பஸ் இன்சூரன்ஸ்

பேஸஞ்சர் மற்றும் ஸ்கூல் பஸ்களுக்கான கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ்

Third-party premium has changed from 1st June. Renew now

பஸ் இன்சூரன்ஸ் என்பது வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் பேருந்துகளுக்கு ஏற்படும் விபத்துக்கள், இயற்கை சீற்றங்கள் மற்றும் தீ விபத்து போன்று எதிர்பாராத சூழ்நிலைகளில் ஏற்படும் இழப்புகள் மற்றும் சேதங்களை பாதுகாக்கும் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாலிசியின் ஒரு வகை ஆகும்.

பேசிக் பிளான் தேர்டு பார்ட்டி லயபிலிட்டிஸை மட்டும் கவர் (சட்டத்தினால் கட்டாயமயமாக்கப்பட்ட) செய்ய உதவுகையில், ஒரு காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பாலிசியானது தேர்டு பார்ட்டி லயபிலிட்டிஸுடன், ஒருவருக்கு ஏற்படும் சொந்த சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கும் சேர்த்து ஒரே பாலிசியின் கீழ் காப்பீடு அளிக்கிறது.

கவர் செய்யப்படும் பேருந்துகளின் வகைகள்:

  • பள்ளி பேருந்துகள்: பள்ளி அல்லது கல்லூரி போன்ற கல்வி நிறுவனத்தின் ஒரு பகுதியாகவும், மாணவர் போக்குவரத்துக்காகவே முதன்மையாக பயன்படுத்தப்படும் பேருந்துகளுக்கு இந்த பாலிசியின் கீழ் காப்பீடு வழங்கப்படும்.
  • பொது பேருந்துகள்: ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கும் அல்லது நகரத்திற்குள்ளும் பயணிகளை கொண்டு செல்ல இயக்கப்படும் அரசாங்க பேருந்துகளுக்கு இந்த பாலிசியின் கீழ் காப்பீடு வழங்கப்படும். 
  • பிரைவேட் பேருந்துகள்: அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் பயணிக்க பயன்படுத்தப்படும் பேருந்துகள் அல்லது சுற்றுலா பேருந்துகள் போன்ற தனியார் நிறுவன பேருந்துகளுக்கு இந்த பாலிசியின் கீழ் காப்பீடு வழங்கப்படும்.
  • மற்ற கமர்ஷியல் வேன்கள்: மக்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்திற்காக செயல்படும் எல்லா வேன்களும், பேருந்துகளும் இந்த பாலிசியில் கீழ் கவர் செய்யப்படலாம்.

நான் ஏன் பஸ் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?

  • எதிர்பாராதவிதமான இழப்புகளிலிருந்து பாதுகாப்பு - தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்களாக இருந்தாலும் சரி அல்லது உங்கள் சொந்த பேருந்திற்கு ஏற்படும் சேதங்களாக இருந்தாலும் சரி, பேருந்து காப்பீடு என்பது ஏற்பட்ட இழப்புகள் அனைத்திற்கும் காப்பீடு வழங்கும். எனவே, இது உங்கள் தினசரி லாஜிஸ்டிக் செயல்பாடுகளில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் வணிக ரீதியான இழப்புகள் ஆகியவற்றைத் தவிர்க்கும்.
  • சட்டத்திற்கு உட்படுதல்: மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, தேர்டு பார்ட்டி சேதங்கள் மற்றும் இழப்புகளிலிருந்து ஏற்படக்கூடிய சாத்தியமான இழப்புகள் அல்லது சேதங்களிலிருந்து எல்லா வாகனங்களும், குறிப்பாக கமர்ஷியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி கமர்ஷியல் பஸ் இன்சூரன்ஸ் இருத்தல் கட்டாயமயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இன்சூரன்ஸ் எடுக்கப்படவில்லையெனில், நீங்கள் அபராதம் செலுத்த நேரிடலாம்.
  • உரிமையாளர் - ஓட்டுனருக்கு காப்பீடு: பஸ் இன்சூரன்ஸ் என்பது உங்கள் வாகனம் அல்லது மூன்றாம் தரப்பு வாகனத்திற்கு ஏற்படும் இழப்புகள் மற்றும் சேதங்களுக்கு மட்டுமல்லாமல், உரிமையாளர்-ஓட்டுநருக்கு ஏற்படும் உடல் காயங்கள் போன்றவற்றிற்கும் காப்பீடு வழங்கும்.
  • பயணிகள் பாதுகாப்பு - கமர்ஷியல் இன்சூரன்ஸின் ஒரு பகுதியாக, விபத்து, தீ விபத்து, இயற்கை சீற்றங்கள் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளில் பாதிக்கப்படும் பயணிகளுக்கும் சேர்த்துக் கூடுதல் காப்பீடு வழங்கவும் நீங்கள் தேர்வு செய்ய முடியும்.

