டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

ஈக்விஃபாக்ஸ் கிரெடிட் ஸ்கோர்: எப்படி சரிபார்ப்பது, முக்கியத்துவம் மற்றும் நன்மைகள்

ஈக்விஃபாக்ஸ் கிரெடிட் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (இ.சி.ஐ.எஸ்) (பொதுவாக ஈக்விபாக்ஸ் என்று அழைக்கப்படுகிறது) என்பது இந்திய ரிசர்வ் வங்கியால் உரிமம் பெற்ற நான்கு கிரெடிட் பியூரோக்களில் ஒன்றாகும். ஈக்விஃபாக்ஸ் 2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, அத்துடன் இது அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள அமெரிக்க ஈக்விஃபாக்ஸ் இன்க்-இன் ஒரு கூட்டு நிறுவனமாகும். பேங்க் ஆப் பரோடா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கோட்டக் மஹிந்திரா பிரைம் லிமிடெட், பேங்க் ஆப் இந்தியா, சுந்தரம் பைனான்ஸ் லிமிடெட், யூனியன் பாங்க் ஆப் இந்தியா மற்றும் ரெலிகேர் ஃபின்வெஸ்ட் லிமிடெட் ஆகியவை இதில் அடங்கும்.

மற்ற பியூரோக்களைப் போலவே, ஈக்விஃபாக்ஸும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் தகவல்களைப் பெறுகிறது மற்றும் கிரெடிட் ஸ்கோர்கள், கிரெடிட் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட்கள் மற்றும் பிற சேவைகளை உருவாக்க இந்த தகவலைப் பயன்படுத்துகிறது.

ஈக்விஃபாக்ஸ் கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?

ஒரு நபரின் ஈக்விஃபாக்ஸ் கிரெடிட் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரையிலான 3 இலக்க எண் ஆகும், இது ஒருவரின் கிரெடிட் ஹிஸ்டரியை சுருக்கமாகக் குறிக்கிறது. இது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் போன்ற கிரெடிட் வழங்குநர்களால் வழங்கப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. இந்த தகவல் மிகவும் விரிவான கிரெடிட் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட்டுடாக தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த ரிப்போர்ட்டில் அந்த நபரின் அனைத்து லோன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளின் சுருக்கம், அவரின் ரீபேமெண்ட் ஹிஸ்டரி மற்றும் அவர்கள் கிரெடிட் கார்டு அல்லது லோன் வாங்கிய கடன் வழங்குநர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட அடையாளத் தகவல்கள் ஆகியவை அடங்கும்.

ஈக்விஃபாக்ஸ் கிரெடிட் ஸ்கோர் ஒரு நபரின் கிரெடிட் மதிப்பைக் குறிக்கிறது என்று கூறப்படுகிறது. அடிப்படையில், அதிக ஸ்கோர் ஒரு நபர் பில்கள் மற்றும் லோன்களை திருப்பிச் செலுத்துவதில் ஒரு சீரான முறையை கொண்டுள்ளார் என்பதைக் கூறுகிறது, மேலும் இந்த ஸ்கோர் அவர்களின் லோன் விண்ணப்பங்களை அங்கீகரிக்க வேண்டுமா இல்லையா என்பதை கடன் வழங்குநர்கள் தீர்மானிக்க உதவும்.

நல்ல மற்றும் மோசமான ஈக்விஃபாக்ஸ் கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?

கிரெடிட் இன்ஃபர்மேஷன் நிறுவனங்கள் தனித்தனி கிரெடிட் ஸ்கோர் அமைப்புகளைக் கொண்டுள்ளன, மேலும் ஈக்விஃபாக்ஸ் கிரெடிட் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்கும், இதில் 900 என்பது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். பொதுவாக, 700-க்கு மேல் ஸ்கோர் வைத்திருப்பது நல்லது என்று கருதப்படுகிறது.

