ஓன் டேமேஜ் இன்சூரன்ஸ்

ஓன் டேமேஜ் இன்சூரன்ஸ் அல்லது ஓடி (OD) இன்சூரன்ஸ் பற்றிய ஒரு விரிவான கையேடு

பெயர் குறிப்பிடுவது போல, ஓன் டேமேஜ் (Own Damage) இன்சூரன்ஸ் என்பது உங்களின் சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளில் இருந்து உங்களையும், இன்சூரன்ஸ் செய்யப்பட்ட உங்கள்  வாகனத்தையும் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி ஆகும். 

ஒரு வேடிக்கையான ஆனால், உண்மையாக நிகழக்கூடிய ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்; உங்கள் கார் நீங்கள் வழக்கமாக நிறுத்தக் கூடிய இடத்தில் நின்று கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். திடீரென்று, பக்கத்திலிருக்கும் மரத்தின் கிளை ஒன்று அல்லது வேறு ஏதோ ஒன்று அதன் மேலே விழலாம். உங்கள் பக்கத்து வீட்டிலிருந்து கிரிக்கெட் பால் ஒன்று பறந்து வந்து உங்கள் காரின் ஜன்னகளில் ஒன்றை துளைக்கலாம் அல்லது ஒரு தேங்காய் அதன் மீது விழலாம். இதுபோன்ற நிகழ்வுகள் அனைத்துமே உங்கள் வாகனத்தை சேதப்படுத்தும்.

ஒரு கதையாக படிக்கும் போது இது வேடிக்கையானதாகத் தான் இருக்கும் ஆனால், இது போன்ற சம்பவங்கள் உண்மையாக நடக்கும் போது மிகப்பெரிய இழப்புகளை உண்டாக்கும். இத்தகைய சூழ்நிலையில் ஓடி (OD) இன்சூரன்ஸ் உங்களுக்கு நேரக்கூடிய எதிர்பாராத இழப்புகளை சமாளிக்க உதவும்.

இதனைப் பற்றி மேலும் அறிந்து கொள்க:

ஓன் டேமேஜ் இன்சூரன்ஸை வாங்குவதற்கு தகுதியானவர் யார்?

மூன்றாம் தரப்பு கார் அல்லது பைக் இன்சூரன்ஸ் மட்டுமே கொண்டிருக்கும் கார்கள் மற்றும் பைக்குகளுக்கு, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஸ்டாண்ட்அலோன் (standalone) ஓன் டேமேஜ் இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்கலாம். இது செப்டம்பர் 2019 முதல் நடைமுறையில் உள்ளது.

எடுத்துக்காட்டு; வண்டியை வாங்கும் போதே, அதனோடு சேர்த்து பல ஆண்டுளுக்கு நீடித்திருக்கக் கூடிய மூன்றாம் தரப்பு பாலிசிகளையும் (குறிப்பாக மார்ச் 2019-ல் வாகனத்தை வாங்கியவர்கள்) வாங்கும் கார் அல்லது பைக் உரிமையாளர்கள் சேதங்கள் மற்றும் இழப்புகளை ஈடுகட்ட ஸ்டாண்ட்அலோன் ஓடி இன்சூரன்ஸைத்  தேர்வு செய்யலாம்.

குறிப்பு: நீங்கள் ஒரு ஓடி இன்சூரன்ஸை வாங்குவதன் மூலம், ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட  (இந்திய மோட்டார் சட்டங்களால் சட்டப்பூர்வமாக்கப்பட்ட) மூன்றாம் தரப்பு பாலிசி உங்களிடம் இருக்கிறது என்பதை  மறைமுகமாக உறுதிப்படுத்துகிறீர்கள். இதனை நீங்கள் டிஜிட் இன்சூரன்ஸ் அல்லது வேறு ஏதேனும் இன்சூரரிடம் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

ஸ்டாண்ட்அலோன் ஓடி (OD) இன்சூரன்ஸை யார் வாங்க வேண்டும்?