டிஜிட்டின் கமர்ஷியல் பஸ் இன்சூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

கமர்ஷியல் பஸ் இன்சூரன்ஸில் எவற்றிற்கு காப்பீடு அளிக்கப்படுகிறது?

இதல் கவர்(காப்பீடு) செய்யப்படாதது எது?

உங்கள் கமர்ஷியல் பஸ் இன்சூரன்ஸ் பாலிசியில் என்ன கவர் செய்யப்படவில்லை என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது, எனவே, நீங்கள் கிளைம்  செய்யும் போது எந்த குழப்பமும் ஏற்படாது. காப்பீடு அளிக்கப்படாத சில சூழ்நிலைகள் பின்வருமாறு:

தேர்டு பார்ட்டி பாலிசியை வைத்திருப்பவருக்கு ஏற்படும் சொந்த சேதங்கள்:

நீங்கள் உங்கள் பேருந்திற்கு தேர்டு பார்ட்டி கமர்ஷியல் பாலிசி மட்டுமே வைத்திருக்கும் பட்சத்தில், உங்களின் சொந்த பேருந்திற்கு ஏற்படும் சேதங்கள் இன்சூரன்ஸில் கவர் செய்யப்படாது.

குடிப்போதை அல்லது உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

கிளைம் செய்யும் போது இன்சூர் செய்யப்பட்ட வாகனத்தின் உரிமையாளர்-ஓட்டுநர் குடிப்போதையிலோ அல்லது சரியான உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியதாக தெரியவந்தால் பேருந்தின் காப்பீடு கவர் செய்யப்படாது.

கவனக்குறைவு

உரிமையாளர்-ஓட்டுநரின் அலட்சியத்தால் கமர்ஷியல் பேருந்துக்கு ஏற்படும் சேதம் அல்லது இழப்பு கவர் செய்யப்படாது. எடுத்துக்காட்டிற்கு, ஏற்கனவே நகரத்தில் வெள்ளம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அப்படியிருந்தும் ஒருவர் வாகனத்தை எடுத்து வெளியே ஓட்டுதல்.

தாக்கத்தினால் ஏற்படும் சேதங்கள்

விபத்து, இயற்கை சீற்றம் அல்லது தீயினால் நேரடியாக ஏற்படாத சேதம் அல்லது இழப்பு கவர் செய்யப்படாது.

டிஜிட்டின் கமர்ஷியல் பஸ் இன்சூரன்சின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

முக்கிய அம்சங்கள் டிஜிட் பெனிஃபிட்
கிளைம் செயல்முறை நேரடி ஆவண சரிபார்ப்பு இல்லாத பேப்பர்லெஸ் கிளைம்ஸ்
வாடிக்கையாளர் சேவை 24x7 மணி நேர வாடிக்கையாளர் சேவை
கூடுதல் கவரேஜ் PA கவர்ஸ், லீகல் லயபிலிட்டி கவர், ஸ்பெஷல் எக்ஸ்க்லூஷன்ஸ் மற்றும் கட்டாய டிடக்டபிள்ஸ் மற்றும் பல,
தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள் தனிப்பட்ட சேதங்களுக்கு வரம்பறற லயபிலிட்டி, 7.5 லட்சங்கள் வரை சொத்து/வாகன சேதங்களுக்கு வழங்கப்படும்.