ஈக்விஃபாக்ஸ் ஸ்கோர் வகை இந்த ஸ்கோர் எப்படி கிடைத்தது?
NH ஹிஸ்டரி இல்லை நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தவில்லை அல்லது ஒருபோதும் கடன் வாங்கவில்லை என்றால் உங்களுக்கு கிரெடிட் ஹிஸ்டரி இருக்காது
300-549 மோசமானது நீங்கள் ரீபேமெண்ட் அல்லது கிரெடிட் கார்டு பில்கள் அல்லது இ.எம்.ஐ-களை அதிகமுறை தவறிவிட்டீர்கள் என்றால், நீங்கள் அதிக ஆபத்து உடைய ஸ்கோரை கொண்டிருப்பவராக கருதப்படுவீர்கள், மேலும் லோன் அல்லது கிரெடிட் கார்டைப் பெறுவது கடினம்.
550-649 சுமாரானது பில்கள்/இ.எம்.ஐ-க்கள் தாமதமாக செலுத்துதல் அல்லது பல கிரெடிட் என்க்கோய்ரிகள் போன்றவை இருந்தால், சில கடன் வழங்குநர்கள் உங்கள் கிரெடிட் விண்ணப்பங்களை அங்கீகரிப்பதற்கு முன் சற்று யோசிப்பார்கள், மேலும் உங்கள் கடன் வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கலாம்
650-749 நல்லது உங்கள் கிரெடிட் பேமெண்ட்களில் நீங்கள் தவறாமல் இருக்கிறீர்கள், மற்றும் பொறுப்பான கடன் நடத்தையைக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், பெரும்பாலான கடன் வழங்குநர்கள் உங்கள் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலிப்பார்கள், இருப்பினும், நீங்கள் சிறந்த ஒப்பந்தங்களைப் பெறாமல் போகலாம்
750-900 சிறப்பானது உங்களிடம் ஒரு முன்மாதிரியான கிரெடிட் ஹிஸ்டரி, பணம் செலுத்துதல், கடன் பயன்பாடு போன்றவற்றில் எந்த தவறும் இல்லாமல் இருந்தால், நீங்கள் கிரெடிட்டை திருப்பிச் செலுத்தும் அபாயம் குறைவானவராகக் கருதப்படுவீர்கள், மேலும் வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் லோன்கள் மற்றும் கிரெடிட்களில் சிறந்த டீல்களை உங்களுக்கு வழங்கும்

நல்ல ஈக்விஃபாக்ஸ் கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது ஏன் முக்கியம்?

கிரெடிட் ஸ்கோர் என்பது ஒரு நபரின் கிரெடிட் மதிப்பை தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும், இது வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் தனிநபரைப் பற்றிய நிதி முடிவுகளை எடுக்க உதவுகிறது.

ஒரு நபரின் கிரெடிட் ஹிஸ்டரி, லோன்கள், கிரெடிட் கார்டு பேமெண்ட்கள், தவணை செலுத்தத் தவறியது மற்றும் பலவற்றைப் பயன்படுத்தி ஸ்கோர் அல்காரிதம்களால் கிரெடிட் ஸ்கோர் கணக்கிடப்படுவதால், அந்நபர் கடன்கள் மற்றும் கிரெடிட்களில் தவறவிடக்கூடிய சாத்தியத்தை இது பிரதிபலிக்கிறது. பொதுவாக, கடன் வழங்குநர்கள் அதிக ஸ்கோர்களைக் கொண்ட கடன் வாங்குபவர்களை விரும்புகிறார்கள் (இதனால் சரியான நேரத்தில் ரீபேமெண்ட் செய்யப்படுவது மற்றும் சிறந்த நிதி முடிவுகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள வாய்ப்பிருக்கும்).

எனவே, சிறந்த ஸ்கோர் கொண்டவர்கள் சிறந்த வட்டி விகிதங்களைப் பெறலாம், இது ஒருவர் சிறந்த கடன் ஒப்பந்தங்கள் பெறுவதற்கும், பலவற்றை கலந்து பேசி முடிவிற்கு வருவதற்கும் அனுமதிக்கிறது. ஒருவர் ஸ்கோரை பாதிக்கக்கூடிய காரணிகளை அறிந்து, நல்ல கிரெடிட் ஸ்கோரை பராமரிக்க முயற்சி செய்ய வேண்டும்.

