டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

சிபில் ஸ்கோர் என்றால் என்ன: அதன் முழு விளக்கம், எப்படி சரிபார்ப்பது & அதன் முக்கியத்துவம்

சிபில் என்ற வார்த்தையின் முழு விளக்கம் என்ன?

இந்தியாவில் கிரெடிட் அறிக்கைகள் மற்றும் ஸ்கோர்களை வழங்கும் முக்கிய ஏஜென்சிகளில் ஒன்று கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ (இந்தியா) லிமிடெட் (அல்லது சிபில் (CIBIL)) ஆகும். இது டிரான்ஸ்யூனியன் இன்டர்நேஷனால் (TransUnion International)-ஆல் ஆதரிக்கப்படுகிறது.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து தனிநபர்கள் பற்றிய நிதித் தகவல்களை சிபில் பெறுகிறது. இது அவர்களின் கிரெடிட் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களையும் உள்ளடக்கியிருக்கும். இது பின்னர் கிரெடிட் தகவல் அறிக்கை (CIR) மற்றும் தனிநபர் கிரெடிட் ஸ்கோர்களாக தொகுக்கப்படுகிறது.

இந்தியாவில் சிபில் ஸ்கோர் என்றால் என்ன?

சிபில் கிரெடிட் ஸ்கோர் என்பது 300-900க்கு இடைப்பட்ட மூன்று இலக்க எண்ணாகும். 300 என்பது மிகக் குறைந்த ஸ்கோர் மற்றும் 900 என்பது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இந்த ஸ்கோர் ஒரு நபரின் "லோன் பெறும் தகுதியை" நிர்ணயிப்பதாகக் கூறப்படுகிறது. அதிக சிபில் ஸ்கோர் இருந்தால் ஒரு நபர் நல்ல கிரெடிட் வரலாறு மற்றும் பொறுப்பான திருப்பிச் செலுத்தும் நடத்தை ஆகியவற்றை வைத்துள்ளார் என்று அர்த்தம்.

ஒரு நபரின் சிபில் ஸ்கோர் குறைந்தபட்சம் கடந்த 6 மாதங்களின் விரிவான கிரெடிட் தகவலைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. இறுதி சிபில் ஸ்கோரைக் கணக்கிட, ஒரு அல்காரிதம் இந்தத் தரவைப் பயன்படுத்துகிறது.

நல்ல மற்றும் கெட்ட சிபில் ஸ்கோர் என்றால் என்ன?

நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, சிபில் ஸ்கோர் என்பது 300-900 வரை இருக்கும் எண்கள் ஆகும். பொதுவாக, சிபில் ஸ்கோர் 750 என இருந்தால் நல்ல ஸ்கோராகக் கருதப்படுகிறது. மேலும் தனிநபர்கள், லோன் வழங்குபவர்களால் பொறுப்பான லோன் வாங்குபவர்களாகக் கருதப்படுகிறார்கள். சிபில் ஸ்கோரின் வெவ்வேறு வரம்புகள் இங்கே உள்ளன:

சிபில் ஸ்கோர் வகை பொருள்
NA/NH "பொருந்தாது" அல்லது "வரலாறு இல்லை" நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தாவிட்டால் அல்லது நீங்கள் லோன் வாங்கவில்லை என்றால், உங்களிடம் கிரெடிட் வரலாறு இருக்காது.
300-549 மோசமானது கிரெடிட் கார்டு பில்கள் அல்லது இஎம்ஐ (EMIs)-களில் ஒழுங்கற்ற திருப்பிச் செலுத்துதல்கள் அல்லது லோகனை திருப்பிச் செலுத்தாமல் விட்டுவிட்டது, அதிக கிரெடிட் பெற்றிருத்தல் ஆகியவை இருந்தால், நீங்கள் லோனைத் திருப்பிச் செலுத்துவதில் ஹை ரிஸ்க்கில் இருப்பீர்கள் என அர்த்தம். மேலும் லோன் அல்லது கிரெடிட் கார்டை நீங்கள் பெறுவது கடினமாக இருக்கும்.
550-649 நடுநிலையானது கிரெடிட் கார்டு பில்கள்/இ.எம்.ஐ. (EMIs)-கள் தாமதமாகச் செலுத்துதல் அல்லது பல கிரெடிட் விண்ணப்பங்கள் போன்ற உங்கள் கடந்த காலப் பேமெண்ட்களில் சில குறைகள் இருந்தால், சில லோன் வழங்குநர்கள் உங்களுக்கு லோன் வழங்குவதா வேண்டாமா என யோசிப்பார்கள். அதனால், உங்கள் வட்டி விகிதங்கள் அதிகமாகவும் இருக்கலாம்.
650-749 நன்று நீங்கள் பொறுப்பான திருப்பிச் செலுத்தும் நடத்தையைக் காட்டியுள்ளீர்கள் மற்றும் நீண்ட கிரெடிட் வரலாற்றைக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், பெரும்பாலான லோன் வழங்குநர்கள் உங்கள் லோன் மற்றும் லோன் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பார்கள். அதேநேரம், வட்டி விகிதத்தில் நீங்கள் சிறந்த வட்டி விகிதங்களைப் பெறாமல் போகலாம்.
750-900 மிக நன்று உங்கள் கிரெடிட் பேமென்ட்டுகளை நீங்கள் வழக்கமாகச் செய்து வருகிறீர்கள் மற்றும் முன்மாதிரியான கிரெடிட் வரலாற்றைக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், வங்கிகள் மற்றும் லோன் வழங்கும் நிறுவனங்கள் உங்களைத் தொகையை திருப்பிச் செலுத்தாதவராக மாறுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக கருதி, லோன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளில் சிறந்த சலுகைகளை வழங்க தயாராக இருக்கும்.