சமீபத்தில் டிஜிட் இடமிருந்து மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் மட்டும் வாங்கியிருந்தால், உங்கள் வாகனத்தை சேதங்கள் மற்றும் அதனால் ஏற்படும் இழப்புக்களிலிருந்து பாதுகாக்க ஸ்டாண்ட்அலோன் ஓன் டேமேஜ் இன்சூரன்ஸையும் இப்போது வாங்கலாம்.

சமீபத்தில் நீங்கள் ஒரு வண்டியை வாங்கி, அதோடு வேறொரு இன்சூரரிடம் இருந்து மூன்றாம் தர்ப்பு இன்சூரன்ஸை வாங்கியிருந்தாலும் கூட டிஜிட்-ன் ஸ்டாண்ட்அலோன் ஓன் டேமேஜ் இன்சூரன்ஸையும் நீங்கள் வாங்கலாம். விபத்துக்கள், இயற்கை சீற்றம், திருட்டுகள் மற்றும் இது போன்ற பலவற்றினால் உங்கள் வாகனத்திற்கு ஏற்படும் இழப்புக்கள் அனைத்தையுமே இது கவர் செய்துவிடும். இதைத் தவிர வேறு ஏதேனும் கூடுதல் அம்சங்கள் பெற விரும்பினால் அதற்கான ஆட்-ஆன்(add-on) ஐ நீங்கள் தேர்வு செய்யலாம்.

ஓடி (OD) இன்சூரன்ஸ் எவ்வித இழப்புகளை ஈடு செய்யும்?

எவ்வித காரணங்களால் இழப்பீடுகளை பெற முடியாது?

உங்கள் வண்டியின் பாதுகாப்பிற்கு ஓன் டேமேஜ் கவர் சிறந்தது என்றாலும், அதில் சில விதிவிலக்குகள் உள்ளன. அவை பின்வருமாறு.

மூன்றாம் தரப்பு பொறுப்புகள்

இது ஒரு ஸ்டாண்ட்அலோன் ஓன் டேமேஜ் இன்சூரன்ஸ் பாலிசி ஆகும். ஆதலால், உங்கள் மூன்றாம் தரப்பு பொறுப்புகளில் உள்ள எந்த பயன்களும் இதில் அடங்காது. அதற்கு மாறாக, உங்கள் மூன்றாம் தரப்பு வெஹிக்கில் இன்சூரன்ஸ் மற்ற சேதங்களுக்கான இழப்பீடுகளை கவனித்துக்கொள்ளும்.

குடிபோதையில் வண்டி ஓட்டுதல்

குடிபோதையில் வண்டி ஓட்டுவது என்பது சட்டத்திற்கு எதிரானது. எனவே, குடிபோதையில் வண்டி ஓட்டுவதன் மூலம் ஏற்பட்ட இழப்புகளுக்கு இதன் மூலம் கிளைம் செய்ய இயலாது. 

லைசென்ஸ் இன்றி வண்டி ஓட்டுதல்

எவரேனும் ஒருவர் சட்டவிரோதமாக வண்டி ஓட்டினால், அதனால் ஏற்பட்ட சேதத்திற்கு கிளைம் செய்ய இயலாது. இது பொதுவாக கடைபிடிக்கப்படும் ஒரு விதி ஆகும். எனவே, லைசென்ஸ் உடன் நீங்கள் வண்டி ஓட்டியிருந்தால் மட்டுமே நீங்கள் கிளைம் செய்யலாம்.

ஆட்-ஆன்களை (Add-On) நீங்கள் வாங்காவிட்டால்

இந்த தலைப்பை படித்த உடனே உங்களுக்கு புரிந்திருக்கும், சரிதானே? அதாவது, நீங்கள் குறிப்பிட்ட ஆட்-ஆன்களை வாங்கவில்லை என்றால், அவற்றின் நன்மைகளை உங்களால் அடைய முடியாது. எடுத்துக்காட்டாக, டயர் புரொடெக்ட் கவரை நீங்கள் தேர்வு செய்யாமல் போனால், விபத்தின் போது, உங்கள் டயருக்கு ஏற்பட்ட சேதம் மட்டுமே கணக்கிடப்படும் அதற்கு மேல் எதனையும் கிளைம் உங்களால் செய்ய இயலாது.

