டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

எக்ஸ்பீரியன் கிரெடிட் ஸ்கோர்: எவ்வாறு சரிபார்ப்பது, நன்மைகள் மற்றும் முக்கியத்துவம்

எக்ஸ்பீரியன் என்பது 2010 ஆம் ஆண்டில் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒரு பன்னாட்டு கிரெடிட் ரிப்போர்ட்டிங் கம்பெனி ஆகும். இது இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ) உரிமம் பெற்ற நான்கு கிரெடிட் பியூரோக்களில் ஒன்றாகும். இது வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட மற்றும் பிசினஸ் கிரெடிட் ஸ்கோர்கள் இரண்டையும் வழங்குகிறது, இந்நிறுவனம் அவர்களின் கிரெடிட் மதிப்பை அளவிட உதவுகிறது, மேலும் அவர்களின் கிரெடிட் நடவடிக்கைகளை மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள முறையில் நிர்வகிக்க உதவுகிறது.

எக்ஸ்பீரியன் கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?

எக்ஸ்பீரியன் கிரெடிட் ஸ்கோர் என்பது 300 முதல் 850 வரையிலான மூன்று இலக்க எண் ஆகும். பில்களை திருப்பிச் செலுத்தும் ஹிஸ்டரி, கிரெடிட் பயன்பாடு, லோன் விண்ணப்பங்கள் மற்றும் பலவற்றைப் பயன்படுத்தி கிரெடிட் இன்ஃபர்மேஷன் கம்பெனியால் அவை கணக்கிடப்படுகின்றன.

ஒரு நபரின் கிரெடிட் ஸ்கோர் அவர்களின் "கிரெடிட் மதிப்பு" அல்லது கிரெடிட் கார்டுகள் மற்றும் கடன்களுக்கான ஒப்புதலைப் பெறுவதற்கான அவர்களின் தகுதியைக் குறிக்கிறது. அதிக எக்ஸ்பீரியன் ஸ்கோரை கொண்டிருப்பது இந்த ஒப்புதல்களையும் பிற நன்மைகளையும் பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தலாம், ஏனெனில், நீங்கள் பொறுப்பான கடன் நடத்தை கொண்ட ஒருவராகக் காணப்படுவீர்கள், அத்துடன் பணம் செலுத்தத் தவறியதற்கான ஆபத்தைக் குறைவாகக் கொண்டிருப்பதாகக் கருதப்படுவீர்கள்.

நல்ல எக்ஸ்பீரியன் கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?

மேலே குறிப்பிட்டுள்ளபடி, எக்ஸ்பீரியன் கிரெடிட் ஸ்கோர் 300-850 வரம்பு வரை இருக்கும். இங்கு, 300 என்பது மிகக் குறைந்த ஸ்கோர், 850 என்பது அதிகபட்ச ஸ்கோர். பொதுவாக, அதிக ஸ்கோர் என்பது ஒரு நபர் மிகவும் நிதி ரீதியாக வலுவான நிலையைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.

எக்ஸ்பீரியன் ஸ்கோரின் வரம்புகள் அல்லது வகைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