ஒரு நபரின் ஈக்விஃபாக்ஸ் கிரெடிட் ஸ்கோர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

ஒரு நபரின் ஈக்விஃபாக்ஸ் ஸ்கோர் சில முக்கிய காரணிகளைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது, அவை:

காரணிகள் இந்த காரணிகளை பாதிப்பது எது
பேமெண்ட் ஹிஸ்டரி கிரெடிட் கார்டு பில்கள், லோன்கள் மற்றும் இ.எம்.ஐ.களை சரியான நேரத்தில் செலுத்துதல், பேமெண்ட்கள் தாமதமாகும்போது அல்லது தவறும் போது, அது உங்கள் கிரெடிட் ஸ்கோரைக் குறைக்கும்.
கிரெடிட் ஹிஸ்டரியின் அளவு உங்களிடம் எவ்வளவு காலமாக கிரெடிட் அக்கவுண்ட் உள்ளது, பழைய அக்கவுண்ட்கள் மற்றும் கார்டுகளில் உங்கள் பில்களை சரியான நேரத்தில் தொடர்ந்து செலுத்தி வருகிறீர்களா என்பது கடன் வழங்குநர்களுக்கு உறுதியளிக்க முடியும்.
கிரெடிட் பயன்பாடு நீங்கள் பயன்படுத்தும் உங்கள் கிரெடிட் லிமிட்டின் அளவு, அதாவது ஒருவர் தங்கள் கிரெடிட் லிமிட்டில் 30% க்கு மேல் செலவழிக்கக்கூடாது; கிரெடிட் பயன்பாடு இதை விட அதிகமாக இருந்தால், அது உங்கள் ஸ்கோரைக் குறைக்கும்.
கிரெடிட் மிக்ஸ் உங்களிடம் உள்ள கிரெடிட் வகைகளைக் குறிக்கிறது; இரண்டு வகைகள் உள்ளன: பாதுகாப்பற்ற லோன்கள் (கிரெடிட் கார்டுகள் மற்றும் பர்சனல் லோன்கள் போன்றவை) மற்றும் பாதுகாப்பான லோன்கள் (ஆட்டோ லோன்கள் அல்லது ஹோம் லோன்கள் போன்றவை), இரண்டின் கலவையையும் கொண்டிருக்க பரிந்துரைக்கப்படுகிறது.
புதிய கிரெடிட் என்க்கோய்ரிகள் கிரெடிட் கார்டுகள், லோன்கள் போன்றவற்றிற்கு நீங்கள் எத்தனை முறை விண்ணப்பித்துள்ளீர்கள், அதிக எண்ணிக்கையிலான என்க்கோய்ரிகள் உங்கள் ஸ்கோரைக் குறைக்கும்.

உங்கள் ஈக்விஃபாக்ஸ் கிரெடிட் ஸ்கோரை எவ்வாறு சரிபார்ப்பது?

தற்போது, தங்கள் நிறுவனத்திடமிருந்து ஈக்விஃபாக்ஸ் கிரெடிட் ஸ்கோர் மற்றும் ரிப்போர்ட்டை நேரடியாக பெற, ஒருவர் ஒரு படிவத்தை பூர்த்தி செய்து கோரியர், அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.

ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி, அனைத்து பயனர்களும் ஒரு காலண்டர் வருடத்திற்கு ஒரு முழு இலவச கிரெடிட் ரிப்போர்ட்டிற்கு உரிமையுடையவர்கள். ஒரு காலண்டர் ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கடன் ரிப்போர்ட்களைக் கோருவதற்கு, நீங்கள் ஒரு சிறிய கட்டணம் செலுத்துமாறு கேட்கப்படுவீர்கள்.

கீழே குறிப்பிட்டுள்ள படிகளை நீங்கள் பின்பற்றலாம்:

  • படி 1: ஈக்விஃபாக்ஸ் வலைத்தளத்தில் கிரெடிட் ரிப்போர்ட் கோரிக்கை படிவத்தை நிரப்பவும். 

