டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

நல்ல கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?

ஒரு நபரின் கிரெடிட் ஸ்கோர் என்பது வங்கிகளும் பிற லோன் வழங்கும் நிறுவனங்களும் அவர்களின் "லோன் வாங்கும் தகுதியை" கண்டறிய பயன்படுத்தும் நம்பர் ஆகும். இந்த எண்ணிக்கை பொதுவாக 300-900-க்கு இடையில் இருக்கும். மேலும் இது லோன் வாங்கி அதை திருப்பிச் செலுத்தும் தனிநபரின் திறனைக் காட்டுகிறது.

இந்தியாவில், இந்த கிரெடிட் ஸ்கோரைக் கணக்கிடுவதற்கு ஆர்பிஐ (RBI) உரிமம் பெற்ற நான்கு கிரெட் ஸ்கோர் தகவல் பீரோக்கள் உள்ளன. அவை பின்வருமாறு: டிரான்ஸ்யூனியன் சிபில், எக்பீரியன், சி.ஆர்.ஐ.எஃப் ஹை மார்க் (CRIF High Mark) மற்றும் ஈக்விஃபாக்ஸ்.

இந்தியாவில் நல்ல கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?

வெவ்வேறு கிரெடிட் பீரோக்கள் வெவ்வேறு ஸ்கோர் மாடல்களைப் பயன்படுத்தினாலும், பொதுவாக, 700-750-க்கு மேல் கிரெடிட் ஸ்கோர் பொதுவாக நல்லதாகக் கருதப்படுகிறது.

பொதுவான லோன் ஸ்கோர் வரம்புகள் பின்வருமாறு:

கிரெடிட் ஸ்கோர் வரம்புகள் எப்படி இந்த ஸ்கோரைப் பெற்றீர்கள்?
NA/NH "பொருந்தாது" அல்லது "வரலாறு இல்லை" நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்த மாட்டீர்கள், மற்றும்/அல்லது லோன் வாங்கியதில்லை. இதனால், உங்களிடம் கடன் வரலாறு இருக்காது.
300-549 மோசமானது கிரெடிட் கார்டு பில்கள் அல்லது இ.எம்.ஐ.(EMIs)-களில் ஒழுங்கற்ற திருப்பிச் செலுத்துதல் அல்லது லோன் செலுத்தாமல்விட்டது போன்ற வரலாறு உங்களிடம் இருக்கலாம். அல்லது, நீங்கள் கடந்த காலத்தில் நிறைய கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்திருக்கலாம் மற்றும் மோசமான கிரெடிட் உபயோகத்தைக் காட்டியிருக்கலாம். உங்கள் லோனைத் திருப்பிச் செலுத்துவதில் ஹை ரிஸ்க்கில் நீங்கள் இருப்பதாக கருதப்படுவீர்கள். கடன் வழங்குபவர்கள் உங்கள் லோன்கள் அல்லது லோன் விண்ணப்பங்களை அங்கீகரிக்க மாட்டார்கள்.
550-649 நடுநிலையானது கிரெடிட் கார்டு பில்கள்/ இ.எம்.ஐ.(EMIs)-கள் தாமதமாகச் செலுத்துதல் அல்லது பல கிரெடிட் கோரிக்கைகள் போன்ற உங்கள் கடந்த காலப் பணம் செலுத்துவதில் சில முறைகேடுகளை நீங்கள் காட்டியிருக்கலாம். நீங்கள் இன்னும் லோன் வழங்குபவர்களுக்கு ஹை ரிஸ்க் உள்ளவர்களாகக் கருதப்படலாம். பல லோன் வழங்குநர்கள் உங்கள் லோனுக்கு ஒப்புதல் அளிக்காமல் போகலாம். அப்படியே ஒப்புதல் கொடுத்தாலும் அதிக வட்டி விகிதங்கள் இருக்கும்.
650-749 நன்று நீங்கள் கடந்த காலத்தில் லோன் வாங்கி அதை சரியாக திருப்பிச் செலுத்தும் நடத்தையை வெளிப்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் குறைந்த ரிஸ்க்கில் இருப்பதாகக் கருதப்படுவீர்கள். பெரும்பாலான லோன் வழங்குநர்கள் உங்கள் கடந்த கால நீங்கள் வாங்கிப் பயன்படுத்திய கிரெடிட் கார்டுகள் மற்றும் லோனைக் கருத்தில் கொள்வார்கள். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டாலும், வட்டி விகிதத்தில் நீங்கள் எதிர்பார்த்த ஒன்றைப் பெறாமல் போகலாம்.
750-799 மிக நன்று நீங்கள் கிரெடிட் பேமென்ட்டுகள் மற்றும் நீண்ட லோன் வரலாற்றை வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள். மேலும் பொறுப்பான திருப்பிச் செலுத்தும் நடத்தையை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். அப்படியென்றால் லோன் வழங்குபவர்கள் நீங்கள் குறைந்த ரிஸ்க் உள்ளவர்களாகக் கருதப்படலாம். லோன் வழங்குபவர்கள் லோனை நீட்டிப்பதை விரும்ப மாட்டார்கள். மேலும் நீங்கள் லோன்களில் நல்ல டீல்களைப் பெறுவீர்கள்.
800-900 மிக நன்று நீங்கள் சிறந்த நிதி நிர்வாகத்தைக் காட்டியுள்ளீர்கள். உங்கள் லோன் பேமென்ட்டுகளை ஒழுங்காகச் செய்துள்ளீர்கள். மேலும் முன்மாதிரியான லோன் வரலாற்றைக் கொண்டிருக்கிறீர்கள். வங்கிகளும் லோன் வழங்கும் நிறுவனங்களும் உங்களை லோன் வாங்கிவிட்டு செலுத்தாமல் விட்டுவிட மாட்டீர்கள் என்ற, குறைந்த ரிஸ்க்கைக் கருத்தில் கொண்டு, லோன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளில் சிறந்த சலுகைகளை உங்களுக்கு வழங்குவார்கள்.