ஸ்கோர் வகை பொருள்
NA/NH ஸ்கோர் இல்லை உங்களிடம் கிரெடிட் ஹிஸ்டரி இல்லை.
300-549 மோசமானது நிதி மேலாண்மையின் மோசமான வரலாறு, பேமெண்ட் நிலுவைகள் மற்றும் மோசமான கிரெடிட் பயன்பாடு போன்றவையால் நீங்கள் அதிக அபாயமாக கருதப்படுவீர்கள். அத்துடன் கடன் வழங்குபவர்கள் கிரெடிட் வழங்குவதில் எச்சரிக்கையாக இருப்பார்கள்.
550-649 சுமாரானது பணம் செலுத்தத் தவறியவர்கள், பாதுகாப்பற்ற லோன்கள் எடுப்பது போன்ற சில சந்தர்ப்பங்களில், நீங்கள் கடன் வழங்குநருக்கு ஆபத்தாக கருதப்படுவீர்கள், ஏனெனில் நீங்கள் தவணை செலுத்த மறந்ததற்குப் பொறுப்பாவீர்கள்.
650-749 நல்லது ஒரு சீரான கிரெடிட் ஹிஸ்டரி, நிதி ரீதியாக சிறந்த முடிவுகளை வெளிப்படுத்துதல் மற்றும் சரியான நேர ரீபேமெண்ட், நீங்கள் குறைந்த ஆபத்துள்ள கடனாளராக கருதப்படுவீர்கள், மேலும் கடன் வழங்குநர்கள் கிரெடிட் வழங்குவார்கள்.
750-799 மிக நல்லது நிதி மேலாண்மையின் நல்ல வரலாறு, கிரெடிட்டை பயன்படுத்துதல் மற்றும் தவணை செலுத்த மறக்காமல் இருந்து ஒழுங்கான ரீபேமெண்ட், நீங்கள் உங்கள் கிரெடிட் மதிப்பை நிரூபித்துள்ளீர்கள், மேலும் கடன் வழங்குபவர்கள் கிரெடிட் வழங்கும்போது உங்களை குறைந்த ஆபத்து உள்ளவராகக் கருதுவார்கள்.
800-850 சிறப்பானது இது எக்ஸ்பீரியனால் வழங்கப்பட்ட மிக உயர்ந்த வரம்பாகும், மேலும் கிட்டத்தட்ட சரியான கிரெடிட் ரெக்கார்டை கொண்ட ஒரு நபரைக் குறிக்கிறது, இதனால் நீங்கள் மிகக் குறைந்த ஆபத்து உள்ளவர் என்று கருதப்படுவீர்கள், மேலும் லோன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளில் சிறந்த டீல்களைப் பெறுவீர்கள்.

நல்ல எக்ஸ்பீரியன் கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதன் முக்கியத்துவம் என்ன?

ஒரு நபரின் எக்ஸ்பீரியன் கிரெடிட் ஸ்கோர் அவர் எவ்வளவு "கிரெடிட் மதிப்பு" உள்ளவர் என்பதை பிரதிபலிக்கிறது. இது லோன் போன்ற கடனை திருப்பிச் செலுத்தும் அவர்களின் திறனைக் குறிக்கிறது.

இந்த ஸ்கோர்கள் முக்கியமானவை, ஏனெனில் வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்குநர்கள் போன்ற நிதி நிறுவனங்கள் லோன் அல்லது கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பங்களை அங்கீகரிப்பார்களா என்பதை தீர்மானிக்கவும், வாராக் கடன் அல்லது மோசடி சூழ்நிலைகளைத் தவிர்க்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு நல்ல/அதிக கிரெடிட் ஸ்கோர் அத்தகைய விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் பெற உதவும், அதே நேரத்தில் மோசமான/குறைந்த கிரெடிட் ஸ்கோர் உங்கள் லோன் மற்றும் கிரெடிட் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கு வழிவகுக்கும்.

எக்ஸ்பீரியன் கிரெடிட் ஸ்கோர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

ஒரு நபரின் எக்ஸ்பீரியன் கிரெடிட் ஸ்கோர், மற்றும் அவர்களின் கிரெடிட் ரிப்போர்ட், ஐந்து முக்கிய காரணிகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்த காரணிகள் ஒவ்வொன்றும் உங்கள் இறுதி ஸ்கோரில் வேறுபட்ட சதவீத அடிப்படையில் பங்களிக்கும். அவை பின்வருமாறு:

