டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

ஆன்லைனில் கிரெடிட் ஸ்கோரை சரிபார்ப்பது எப்படி?

Source: slideshare

கிரெடிட் ஸ்கோர் என்பது 300-900க்கு இடையிலான மூன்று இலக்க எண் ஆகும், இது வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்கும் நிறுவனங்கள் தனிநபர்கள் அல்லது வணிகங்களின் "கிரெடிட் மதிப்பை" உறுதிப்படுத்தப் பயன்படுத்துகின்றன. இது வாங்கிய கிரெடிட்டை கடன்கள் அல்லது லோன்களின் வடிவத்தில் திருப்பிச் செலுத்துவதைக் குறிக்கிறது.

நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது முக்கியம், ஏனெனில், இது லோன்கள் மற்றும் பிற கடன்களுக்கான கோரிக்கைகளை அங்கீகரிப்பதில் சாத்தியமான கடன் வழங்குநர்களுக்கு அதிக நம்பிக்கையை அளிக்கிறது.

இந்தியாவில், இந்த கிரெடிட் ஸ்கோரை கணக்கிடும் நான்கு கிரெடிட் இன்ஃபர்மேஷன் பியூரோக்கள் உள்ளன - அவை டிரான்ஸ்யூனியன் சிபில், எக்ஸ்பீரியன், சி.ஆர்.ஐ.எஃப் ஹைமார்க் மற்றும் ஈக்விஃபேக்ஸ் ஆகும். இந்த நான்கு நிறுவனங்களின் மூலம் கிரெடிட் ஸ்கோரை ஆன்லைனில் எளிதாக சரிபார்க்க முடிய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது. அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட்டை வழங்க வேண்டும்.

உங்கள் கிரெடிட் ஸ்கோரை இலவசமாக சரிபார்க்க வெவ்வேறு வழிகள் உள்ளது

1. கிரெடிட் பியூரோ வலைத்தளங்களிலிருந்து நேரடியாக பெறலாம்

மேலே குறிப்பிட்டுள்ளபடி, கிரெடிட் இன்ஃபர்மேஷன் பியூரோ ஒரு இலவச கிரெடிட் ஸ்கோர் சரிபார்ப்பை அனுமதிக்கும். கிரெடிட் பியூரோவின் வலைத்தளம் மூலம் இதை எளிதாகச் செய்ய முடியும்.

பின்பற்ற வேண்டிய படிகள் பின்வருமாறு:

  • படி 1: சிபில் வெப்சைட் அல்லது சி.ஆர்.ஐ.எஃப் ஹைமார்க் வலைத்தளம் போன்ற கிரெடிட் ரேட்டிங் நிறுவனத்தின் வலைத்தளத்திற்குச் செல்லவும்.

  • படி 2: உங்கள் லாகின் விவரங்களைப் பயன்படுத்தி லாகின் செய்யுங்கள் அல்லது புதிய அக்கவுண்ட்டை உருவாக்குங்கள். அவ்வாறு செய்ய, உங்கள் பெயர், தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்த வேண்டும்.

  • படி 3: உங்கள் பான் கார்டு, ஆதார் கார்டு அல்லது பாஸ்போர்ட் போன்ற அடையாள ஆதாரத்தையும் இணைக்க வேண்டும்.

  • படி 4: இது முடிந்ததும் படிவத்தை சமர்ப்பிக்கவும்.

  • படி 5: பின்னர் உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ஐடிக்கு ஓ.டி.பியைப் பெறுவீர்கள், இதனால் உங்கள் அடையாளத்தை சரிபார்க்க முடியும்.

  • படி 6: சரிபார்க்கப்பட்டவுடன், நீங்கள் லாகின் செய்து டாஷ்போர்டுக்குச் செல்லலாம்.

  • படி 7: உங்கள் லோன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் பற்றிய கேள்விகள் போன்றக் கூடுதல் தகவல்கள் தேவைப்படலாம். 

