இ-ரிக்‌ஷா இன்சூரன்ஸ்

உங்கள் இ-ரிக்‌ஷா/ஆட்டோ ரிக்‌ஷாவிற்கான கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் ட்ரெண்டிங் ஐகான்

Third-party premium has changed from 1st June. Renew now

இ-ரிக்‌ஷா இன்சூரன்ஸ் என்றால் என்ன?

இ-ரிக்‌ஷா இன்சூரன்ஸ் என்பது ஒரு கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாலிசியாகும், இது இன்சூரருக்கும் இன்சூரன்ஸ் செய்தவருக்கும் இடையே ஒரு ஒப்பந்தமாக செயல்படுகிறது, இதில் எதிர்பாராத சேதம் அல்லது இழப்புக்கு இன்சூரர் கவரேஜ் வழங்குவார். விபத்து, திருட்டு, இயற்கை சீற்றங்கள் போன்றவற்றால் ஏற்படும் சேதங்களுக்கு இந்த பாலிசி பயனுள்ளதாக இருக்கும். மலிவு விலையில் பிரீமியம் செலுத்துவதன் மூலம் பாலிசியைப் பெறலாம்.

இ-ரிக்‌ஷா இன்சூரன்ஸ் ஏன் தேவைப்படுகிறது?

கீழே பட்டியலிடப்பட்டுள்ள காரணங்களால் எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷா இன்சூரன்ஸ் பாலிசி தேவைப்படுகிறது: 

  • இ-ரிக்‌ஷாக்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் லையபிலிட்டியை பெறுவது கட்டாயமாகும். வாகனம் சேதம் அடைந்தாலோ அல்லது தேர்டு பார்ட்டி வாகனம், சொத்து அல்லது நபருக்கு சேதம் விளைவித்தாலோ வணிகத்தை நிதி ரீதியாக, சட்டப்படி மட்டுமே, இந்த பாலிசி கவர் செய்கிறது.

  • விபத்துக்கள், திருட்டுகள், தீ விபத்துகள், பயங்கரவாத நடவடிக்கைகள், இயற்கை பேரிடர்கள் மற்றும் பிற எதிர்பாராத சூழ்நிலைகள் போன்ற காரணிகளால் ஏற்படும் இழப்புகளிலிருந்து நபருக்கு பாலிசி உதவும்.

  • திட்டமிடப்படாத இழப்புகள் அல்லது வேலைக்கு செல்ல இயலாத நிலை இல்லாததை இது உறுதி செய்கிறது. 

  • இன்சூரன்ஸை வைத்திருப்பது, உங்கள் பணியில் நீங்கள் பொறுப்பாகவும் தீவிரமாகவும் இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. 

டிஜிட் மூலம் இ-ரிக்‌ஷா இன்சூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

இ-ரிக்‌ஷா இன்சூரன்ஸில் என்ன கவர் செய்யப்படுகிறது?

என்னென்ன கவர் செய்யப்படவில்லை?

பாலிசியின் கீழ் என்ன கவர் செய்யப்பட்டுள்ளது என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள், டிஜிட்டின் எலக்ட்ரிக் ரிக்‌ஷா இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் என்ன கவர் செய்யப்படவில்லை என்பதைப் பார்ப்போம்.

விளைவுகளால் ஏற்பட்ட சேதங்கள்

விபத்து அல்லது இயற்கைப் பேரிடரின் நேரடி விளைவு இல்லாத இ-ரிக்‌ஷாவுக்கு ஏற்படும் எந்த சேதமும் பாலிசியின் கீழ் வராது.

உரிமம் இல்லாமல் அல்லது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்

அந்த நபர் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அல்லது குடிபோதையில் வாகனம் ஓட்டினால், இ-ரிக்‌ஷாவிற்கு ஏற்படும் சேதம் கவர் செய்யப்படாது.

புவியியல் பகுதிக்கு வெளியே இருப்பது

தற்செயலான இழப்பு அல்லது சேதம் மற்றும் / அல்லது புவியியல் பகுதிக்கு வெளியே ஏற்படும், நீடித்த அல்லது ஏற்படும் லையலிட்டி.

காண்ட்ராக்சுவல் லையபிலிட்டி

எந்தவொரு காண்ட்ராக்சுவல் லையபிலிட்டியிருந்தும் எழும் கிளைம்.

டிஜிட் வழங்கும் இ-ரிக்‌ஷா இன்சூரன்ஸின் அம்சங்கள்

டிஜிட்டின் எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷா இன்சூரன்ஸ் பாலிசி பின்வரும் அம்சங்களைக் கொண்டுள்ளது - 

  • இன்சூரர் பர்சனல் ஆக்சிடன்ட் கவர்கள், லீகல் லையபிலிட்டி கவர், எக்ஸ்க்ளூஷன்ஸ் மற்றும் கட்டாயமான கழிப்புகள்/கம்பல்சரி டிடக்டபிள்ஸ் போன்ற கூடுதல் கவரேஜை வழங்குகிறது.