ஒரு நல்ல சிபில் ஸ்கோர் ஏன் முக்கியமானது?

ஒரு நல்ல சிபில் ஸ்கோர் (அதாவது, 700 மற்றும் 900-க்கு இடையில் ஸ்கோர் இருக்கும்) இருப்பது மிகவும் நன்மை பயக்கும் ஒன்று ஆகும். லோன் மற்றும் கிரெடிட் கார்டு விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் போது இந்த ஸ்கோர் வங்கிகள் மற்றும் பிற லோன் வழங்கும் நிறுவனங்களால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. எனவே, இந்த லோன் வழங்குபவர்களுக்கு உங்கள் லோன் கோரிக்கைகளை அங்கீகரிப்பதில் அதிக நம்பிக்கையை அளிக்க முடியும்.

இது உங்களுக்கு வேறு சில நன்மைகளையும் கொடுக்கலாம்:

  • லோன்களுக்கான குறைந்த வட்டி விகிதங்கள்
  • அதிக லோன் தொகைகள்
  • நீண்ட அல்லது அதிக நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் தவணை காலம் போன்ற சிறந்த திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள்
  • விரைவான லோன் ஒப்புதல் செயல்முறை
  • லோன் வழங்கும் நிறுவனங்களின் கூடுதல் தேர்வு

சிபில் (CIBIL) கிரெடிட் ஸ்கோர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

ஒரு நபரின் சிபில் (CIBIL) ஸ்கோர் நான்கு முக்கிய காரணிகளைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. இந்த காரணிகள் ஒவ்வொன்றும் உங்கள் இறுதி ஸ்கோரில் வெவ்வேறு வெயிட்டேஜைக் கொண்டிருக்கும். இந்த காரணிகள் பின்வருமாறு:

காரணிகள் வெயிட்டேஜ் இந்த காரணிகளை எதை பாதிக்கலாம்?
பேமெண்ட் வரலாறு 30% உங்கள் கிரெடிட் கார்டு பில்கள், லோன்கள் மற்றும் இ.எம்.ஐ.(EMIs)-களை சரியான நேரத்தில் செலுத்துவது நல்ல கிரெடிட் ஸ்கோரை மெயின்டெயின் செய்ய உதவும். தாமதமான அல்லது தவணையைத் தவறினால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையும்.
கிரெடிட் பயன்பாடு 25% லோன் பயன்பாடு என்பது நீங்கள் பயன்படுத்தும் லோன் வரம்பின் அளவு. இது அதிகமாக இருந்தால், அது உங்கள் ஸ்கோரைக் குறைக்கும். சிறந்த முறையில், உங்கள் லோன் வரம்பில் 30%-க்கு மேல் நீங்கள் செலவழிக்கக் கூடாது. இதனால் உங்கள் லோனை நீங்கள் அதிகரிப்பதாகக் கருத முடியாது.
லோன் வகை மற்றும் காலம் 25% உங்களிடம் உள்ள லோன் வகையும் முக்கியமானது. இரண்டு முக்கிய வகைகள் உள்ளன - பாதுகாப்பற்ற லோன்கள் (எ.கா. கிரெடிட் கார்டுகள் மற்றும் தனிநபர் லோன்கள்) மற்றும் பாதுகாக்கப்பட்ட லோன்கள் (எ.கா. வாகனக் கடன்கள் அல்லது ஹோம் லோன்கள்). இரண்டுக்கும் ஆரோக்கியமான கலவையைப் பெறுவது பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் லோன் வரலாற்றின் அடிப்படையில் நீங்கள் எவ்வளவு காலம் லோன் கணக்கு வைத்திருக்கிறீர்கள், அத்துடன் உங்கள் லோனைத் திருப்பிச் செலுத்த நீங்கள் எடுத்துக் கொண்ட காலம் ஆகியவை இதில் ஆகும்.
கிரெடிட் விசாரணைகள் 20% நீங்கள் கிரெடிட்டுக்கு எத்தனை முறை விண்ணப்பித்தீர்கள் என்பது உங்கள் ஸ்கோரைப் பாதிக்கலாம். குறிப்பாக அவை குறுகிய காலத்திற்குள் செய்யப்பட்டால் நிச்சயம் பாதிக்கும். கிரெடிட் கார்டுகள், லோன்கள் போன்றவற்றுக்கு விண்ணப்பிப்பதும் இதில் அடங்கும். அதிக எண்ணிக்கையிலான விசாரணைகள் உங்கள் மதிப்பெண்ணைக் குறைக்கலாம்.
ஒரு நல்ல சிபில் ஸ்கோரை மெயின்டெயின் செய்வது மெதுவான செயலாகும். நீங்கள் நிலையான மற்றும் சரியான நேரத்தில் தொகையை திருப்பிச் செலுத்தும் நடத்தையைக் காட்ட வேண்டும். மேலும் உங்கள் ஸ்கோரை அதிகமாக வைத்திருக்க வேண்டுமென்றால் உங்களுக்குக் கிடைக்கும் கிரெடிட்டைப் பொறுப்பான முறையில் கையாள வேண்டும்.