காரணிகள் சதவீதம் இந்த காரணிகளை எது பாதிக்கிறது?
பேமெண்ட் ஹிஸ்டரி 35% கிரெடிட் கார்டு பில்கள், கடன்கள் மற்றும் இ.எம்.ஐ-க்கள் போன்ற உங்கள் கிரெடிட் அக்கவுண்ட்களில் வழக்கமான பேமெண்ட்கள் உங்கள் ஸ்கோருக்கு உதவக்கூடும், தவறவிட்ட பேமெண்ட்கள் அல்லது தவறிய பேமெண்ட்கள் உங்கள் ஸ்கோரை பாதிக்கும்.
கிரெடிட் யூசேஜ் 30% நீங்கள் செலுத்த வேண்டிய பணத்தின் அளவு, உங்கள் அக்கவுண்ட் பேலன்ஸ் மற்றும் நீங்கள் உங்கள் கிரெடிட் லிமிட்டில் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள் என்பன அனைத்தும் இதில் அடங்கும்.
கிரெடிட் ஹிஸ்டரியின் அளவு 15% உங்கள் கிரெடிட் அக்கவுண்ட்களின் சராசரி வயது இங்கே கருத்தில் கொள்ளப்படுகிறது, பழைய அக்கவுண்ட்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் உங்களிடம் பொறுப்பான கிரெடிட் ஹிஸ்டரி இருப்பதாக கடன் வழங்குநர்களுக்கு உறுதியளிக்க முடியும்.
கிரெடிட் மிக்ஸ் 10% இது உங்களிடம் உள்ள அக்கவுண்ட்கள் அல்லது கிரெடிட் வகைகளைக் குறிக்கிறது, பாதுகாப்பில்லா லோன்கள் (எ.கா. கிரெடிட் கார்டுகள் மற்றும் பர்சனல் லோன்கள்) மற்றும் பாதுகாப்பான லோன்கள் (எ.கா. கார் லோன்கள் அல்லது ஹோம் லோன்கள்) ஆகியவற்றின் நல்ல கலவையைக் கொண்டிருப்பது பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில், நீங்கள் இரண்டு வகைகளையும் நிர்வகிக்க முடியும் என்பதை இது காட்டுகிறது.
புதிய கிரெடிட் 10% இது நீங்கள் சமீபத்தில் புதிய கிரெடிட்க்கு விண்ணப்பித்திருக்கிறீர்களா (லோன்கள் அல்லது கிரெடிட் கார்டுகள் போன்றவை) அல்லது சமீபத்தில் புதிய அக்கவுண்ட்களைத் துவங்கியிருக்கிறீர்களா என்பதைக் குறிக்கிறது, அதிக எண்ணிக்கையிலான என்க்கோய்ரிகள் உங்கள் ஸ்கோரை குறைக்கும்.

உங்கள் எக்ஸ்பீரியன் கிரெடிட் ஸ்கோரை எவ்வாறு சரிபார்ப்பது?

உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்ப்பது முக்கியம், ஏனெனில் நீங்கள் எந்த நிலையில் உள்ளீர்கள் என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். லோன் அல்லது எந்த வகையான கிரெடிட்டிற்கும் விண்ணப்பிப்பதை நீங்கள் கருத்தில் கொண்டால் இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் நீங்கள் சிறப்பான முறையில் கடன் பெறத் தயாராகலாம்.

ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி, நுகர்வோர் ஒவ்வொரு 12 மாதங்களுக்கும் ஒரு இலவச கிரெடிட் அறிக்கையைப் பெறலாம், மேலும் கூடுதல் அறிக்கைகளுக்கு நீங்கள் ₹399 கட்டணம் செலுத்தவேண்டும். இருப்பினும், உங்களின் கிரெடிட் ஸ்கோரை அவர்களிடம் நீங்கள் எந்த நேரத்திலும் சரிபார்க்கலாம். நீங்கள் அதை எவ்வாறு செய்யலாம் என்பது இங்கே:

உங்கள் எக்ஸ்பீரியன் கிரெடிட் ஸ்கோரை ஆன்லைனில் சரிபார்த்தல்

  • படி 1: எக்ஸ்பீரியன் வலைத்தளத்தைப் பார்வையிட்டு "இலவச கிரெடிட் அறிக்கை" பட்டனைக் கிளிக் செய்யவும்.

  • படி 2: உள்நுழைய உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை உள்ளிடவும்.

  • படி 3: மேலே பகிரப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓ.டி.பியைப் பெறுவீர்கள். இது உள்ளிடப்பட்டதும், நீங்கள் "கிரெடிட் அறிக்கையைப் பெறு" விருப்பத்தைக் கிளிக் செய்யலாம்.

  • படி 4: நீங்கள் உள்நுழைந்ததும், உங்கள் பிறந்த தேதி, குடியிருப்பு முகவரி மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை எண்ணையும் (பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் ஐடி போன்றவை) பயன்படுத்தி உங்கள் அடையாளத்தை சரிபார்க்குமாறு கேட்கப்படுவீர்கள்.