  • வாகனம் அல்லது மூன்றாம் தரப்பினரின் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதத்திற்கு ரூ.7.5 லட்சம் வரையிலான தனிப்பட்ட சேதங்களுக்கு வரம்பற்ற லையபிலிட்டியை நீங்கள் கிளைம் செய்யலாம். 

  • கிளைம் தீர்வு செயல்முறை முற்றிலும் காகிதமற்றது.

  • இன்சூரர் முழுநேர வாடிக்கையாளர் ஆதரவை வழங்குகிறார். 

கிளைமை எவ்வாறு தாக்கல் செய்வது?

நீங்கள் ஒரு கிளைமை தாக்கல் செய்ய விரும்பினால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறையை நீங்கள் பின்பற்ற வேண்டும்:

  • 1800 258 5956 ஐ அழைக்கவும் அல்லது hello@godigit.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும்

  • முழு விவரங்களையும் தெரிவிக்கவும்

  • கஸ்டமர் கேர் பிரதிநிதிக்கு பாலிசி எண் போன்ற விவரங்களை வழங்கவும்

  • இன்சூரரால் கிளைம் தொடங்கப்பட்டவுடன், ஆவணங்களைத் தயார் செய்து கொள்ளவும்

  • கிளைம் தீர்வு படிவத்தை நிரப்பவும், தேதி மற்றும் நேரம், இடம் போன்ற விபத்து விவரங்களை வழங்கவும் மற்றும் வாகனத்திற்கு ஏற்பட்ட சேதத்தின் படங்களை சமர்ப்பிக்கவும்.

குறிப்பு : இன்சூரர், கிளைம் தீர்க்கப்படுவதற்கு முன் அல்லது நிராகரிக்கப்படுவதற்கு முன், சேதத்தை ஆய்வு செய்ய ஒரு நபரை அனுப்பலாம்.

இ-ரிக்‌ஷா இன்சூரன்ஸ் திட்டங்களின் வகைகள்

உங்கள் த்ரீ வீலரின் தேவையின் அடிப்படையில், நாங்கள் முதன்மையாக இரண்டு பாலிசிகளை வழங்குகிறோம். எவ்வாறாயினும், எந்தவொரு கமர்ஷியல் வெஹிக்கிலின் அபாயத்தையும் அடிக்கடி பயன்படுத்துவதையும் கருத்தில் கொண்டு, உங்கள் ரிக்‌ஷா மற்றும் உரிமையாளர்-ஓட்டுநர் ஆகியோரையும் நிதி ரீதியாகப் பாதுகாக்கும் ஒரு ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசியை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

லையபிலிட்டி மட்டும் ஸ்டாண்டர்ட் பேக்கேஜ்

தேர்டு பார்ட்டி நபர் அல்லது சொத்துக்கு உங்கள் ஆட்டோ ரிக்‌ஷாவால் ஏற்படும் சேதங்கள்

×

தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு உங்கள் ஆட்டோ ரிக்‌ஷாவால் ஏற்படும் சேதங்கள்

×

இயற்கை பேரழிவுகள், தீ, திருட்டு அல்லது விபத்துகள் காரணமாக உங்கள் சொந்த ஆட்டோ ரிக்‌ஷாவின் இழப்பு அல்லது சேதம்

×

உரிமையாளர்-ஓட்டுநர் காயம்/இறப்பு

உரிமையாளர்-ஓட்டுநரின் பெயரில் ஏற்கனவே பர்சனல் ஆக்சிடன்ட் கவர் இல்லை என்றால்

×
Get Quote Get Quote

டிஜிட் வழங்கும் இ-ரிக்‌ஷா இன்சூரன்ஸ் திட்டங்களின் வகைகள்

எலக்ட்ரிக் ரிக்‌ஷாவிற்கு, டிஜிட் மூலம் இரண்டு வகையான இன்சூரன்ஸ் பாலிசிகள் வழங்கப்படுகின்றன. அவைகள் - 

  • ஸடாண்டர்ட் பாலிசி - ஒரு ஸடாண்டர்ட் பாலிசியில், விபத்துகள், தீ, திருட்டு, இயற்கை பேரழிவுகள் போன்ற காரணிகளால் வாகனத்திற்கு ஏற்படும் சேதத்திற்கான கவரேஜ். அதோடு, தேர்டு பார்ட்டி நபர், வாகனம் அல்லது சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் வாகனத்தின் உரிமையாளர் அல்லது ஓட்டுநரின் காயம் அல்லது இறப்பு ஆகியவை கவர் செய்யப்படும். 

  • லையபிலிட்டி மட்டும் - எந்தவொரு தேர்டு பார்ட்டி நபர், வாகனம் அல்லது சொத்துக்களுக்கு வாகனத்தால் ஏற்படும் சேதத்தை மட்டுமே லையபிலிட்டி மட்டும் பாலிசி உள்ளடக்கும். வாகனத்தின் உரிமையாளர்/ஓட்டுநரின் காயம் அல்லது இறப்பும் கவர் செய்யப்படும்.

