆகுங்கள்

வாருங்கள் ஒன்றாக இணைந்து சிறப்பாக செயல்படுவோம்.

இன்சூரன்ஸ் ஏஜென்ட் என்பவர் இன்சூரன்ஸ் கம்பனியுடன் இணைந்து  இன்சூரன்ஸ் சம்பந்தமான பொருட்களை அதாவது பாலிசிக்களை விற்பனை செய்யும் ஒரு நபர் ஆவார்.

வீட்டில் இருந்தபடியே ஒரு இன்சூரன்ஸ் ஏஜென்ட் அல்லது பிஓஎஸ்பி ஆக எப்படி ஆவாது என்பது பற்றி நீங்கள் தெரியுமா? ஒன்றுமில்லை, அவர்கள் ஒருவரின் தனிப்பட்ட தேவையைப் பொறுத்து சரியான பாலிசியைத் தேர்வு செய்து கொடுப்பதே ஆகும்.

டிஜிட் உடன், ஹெல்த் இன்சூரன்ஸ், மோட்டார் (கார், பைக், கமர்ஷியல் வெஹிக்கல்) இன்சூரன்ஸ், எஸ்எஃப்எஸ்பி (SFSP) இன்சூரன்ஸ் மற்றும் இன்டர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸை எளிதில் விற்கலாம்.

ஜெனரல் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

ஜெனரல் இன்சூரன்ஸ் என்பது கார் இன்சூரன்ஸ், பைக் இன்சூரன்ஸ், டிராவல் இன்சூரன்ஸ்,  எஸ்எஃப்எஸ்பி (SFSP) இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் போன்ற உயிர் அற்ற பொருள் அல்லது  விஷயங்களுக்கான அனைத்து இன்சூரன்ஸ்களையும் உள்ளடக்குகிறது.

ஏதேனும் எதிர்ப்பாராத விதமாக நேரக்கூடிய துருதிருஷ்டவசமான நிகழ்வுகளின் மூலம் ஏற்படும் இழப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவுவதே ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகும்.

எடுத்துக்காட்டாக, ஒரு கார் இன்சூரன்ஸ் விபத்தின் மூலம் ஏற்படக்கூடிய சேதங்கள் அல்லது இழப்புகளில் இருந்து ஒருவரை பாதுகாக்கும். அதே போல்,  எஸ்எஃப்எஸ்பி (SFSP) திருட்டு அல்லது இயற்கைப் பேரிடர் போன்றவற்றின் மூலம் ஏற்படும் இழப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

நகர்ப்புற இந்தியாவின் வாழ்க்கைத் தரம் உயரும் பட்சத்தில், மற்றும் மோட்டார் வெஹிக்கல் சட்டம் போன்றவை இருப்பதால், பல இந்தியர்கள் தங்களையும் தங்கள் உடைமைகளைப் பாதுகாக்க இன்சூர் செய்து கொள்கிறார்கள்.

*பொறுப்பு திறப்பு - ஏஜென்ட்டுகளுக்கு குறிப்பிட்ட பிரிவு எதுவும் இல்லை. நீங்கள் ஒரு ஜெனரல் இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக வேண்டும் என பதிவு செய்தால், அதன் பின்னர் நீங்கள் தாராளமாக அனைத்து ஜெனரல் இன்சூரன்ஸ் திட்டங்களையும் விற்பனை செய்யலாம்.

இந்தியாவின் ஜெனரல் இன்சூரன்ஸ் துறைப் பற்றிய சுவாரசியமான விஷயங்கள்

1

இந்திய ஜெனரல் இன்சூரன்ஸ் துறையானது கடந்த ஆண்டு மட்டும் 14.5% உயர்ந்து உள்ளது. (1)

2

இந்தியாவில்  2019 இல் உயிர் அற்ற பொருள் அல்லது விஷயங்களுக்காக இன்சூரர்களுக்கு காப்புறுதி அளிக்க செலுத்தப்பட்ட மொத்த பிரிமியம் 1.59 டிரில்லியன் ஆகும். (2)

3

இந்தியாவின் ஜெனரல் இன்சூரன்ஸ் மார்க்கெட் 2020-ல் $40 பில்லியன் டாலரைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (3)

ஒருவர் ஏன் டிஜிட்-ல் ஜெனரல் இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக ஆக வேண்டும்?

நீங்கள் ஏன் ஜெனரல் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக வேண்டும் மற்றும் அதற்கு நீங்கள் ஏன் டிஜிட்டல் தேர்வு செய்ய வேண்டும் என்பது பற்றி விளக்கமாக அறிந்து கொள்ளவும்.