உங்கள் சிபில் ஸ்கோரை எப்படி சரிபார்ப்பது?

இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து லோன் தகவல் நிறுவனங்களுக்கும் ஆன்லைனில் கிரெடிட் ஸ்கோரைச் சரிபார்க்கவும், ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலவச கிரெடிட் ஸ்கோர் அறிக்கையை வழங்கவும் பயனர்களை அனுமதிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இதை சிபில் வலைத்தளம் மூலம் நீங்கள் எளிதாக செய்யலாம்.

 

ஆன்லைனில் சிபில் ஸ்கோரை எவ்வாறு சரிபார்க்கலாம்

பின்பற்ற வேண்டிய படிகள் பின்வருமாறு:

  • படி 1: சிபில் வலைத்தளத்திற்குச் சென்று, உங்கள் சிபில் ஸ்கோரைத் தெரிந்து கொள்ளுங்கள் அல்லது உங்கள் சிபில் ஸ்கோரைப் பெறுங்கள் என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
  • படி 2: உங்கள் லாகின் கிரேடன்ஷியல்களைப் பயன்படுத்தி லாகின் செய்யுங்கள் அல்லது புதிய அக்கவுண்ட்டை உருவாக்குங்கள். இதைச் செய்ய, உங்கள் பெயர், தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும்.
  • படி 3: நீங்கள் அடையாளச் சான்று (பாஸ்போர்ட் எண், பான் கார்டு, ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை) மற்றும் உங்கள் பின்கோடு மற்றும் பிறந்த தேதி போன்ற கூடுதல் தகவல்களையும் இணைக்க வேண்டும்.
  • படி 4: இது முடிந்ததும் படிவத்தை சமர்ப்பிக்கவும்.
  • படி 5: உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ஐடிக்கு ஓ.டி.பி (OTP)-ஐப் பெறுவீர்கள்.
  • படி 6: நீங்கள் ஓ.டி.பி (OTP)-ஐ தட்டச்சு செய்து சரிபார்த்தவுடன், நீங்கள் உள்நுழைந்து உங்கள் சிபில் கிரெடிட் ஸ்கோரைச் சரிபார்க்க டாஷ்போர்டுக்குச் செல்லலாம்.
  • படி 7: நீங்கள் myscore.cibil.com-க்கு திருப்பி விடப்படுவீர்கள். அங்கு உங்கள் விவரங்களைப் பயன்படுத்தி உள்நுழையலாம். இங்கே, உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பார்க்க முடியும்.

 உங்கள் கிரெடிட் அறிக்கையைப் பெற

  • படி 8: உங்கள் டாஷ்போர்டில் "கிரெடிட் ரிப்போர்ட்" எனும் ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
  • படி 9: உங்கள் லோன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் பற்றிய கேள்விகள் போன்ற உங்கள் லோன் வரலாறு தொடர்பான கூடுதல் தகவல்களை நிரப்ப வேண்டிய அங்கீகாரப் பக்கத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். சிபில் உடன் உங்கள் அடையாளத்தை அங்கீகரிக்க குறைந்தது 5 இல் 3 கேள்விகளுக்கு நீங்கள் சரியாக பதிலளிக்க வேண்டும்.
  • படி 10: அங்கீகரிக்கப்பட்டதும், உங்களின் முழுமையான கிரெடிட் அறிக்கை 24 மணி நேரத்திற்குள் உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி-க்கு வழங்கப்படும்

உங்கள் கிரெடிட் ஸ்கோரை வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இலவசமாகச் சரிபார்க்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அடிக்கடி கிரெடிட் அறிக்கைகளைப் பெற விரும்பினால், இந்தத் தகவலுக்காக சிபிலுக்கு பணம் செலுத்துவதன் மூலம் நீங்கள் அவ்வாறு பெறலாம். தற்போது, கிரெடிட் அறிக்கைக்கான கட்டணம் ₹550 ஆக உள்ளது.