  • படி 2: உங்கள் அடையாளச் சான்று (வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் நகல் அல்லது பான் கார்டு போன்றவை) மற்றும் முகவரி சான்று (மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், வங்கி அறிக்கை, ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு அல்லது வாடகை ஒப்பந்தம் போன்றவை) ஆகியவற்றின் சுய சான்றொப்பமிட்ட நகலை இணைக்கவும் / சேர்க்கவும்.

  • படி 3: நீங்கள் கட்டணம் செலுத்தி கிரெடிட் ரிப்போர்ட்டை பெறுகிறீர்கள் என்றால், "ஈக்விஃபாக்ஸ் கிரெடிட் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்" க்கு ஒரு கோரிக்கை வரைவை இணைக்கவும். லிமிடேட்.". இது ₹138 (கிரெடிட் ரிப்போர்ட்டுக்கு) மற்றும் ₹472 (கிரெடிட் ரிப்போர்ட் மற்றும் கிரெடிட் ஸ்கோர் இரண்டிற்கும்) ஆக இருக்கும். 

  • படி 4: மேலே உள்ள ஆவணங்களை கோரியர், அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். 

  • மின்னஞ்சல் மூலம் அனுப்பினால், ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை ecissupport@equifax.com அனுப்பவும்

  • தபால் மூலம் அனுப்பினால், ஆவணங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

வாடிக்கையாளர் சேவை குழு - ஈக்விஃபாக்ஸ் கிரெடிட் இன்பர்மேஷன் சர்வீசஸ் லிமிடெட், 931, 3 வது மாடி, கட்டிடம் 9, சோலிடேர் கார்ப்பரேட் பூங்கா, அந்தேரி காட்கோபர் இணைப்பு சாலை, மிராடோர் ஹோட்டல்
எதிரில், அந்தேரி கிழக்கு, மும்பை - 400 093

கிரெடிட்மந்த்ரி ஆப், கிரெடிட்ஸ்மார்ட் அல்லது இ.டி.மனி போன்ற ஆன்லைன் தேர்ட் பார்ட்டி பிளாட்பார்ம்கள் வழியாகவும் உங்கள் ஈக்விஃபாக்ஸ் கிரெடிட் ஸ்கோரை அணுகலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஒரு நபரைப் பற்றிய எந்த காரணிகள் அவர்களின் ஈக்விஃபாக்ஸ் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்?

ஒரு நபரின் ஈக்விஃபாக்ஸ் ஸ்கோரைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் முக்கிய காரணிகளை நாம் ஏற்கனவே பார்த்தோம். இருப்பினும், கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் வேறு சில வேரியபில்கள் உள்ளன:

  • கிரெடிட் ரீபேமெண்ட் ஹிஸ்டரி
  • கிரெடிட் யூசேஜ்
  • நீங்கள் வைத்திருக்கும் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை
  • உங்களிடம் உள்ள பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற லோன்களின் எண்ணிக்கை
  • இருப்பிட காரணிகள்
  • உங்கள் வருமானம்

ஈக்விஃபாக்ஸ் மற்றும் சிபில் கிரெடிட் ஸ்கோர்களுக்கு இடையிலான வேறுபாடுகள் யாவை?

ஈக்விஃபாக்ஸ் மற்றும் சிபில் இரண்டும் கிரெடிட் பியூரோக்கள் அல்லது கிரெடிட் இன்ஃபர்மேஷன் நிறுவனங்கள். ரிசர்வ் வங்கியால் இந்தியாவில் உரிமம் பெற்ற நான்கு நிறுவனங்களில் இவை இரண்டு ஆகும். இரண்டும் பயனர்களுக்கு கிரெடிட் ஸ்கோர் மற்றும் கிரெடிட் ரிப்போர்ட்களை வழங்குகின்றன. 