டிஜிட்டுடன் நேரடியாக பணிபுரியவும்

எங்கள்பிஓஎஸ்பி (POSP) பார்ட்னராக இருக்கும் பட்சத்தில், நீங்கள் நேரடியாக எங்களுடன் பணிபுரிவீர்கள். அதாவது வேறு எந்த இடைத்தரகர்களும் இதில் ஈடுபடமாட்டார்கள். டிஜிட் தான் இன்று இந்தியாவில் அதி விரைவாக வளர்ந்து வரும் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனமாகும். நாங்கள் தான் 2019 ஆம் ஆண்டின் ஆசியாவின் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவன அவார்டை பெற்ற இளம் நிறுவனம் ஆவோம்.

பலதரப்பட்ட திட்டங்கள்

இது பல வகையிலான சொத்துக்களை கவர் செய்யும் பலதரப்பட்ட திட்டங்கள் உள்ளன. எடுத்துக்காட்டு, ஹெல்த், மோட்டார் (கார், டூ-வீலர், கமர்ஷியல் வெஹிக்கல்), டிராவல், ஹோம் மற்றும் பல இதில் அடங்கும்.

இன்சூரன்ஸ் எளிமையாக்கப்பட்டது

இன்சூரன்ஸ் எளிமையாக்குவது தான் எங்கள் நம்பிக்கை. இதனால் தான் 15 வயது நபராலும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான வகையில் ஆவணங்கள் இருக்கும்..

வலுவான பேக்கெண்ட் (backend) சப்போர்ட்

தொழில்நுட்பத்தின் உதவியோடு, நாங்கள் உங்களுக்கு பிரத்யேகமான சேவை குழுவை வழங்குவது மட்டுமின்றி 24x7 மணி நேரமும் விற்பனை செய்ய அனுமதிக்கும் வகையிலான மேம்படுத்தப்பட்ட வெப் மட்டும்  மொபைல் ஆப்பையும் வழங்குகிறோம்!

ஜீரோ-டச் இன்சூரன்ஸ்

எந்த வித பேப்பருவர்க் இல்லாமல், அனைத்து செயல்முறைகளும் ஆன்லைன் தான். இது அனைவருக்கும் நன்மை பயக்கக்கூடியதாகும். இது உங்களுக்கும் விண்கல் நேரத்திற்கும் சிறந்தது. இதைத் தான் கஸ்டமர்கள் விரும்புகிறார்கள்!

உடனடி பாலிசி வழங்கல்

எந்த ஒரு கடினமான ஆவணமாக்கம் இல்லாத எளிமையான செயல்முறை. எந்த வித சிரமும் இன்றி நாங்கள் இன்சூரன்ஸ் பாலிசிக்களை ஆன்லைனில் உடனடியாக வழங்குகின்றோம்.

விரைவான கமிஷன் செட்டில்மென்ட்

கவலை வேண்டாம், உங்கள் தேவைகளை நாங்கள் நன்கு அறிவோம். அதனால், கமிஷன் விரைவாக செட்டில் செய்யப்படும். பாலிசி வழங்கப்பட்ட 15 ஆவது நாளில் கமிஷன் சரியாக உங்கள் கணக்கை வந்து அடையும்.

ஆன்லைனில் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவதெப்படி?

ஒரு இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக ஆவதற்கு எளிமையான வழி பிஓஎஸ்பி (POSP) சர்டிஃபிகேஷனை முடிப்பதே ஆகும். பிஓஎஸ்பி (POSP) அல்லது பாயிண்ட் ஆஃப் சேல் பர்சன் என்பது குறிப்பிட்ட இன்சூரன்ஸ் பாலிசிக்களை விற்பனை செய்யும் ஒருவரைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

ஒரு பிஓஎஸ்பி (POSP) ஆக ஐஆர்டிஏஐ (IRDAI)-க்குத் தேவையான குறைந்தபட்ச கல்வித் தகுதி மற்றும் எங்களின் பயிற்சியைப் பெற்றிருந்தாலே போதும். பயிற்சி குறித்த செயல்முறை பற்றி எந்த பயமும் கொள்ள வேண்டாம், அதனை டிஜிட் பார்த்துக் கொள்ளும்!

இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்கான தேவைகள் மற்றும் தகுதிகள் என்னென்ன?

ஆன்லைனில் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்குத் தேவையானவை பின்வருமாறு:

  • உங்களுக்கு 18 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும்,
  • நீங்கள் குறைந்தது 10ஆம் வகுப்பு வரை படித்து இருக்க வேண்டும்,
  • உங்களிடம் செல்லுபடியாகும் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இருக்க வேண்டும்.
  • ஐஆர்டிஏஐ (IRDAI) குறிப்பிட்டுள்ள 15 மணி நேர கட்டாய பயிற்சியைப் பெற வேண்டும்.