பின்விளைவினால் ஏற்படும் சேதங்கள்

பின்விளைவினால் ஏற்படும் சேதங்கள் என்பது விபத்துக்குப் பின் ஏற்படும் சேதங்களைக் குறிக்கும். விபத்து நடந்தேறிய போது சேதம் ஏற்பட்டால் மட்டுமே அதற்கான இழப்பீடுகளைப் பெற இயலும். அதற்குப் பின் நடந்த எந்த ஒரு சேதத்திற்குமான இழப்பீடுகளை நம்மால் பெற முடியாது.

அலட்சியத்தினால் ஏற்பட்ட சேதம்

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், இதன் பொருள், நீங்கள் செய்யக் கூடாத ஒன்றை செய்து, அதனால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடுகள் வழங்கப்படாது என்பது தான். உதாரணத்திற்கு; உங்கள் இடம் வெள்ளத்தில் மூழ்கியிருந்த போது,  நீங்கள்  உங்கள் காரையோ அல்லது பைக்கையோ வெள்ளத்தில் வெளியே எடுத்துச் சென்றிருந்தால், உங்களால் கிளைம் செய்ய இயலாது.

லைசென்ஸ் வைத்திருப்பவர் இல்லாமல் வண்டி ஓட்டினால்

உங்களிடம் கற்றுக் கொள்வதற்கான (learners) லைசென்ஸ் மட்டுமே இருந்தால், நிரந்தர லைசென்ஸ் பெற்ற ஒருவர் உங்களுடன் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது சட்டமாகும். இது போன்ற சூழலில், நீங்கள் சட்டத்துக்கு புறம்பாக தனியாக சென்று, அதனால் உங்கள் வண்டிக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், இழப்பீடுகள் எதுவும் பெற முடியாது.

ஓன் டேமேஜ் இன்சூரன்ஸுடன் கிடைக்கும் ஆட்-ஆன்கள்

  • ஜீரோ டெப்ரிசியேஷன் கவர்
  • என்ஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் புரொடெக்ஷன் கவர்
  • பிரேக்டவுண் அசிஸ்டன்ஸ்
  • கன்ஸ்யூமபில் கவர்
  • ரிட்டர்ன் டு இன்வாய்ஸ் கவர்
  • டயர் புரொடெக்ட் கவர் (கார்களுக்கு மட்டும்)
  • பேசெஞ்சர் கவர் (கார்களுக்கு மட்டும்)

ஓன் டேமேஜ் பிரீமியம் என்றால் என்ன?

ஓன் டேமேஜ் பிரீமியம் என்பது உங்கள் ஓடி இன்சூரன்ஸுக்கு நீங்கள் செலுத்தும் பணமாகும். பொதுவாக பிரீமியத்தின் விலையானது நீங்கள் வைத்திருக்கும் வாகனத்தின் வகை; அதனை வாங்கி எவ்வளவு ஆண்டுகள் ஆகின மற்றும் அதை நீங்கள் பயன்படுத்தும் நகரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

உங்கள் பிரீமியம் தொகை எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு ஓடி  இன்சூரன்ஸ் பாலிசியும் பின்வருவனவற்றிலிருந்து உங்களுக்குப் பாதுகாப்பை வழங்குகிறது:

  • வெளிப்புற காரணங்களால் ஏற்படும் எதிர்பாராத விதமான சேதங்கள்.
  • கொள்ளை, திருட்டு மற்றும் வீடு புகுந்து களவாடுதல்.
  • தீ, குண்டு வெடிப்பு, உள்வாங்கல், மின்னல் மற்றும் தானாக தீப்பற்றிவிடுதல்.
  • வெள்ளம், புயல், சூறாவளி, ஆலங்கட்டி மழை போன்ற இயற்கை சீற்றங்கள்.
  • நிலநடுக்கம், நிலச்சரிவு மற்றும் பாறை சரிவு.
  • ரயில், சாலை, விமானம் அல்லது உள்நாட்டு நீர்வழிகள் மூலம் வாகனங்களை இடம் பெயர்வது.
  • பயங்கரவாதத் தாக்குதல்கள், கலவரங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் அல்லது கடும் சேதம்.