  • படி 8: இது முடிந்ததும், உங்கள் கிரெடிட் ஸ்கோரை ஸ்கிரீனில் பார்க்க முடியும், மேலும் உங்கள் முழு கிரெடிட் ரிப்போர்ட்டை உங்கள் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு வழங்கப்படும்.

இந்த வகையான ஃப்ரீ அக்கவுண்ட் உங்கள் கிரெடிட் ஸ்கோரை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சரிபார்க்க அனுமதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் கிரெடிட் ஸ்கோரை அடிக்கடி/அதிக முறை சரிபார்க்க விரும்பினால், நீங்கள் கட்டண கணக்கு (பெய்டு அக்கவுண்ட்) அல்லது கட்டண மாதாந்திர அறிக்கைகள் (பெய்டு மன்த்லி ரிப்போர்ட்ஸ்) மூலம் அவ்வாறு செய்யலாம்.

2. உங்கள் வங்கி மூலம்

பல வங்கிகள் வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் ஸ்கோரை ஆண்டுக்கு ஒரு முறை தங்கள் வலைத்தளங்கள் மூலம் இலவசமாக சரிபார்க்க அனுமதிக்கும். இந்த வசதியை வழங்குகிறதா என்று உங்கள் வங்கியிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

இது கிடைத்தால், இந்த அம்சத்தை உங்கள் வங்கியின் நெட்பேங்கிங் வலைத்தளத்தில் அல்லது வங்கியின் மொபைல் ஆப்-இல் காணலாம்

3. தேர்ட் பார்ட்டி ஆப்களைப் பயன்படுத்துதல்

பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் தங்கள் கிரெடிட் ஸ்கோர் மற்றும் கிரெடிட் ரிப்போர்ட்டை இலவசமாக சரிபார்க்க அனுமதிக்கும் சில ஆப்கள் உள்ளன. இந்த ஆப்களின் கட்டண பதிப்புகள் உங்கள் கிரெடிட் சுயவிவரத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்கவும், தினசரி புதுப்பிப்புகளைப் பெறவும் மற்றும் பலவற்றை அனுமதிக்கலாம்.

இந்த ஆப்களில் சில பின்வருமாறு:

  • சிபில்(CIBIL) - சிபில் ஆப் நான்கு முக்கிய கிரெடிட் பியூரோக்களில் ஒன்று. இது ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் உங்கள் சிபில் ஸ்கோர் மற்றும் கிரெடிட் ரிப்போர்ட்டை சரிபார்க்கவும், உங்கள் கிரெடிட் சுயவிவரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வடிவமைக்கப்பட்ட கடன் சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றிய எச்சரிக்கைகளைப் பெறவும் உங்களை அனுமதிக்கிறது. 

  • எக்ஸ்பீரியன் - ஒரு பெரிய கிரெடிட் பியூரோவின் மற்றொரு ஆப் ஆன எக்ஸ்பீரியன் ஆப் வழக்கமான கிரெடிட் ரிப்போர்ட் புதுப்பிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளுடன் கிரெடிட் கண்காணிப்பை வழங்குகிறது. 

  • மின்ட் - மின்ட் ஆப் பயனர்கள் தங்கள் நிதிகளைக் கண்காணிக்கவும், கிரெடிட் ஸ்கோர் பகுப்பாய்வு மற்றும் கிரெடிட் விழிப்பூட்டல்களை வழங்கவும் உதவுகிறது. அவர்களின் ஸ்கோர்கள் ஈக்விஃபாக்ஸின் ஸ்கோர்களை அடிப்படையாகக் கொண்டவை. 

  • ஒன்ஸ்கோர் - ஒன்ஸ்கோர் ஆப் சிபில் மற்றும் எக்ஸ்பீரியனிலிருந்து உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்க உங்களை அனுமதிக்கிறது, மேலும் உங்கள் கிரெடிட் ஸ்கோரை எவ்வாறு மேம்படுத்துவது என்பதற்கான உதவிக்குறிப்புகளையும், மாற்றங்கள் குறித்த எச்சரிக்கைகளையும் வழங்குகிறது.