நல்ல கிரெடிட் ஸ்கோரை வைத்திருப்பது ஏன் முக்கியம்?

வங்கிகளும் பிற நிதி நிறுவனங்களும் ஒரு நபரின் "கிரெடிட் தகுதியை" தீர்மானிக்க கிரெடிட் ஸ்கோர்களை பயன்படுத்துகின்றன. இது லோன் போன்ற கிரெடிட் வாங்கி அதை திருப்பிச் செலுத்துவதற்கான அவர்களின் திறனைப் பார்க்கிறது. லோன் வழங்குபவர்கள் லோன் அல்லது கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வார்களா என்பதை முடிவு செய்வதற்கும், மோசடி சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கும் ஒரு நபரின் கிரெடிட் ஸ்கோரைப் பயன்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு லோன் வழங்கும் நிறுவனமும் சொந்த ரிஸ்க் வரம்புகள் கொண்டிருப்பதால், அதிக (அல்லது நல்ல) கிரெடிட் ஸ்கோரை வைத்திருப்பது முக்கியம். எடுத்துக்காட்டாக, ஒரு வங்கி 700-க்கு மேல் கிரெடிட் ஸ்கோர் இருந்தால் நல்லதாகக் கருதலாம். மற்றொரு வங்கி 750-க்கு மேல் ஸ்கோரை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

உங்கள் கிரெடிட் பயன்பாடு அல்லது உங்கள் பேமென்ட் வரலாறு போன்ற உங்கள் கிரெடிட் ஸ்கோரின் வெவ்வேறு அம்சங்களுக்கு வெவ்வேறு லோன் வழங்குநர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம். எனவே, பொதுவாக, 750-800-க்கு மேல் இருக்கும் கிரெடிட் ஸ்கோர் பெரும்பாலான சூழ்நிலைகளில் நல்லதாகக் கருதப்படும்.

உங்களிடம் அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தால், கடந்த காலத்தில் நீங்கள் நல்ல கிரெடிட் நடத்தையை வெளிப்படுத்தியுள்ளீர்கள் என்று அர்த்தம். உங்கள் லோன் கோரிக்கைகளை அங்கீகரிப்பதில் லோன் அளிப்பவர்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்கலாம் என்பதே இதன் பொருள். குறைந்த வட்டி விகிதங்கள், சிறந்த திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் மற்றும் விரைவான லோன் ஒப்புதல் செயல்முறை போன்ற பிற நன்மைகளையும் நீங்கள் பெறலாம்.