ஓன் டேமேஜ் பிரிமியம் எப்படி கணக்கிடப்படுகிறது?

கார் அல்லது பைக்கின் ஓன் டேமேஜ் பிரீமியம் என்பது பின்வருவன அடிப்படையில் அமையும்:

  • வாகனத்தின் தயாரிப்பு, வகை மற்றும் வயது.
  • குறிப்பிடப்பட்ட வாகனத்தின் அறிவிக்கப்பட்ட மதிப்பு.
  • எஞ்ஜினின் கன அளவு.
  • புவியியல் மண்டலம்

ஓன் டேமேஜ் பிரீமியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் பற்றி பார்ப்போம், ஆனால் அதற்கு முன்பு அதன் அடிப்படையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஓடி பிரீமியம் - IDV X [பிரீமியம் விலை (இன்சூரரால் தீர்மானிக்கப்பட்டது)] + [ஆட்-ஆன்கள் (எ.கா: கூடுதல் கவரேஜ்)] – [தள்ளுபடி மற்றும் நன்மைகள் (நோ கிளைம் போனஸ், தெஃப்ட் டிஸ்கௌண்ட் மற்றும் பல.)]

IDV - வாகனத்தின் ஷோரூம் விலை + துணைக் கருவிகளின் விலை (ஏதேனும் இருந்தால்) -  (IRDAI) வழிகாட்டுதலின்  படி தேய்மானம்

ஓடி (OD) இன்சூரன்ஸ் பிரீமியத்தை எப்படி குறைக்கலாம்

  • வாலன்டரி டிடக்டிபில்களை அதிகரிக்கவும்  Increase Voluntary Deductibles - ஓடி இன்சூரன்ஸில் ‘வாலன்டரி டிடக்டிபில்ஸ்’ என்று ஒன்று . இது, கிளைம்களைப் பெறும் போது நீங்கள் கட்டுவதற்காக தேர்ந்தெடுக்கும் தொகையை குறிக்கிறது. உங்களால் கட்ட முடிந்த தொகையை பொறுத்து உங்களின் வாலன்டரி டிடக்டிபில் சதவீதத்தை அதிகரிக்கலாம். இது உங்களின் ஓடி பிரீமியத்தை நேரடியாகக் குறைக்கும்.
  • சரியான IDV-ஐ குறிப்பிடுங்கள் - டிஜிட்டில் உங்களின் IDV-ஐ உங்களுக்குத் தகுந்தவாறு அமைத்துக் கொள்ளும் வசதியுள்ளது. ஆதலால், IDV சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், இது கிளைம் செட்டில்மெண்டின் போது உங்கள் ஓடி பிரீமியம் மற்றும் உங்களுக்கு கிடைக்கும் கிளைம் தொகை ஆகிய இரண்டையும் பாதிக்கும்.
  • உங்கள் NCB-ஐ மாற்ற மறக்காதீர்கள் - இதற்கு முன்பு நீங்கள் ஓன் டேமேஜ் அல்லது மோட்டார் இன்சூரன்ஸ் விரிவான பாலிசி வைத்திருந்தால், உங்களின் NCB-ஐ தற்போதைய பாலிசிக்கு மாற்றம் செய்து உங்களுக்கான தள்ளுபடியைப் பெற்றிடுங்கள்.