கமர்ஷியல் பஸ் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்

நீங்கள் இன்சூர் செய்ய விரும்பும் பேருந்தின் வகை அல்லது உங்கள் பேருந்துக்களின் ப்ளீட்டை பொறுத்து, நாங்கள் இரண்டு வகை முக்கிய பாலிசிகளை வழங்குகிறோம்.

லயபிலிட்டி மட்டுமே ஸ்டாண்டர்ட் பேக்கேஜ்

உங்கள் பேருந்தால் ஏதேனும் ஒரு தேர்டு-பார்ட்டி நபர் அல்லது சொத்திற்கு ஏற்படும் சேதங்கள்

×

உங்கள் பேருந்தால் ஏதேனும் ஒரு தேர்டு-பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள்

×

இயற்கை சீற்றம், தீ விபத்து, திருட்டு அல்லது விபத்தினால் உங்கள் பேருந்துக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதங்கள்

×

உரிமையாளர்-ஓட்டுநருக்கு ஏற்பட்டிருக்கும் காயம்/உயிரழப்பு

If the owner-driver doesn’t already have a Personal Accident Cover from before

×
Get Quote Get Quote

கிளைமைக் கோருவது எப்படி?

1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைக்கலாம் அல்லது எங்களைத் தொடர்புகொள்ள hello@godigit.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலிசி எண், விபத்து நடந்த இடம், விபத்து நடந்த தேதி மற்றும் இன்சூர் செய்யப்பட்டவரின்/அழைப்பவரின் தொடர்பு எண் போன்ற உங்கள் விவரங்களை தயராக வைத்திருப்பதன் மூலம் எங்கள் செயல்முறை நீங்கள் எளிதாக்க முடியும்.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்ஸ் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படும்? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதை கேட்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது! டிஜிட் கிளைமின் ரிப்போர்ட் கார்டுகளை படிக்கவும்

இந்தியாவின் கமர்ஷியல் பேருந்துக்கான இன்சூரன்ஸை பற்றி மேலும் அறிந்துக்கொள்க

ஸ்கூல் பஸ் இன்சூரன்ஸ் வாங்குவது அவசியமா?

ஆம், நிச்சியமாக! பள்ளிகள் அல்லது தேர்டு பார்ட்டி அமைப்புகளால், குழந்தைகளை வீட்டுக்கும் பள்ளிக்கும் அழைத்து செல்ல பள்ளி பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, எதிர்பாராமல் நிகழும் இழப்புகளிலிருந்து குறைந்தபட்சம் உங்கள் வாகனத்தைப் பாதுகாப்பதுடன் பஸ் இன்சூரன்ஸ் ஆனது தினசரி இந்த பேருந்துகளில் பயணம் செய்யும் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் காப்பீடு அளிக்கிறது.

ஆம், நிச்சியமாக! பள்ளிகள் அல்லது தேர்டு பார்ட்டி அமைப்புகளால், குழந்தைகளை வீட்டுக்கும் பள்ளிக்கும் அழைத்து செல்ல பள்ளி பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, எதிர்பாராமல் நிகழும் இழப்புகளிலிருந்து குறைந்தபட்சம் உங்கள் வாகனத்தைப் பாதுகாப்பதுடன் பஸ் இன்சூரன்ஸ் ஆனது தினசரி இந்த பேருந்துகளில் பயணம் செய்யும் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் காப்பீடு அளிக்கிறது.