எனவே, நல்ல அல்லது அதிக கிரெடிட் ஸ்கோரை வைத்திருப்பது உங்கள் கிரெடிட் விண்ணப்பங்களை அங்கீகரிக்க உதவும். அதே சமயம் மோசமான அல்லது குறைந்த கிரெடிட் ஸ்கோர் உங்கள் லோன் மற்றும் கிரெடிட் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்குப் பங்களிக்கும்.

உங்கள் கிரெடிட் ஸ்கோரை என்ன பாதிக்கிறது?

ஒரு நபரின் கிரெடிட் ஸ்கோரைக் கணக்கிட அல்காரிதம் மூலம் பல காரணிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் காரணிகள் ஒவ்வொன்றும் கிரெடிட் ஸ்கோரில் வேறுபட்ட வெயிட்டேஜை கொண்டுள்ளன. இருப்பினும் இது ஸ்கோரைக் கணக்கிடும் நிறுவனத்தின் அடிப்படையில் மாறுகிறது.

இந்த காரணிகள் அடங்கும்:

காரணிகள் இந்த காரணிகளை எவை பாதிக்கிறது?
பேமென்ட் வரலாறு இது கிரெடிட் கார்டு பில்கள், லோன்கள் மற்றும் இ.எம்.ஐ.(EMIs)-களை சரியான நேரத்தில் செலுத்துவதைக் குறிக்கிறது. தாமதமாக அல்லது உரிய நேரத்தில் செலுத்தத் தவறியிருந்தால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையும்.
கிரெடிட் பயன்பாடு இது நீங்கள் பயன்படுத்தும் உங்கள் கிரெடிட் வரம்பின் அளவைக் குறிக்கிறது. சிறந்த செலவு என்பது உங்கள் கிரெடிட் வரம்பில் 30%-ஐ விட அதிகமாக இருக்கக் கூடாது. இதை விட அதிகமாக இருந்தால், அது உங்கள் ஸ்கோரைக் குறைக்கும்.
கிரெடிட் காலம் இது உங்கள் கிரெடிட் வரலாற்றின் நீளத்தைக் குறிக்கிறது. அல்லது நீங்கள் எவ்வளவு காலம் கிரெடிட் அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்கள். பழைய கணக்குகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் உங்கள் பில்களை நீங்கள் தொடர்ந்து சரியான நேரத்தில் செலுத்தி வருவதை லோன் வழங்குபவர்களுக்குக் காட்டலாம்.
கிரெடிட் கலவை இது உங்களிடம் உள்ள கிரெடிட் வகைகளைக் குறிக்கிறது, இரண்டு முக்கிய வகையான கிரெட்டுகள் உள்ளன: பாதுகாப்பற்ற லோன்கள் (கிரெடிட் கார்டுகள் மற்றும் தனிநபர் லோன்கள் போன்றவை) மற்றும் பாதுகாப்பான லோன்கள் (வாகனக் கடன்கள் அல்லது வீட்டுக் கடன்கள் போன்றவை). இரண்டின் கலவையையும் வைத்திருப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.
கிரெடிட் விசாரணைகள் இது கிரெடிட் கார்டுகள், லோன்கள் போன்ற கிரெடிட்டுக்கு நீங்கள் எத்தனை முறை விண்ணப்பித்தீர்கள் என்பதைக் குறிக்கிறது. அதிக எண்ணிக்கையிலான கோரிக்கைகள், குறிப்பாக குறுகிய காலத்தில், உங்கள் ஸ்கோரைக் குறைக்கலாம்.

உங்கள் கிரெடிட் ஸ்கோரை எவ்வாறு மேம்படுத்துவது?

உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கும் காரணிகளைப் பற்றி நீங்கள் அறிந்தவுடன், உங்களிடம் நல்ல கிரெடிட் ஸ்கோர் இருப்பதை உறுதிப்படுத்த நீங்கள் என்ன செய்யலாம் என்பதை எளிதாக அறிந்துகொள்ளலாம். உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவதற்கு நேரமும் முயற்சியும் தேவைப்படலாம் என்றாலும், பின்வரும் பொறுப்பான பழக்கங்களை இப்போது முதல் வளர்த்துக் கொள்வது நீண்ட காலத்திற்கு உங்களுக்கு உதவும்:

  • உங்கள் கிரெடிட் ஸ்கோர் மற்றும் கிரெடிட் அறிக்கையை தவறாமல் அணுகவும். இந்த வழியில், நீங்கள் உங்கள் கிரெடிட் ஸ்கோரைக் கண்காணிக்கலாம் மற்றும் உங்கள் ஸ்கோரை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
  • உங்கள் பில்களையும் இ.எம்.ஐ.(EMIs)-களையும் சரியான நேரத்தில் செலுத்துங்கள். உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவதற்கு நல்ல மற்றும் சரியான நேரத்தில் பணம் செலுத்துதல் வரலாற்றைக் கொண்டிருப்பது மிக முக்கியமான காரணியாகும்.
  • உங்கள் நிலுவைத் தொகைகளை நிறைவு செய்யுங்கள். உங்களிடம் ஏதேனும் நிலுவைத் தொகைகள் இருந்தால், அவற்றின் நிலுவைத் தேதியைத் தாண்டியிருந்தால், உங்களால் முடிந்தவரை விரைவாகச் செலுத்துங்கள், தாமதமாகப் பணம் செலுத்தினால், அது உங்கள் ஸ்கோரைப் பாதிக்கும். எதிர்காலத்தில் இது போன்ற தவறுகளைத் தவிர்க்க, நினைவூட்டல்கள் அல்லது அலாரங்களை அமைக்கவும். எனவே நீங்கள் மறக்க மாட்டீர்கள்.
  • உங்கள் கிரெடிட் லிமிட்டை அதிகமாக பயன்படுத்த வேண்டாம். நீங்கள் கிரெடிட்டில் அதிகம் சார்ந்திருக்காத நபராக லோன் அளிப்பவர்களிடம் காட்ட உங்கள் கிரெடிட் கார்டு பயன்பாட்டை குறைவாக வைத்திருங்கள். செலவை மொத்த கிரெடிட் லிமிட்டில் 30%-க்குள் வைத்திருக்க முயற்சிக்கவும்—உதாரணமாக, உங்கள் கடன் லிமிட் ₹10,000 எனில், ₹3,000-க்கு மேல் பயன்படுத்த வேண்டாம். உங்கள் தேவைகளுக்கு இது போதாது எனில், உங்கள் லோன் லிமிட்டை உயர்த்துமாறு உங்கள் கிரெடிட் கார்டு வழங்குபவரைக் கேட்கவும் அல்லது இரண்டாவது கார்டைத் தேர்வு செய்யவும்.
  • புதிய கிரெடிட் கோரிக்கைகளை லிமிட்டாக வைத்திருக்கவும். புதிய கிரெடிட்டுக்கு (புதிய கிரெடிட் கார்டுகள், லோன்கள் போன்றவை) விண்ணப்பிக்கும் முறைகளை லிமிட்டாக வைத்திருக்க முயற்சிக்கவும். இவை "கடினமான விசாரணைகள்" என்று அழைக்கப்படுகின்றன. மேலும் அவை இரண்டு ஆண்டுகளுக்கு கிரெடிட் அறிக்கைகளில் இருக்கும் என்பதால், உங்கள் கிரெடிட் ஸ்கோரில் அவற்றின் தாக்கம் காலப் போக்கில் மறைந்துவிடும்.
  • ஏதேனும் தவறான தகவல் இருக்கிறதா என்பதை பார்க்க உங்கள் கிரெடிட் அறிக்கையைச் சரிபார்க்கவும். உங்கள் கிரெடிட் அறிக்கையில் ஏதேனும் தவறான தகவல்கள் உள்ளதா என்று தவறாமல் பார்க்கவும், ஏனெனில் உங்கள் ஸ்கோர் பாதிக்கப்படலாம். நீங்கள் ஏதேனும் தவறுகள் அல்லது பிழைகளைக் கண்டால், கூடிய விரைவில் ஒரு கோரிக்கையை கிரெடிட் வழங்குபவரிடம் எழுப்புங்கள், அதனால் அது சரிசெய்யப்படும்.