மூன்றாம் தரப்பு பிரீமியம் மற்றும் ஓன் டேமேஜ் பிரீமியம் ஆகிய இரண்டிற்கும் இடையேயான வேறுபாடு

 

இந்திய மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் படி நாம் இரண்டு வகையான பாலிசிகளை வைத்திருக்கலாம். ஒன்று, ஓன் டேமேஜ் மற்றும் லையபிலிட்டி கவர் அடங்கிய விரிவான/காம்ப்ரிஹென்சிவ் பாலிசி, மற்றொன்று ஸ்டாண்ட்அலோன் மூன்றாம் தரப்பு பொறுப்பு பாலிசி. பல ஆண்டுகளாக, லையபிலிட்டி கிளைம்கள் அதிகரித்து வரும் காரணத்தினால் மூன்றாம் தரப்பு பிரீமியமும் அதிகரித்து வருகிறது.

மூன்றாம் தரப்பு பிரீமியம் ஓன் டேமேஜ் பிரீமியம்
எதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது வாகனத்தின் கனத் திறனைப் பொறுத்து இன்சூரன்ஸ் ரெகுலேட்டர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. ஓன் டேமேஜ் பிரீமியம் IDV, வாகனத்தை வாங்கிய வருடம், இடம் மற்றும் அதன் வகையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
ஸ்டெபிலிட்டி ரெகுலேட்டரான IRDAI மூன்றாம் தரப்பு பிரீமியத்தை அதிகரிக்கலாம் மற்றும் குறைக்கலாம். வருடங்கள் ஓட, வாகனத்தின் மதிப்பானது குறையும், அப்போது ஓன் டேமேஜ் பிரீமியத்தின் விலையானதும் குறையும்.
மோட்டார் பிரீமியத்தில் பங்கு விரிவான அல்லது ஸ்டாண்ட்அலோன் – இதில் ஏதுவாக இருந்தாலும் மோட்டார் பாலிசியில் இதற்கென்று நிலையான பங்கு இருக்கும். மோட்டார் பாலிசி பிரீமியத்தில் இது ஒரு பங்காக இருக்கலாம் அல்லது இல்லாமல் கூட இருக்கலாம்
ஏதேனும் அசம்பாவிதங்கள் நேராமல் தவிர்க்க நம் உணர்வுகள் எப்பொழுதுமே எச்சரிக்கையுடன் இருக்கும், அது மட்டும் அல்ல தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அது நமக்கு உணர்த்தும்! ரோட்டில் வண்டியை ஓட்டிச் செல்லும் போது அங்கு நடக்கவிருக்கும் அனைத்துமே நமது கட்டுப்பாட்டில் இருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே, எதிர்பாராத விதமாக எழும் பண நெருக்கடியை சமாளிப்பதற்கு ஏதுவாக விரிவான மோட்டார் பாலிசியைத் தேர்வு செய்வது மிகவும் சிறந்ததாகும்.

நான் எதை வாங்க வேண்டும்?

ஓன் டேமேஜ் இன்சூரன்ஸ், மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் அல்லது காம்ப்ரிஹென்சிவ்/விரிவான இன்சூரன்ஸ்?

உங்கள் வாகனத்திற்கு எந்த வகையான கவரேஜ் மற்றும் பாதுகாப்பு தேவைப்படுகிறது என்பதைப் பொறுத்தும், உங்களால் எந்த அளவிற்கு பணத்தை இதற்காக செலவிட முடியும் என்பதைப் பொறுத்தும், நீங்கள் இன்சூரன்ஸை தேர்வு செய்யலாம். இதில் விரிவான/காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸை தேர்வு செய்வது சிறந்தது. ஏனெனில், இது மூன்றாம் தரப்பு இழப்புகள் மற்றும் சேதங்களுடன் சொந்த சேதங்களைளில் இருந்தும் பாதுகாக்கிறது.

இருப்பினும், உங்களிடம் மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் ஏற்கனவே இருந்தால், உங்கள் வாகனத்திற்கு  முழுமையான கவரேஜைப் பெற, நீங்கள் ஓடி இன்சூரன்ஸை வாங்கலாம்.