சரியான பஸ் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வுசெய்வதற்கான டிப்ஸ்

உங்கள் பேருந்துக்கு சரியான ஆன்லைன் இன்சூரன்ஸை தேர்வு செய்ய பின்வரும் காரணிகளை ஒப்பிட்டு மதிப்பிடுவது அவசியம்:  சரியான இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ (ஐடிவி-IDV): IDV என்பது நீங்கள் இன்சூரன்ஸ் செய்ய விரும்பும் பேருந்தின் சந்தை மதிப்பு. உங்கள் பஸ் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் இருந்து உங்கள் கிளைம் பேஅவுட் வரை அனைத்தும் இதையே சார்ந்திருக்கும். எனவே, நீங்கள் தேர்வுசெய்யும் இன்சூரர் உங்களுக்கு சரியான ஐடிவியை கொடுக்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சேவை பயன்கள்: மற்ற அனைத்து காரணங்களுடன், 24x7  மணி நேர வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் பணம் செலுத்தத் தேவையில்லா கேரேஜ்களின் பரந்த நெட்ஒர்க் ஆகியவற்றை கருத்தில் கொள்ளவும். தேவைப்படும் நேரங்களில், இந்த சேவைகள் முக்கியமானவை. ஆட்-ஆன்களை ரிவ்யூ செய்யவும்: ஆட்-ஆன் என்பவை உங்கள் பஸ் பெரும் அனைத்து வகையான கவரேஜ்களுக்கும் உதவும் ஒன்று. எடுத்துக்காட்டிற்கு, உங்கள் ஆட்-ஆன்களில் பர்சனல் ஆக்சிடென்ட் கவர், பேசஞ்சர் கவர், கம்பல்சரி டிடக்டபிள்ஸ், எலக்ட்ரிக் ஆக்சஸரீஸ் கவர் மற்றும் பல அடங்கும்.  கிளைம் வழங்கப்படும் வேகம்: இது அனைத்து இன்சூரன்ஸின் மிக முக்கியமான அம்சமாகும். விரைவாக கிளைம்களை செட்டில் செய்ய உதவும் உங்களுக்குத் தெரிந்த ஒரு  இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தேர்ந்தெடுங்கள். சிறந்த மதிப்பு: நீங்கள் மேற்கூறப்பட்ட அனைத்து காரணிகளையும் ஒப்பிட்டு பார்த்த பிறகு பஸ் இன்சூரன்சின் பிரீமியத்தை ஒப்பிட்டு பார்த்து எது சிறந்த விலையில் சாத்தியமான பயன்களை வழங்குகிறது என்பதை பாருங்கள்.

உங்கள் பேருந்துக்கு சரியான ஆன்லைன் இன்சூரன்ஸை தேர்வு செய்ய பின்வரும் காரணிகளை ஒப்பிட்டு மதிப்பிடுவது அவசியம்: 

  • சரியான இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ (ஐடிவி-IDV): IDV என்பது நீங்கள் இன்சூரன்ஸ் செய்ய விரும்பும் பேருந்தின் சந்தை மதிப்பு. உங்கள் பஸ் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் இருந்து உங்கள் கிளைம் பேஅவுட் வரை அனைத்தும் இதையே சார்ந்திருக்கும். எனவே, நீங்கள் தேர்வுசெய்யும் இன்சூரர் உங்களுக்கு சரியான ஐடிவியை கொடுக்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • சேவை பயன்கள்: மற்ற அனைத்து காரணங்களுடன், 24x7  மணி நேர வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் பணம் செலுத்தத் தேவையில்லா கேரேஜ்களின் பரந்த நெட்ஒர்க் ஆகியவற்றை கருத்தில் கொள்ளவும். தேவைப்படும் நேரங்களில், இந்த சேவைகள் முக்கியமானவை.
  • ஆட்-ஆன்களை ரிவ்யூ செய்யவும்: ஆட்-ஆன் என்பவை உங்கள் பஸ் பெரும் அனைத்து வகையான கவரேஜ்களுக்கும் உதவும் ஒன்று. எடுத்துக்காட்டிற்கு, உங்கள் ஆட்-ஆன்களில் பர்சனல் ஆக்சிடென்ட் கவர், பேசஞ்சர் கவர், கம்பல்சரி டிடக்டபிள்ஸ், எலக்ட்ரிக் ஆக்சஸரீஸ் கவர் மற்றும் பல அடங்கும். 
  • கிளைம் வழங்கப்படும் வேகம்: இது அனைத்து இன்சூரன்ஸின் மிக முக்கியமான அம்சமாகும். விரைவாக கிளைம்களை செட்டில் செய்ய உதவும் உங்களுக்குத் தெரிந்த ஒரு  இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தேர்ந்தெடுங்கள்.
  • சிறந்த மதிப்பு: நீங்கள் மேற்கூறப்பட்ட அனைத்து காரணிகளையும் ஒப்பிட்டு பார்த்த பிறகு பஸ் இன்சூரன்சின் பிரீமியத்தை ஒப்பிட்டு பார்த்து எது சிறந்த விலையில் சாத்தியமான பயன்களை வழங்குகிறது என்பதை பாருங்கள்.