உங்கள் கிரெடிட் ஸ்கோரை எந்த தகவல் பாதிக்காது?

ஒரு நபரின் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் பல காரணிகள் இருந்தாலும், கிரெடிட் ஸ்கோரைக் கணக்கிடுவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்காத பல காரணிகளும் உள்ளன. இவற்றில் பின்வருவன அடங்கும்:

  • உங்கள் கணக்கு இருப்பு - ஒரு நபரின் கிரெடிட் ஸ்கோர் மற்றும் அறிக்கை அவரது கணக்கில் இருக்கும் தொகையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அவர்களின் லோன் மற்றும் கிரெடிட் கார்டு தகவல் தொடர்பான விவரங்களை மட்டுமே பயன்படுத்துகிறது.
  • உங்கள் முதலீடுகள் - நீங்கள் பல லோன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பெறுவது உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கலாம். முதலீட்டு பாலிசிக்களின் எண்ணிக்கை உங்கள் கிரெடிட் ஸ்கோரை எந்த வகையிலும் பாதிக்காது.
  • உங்கள் வருமானம், தொழில் அல்லது வேலைவாய்ப்பு வரலாறு - நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் மற்றும் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பது உங்கள் கிரெடிட் ஸ்கோரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில் உங்களிடம் எத்தனை கிரெடிட் உள்ளன மற்றும் அவற்றை நீங்கள் எவ்வளவு சிறப்பாக நிர்வகிக்கிறீர்கள் என்பதன் அடிப்படையிலேயே இது கணக்கிடப்படுகிறது. இந்தத் தகவல் உங்கள் கிரெடிட் அறிக்கையின் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படலாம். (இருப்பினும், சில லோன் வழங்குநர்கள் முடிவெடுக்கும் போது இந்தத் தகவலைப் பொருத்தமானதாகக் கருதலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.)
  • நீங்கள் வசிக்கும் இடம் - கிரெடிட் அறிக்கையில் உங்கள் முகவரி குறிப்பிடப்பட்டிருந்தாலும், நீங்கள் இருக்கும் நகரம், மாநிலம் அல்லது தங்கும் வகை ஆகியவை உங்கள் கிரெடிட் ஸ்கோரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
  • பயன்பாட்டு பில்களை செலுத்துதல் - வாடகை, அல்லது போன், மின்சாரம், தண்ணீர் மற்றும் இன்டர்நெட் பேமென்ட்ஸ் (இவை உடனடியாகவும் முறையாகவும் செலுத்தப்படும்) போன்ற உங்களின் பயன்பாட்டுக் கட்டணங்கள் பொதுவாக உங்கள் கிரெடிட் ஸ்கோரில் தாக்கத்தை ஏற்படுத்தாது. இருப்பினும், பாரம்பரிய கடன் வரலாறு இல்லாதவர்களுக்கான பயன்பாட்டுக் பேமென்ட்களில் சில மாற்று கிரெடிட் ஸ்கோரிங் மாடல்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலானவை இந்தியாவில் இன்னும் தொடங்கவில்லை.
  • உங்கள் வயது மற்றும் பிறப்பு சார்ந்த காரணிகள்- நீங்கள் எவ்வளவு வயதானவராக இருந்தாலும், உங்கள் கல்வி நிலை, மதம் மற்றும் பல்வேறு பிறப்பு சார்ந்த காரணிகள் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்காது.
  • உங்கள் திருமண நிலை - ஒரு நபரின் தனிப்பட்ட நிதி நடத்தையின் அடிப்படையில் கிரெடிட் ஸ்கோர்கள் தீர்மானிக்கப்படுவதால், ஒரு நபரின் திருமண நிலை அவர்களின் கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்காது. கூடுதலாக, ஜாயிண்ட் வங்கிக் கணக்குகள் உங்கள் கிரெடிட் வரலாறு மற்றும் ஸ்கோரை மாற்றாது.
  • டெபிட் கார்டு பயன்பாடு - ஒரு நபரின் கிரெடிட் பயன்பாட்டுடன் கிரெடிட் ஸ்கோர் இணைக்கப்பட்டுள்ளதால், டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் உங்கள் கிரெடிட் ஸ்கோரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால், நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் போது, நீங்கள் லோன் வாங்கி பின்னர் அதை திருப்பிச் செலுத்துகிறீர்கள். அதே நேரத்தில் டெபிட் கார்டைப் பயன்படுத்துவது உங்கள் சொந்தப் பணத்தைச் செலவழிப்பது ஆகும். அதே வழியில், பணம் அல்லது காசோலை மூலம் பணம் செலுத்துவதும் கிரெடிட் ஸ்கோரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
  • நிராகரிக்கப்பட்ட கிரெடிட் விண்ணப்பங்கள் – நீங்கள் கடந்த காலத்தில் லோன் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்து மறுக்கப்பட்டாலும், அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்காது. இருப்பினும், கிரெடிட்டிற்கான கோரிக்கையே "கடினமான விசாரணை" ஆகும். இது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம்.
  • மென்மையான விசாரணைகள் - "கடினமான விசாரணைகள்" போலல்லாமல், உங்கள் சொந்த கிரெடிட் அறிக்கையை நீங்கள் சரிபார்க்கும்போது அல்லது மற்றவர்களின் விசாரணைகள் (உங்கள் வங்கி உங்கள் கிரெடிட் கணக்குகளை மதிப்பாய்வு செய்வது போன்றவை) மென்மையான விசாரணைகள். இந்த விசாரணைகள் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்காது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நல்ல கிரெடிட் ஸ்கோரின் நன்மைகள் என்ன?