பாலிசி மற்றும் உங்கள் இன்சூரன்ஸ் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் பொறுத்து உங்கள் கிளைமுக்கான மொத்த கவரேஜ் தொகை இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் வாகனத்தின் மதிப்பு குறைவதினால் கவரேஜ் மற்றும் ஓன் டேமேஜ் பிரீமியத்தின் தொகையானது மாறுபடும்.

 

இந்தியாவில் உள்ள ஓன் டேமேஜ் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இன்சூரன்ஸில் ஓடி என்றால் என்ன?

இன்சூரன்ஸில் ஓடி என்பது 'ஓன் டேமேஜ்' (Own Damage) என்பதைக் குறிக்கிறது. உங்களின் சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள், மேலும் அதனால் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்யும் என்பதையே இது குறிக்கிறது.

ஓடி இன்சூரன்ஸை வாங்குவதற்கு தகுதியானவர் யார்?

இதற்கு முன்பே மூன்றாம் தரப்பு மோட்டார் இன்சூரன்ஸ் வைத்திருக்கும் எவரானாலும், ஓன் டேமேஜ் மற்றும் அதனால் ஏற்பட்ட  இழப்புகளை ஈடுசெய்வதற்காக ஸ்டாண்ட்அலோன் ஓடி இன்சூரன்ஸை வாங்கலாம்.

மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசிகளின் வகைகள் என்னென்ன?

மோட்டார் இன்சூரன்ஸ் திட்டங்களில் மூன்று வகைகள் உள்ளன; அவை மூன்றாம் தரப்பு மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி, விரிவான/காம்ப்ரிஹென்சிவ் அல்லது ஸ்டாண்டர்ட் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி மற்றும் ஓன் டேமேஜஸ் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியாகும். இவற்றில் நீங்கள் எதை வேண்டுமானாலும் வாங்கலாம்.

ஓடி இன்சூரன்ஸ் வைத்திருக்க வேண்டியது சட்டப்படி கட்டாயமா?

இல்லை, உங்கள் கார் அல்லது பைக்கிற்கு ஓடி இன்சூரன்ஸ் வைத்திருக்க வேண்டியது கட்டாயமில்லை, ஆனால் உங்கள் வாகனத்தின் பாதுகாப்பிற்காக இது பரிந்துரைக்கப்படுகிறது. மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, அனைத்து வாகனங்களுக்கும் மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் பெற வேண்டியது கட்டாயம் ஆகும். அத்துடன், மூன்றாம் தரப்பு பொறுப்பு மற்றும் ஓன் டேமேஜஸ் ஆகிய இரண்டின் நன்மைகளை அளிக்கும் ஒரே பாலிசியான விரிவான/காம்பிரிஹென்சிவ் இன்சூரன்ஸையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

ஓடி இன்சூரன்ஸ் எப்போது நடைமுறைக்கு வந்தது?

மார்ச் 2019-ல் பல ஆண்டுகளுக்கு நீடித்திருக்கக் கூடிய மூன்றாம் தரப்பு பாலிசிகளை (சட்டப்படி) வாங்கிய கார் மற்றும் பைக் உரிமையாளர்களுக்கு உதவுவதற்காக ஐஏஆர்டிஐ (IRDAI) செப்டம்பர் 2019-ல் ஸ்டாண்ட்அலோன் ஓடி இன்சூரன்ஸை  அறிமுகப்படுத்தியது. செயல்பாட்டில்  உள்ள மூன்றாம் தரப்பு மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருக்கும் அனைவருக்கும் இது கூடுதல் பாதுகாப்பை அளிக்கும்.

என்னுடைய மூன்றாம் தரப்பு பாலிசி ஜூன் மாதத்தில் முடிந்தாலும் கூட ஓடி பாலிசியை நான் இப்போது வாங்கலாமா?

ஆம், உங்கள் மூன்றாம் தரப்பு பாலிசி அடுத்த நான்கு மாதங்களில் காலாவதி ஆகாத வரை நீங்கள் ஓடி பாலிசியை வாங்கலாம்.