அவற்றுக்கிடையே உள்ள சில வேறுபாடுகள்:

  • இரண்டும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலவச கிரெடிட் ரிப்போர்ட்டை வழங்குகின்றன, கூடுதல் சிபில் ரிப்போர்ட்களுக்கு ₹550 செலவாகும், அதே நேரத்தில் கூடுதல் சி.ஆர்.ஐ.எஃப் ஹை மார்க் கிரெடிட் ரிப்போர்ட்க்கு ₹138 செலவாகும் (கிரெடிட் ரிப்போர்ட் மற்றும் கிரெடிட் ஸ்கோருக்கு ₹472 செலவாகும்). 
  • நீங்கள் வருடத்திற்கு பல முறை சிபில் ரிப்போர்ட்களைப் பெறலாம், ஆனால் ஈக்விஃபாக்ஸ் ஆண்டுக்கு 4 முறை ஒருவரின் கிரெடிட் ரிப்போர்ட்டை பெறுவதற்கான விருப்பத்தை மட்டுமே வழங்குகிறது.
  • நீங்கள் சிபில்க்கு நெட் பேங்கிங், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம், ஆனால் ஈக்விஃபாக்ஸ் டிமாண்ட் டிராஃப்ட்களை மட்டுமே ஏற்றுக்கொள்கிறது.

ஈக்விஃபாக்ஸ் வழங்கும் பிற சேவைகள் யாவை?

ஈக்விஃபாக்ஸ் வழங்கும் பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் பட்டியல் இங்கே:

கன்சியூமர் கிரெடிட் பியூரோ: இது குறிப்பிட்ட வழிமுறைகள் மற்றும் பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி கிரெடிட் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட்கள் மற்றும் கிரெடிட் ஸ்கோர்களை வழங்குகிறது. இது நுகர்வோருக்கு ஒரு போர்ட்ஃபோலியோ மதிப்பாய்வையும் வழங்குகிறது, அதில் அவர்கள் இழப்புகளைக் குறைக்கவும் வருவாயை உருவாக்க உதவும் முன்கணிப்பு நுண்ணறிவைப் பயன்படுத்துகிறார்கள்.

மைக்ரோஃபைனான்ஸ் பியூரோ: ஈக்விஃபாக்ஸின் மைக்ரோஃபைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச் என்பது மைக்ரோஃபைனான்ஸ் இன்ஸ்டிடியூஷன்ஸ் நெட்வொர்க்குடன் (எம்.எஃப்.ஐ.என்) உடன்பாட்டில் உள்ளது, மேலும் இது மைக்ரோஃபைனான்ஸ் கிரெடிட் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட்கள், மைக்ரோஃபைனான்ஸ் ஸ்கோர்கள் மற்றும் மைக்ரோஃபைனான்ஸ் போர்ட்ஃபோலியோ மதிப்புரைகளை வழங்குகிறது

மல்டி பியூரோ சொல்யூஷன்ஸ்: இது பல்வேறு கிரெடிட் பியூரோக்களில் இருந்து திரட்டப்பட்டத் தரவுகளுக்கான சிங்கிள் பாயிண்ட் ஆஃப் என்க்கோய்ரியை வழங்குகிறது.

மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள்: கிரெடிட் ஃபிராடு மற்றும் ரிஸ்க் மேனேஜ்மெண்ட் யுக்திகள், போர்ட்ஃபோலியோ மேனேஜ்மெண்ட், சேகரிப்பு தயாரிப்புகள் மற்றும் தீர்வுகள், தொழில் கண்டறிதல் போன்றவற்றை ஈக்விஃபாக்ஸ் பல மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

உங்கள் ஈக்விஃபாக்ஸ் கிரெடிட் ஸ்கோர் மற்றும் கிரெடிட் ரிப்போர்ட்டை யார் அணுகலாம்?

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உள்ளடக்கிய பதிவுசெய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஈக்விஃபாக்ஸ் உறுப்பினர்கள், கிரெடிட் இன்ஃபர்மேஷன் கம்பெனி சட்டத்தின் நெறிமுறைகளைப் பூர்த்தி செய்யும் மற்றவர்கள் உங்கள் கிரெடிட் ஹிஸ்டரியை பெறலாம்.