எனது பஸ் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கும் காரணிகள் யாவை?

உங்களது பஸ்ஸின் இன்சூரன்ஸ் விலைகளை பெரிதும் பாதிக்கும் பல்வேறு காரணிகளை பார்க்கவும்: மாடல், எஞ்சின் மற்றும் வாகனத்தின் தயாரிப்பு: சந்தையில் பல்வேறு வகையான பேருந்துகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அதற்கென அமைக்கப்பட்டிருக்கும் சொந்த அம்சங்கள் மற்றும் அபாயங்களுடன் வருகிறது. எனவே, உங்கள் பஸ் இன்சூரன்ஸ் விலைகள் பெரும்பாலும் உங்கள் பேருந்தின் தயாரிப்பு மற்றும் மாடலால் பாதிக்கப்படும். இருப்பிடம்: ஒவ்வொரு நகரமும், நகராட்சியும் அதற்கு தக்க பிரச்சனைகளுடன் வருகின்றன. சில மற்றதை விட பாதுகாப்பானவை, சில மற்றதை விட அதிக விலை கொண்டவை. எனவே, நீங்கள் உங்கள் பஸ் இயங்கும் நகரம் பொறுத்து, உங்கள் பஸ் இன்சூரன்ஸ் விலைகள் மாறுபடும். நோ-கிளைம் போனஸ்: நீங்கள் ஏற்கனவே பஸ் இன்சூரன்ஸை வைத்திருந்து, தற்போது அந்த பாலிசியை புதுப்பிக்க அல்லது ஒரு புதிய இன்சூரன்ஸை பெற விரும்பினால் - உங்கள் என்சிபி (நோ-கிளைம் போனஸ்) பரிசீலிக்கப்படும். அதனால் உங்கள் பிரீமியம் தள்ளுபடி விலையில்  கிடைக்கும்! நோ-கிளைம் போனஸ் என்றால் உங்கள் பேருந்திற்கு முதலில் இருந்த பாலிசி காலத்தில் ஒரு கிளைம் கூட செய்யவில்லை என்பதைக் குறிக்கிறது. இன்சூரன்ஸ் பிளானின் வகை: உங்கள் பேருந்திற்கு காம்ப்ரிஹென்சிவ் பஸ் இன்சூரன்ஸ் பிளான் அல்லது தேர்டு பார்ட்டி லயபிலிட்டி இன்சூரன்ஸ் பிளான் என் இரண்டில் எந்த இன்சூரன்ஸை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து பிரீமியமும் மாறுபடும். ஏனெனில், இந்த திட்டங்கள் ஒவ்வொன்றிலும் வழங்கப்படும் காப்பீடு நன்மைகள் வேறுபடும்.