டிஜிட்டல் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படுகின்றன? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதைச் செய்வது நல்லது! டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டையைப் படிக்கவும்

எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள்

விகாஸ் தப்பா
★★★★★

டிஜிட் இன்சூரன்ஸ் மூலம் எனது வாகனக் இன்சூரன்ஸ் செய்தது எனக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை தந்தது. இது தகுந்த தொழில்நுட்பத்துடன் கூடிய வாடிக்கையாளருக்கு ஏதுவாக உள்ளது. எந்தவொரு நபரையும் நேரடியாக சந்திக்காமலேயே 24 மணிநேரத்திற்குள் கிளைம் தீர்வு செய்யப்பட்டது. வாடிக்கையாளர் மையங்கள் எனது அழைப்புகளை நன்கு கையாண்டன. வழக்கை சிறப்பாக கையாண்ட திரு ராமராஜு கொண்டனாவுக்கு பாராட்டுகிறேன்.

விக்ராந்த் பராசரர்
★★★★★

உண்மையில் ஒரு அருமையான இன்சூரன்ஸ் நிறுவனம், மிக உயர்ந்த ஐடிவி மதிப்பை அறிவித்தது மற்றும் ஊழியர்களிடம் நான் முற்றிலும் மனநிறைவு கொண்டுள்ளேன், மேலும் எனது பாராட்டி யுவேஸ் ஃபர்குனுக்குச் செல்கிறது, அவர் பல்வேறு சலுகைகள் மற்றும் நன்மைகளைப் பற்றி சரியான நேரத்தில் எனக்குத் தெரிவிக்கிறார், எனவே டிஜிட்டிலிருந்து மட்டுமே பாலிசியை வாங்கவே விரும்புகிறேன். சிறப்பான செலவு மற்றும் சேவை தொடர்பான பல காரணங்களால், மற்றொரு வாகனத்திற்கும் டிஜிட் இன்சூரன்ஸில் இருந்தே பாலிசியை வாங்க முடிவு செய்துள்ளேன்.

சித்தார்த் மூர்த்தி
★★★★★

கோ-டிஜிட்டிலிருந்து எனது 4வது வெஹிக்கில் இன்சூரன்ஸை வாங்கியது ஒரு நல்ல அனுபவம். திருமதி பூனம் தேவி பாலிசியை நன்றாக விளக்கினார், அதே போல் வாடிக்கையாளர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அவர் அறிந்து, எனது தேவைகளுக்கு ஏற்ப கோட்-ஐ வழங்கினார். மேலும் ஆன்லைனில் பணம் செலுத்துவதில் சிரமம் இல்லாமல் இருந்தது. இதை விரைவில் செய்து முடித்த பூனத்திற்கு ஸ்பெஷல் நன்றி. வாடிக்கையாளர் ரெலேசன்ஷிப் குழு நாளுக்கு நாள் சிறப்பாக மாறும் என்று நம்புகிறேன்!! சியர்ஸ்.

Show all Reviews

இ-ரிக்‌ஷா இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ என்றால் என்ன?

நீங்கள் கவரேஜைப் பெறத் தகுதியுடைய தொகையானது, இன்சூரன்ஸ் பாலிசியின் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ என அறியப்படுகிறது.

தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாவிட்டாலும் இன்சூரர் கிளைம் செயல்முறை மற்றும் இழப்பீட்டைத் தொடர்வாரா?

கிளைம்களைத் தீர்க்க, நீங்கள் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அது முடியும் வரை, இன்சூரரால் கிளைம் செட்டில்மெண்ட் செயல்முறை தொடங்கப்படாது.

இ-ரிக்‌ஷா இன்சூரன்ஸ் பாலிசியில் இ-ரிக்‌ஷாவில் உள்ள பயணிகள், ஸ்டாண்டர்ட் மற்றும் லையபிலிட்டி இரண்டிலும் கவர் செய்யப்படுவாரா?

ஆம், பயணிகள் தேர்டு பார்ட்டியாக கருதப்படுவதால், அவர்களும் கவர் செய்யப்படுவர்.

நோ-கிளைம் போனஸ் பாலிசிக்கு செலுத்த வேண்டிய பிரீமியத்தை பாதிக்குமா?

ஆம், நோ-கிளைம் போனஸ் பிரீமியத்தை பாதிக்கிறது.

எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷா இன்சூரன்ஸ் செய்வது கட்டாயமா?

ஆம், மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இ-ரிக்‌ஷா இன்சூரன்ஸ் இருப்பது கட்டாயம். நாட்டில் இ-ரிக்‌ஷாவை ஓட்டுவதற்கு குறைந்தபட்சம் லையபிலிட்டி மட்டும் பாலிசியையாவது நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.