சிபில் ஸ்கோரை ஆஃப்லைனில் சரிபார்ப்பது எப்படி

பின்வரும் படிகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் சிபில் கிரெடிட் ஸ்கோரை ஆஃப்லைனில் பெறலாம்:

  • படி 1: கிரெடிட் ஸ்கோர் கோரிக்கைப் படிவத்தை சிபில் வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கவும்.
  • படி 2: அதை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு தேவையான அனைத்து தகவல்களையும் சரியாக நிரப்பவும்.
  • படி 3: உங்கள் அடையாளச் சான்றின் நகலையும் (பாஸ்போர்ட் எண், பான் கார்டு, ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்றவை) இணைக்க வேண்டும்.
  • படி 4: "TransUnion CIBIL"-இல் உருவாக்கப்பட்ட டிமாண்ட் டிராஃப்டை இணைக்கவும். இது ₹164 (கிரெடிட் அறிக்கைக்கு) அல்லது ₹5500 (கிரெடிட் ரிப்போர்ட் மற்றும் கிரெடிட் ஸ்கோர் இரண்டிற்கும்) இருக்க வேண்டும்.
  • படி 5: இது முடிந்ததும் மேற்கண்ட ஆவணங்களை மின்னஞ்சல், தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பவும்:
    • மின்னஞ்சல் மூலம் அனுப்பினால், ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை cibilinfo@transunion.com என்ற முகவரிக்கு அனுப்பவும்
    • தபால் மூலம் அனுப்பினால், ஆவணங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

டிரான்ஸ்யூனியன் சிபில் லிமிடெட் (கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ (இந்தியா)), ஒன் இந்தியாபுல்ஸ் சென்டர்

டவர் 2ஏ, 19வது ஃப்ளோர், சேனாபதி பாபத் மார்க்

எல்பின்ஸ்டோன் ரோடு

மும்பை- 400013

  • படி 6: உங்கள் கிரெடிட் ஸ்கோரும் அறிக்கையும் நீங்கள் படிவத்தில் கொடுத்திருந்த முகவரிக்கு அல்லது உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

உங்கள் சிபில் ஸ்கோரை எவ்வாறு மேம்படுத்துவது?

அதிக சிபில் ஸ்கோர் பெறுவது முக்கியம், ஏனெனில் நீங்கள் லோன்கள் மற்றும் பிற லோன்களுக்கு விண்ணப்பிக்கும்போது வங்கிகளும் லோன் வழங்கும் நிறுவனங்களும் உங்களுக்குச் சாதகமாகத் தீர்மானிக்க உதவும். இது நன்மை பயக்கும் என்பதால், உங்கள் சிபில் (CIBIL) ஸ்கோரை மேம்படுத்துவதற்கான சில வழிகள்:

  • உங்கள் சிபில் ஸ்கோரைத் தவறாமல் சரிபார்க்கவும், இதன் மூலம் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
  • உங்கள் கிரெடிட் அறிக்கையைத் தவறாமல் மதிப்பாய்வு செய்யவும், இதன் மூலம் நீங்கள் ஏதேனும் பிழைகளைக் கண்டறிந்தால் விரைவாக அதை சரிசெய்யலாம்.
  • உங்கள் இ.எம்.ஐ.(EMIs)-கள் மற்றும் கிரெடிட் கார்டு பில்களை தவறாமல் மற்றும் சரியான நேரத்தில் செலுத்துங்கள்; தவறிய தவணை மற்றும் தாமதமாக செலுத்துவதைத் தவிர்க்கவும்.
  • உங்கள் கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம், மேலும் உங்கள் லோன் பயன்பாட்டு விகிதத்தை (CUR) 30%-க்குள் வைத்திருக்கவும்.
  • உங்கள் லோன் லிமிட்டை (அதாவது உங்கள் கிரெடிட் கார்டின் மொத்த செலவு லிமிட்) அதிகரிக்க முயற்சிக்கவும்.
  • குறுகிய காலத்திற்குள் பல லோன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பதைத் தவிர்க்கவும்.
  • அவசியமின்றி, உங்கள் பழைய கிரெடிட் கார்டுகளை ரத்து செய்யாதீர்கள்; உங்களிடம் பொறுப்பு வாய்ந்த கிரெடிட் வரலாறு உள்ளது என்பதை பழைய கிரெடிட் கார்டுகள் லோன் அளிக்கும் நிறுவனங்களுக்கு உறுதியளிக்கும்.