  • படி 5: இந்தத் தகவல் சரிபார்க்கப்பட்டவுடன், உங்கள் லோன்கள் மற்றும் கிரெடிட் ஹிஸ்டரி பற்றி மேலும் சில கேள்விகள் உங்களிடம் கேட்கப்படலாம்.

  • படி 6: இது முடிந்ததும், உங்கள் கிரெடிட் ஸ்கோர் உருவாக்கப்படும் பக்கத்திற்கு நீங்கள் திருப்பிவிடப்படுவீர்கள். 

  • படி 7: உங்கள் கிரெடிட் அறிக்கையையும் பதிவிறக்கம் செய்ய முடியும்.

உங்கள் எக்ஸ்பீரியன் கிரெடிட் ஸ்கோர் மற்றும் அறிக்கையை ஆஃப்லைனில் சரிபார்த்தல்

  • படி 1: எக்ஸ்பீரியன் வலைத்தளத்தைப் பார்வையிடவும் மற்றும் கடன் அறிக்கை படிவத்தைப் பதிவிறக்கவும்.

  • படி 2: படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும், அதில் கையொப்பமிட மறக்காதீர்கள்.

  • படி 3: உங்கள் பான் கார்டு, பாஸ்போர்ட் மற்றும் உங்கள் வாக்காளர் ஐடி போன்ற உங்கள் அடையாளச் சான்று ஆவணங்களின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகலைச் சேர்க்கவும். 

  • படி 4: உங்கள் தொலைபேசிக் கட்டணம், மின் கட்டணம், வாடகை ஒப்பந்தம், வங்கிக் கணக்கு அறிக்கை மற்றும் கொள்முதல் பத்திரம் போன்ற உங்கள் முகவரிச் சான்று ஆவணங்களின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகலையும் சேர்க்கவும்.

  • படி 5: உங்கள் எக்ஸ்பீரியன் சி.ஐ.ஆருக்கு தேவையான கட்டணமான ₹138ஐ என்.இ.எஃப்.டி அல்லது டிமாண்ட் டிராஃப்ட் மூலம் செலுத்தவும்.

  • படி 6: இறுதியாக, தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணச் சான்றுகளுடன் படிவத்தை அஞ்சல் அல்லது கோரியர் மூலம் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்:

    • எக்ஸ்பீரியன் கிரெடிட் இன்ஃபர்மேஷன் கம்பெனி இந்தியா பிரைவேட் லிமிடெட், நுகர்வோர் சேவைகள் ஈக்வினாக்ஸ் பிசினஸ் பார்க், டவர் 3, 5 வது மாடி, கிழக்கு பிரிவு, எல்.பி.எஸ் மார்க், குர்லா (மேற்கு), மும்பை 400070.

  • படி 7: உங்கள் கிரெடிட் ஸ்கோர் மற்றும் கிரெடிட் அறிக்கையை அஞ்சலில் பெறுவீர்கள்.

எனது எக்ஸ்பீரியன் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த முடியுமா?

நல்ல கிரெடிட் ஸ்கோர் இருப்பது முக்கியம் என்பதை மேலே உள்ள தகவலில் இருந்து நீங்கள் காணலாம். அதிர்ஷ்டவசமாக, பின்வருமாறு சில தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் உங்கள் எக்ஸ்பீரியன் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவது மிகவும் எளிதானது:

  • ஒன்று அல்லது இரண்டு தவறவிட்டக் ட்ரான்சக்ஷன்கள் கூட உங்கள் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கும் என்பதால், உங்கள் பில்களை சரியான நேரத்தில் செலுத்துங்கள்.

  • உங்கள் கிரெடிட் பயன்பாட்டு விகிதத்தை (அதாவது நீங்கள் எவ்வளவு கிரெடிட் பயன்படுத்துகிறீர்கள்) குறைவாக வைத்திருங்கள்.

  • நீங்கள் புதிய கிரெடிட்களை பொறுப்புடன் கையாள முடியும் என்பதைக் காட்ட ஒரு நல்ல கிரெடிட் மிக்ஸை பராமரிக்கவும்.

  • பழைய அக்கவுண்ட்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளை செயலில் வைத்திருங்கள், ஏனெனில், ஒரு நீண்ட கிரெடிட் ஹிஸ்டரிக்கு நீங்கள் பொறுப்பான நடத்தையைக் காட்டியுள்ளீர்கள் என்று கடன் வழங்குநர்களுக்கு உறுதியளிக்கும்.

