டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

கிரெடிட் ஸ்கோர் - வகைகள், முக்கியத்துவம் மற்றும் நன்மைகள்

Source: Housing

கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?

கிரெடிட் ஸ்கோர் என்பது கடன் வழங்குநர்கள் மற்றும் நிதி நிறுவனங்களால் தீர்மானிக்கப்படும் ஒரு எண்ணாகும். இது ஒரு நபரின் "கடன் மதிப்பு" (கிரெடிட் ஓர்த்தினெஸ்) அல்லது கடன், லோன் அல்லது அடமானத்தை திருப்பிச் செலுத்தும் அவர்களின் திறனைக் காண்பிப்பதாகும்.

இந்தியாவில், இந்த கிரெடிட் ஸ்கோரைத் தயாரிக்கும் நான்கு கிரெடிட் பியூரோக்கள் உள்ளன - அவை டிரான்ஸ்யூனியன் சிபில், எக்ஸ்பீரியன், சி.ஆர்.ஐ.எஃப் ஹைமார்க் மற்றும் ஈக்விஃபேக்ஸ் ஆகும்.

கிரெடிட் ஸ்கோர் எவ்வாறு செயல்படுகிறது?

ஒரு நபரின் கிரெடிட் ஸ்கோர் பொதுவாக அவர்களின் தனிப்பட்ட திருப்பிச் செலுத்தும் வரலாறு (ரீபேமெண்ட் ஹிஸ்டரி), கிரெடிட் ஃபைல்கள், லோன் ஹிஸ்டரி மற்றும் பலவற்றின் அடிப்படையில் 300-900 க்கு இடையில் மூன்று இலக்க எண்ணாக வெளிப்படுத்தப்படுகிறது (900 சாத்தியமான அதிகபட்ச ஸ்கோர்).

உங்கள் கடன் அபாயத்தை தீர்மானிக்க நீங்கள் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்கும் நிறுவனங்கள் இந்த எண்ணை சரிபார்க்கும். இது உங்கள் பில்களை சரியான நேரத்தில் செலுத்துவதற்கான வாய்ப்பைக் குறிக்கிறது அத்துடன் கடனுக்கு நீங்கள் அங்கீகரிக்கப்படுகிறீர்களா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும்.

உங்கள் கிரெடிட் ஸ்கோர் அங்கீகரிக்கப்படக்கூடிய கடன் தொகைகளையும், அதற்கான வட்டி விகிதத்தையும் பாதிக்கும். உங்கள் கிரெடிட் ஸ்கோர் மிகக் குறைவாக இருந்தால், கடன் வழங்குநர் உங்கள் கடன் விண்ணப்பத்தை நிராகரிக்கலாம்.

உங்கள் ஸ்கோர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, ஒரு நபரின் கிரெடிட் ஸ்கோர் என்பது 300-900 க்கு இடையிலான எண்ணாகும் (900 சாத்தியமான அதிகபட்ச ஸ்கோர்). சிறு வணிகங்களும் கிரெடிட் ஸ்கோர்களைக் கொண்டிருக்கலாம், மேலும் இவை 0 முதல் 300 வரையிலான வரம்பில் கணக்கிடப்படுகின்றன.

கிரெடிட் ஸ்கோர்கள் ஒரு வழிமுறையால் கணக்கிடப்படுகின்றன. இது உங்கள் பேமெண்ட் ஹிஸ்டரி, உங்கள் கடனின் அளவு மற்றும் உங்கள் கிரெடிட் ஹிஸ்டரியின் நீளம் போன்ற தகவல்களைப் பயன்படுத்துகிறது. கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் காரணிகள் பின்வருமாறு:

  • பேமெண்ட் ஹிஸ்டரி 
  • கடன் பயன்பாடு (கிரெடிட் யுடிலைசேஷன்)
  • கடன் காலம்
  • புதிய கடன் விசாரணைகள்
  • கிரெடிட் மிக்ஸ்

இந்தியாவில் உள்ள கிரெடிட் ஸ்கோர்கள் பற்றி என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?

இந்தியாவில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர். பி.ஐ - RBI) நான்கு கடன் தகவல் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியுள்ளது:

  • டிரான்ஸ் யூனியன் கிரெடிட் இன்ஃபர்மேஷன் பியூரோ (இந்தியா) லிமிடெட் (சிபில்-CIBIL) - இது இந்தியாவின் முதல் கிரெடிட் தகவல் நிறுவனங்களில் ஒன்றாகும் அத்துடன் அவற்றின் கிரெடிட் ஸ்கோர் வரம்புகள் (அல்லது பிரபலமாக அறியப்படும் சிபில்(CIBIL) ஸ்கோர்) 300 முதல் 900 வரை.
  • சி.ஆர்.ஐ.எஃப் ஹைமார்க் - இந்த முழு சேவை கடன் தகவல் பணியகம் 2007 இல் நிறுவப்பட்டது. சி.ஆர்.ஐ.எஃப் கிரெடிட் ஸ்கோர்கள் 300 முதல் 900 வரை இருக்கும்.
  • எக்ஸ்பீரியன் - இந்த பன்னாட்டு கடன் அறிக்கை நிறுவனம் 2010 இல் இந்தியாவில் தொடங்கப்பட்டது. எக்ஸ்பீரியனுக்கான கிரெடிட் ஸ்கோர்கள் 300 முதல் 850 வரை இருக்கும்.
  • ஈக்விஃபாக்ஸ் - இந்த கடன் தகவல் நிறுவனம் ஈக்விஃபாக்ஸ் ஐ.என்.சி உடனான கூட்டு முயற்சியாகும். அமெரிக்கா மற்றும் இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்கள். ஈக்விஃபாக்ஸின் கிரெடிட் ஸ்கோர் 300 முதல் 850 வரை இருக்கும்.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த அங்கீகரிக்கப்பட்ட கடன் பணியகங்களுடன் விசாரித்து, உங்கள் கடன் விண்ணப்பத்தை மதிப்பீடு செய்யும் போது உங்கள் அல்லது உங்கள் வணிகத்தின் கடன் வரலாறு பற்றிய சுருக்கப்பட்ட கடன் அறிக்கையைப் பெறலாம்.

நல்ல கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?

கிரெடிட் பியூரோக்கள் கிரெடிட் ஸ்கோர்களைக் கணக்கிடும்போது வெவ்வேறு ஸ்கோர் மாதிரிகளைப் பயன்படுத்துகின்றன, எனவே எந்த கிரெடிட் பியூரோ உங்கள் கடன் அறிக்கையை வழங்குகிறது என்பதைப் பொறுத்து உங்களுடைய ஸ்கோர் மாறுபடும். பொதுவாக, கிரெடிட் ஸ்கோர் ரேன்ஜ்கள் பின்வருமாறு:

300-579 மோசமானது
580-669 நடுநிலையானது
670-739 நன்று
740-799 மிக நன்று
800-850 மிக மிக நன்று

கிரெடிட் ஸ்கோர் 700-750 க்கு மேல் இருந்தால் பொதுவாக நல்ல ஸ்கோராக கருதப்படுகிறது.

இருப்பினும், ஒவ்வொரு கடன் வழங்கும் நிறுவனமும் அவற்றிற்கான சுய இடர் தரவரிசையைக் (ஓன் ரிஸ்க் கிராடிங்) கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு வங்கி 700 க்கு மேற்பட்ட ஸ்கோரை நல்லதாகக் கருதலாம், அதே நேரத்தில் மற்றொரு வங்கி 750 க்கு மேல் ஸ்கோரை விரும்பலாம். பொதுவாக, 750 முதல் 800 ஸ்கோர் பெரும்பாலான சூழ்நிலைகளில் நல்லதாகக் கருதப்பட வேண்டும்.

உங்களுக்கு ஏன் நல்ல கிரெடிட் ஸ்கோர் தேவை?

வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்கும் நிறுவனங்கள் உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பயன்படுத்தி நீங்கள் கடன் ஒப்புதல்களுக்கு எவ்வளவு தகுதியானவர் என்பதை மதிப்பிடுவதால், ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர் இருப்பது முக்கியம்.

உங்களிடம் அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தால், நீங்கள் கடந்த காலத்தில் பொறுப்பான கடன் நடத்தையை வெளிப்படுத்தியுள்ளீர்கள் என்று அர்த்தம். லோன்கள் மற்றும் பிற கிரெடிட்களுக்கான கோரிக்கைகளை அங்கீகரிப்பதில் சாத்தியமான கடன் வழங்குநர்களுக்கு அதிக நம்பிக்கை இருக்க இது உதவக்கூடும். குறைந்த வட்டி விகிதங்கள், திருப்பிச் செலுத்துவதற்கான சிறந்த விதிமுறைகள் மற்றும் விரைவான கடன் ஒப்புதல் செயல்முறை போன்ற பிற நன்மைகளையும் நீங்கள் பெறலாம்.

வெவ்வேறு கடன் வழங்குநர்கள் உங்கள் வருமானம் அல்லது உங்கள் கட்டண வரலாறு போன்ற உங்கள் கிரெடிட் ஸ்கோரின் வெவ்வேறு அம்சங்களையும் வலியுறுத்தலாம்.

உங்கள் கிரெடிட் ஸ்கோரை எவ்வாறு சரிபார்ப்பது?

உரிமம் பெற்ற நான்கு கிரெடிட் தகவல் நிறுவனங்களும் உங்கள் கிரெடிட் ஸ்கோரை ஆன்லைனில் கொண்டுள்ளனர் அவற்றை நீங்கள் சரிபார்க்கலாம், ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஃப்ரீ கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட்டை வழங்கவும் இந்திய ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது.