உங்களுக்குத் தேவையான அனைத்தையும் கற்றுக் கொள்ள நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று உறுதியளிக்கிறோம்!

யார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆகலாம்?

யார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்கான ஒரே தகுதி 18 வயது போர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும் குறைந்தது 10ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும்.

அதாவது பொருட்களை விற்பனை செய்யும் ஆர்வம் உள்ள எவரும் ஒரு பிஓஎஸ்பி (POSP) ஆகலாம். இதில் கல்லூரி மாணவர்கள், வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் தொழிலதிபர்கள்/பெண்கள் ஆகியோரும் அடங்குவர்

டிஜிட்-ல் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக மாறுவது எப்படி?

படி 1

மேலே கொடுக்கப்பட்டுள்ள எங்கள் பிஓஎஸ்பி (POSP) படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் பதிவு செய்யவும். பின்னர், அனைத்து விவரங்களையும் நிரப்பி தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்

படி 2

நாங்கள் வழங்கும் உங்கள் 15-மணிநேர கட்டாய பயிற்சியை நிறைவு செய்யுங்கள்.

படி 3

பரிந்துரைக்கப்பட்டத் தேர்வை முடிக்கவும்

படி 4

எங்களுடன் ஒப்பந்தத்தை கையொப்பமிடுங்கள் அவ்வளவுதான்! நீங்கள் பிஓஎஸ்பி (POSP) ஆக சான்றளிக்கப்படுவீர்கள்.

நான் ஏன் இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக மாற வேண்டும்?

நீங்களே உங்களுக்கு முதலாளி

பிஓஎஸ்பி (POSP) ஆக இருப்பதன் முதன்மையான நன்மைகளில் ஒன்று உங்கள் வசதிக்கேற்ப வேலை செய்வதற்கான சுதந்திரம் இருப்பதேயாகும். ஆம், இனி நீங்கள் தான் உங்களுக்கு முதலாளி!

நேர வரம்புகள் இனி இல்லை!

நீங்கள் இனி முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ (பார்ட்-டைம் ஆகவோ) உங்கள் விருப்பத்திற்கேற்ப வேலை செய்யலாம். அதற்கேற்ப உங்கள் சொந்த வேலைக்கான நேரத்தை வடிவமைத்துக்கொள்ளலாம்.

வீட்டிலிருந்தப்படியே வேலை (ஒர்க் ஃபிரம் ஹோம்)

டிஜிட் இன்சூரன்ஸில், நாங்கள் முதன்மையாக இன்சூரன்ஸ் பாலிசிகளை ஆன்லைனில் விற்கிறோம். இதன் பொருள், நீங்கள் ஒரு பிஓஎஸ்பி (POSP) ஆக வீட்டில் இருந்து வேலை செய்யலாம் மற்றும் எங்கள் ஆன்லைன் செயல்முறைகளைப் பயன்படுத்தி பாலிசிகளை எளிதில் விற்கவும் வழங்கவும் முடியும்.

15 மணி நேர பயிற்சி

பிஓஎஸ்பி--யாக(POSP) சான்றளிக்கப் பெற, ஐஆர்டிஏ (IRDA) வழங்கும் 15 மணி நேர கட்டாயப் பயிற்சியை நிறைவு செய்வது முக்கிய அளவுகோல்களில் ஒன்றாகும்; உண்மையைச் சொன்னால், இது அவ்வளவு ஒன்றும் கடினமானது இல்லை! இதற்கு தேவையானதெல்லாம் நீங்கள் பணியைத் துவங்க முதலீடு செய்யும் அந்த 15 மணி நேரம் மட்டுமே!

அதிக வருவாய் ஈட்டும் திறன்

உங்கள் வருவாய் நீங்கள் வேலை செய்த நேரத்தின் அளவைப் பொறுத்தது அல்ல, நீங்கள் வழங்கும் பாலிசிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது ஆகும். அதைப்பற்றிய ஒரு நல்ல புரிதலுக்கு, எங்கள் வருமானத்திற்கான கால்குலேட்டரை பாருங்கள், மேலும், நீங்கள் விற்கும் ஒவ்வொரு பாலிசியிலும் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதைப் பார்க்கவும்.

முதலீடு எதுவும் இல்லை (ஜீரோ இன்வெஸ்மென்ட்)

ஒரு ஸ்மார்ட்போன், ஒரு சிறந்த இன்டெர்னட் இணைப்பு, மற்றும் 15 மணி நேர பயிற்சியைத் தவிர, நீங்கள் ஒரு பிஓஎஸ்பி (POSP) ஆவதற்கு வேறு எதுவும் தேவையில்லை. எனவே, உங்கள் தரப்பிலிருந்து எந்த பண முதலீடும் தேவையில்லை, அதே நேரத்தில் சம்பாதிக்கும் வாய்ப்பும் இதில் அதிகமாக உள்ளது!