  • தேவைப்படும்போது மட்டுமே புதிய கிரெடிட் அக்கவுண்ட்களுக்கு விண்ணப்பிக்கவும்.

  • உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டைத் தவறாமல் சரிபார்க்கவும், அவை உங்கள் ஸ்கோரை பாதிக்கக்கூடிய எந்த பிழைகளையும் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உங்கள் எக்ஸ்பீரியன் கிரெடிட் ரிப்போர்ட் எவ்வளவு அடிக்கடி புதுப்பிக்கப்படுகிறது?

கடன் வழங்குநர்கள், வங்கிகள் மற்றும் பிற கிரேடிட்டர்கள் வழக்கமாக உங்கள் தகவல்களை எக்ஸ்பீரியன் மற்றும் பிற கிரெடிட் பியூரோக்களுக்கு மாதாந்திர அடிப்படையில் அனுப்புவார்கள் (அவர்கள் அனுப்பும் மாதத்தின் நாள் மாறுபடலாம்). எனவே, உங்கள் கடன் வழங்குநர்கள் உங்கள் பேமெண்ட் ஹிஸ்டரியை எப்போது அனுப்புகிறார்கள் என்பதைப் பொறுத்து, உங்கள் கிரெடிட் ரிப்போர்ட் பொதுவாக மாதாந்திர அடிப்படையில் புதுப்பிக்கப்படும்.

உங்கள் எக்ஸ்பீரியன் கிரெடிட் ஸ்கோரை சரிபார்ப்பது ஏன் முக்கியம்?

உங்கள் எக்ஸ்பீரியன் கிரெடிட் ஸ்கோரை சரிபார்ப்பது ஒரு இலவச செயல்முறை என்பதால், தவறாமல் அவ்வாறு செய்வது முக்கியம். அந்த வழியில் உங்கள் ஸ்கோரைக் கண்காணிக்கலாம் மற்றும் காலப்போக்கில் அது எவ்வாறு மாறுகிறது என்பதைப் பார்க்கலாம், குறிப்பாக உங்கள் ஸ்கோரை மேம்படுத்த முயற்சிக்கிறீர்கள் என்றால் இதை கண்காணிக்கலாம்.

எக்ஸ்பீரியன் கிரெடிட் ஸ்கோர் மற்ற பியூரோக்களால் வழங்கப்பட்ட கிரெடிட் ஸ்கோரிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

எக்ஸ்பீரியன், இந்தியாவில் உள்ள பிற உரிமம் பெற்ற கிரெடிட் பியூரோக்களைப் போலவே (ஈக்விபாக்ஸ், சி.ஆர்.ஐ.எஃப் ஹைமார்க் மற்றும் சிபில்) அனைத்தும் தனிப்பட்ட நுகர்வோருக்கும் நிறுவனங்களுக்கும் கிரெடிட் ஸ்கோர் மற்றும் கிரெடிட் ரிப்போர்ட்களை வழங்குகின்றன.

எக்ஸ்பீரியன் கிரெடிட் ஸ்கோர்கள் என்பது வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்ற கடன் வழங்குநர்களிடமிருந்து வரும் தகவல்களைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகின்றன. கிரெடிட் ஸ்கோர்களைப் பெற அவர்கள் வெவ்வேறு வழிமுறைகள் மற்றும் தரவைப் பயன்படுத்துகின்றனர். எனவே, ஒவ்வொரு கிரெடிட் பியூரோக்களும் வழங்கும் கிரெடிட் ஸ்கோர் சற்று வித்தியாசமாக இருக்கும்.

எனது இலவச கிரெடிட் ஸ்கோரை சரிபார்ப்பது கிரெடிட் ஸ்கோரை பாதிக்கிறதா?

உங்கள் இலவச கிரெடிட் ஸ்கோரை நீங்களே சரிபார்ப்பது ஒரு சாஃப்ட் என்க்கோய்ரியாக கருதப்படுகிறது. சாஃப்ட் என்க்கோய்ரிகள் ஒரு நபரின் கிரெடிட் ஸ்கோரைக் கணக்கிடுவதில் ஒரு காரணியாகக் கருதப்படுவதில்லை, எனவே உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்காது.