உங்களது பஸ்ஸின் இன்சூரன்ஸ் விலைகளை பெரிதும் பாதிக்கும் பல்வேறு காரணிகளை பார்க்கவும்:

  • மாடல், எஞ்சின் மற்றும் வாகனத்தின் தயாரிப்பு: சந்தையில் பல்வேறு வகையான பேருந்துகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அதற்கென அமைக்கப்பட்டிருக்கும் சொந்த அம்சங்கள் மற்றும் அபாயங்களுடன் வருகிறது. எனவே, உங்கள் பஸ் இன்சூரன்ஸ் விலைகள் பெரும்பாலும் உங்கள் பேருந்தின் தயாரிப்பு மற்றும் மாடலால் பாதிக்கப்படும்.
  • இருப்பிடம்: ஒவ்வொரு நகரமும், நகராட்சியும் அதற்கு தக்க பிரச்சனைகளுடன் வருகின்றன. சில மற்றதை விட பாதுகாப்பானவை, சில மற்றதை விட அதிக விலை கொண்டவை. எனவே, நீங்கள் உங்கள் பஸ் இயங்கும் நகரம் பொறுத்து, உங்கள் பஸ் இன்சூரன்ஸ் விலைகள் மாறுபடும்.
  • நோ-கிளைம் போனஸ்: நீங்கள் ஏற்கனவே பஸ் இன்சூரன்ஸை வைத்திருந்து, தற்போது அந்த பாலிசியை புதுப்பிக்க அல்லது ஒரு புதிய இன்சூரன்ஸை பெற விரும்பினால் - உங்கள் என்சிபி (நோ-கிளைம் போனஸ்) பரிசீலிக்கப்படும். அதனால் உங்கள் பிரீமியம் தள்ளுபடி விலையில்  கிடைக்கும்! நோ-கிளைம் போனஸ் என்றால் உங்கள் பேருந்திற்கு முதலில் இருந்த பாலிசி காலத்தில் ஒரு கிளைம் கூட செய்யவில்லை என்பதைக் குறிக்கிறது.
  • இன்சூரன்ஸ் பிளானின் வகை: உங்கள் பேருந்திற்கு காம்ப்ரிஹென்சிவ் பஸ் இன்சூரன்ஸ் பிளான் அல்லது தேர்டு பார்ட்டி லயபிலிட்டி இன்சூரன்ஸ் பிளான் என் இரண்டில் எந்த இன்சூரன்ஸை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து பிரீமியமும் மாறுபடும். ஏனெனில், இந்த திட்டங்கள் ஒவ்வொன்றிலும் வழங்கப்படும் காப்பீடு நன்மைகள் வேறுபடும்.

இந்தியாவில் ஆன்லைன் பஸ் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனது நிறுவனங்களில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள் உள்ளன. நான் அவை அனைத்திற்கும் காப்பீடு செய்ய முடியுமா?

ஆமாம், நிச்சயமாக! உங்கள் பள்ளிப் பேருந்துகள் போன்ற பேருந்துக்களின் குழுக்களைப் பாதுகாக்கவே பஸ் காப்பீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் டிஜிட் இன்சூரன்ஸால் கவர் செய்யப்படும் .

நீங்கள் எங்களை அணுகினால் மட்டும் போதும், எங்களால் உங்கள் நிறுவனத்திற்கு தனிப்பயனாக்கப்பட்ட திட்டத்தை வழங்க முடியும்.

எந்த வகையான பேருந்துகளுக்கு காப்பீடு அளிக்கப்படுகிறது?

ஸ்கூல் பஸ், வேன்கள், மினிபஸ்கள் மற்றும் சுற்றுலா பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளும் எங்கள் கமர்ஷியல் பஸ் இன்சூரன்ஸின் கீழ் காப்பீடு செய்யப்படலாம்.

பள்ளி பஸ் இன்சூரன்ஸின் விலை எவ்வளவு?

நீங்கள் இன்சூர் செய்ய விரும்பும் பஸ் வகை மற்றும் உங்கள் இருப்பிடத்தின் அடிப்படையில், உங்கள் பஸ் இன்சூரன்ஸ் கட்டணம் மாறுபடும். உங்கள் ஸ்கூல் பஸ் இன்சூரன்ஸுக்கு எவ்வளவு செலவாகும் என்பதைப் புரிந்துகொள்ள, உங்கள் விவரங்களை இங்கே உள்ளிடவும்.