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

டிஜிட்-ல் ஒரு இன்சூரன்ஸ் ஏஜென்ட் (POSP/பிஓஎஸ்பி) ஆகத் தேவையானவை என்ன?

பதிவு (ரெஜிஸ்ட்ரேஷன்) செய்யும் போது நீங்கள் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் உள்ள பாஸ் செய்ததற்கான சான்றிதழ், பான் கார்டின் நகல், ஆதார் கார்டு (முன் மற்றும் பின் பக்கம்), ரத்து செய்யப்பட்ட காசோலை (உங்கள் பெயர் அதில் இருக்க வேண்டும்) முதலிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட வேண்டும்.

கார்ட் வைத்திருப்பவர் மற்றும் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் இருவரும் ஒருவராக இருக்க வேண்டுமா?

ஆம், செலுத்தப்படும் அனைத்து கமிஷன்களும் டிடிஎஸ்- க்கு (TDS) உட்பட்டவை. உங்கள்  பான் (PAN) கார்டின் அடிப்படையில் வருமான வரி அதிகாரிகளுக்கு டிடிஎஸ் (TDS) வரவு வைக்கப்படுகிறது.

நான் எப்போது ஹெல்த் இன்சூரன்ஸை விற்கத் தொடங்கலாம்?

நீங்கள் எங்களுடன் பதிவு செய்தவுடன், POSP தேர்வுக்கான உங்கள் பயிற்சியைத் தொடங்கலாம். தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பிறகு, நீங்கள் ஒரு இ-சான்றிதழைப்  பெறுவீர்கள். 

அதன் பின்னர் நீங்கள் ஒரு POSP ஏஜென்டாக இன்சூரன்ஸ் திட்டங்களை விற்பனையை துவங்க தயாராகிவிடுவீர்கள்.

பிஓஎஸ் (POS) நிபுணர் என சான்றளிக்கப்படுவதற்கு ஏதேனும் பயிற்சி பெறுவது அவசியமா?

ஆம், நீங்கள் ஒரு பிஓஎஸ் (POS) நபராக மாற, பயிற்சியை முடிக்க வேண்டும். இதில் இன்சூரன்ஸின் அடிப்படைகள், பாலிசி வகைகள், வழங்கல் மற்றும் கிளைமகளுக்கான செயல்முறை, விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் போன்ற தலைப்புகள் அடங்கும்.

நான் டிஜிட் உடன் இணைந்தால் எனக்கு எம்மாதிரியான ஆதரவு சேவைகள் கிடைக்கும்?

அனைத்து டிஜிட் பார்ட்னர்களுக்கும் வழிகாட்டும் வகையில் ஒரு ரிலேஷன்ஷிப் மேனேஜர் நியமிக்கப்படுவார். மேலும், டிஜிட் பிளாட்பார்மில் விற்கப்படும் பாலிசிகள் தொடர்பாக ஏஜென்ட்களுக்கு வரும்  எந்த கேள்விகளுக்கும் அவர் பதிலளிப்பார். 

எந்த உதவிக்கும் ஏஜென்ட்கள் வாடிக்கையாளர் சேவை குழுவை  தொடர்பு கொள்ள partner@godigit.com மூலம் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

பிஓஎஸ்பி (POSP) சான்றிதழ் செயல்முறையை முடித்த பிறகு நான் இது தொடர்பான என் அறிவை எவ்வாறு மேம்படுத்திக் கொண்டே இருக்கலாம்?

சான்றிதழ் பெற்ற பிறகு எங்கள் பிஓஎஸ்பி-க்களுக்காக (POSP) நடத்தப்படும் மற்றொரு விரிவான பயிற்சி திட்டமும் எங்களிடம் இருக்கிறது. அவை உங்கள் இன்சூரன்ஸ் அறிவை மேம்படுத்தவும், உங்கள் விற்பனை மற்றும் சேவைதிறன்களை மேம்படுத்தவும் உதவுகின்றன. இந்த பயிற்சி திட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்: ·     

  • சிக்கலான நிகழ்வுகளை கையாளும் வகையிலான மேம்மபடுத்தப்பட்ட இன்சூரன்ஸ் தொடர்பான அறிவு 
  • சமீபத்திய இன்சூரன்ஸ் திட்டங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு பிட்ச் செய்வது என்பது பற்றிய பயிற்சி       
  • உங்கள் விற்பனை அளவுகளை அதிகரிக்க உதவும் பல்வேறு விற்பனை நுட்பங்களைக் கற்றுக்கொள்ளும் வகையிலான வேடிக்கையான மற்றும் சுவாரஸ்யமான வழிகள்.

For list of Corporate & Individual Agents,  click here.