நீங்கள் அதை இலவசமாக எப்படி சரிபார்க்கலாம் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

  • படி 1: சிபில் வலைத்தளம் அல்லது சி.ஆர்.ஐ.எஃப் ஹைமார்க் வலைத்தளம் போன்ற கிரெடிட் ரேட்டிங் நிறுவனத்தின் வலைத்தளத்திற்குச் செல்லவும்
  • படி 2: உங்கள் லாகின் கிரெடேன்ஷியல்களைப் பயன்படுத்தி உள்நுழைக, அல்லது உங்கள் தகவலைப் பயன்படுத்தி அக்கவுண்ட்டை உருவாக்கவும் (உங்கள் பெயர், தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்றவை)
  • படி 3: உங்கள் பான் நம்பர் அல்லது யூ.ஐ.டி உள்ளிட்ட உங்கள் விவரங்களுடன் வழங்கப்பட்ட படிவத்தை நிரப்பவும்
  • படி 4: இது முடிந்ததும், படிவத்தை சமர்ப்பிக்கவும்
  • படி 5: பின்னர் உங்கள் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சலைப் பெறுவீர்கள், இதனால் உங்கள் அடையாளத்தை சரிபார்க்க முடியும்
  • படி 6: சரிபார்க்கப்பட்டவுடன், உங்கள் லோன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் பற்றிய கேள்விகள் போன்ற தேவைப்படும் கூடுதல் தகவல்கள் உங்களிடம் கேட்கப்படலாம்.
  • படி 7: இது முடிந்ததும், உங்கள் கிரெடிட் ரிப்போர்ட் உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு வழங்கப்படும்.

உங்கள் கிரெடிட் ஸ்கோரை வருடத்திற்கு ஒரு முறைக்கு மேல் சரிபார்க்க விரும்பினால், சில கிரெடிட் பியூரோக்கள் கட்டண மாதாந்திர அறிக்கைகளுடன் உங்கள் ஸ்கோரை அறிந்துகொள்ள உங்களை அனுமதிக்கும். கூடுதலாக, லோன் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முன் உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்க ஒரு நல்ல நேரம்.

கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவது எப்படி?

உங்கள் கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருப்பதை உறுதிப்படுத்தவும், குறைந்த ஸ்கோர்களைத் தவிர்க்கவும், அதற்கு எந்த காரணிகள் ஸ்கோரை பாதிக்கும் என்பதை அறிவது முக்கியம். தாமதமாக அல்லது தவறவிட்ட பேமெண்ட்கள் மற்றும் அதிக கடன் பயன்பாடு (அல்லது உங்கள் கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகமாகப் பயன்படுத்துதல்) போன்ற விஷயங்களைத் தவிர்ப்பது இதில் அடங்கும். 

உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

  • உங்கள் சமமான மாதாந்திர தவணைகள் (இ.எம்.ஐ) மற்றும் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துங்கள்.
  • உங்கள் கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம், மேலும் உங்கள் கடன் பயன்பாட்டு விகிதத்தை (சி.யூ.ஆர்) 30 சதவீதத்திற்குள் வைத்திருங்கள்.
  • குறுகிய காலத்திற்குள் பல கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பதைத் தவிர்க்கவும்.
  • உங்கள் கடன் அறிக்கையை தவறாமல் மதிப்பாய்வு செய்யுங்கள், இதனால் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
  • இது முற்றிலும் தேவைப்பட்டால் தவிர, உங்கள் பழைய கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய வேண்டாம், ஏனெனில் பழைய கார்டுகள் உங்கள் பில்களை சரியான நேரத்தில் செலுத்துகிறீர்கள் என்று கடன் வழங்குநர்களுக்கு உறுதியளிக்க முடியும்.

கிரெடிட் ஸ்கோர் என்பது கடன்கள், கிரெடிட் கார்டு பில்கள் அல்லது லோன்களை திருப்பிச் செலுத்துவதற்கான கடன் வாங்குபவராக உங்கள் திறனை மதிப்பிடும் ஒரு எண், அதாவது உங்கள் "கிரெடிட் ரிஸ்க்".

அதிக கிரெடிட் ஸ்கோர் குறைந்த வட்டி விகிதங்கள் போன்ற பல நன்மைகளைப் பெற உதவும். மறுபுறம், பலவீனமான கிரெடிட் ஸ்கோர் (இது தவறவிட்ட பேமெண்ட்கள் அல்லது கிரெடிட் கார்டு லிமிட்களின் அதிகப்படியான பயன்பாடு போன்ற காரணிகளின் விளைவாகும்) உங்கள் கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம்.

உங்கள் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருப்பதை நீங்கள் உறுதி செய்யலாம், இதனால் தேவைப்படும் போதெல்லாம் இந்த கடன் வாய்ப்புகளை நீங்கள் அணுக முடியும்.