  • இந்தியாலெண்ட்ஸ் - இந்தியாலெண்ட்ஸ் இந்தியாவின் முதல் கிரெடிட் ஸ்கோர் மற்றும் பகுப்பாய்வு ஆப்களில் இதுவும் ஒன்று. இந்த ஆப் உங்கள் கிரெடிட் ஸ்கோரை இலவசமாகப் பெற உதவுகிறது.

  • கிரெடிட்மந்த்ரி - கிரெடிட்மந்த்ரி என்பது உங்களுக்கு கிரெடிட் பகுப்பாய்வு மற்றும் இலவச கிரெடிட் ஸ்கோரை வழங்கும் ஒரு ஆப் ஆகும்.

  • கிரெடிட்ஸ்மார்ட் - கிரெடிட்ஸ்மார்ட் என்பது உங்கள் கிரெடிட் ஸ்கோரைக் கணக்கிடும், தினசரி புதுப்பிப்புகள், நிதி பத்திரங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் பலவற்றை வழங்கும் ஒரு ஆன்லைன் தளமாகும்.

  • இடிமனி - இ.டி.மனி ஆப் பயனர்கள் தங்கள் ஸ்கோரை அறியவும், அதை மேம்படுத்துவதற்கான நுண்ணறிவுகளைப் பெறவும், உங்கள் ஸ்கோருடன் பொருந்தக்கூடிய லோன் சலுகைகளை வழங்கவும் உதவுகிறது.

உங்கள் வணிகத்திற்கான கிரெடிட் ஸ்கோரை எவ்வாறு சரிபார்ப்பது?

தனிநபர்களுக்கு 300 முதல் 900 வரை கிரெடிட் ஸ்கோர் வழங்கப்படுவதால், இந்தியாவில், வணிகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 1 முதல் 10 வரை இதேபோன்ற தரவரிசை ஒதுக்கப்படுகிறது. இந்த வழக்கில், 1 சிறந்த தரவரிசையாகும், அதே நேரத்தில் 10 என்பது மிக மோசமானதாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், 1-4 க்கு இடையில் எந்தவொரு தரவரிசையும் நல்லதாகக் கருதப்படுகிறது.

தனிநபர்கள் தங்கள் கிரெடிட் ஸ்கோர்களை சரிபார்க்கும் வழியில், நிறுவனங்கள் தங்கள் கம்பெனி கிரெடிட் ரிப்போர்ட் (சி.சி.ஆர்)ஐ சரிபார்க்கலாம். இந்த ரிப்போர்ட்கள் பொதுவாக இலவசமாக வழங்கப்படுவதில்லை, ஆனால் ஒரு சிறிய கட்டணம் தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சிபில் வலைத்தளம் வழியாக ஒரு சி.சி.ஆரை சரிபார்க்க பின்பற்ற வேண்டிய படிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

  • படி 1: சிபில் வலைத்தளம் போன்ற கிரெடிட் மதிப்பீட்டு நிறுவனத்தின் வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

  • படி 2: வழங்கப்பட்ட படிவத்தை சட்ட அரசியலமைப்பு, பதிவுசெய்யப்பட்ட முகவரி மற்றும் நிறுவனத்தின் தொடர்பு விவரங்கள் மற்றும் சி.சி.ஆரை கோரும் விண்ணப்பதாரரின் பெயர், விவரங்கள் மற்றும் ஏதேனும் கூடுதல் தகவல்கள் போன்ற தேவையான விவரங்களுடன் நிரப்பவும்.

  • படி 3: டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் பயன்படுத்தித் தேவையான கட்டணத்தைச் செலுத்துங்கள்.

  • படி 4: இது முடிந்ததும், உங்களுக்கு ஒரு தனித்துவமான பதிவு ஐடி மற்றும் பரிவர்த்தனை ஐடி ஒதுக்கப்படும், இது அடுத்த படிகளை அணுகவும் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படலாம்.

  • படி 5: நீங்கள் செய்ய வேண்டிய அடுத்த விஷயம் உங்கள் கே.ஒய்.சி ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும்.