வங்கிகளும் பிற லோன் வழங்கும் நிறுவனங்களும் உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பயன்படுத்தி கிரெடிட் அனுமதிகளைத் தீர்மானிக்கும். எனவே, உங்களிடம் அதிக கிரெடிட் ஸ்கோர் இருக்கிறது. அதற்குக் காரணம், கடந்த காலத்தில் நீங்கள் பொறுப்பான கிரெடிட் நடத்தையை வெளிப்படுத்தியிருப்பதால், லோன்கள் மற்றும் பிற கிரெடிட்டுகளுக்கான கோரிக்கைகளை அங்கீகரிப்பதில் லோன் அளிப்பவர்களுக்கு அதிக நம்பிக்கையை அளிக்கலாம்.

குறைந்த வட்டி விகிதங்கள், சிறந்த ரீபேமெண்ட் விதிமுறைகள் மற்றும் விரைவான லோன் ஒப்புதல் செயல்முறை போன்ற பிற நன்மைகளையும் நீங்கள் பெறலாம்.

லோன்களை பெற நல்ல கிரெடிட் ஸ்கோர் என்ன?

உங்கள் கிரெடிட் ஸ்கோர் அதிகபட்ச ஸ்கோருக்கு (அதாவது, 900) நெருக்கமாக இருந்தால், உங்கள் லோன் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பொதுவாக, 700-750 மற்றும் அதற்கு மேல் கிரெடிட் ஸ்கோர் இருந்தால், எந்தவொரு லோனுக்கும் விண்ணப்பிக்கும்போது நல்ல ஸ்கோர் இருப்பதாக கருதப்படுகிறது.

கிரெடிட் ஸ்கோர்கள் ஏன் வித்தியாசமாக இருக்கலாம்?

நான்கு வெவ்வேறு கிரெடிட் பீரோக்கள் (டிரான்ஸ்யூனியன் சிபில், எக்பீரியன், சி.ஆர்.ஐ.எஃப் ஹை மார்க் மற்றும் ஈக்விஃபாக்ஸ்) கிரெடிட் ஸ்கோரைக் கணக்கிடும் போது சற்று வித்தியாசமான ஸ்கோரிங் மாடல்களைப் பயன்படுத்துகின்றன. எனவே உங்கள் கிரெடிட் அறிக்கையை எந்த கிரெடிட் பீரோ வழங்குகிறது என்பதைப் பொறுத்து உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் மாறுபடலாம்.