  • படி 6: இது முடிந்ததும், உங்கள் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி-க்கு சி.சி.ஆர் மற்றும் சிபில் தரவரிசையைப் பெறுவீர்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உங்கள் கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?

உங்கள் கிரெடிட் ஸ்கோர் என்பது உங்கள் கிரெடிட் மதிப்பின் அளவை அளவிடுகிறது. அடிப்படையில், இது வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு ஒரு நபர் லோன் மற்றும் பிற கிரெடிட்களை செலுத்தத் தவறக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கூறுகிறது. இது உங்கள் கிரெடிட் ஹிஸ்டரி, பேமெண்ட் ஹிஸ்டரி, கிரெடிட் பயன்பாடு போன்றவற்றைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.

பொதுவாக, அதிக கிரெடிட் ஸ்கோர் கடனை செலுத்த நீங்கள் தவறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதையும், குறைவான கிரெடிட் ஸ்கோர் கடனை செலுத்த நீங்கள் தவறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதையும் பிரதிபலிக்கிறது.

நல்ல கிரெடிட் ஸ்கோர் மற்றும் மோசமான கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?

தனிநபர்களுக்கான கிரெடிட் ஸ்கோர்கள் 300 - 900 வரை இருக்கும். ஸ்கோர் அதிகரிக்கும் போது ஒரு நபரின் கிரெடிட் மதிப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

  • 300-579 – மோசமானது
  • 580-669 – சுமாரானது
  • 670-739 – நன்று
  • 740-799 – மிக நன்று
  • 800-850 – சிறப்பானது

கிரெடிட் ஸ்கோர் 700-750 க்கு மேல் பொதுவாக நல்லதாக கருதப்படுகிறது, அதே நேரத்தில் 300 முதல் 550 வரை உள்ள ஸ்கோர்கள் மிகவும் மோசமானவை.

கிரெடிட் ஸ்கோரை யார் சரிபார்க்கலாம்?

யார் வேண்டுமானாலும் தங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்கலாம். அவ்வாறு செய்ய உங்களுக்கு பான் கார்டு எண் (அல்லது இதே போன்ற பிற அடையாளச் சான்று) மட்டுமே தேவை. இருப்பினும், நீங்கள் கடந்த காலத்தில் கிரெடிட்டிற்கு விண்ணப்பிக்கவில்லை என்றால், உங்களிடம் கிரெடிட் ஹிஸ்டரி இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள், இதனால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருக்கும்.

லோன் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முன் உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்கவேண்டும்.

கிரெடிட் ரிப்போர்ட்க்கும் கிரெடிட் ஸ்கோருக்கும் வித்தியாசம் உள்ளதா?

கிரெடிட் ரிப்போர்ட் (கடன் தகவல் அறிக்கை அல்லது சி.ஐ.ஆர் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது உங்கள் கிரெடிட் ஹிஸ்டரியை, உங்கள் லோன்கள், கடன்கள் மற்றும் ரீபேமெண்ட்களின் விவரங்களுடன் பட்டியலிடும் ஒரு ஆவணமாகும். கிரெடிட் ஸ்கோர் என்பது 300-900 க்கு இடையிலான மூன்று இலக்க எண் (900 சாத்தியமான அதிகபட்ச ஸ்கோர்) ஆகும், இது இந்த தரவு மற்றும் பிற வேரியபில்களைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.

கிரெடிட் கார்டு இல்லாமல் உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்க முடியுமா?

ஆம், உங்களிடம் கிரெடிட் கார்டு இல்லாவிட்டாலும் உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்க முடியும். இருப்பினும், நீங்கள் கடந்த காலத்தில் லோன் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால், உங்களிடம் கிரெடிட் ஹிஸ்டரி இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள், அதனால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருக்கும்.

உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டை யாரெல்லாம் அணுகலாம்?

ஒரு நபரின் கிரெடிட் ரிப்போர்ட்டை அந்த நபராலும், கடன் வழங்குநர்களாலும், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு ஒழுங்குமுறை அமைப்புகளாலும் அணுக முடியும்.