எலக்ட்ரிக் கார் இன்சூரன்ஸ்

உங்கள் எலக்ட்ரிக் வாகனத்திற்கு டிஜிட் இன்சூரன்ஸைப் பெறுங்கள்

Third-party premium has changed from 1st June. Renew now

எலக்ட்ரிக் கார் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

எலக்ட்ரிக் கார் இன்சூரன்ஸ் என்பது ஒரு வகையான மோட்டார் இன்சூரன்ஸ் ஆகும், இது எலக்ட்ரிக் கார்களை விபத்துக்கள், இயற்கை பேரழிவுகள் அல்லது தீ போன்றவற்றில் ஏற்படக்கூடிய பல சேதங்கள் மற்றும் இழப்புகளிலிருந்து பாதுகாப்பதாகும்.

எலக்ட்ரிக் கார்கள் செலவு குறைந்ததாகவும், சுற்றுச்சூழலுக்குச் சிறந்ததாகவும் இருப்பதால் அவை பிரபலமடைந்து வருகின்றன. வழக்கமான கார்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் எரிபொருளாகத் தேவைப்படுவது போலவே, இந்த கார்களிலும் உங்கள் தொலைபேசி அல்லது லேப்டாப் போன்று எலக்ட்ரிக் சார்ஜ் செய்யப்படுகிறது!)

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் இன்னும் அதிகம் இல்லை என்பதால், உங்கள் எலக்ட்ரிக் காருக்கான இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவது சற்று வித்தியாசமாக இருக்கும்.

நான் ஏன் எலக்ட்ரிக் கார் இன்சூரன்ஸ் வாங்க வேண்டும்?

உங்கள் விலைமதிப்பற்ற எலக்ட்ரிக் கார்களுக்கு என்ன நடக்கும் என்று உங்களால் கணிக்க முடியாது. இந்த வகையான கார்களில் சிக்கலான தொழில்நுட்ப மற்றும் இயந்திர பாகங்கள் உள்ளன, அவை சீராக இயங்க உதவுகின்றன, ஆனால் எந்த நேரத்திலும் உங்களுக்குச் சிக்கலைக் கொடுக்கலாம்.

எனவே, எலக்ட்ரிக் கார் இன்சூரன்ஸ் செய்வது பெரும் உதவியாக இருக்கும் மற்றும் விபத்து, தீ, இயற்கை சீற்றங்கள் அல்லது திருட்டு போன்ற துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளில் நிதிப் பாதுகாப்பை அளிக்கும், மேலும் உங்கள் காரை எந்த கவலையும் இல்லாமல் ஓட்டுவதை உறுதிசெய்ய முடியும். இந்தியாவில் குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் இருப்பது கட்டாயம் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

டிஜிட்டின் எலக்ட்ரிக் கார் இன்சூரன்ஸில் என்ன கவர் செய்யப்பட்டுள்ளது?

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு டிஜிட் கார் இன்சூரன்ஸை ஏன் வாங்க வேண்டும்?

எலக்ட்ரிக் கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர்

தனியார் எலக்ட்ரிக் கார்களுக்கான கார் இன்சூரன்ஸ் பிரீமியங்கள் கிலோவாட் திறன், தயாரிப்பு, மாடல் மற்றும் வயது போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டவை.

வாகன கிலோவாட் திறன் (KW) ஒரு வருட தேர்டு பார்ட்டி பாலிசிக்கான பிரீமியம் விகிதம் லாங் டெர்ம் பாலிசிக்கான பிரீமியம்* விகிதம்
30 KW க்கு மிகாமல் ₹1,780 ₹5,543
30KWக்கு மேல் ஆனால் 65KW மிகாமல் ₹2,904 ₹9,044
65KWக்கு மேல் ₹6,712 ₹20,907
*லாங் டெர்ம் பாலிசி என்பது புதிய தனியார் கார்களுக்கான 3 ஆண்டு பாலிசி (ஆதாரம் IRDAI). இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பிரீமியம் எண்கள் வாகனத்தைப் பொறுத்து மாறுபடலாம், பாலிசியை வாங்கும் முன் பிரீமியத்தைச் சரிபார்க்கவும்.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான கார் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டுமா?

ஆம், வழக்கமான கார்களைப் போலவே, மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் படி, குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி சேதங்களுக்கு ஈடுசெய்யும் கார் இன்சூரன்ஸை வைத்திருப்பது கட்டாயமாகும்.

உங்கள் எலக்ட்ரிக் காருக்கு எந்த வகையான இன்சூரன்ஸ் சிறந்தது?

எலக்ட்ரிக் கார்களுக்கு இரண்டு முக்கிய வகையான இன்சூரன்ஸ் பாலிசிகள் உள்ளன.

  • தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசியானது, தேர்டு பார்ட்டி நபர், வாகனம் அல்லது சொத்துக்களுக்கு உங்கள் காரால் ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு எதிராக உங்களுக்குக் கவர் அளிக்கிறது.
  • ஒரு விரிவான கார் இன்சூரன்ஸ் பாலிசியானது தேர்டு பார்ட்டி பொறுப்புகள் மற்றும் உங்கள் சொந்த காருக்கு ஏற்படும் சேதங்கள் இரண்டையும் உள்ளடக்கும், மேலும் டிஜிட்டுடன் கிடைக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆட்-ஆன் கவர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் சேர்க்க விரும்பும் எதையும் உள்ளடக்கலாம்.

பொதுவாக, விரிவான கவரேஜுடன் வருவதால், காம்ப்ரிஹென்சிவ் பாலிசி பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், எலக்ட்ரிக் வாகனங்கள் விலை சற்று அதிகமாக இருப்பதால் - அதை முழுமையாக ஈடுசெய்யும் இன்சூரன்ஸை எடுப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

உங்கள் எலக்ட்ரிக் கார் இன்சூரன்ஸ் பிரீமியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

எலக்ட்ரிக் இன்சூரன்ஸ் பிரீமியங்கள் கிலோவாட் திறன், தயாரிப்பு, மாதிரி மற்றும் வயது போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டவை. உங்கள் வாகனத்திற்கான தனிப்பயனாக்கப்பட்ட தோராய மதிப்பீட்டை கண்டறிய மேலே உள்ள எங்கள் எலக்ட்ரிக் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம்.

பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்களுக்கான இன்சூரன்ஸை விட எலக்ட்ரிக் வாகனக் காப்பீட்டின் விலை அதிகமாகுமா?

பொதுவாக, கார் இன்சூரன்ஸைக் கணக்கிடும் ஒரு காரணி வாகனத்தின் விலை. எலக்ட்ரிக் வாகனங்கள் வழக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை விட அதிக விலை கொண்டவை, மேலும் அவை பழுதுபார்ப்பதற்கும் மாற்றுவதற்கும் அதிக விலை கொண்ட உதிரிபாகங்களுடன் வருவதாலும், எரிபொருள் அடிப்படையிலான வாகனங்களை விட பிரீமியம் சற்று அதிகமாக உள்ளது.

இருப்பினும், சுற்றுச்சூழலுக்கு உகந்த ஈவி-களின் பயன்பாட்டை ஊக்குவிக்க எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தேர்டு பார்ட்டி பிரீமியங்களில் 15% தள்ளுபடி உள்ளது. இதன் பொருள் நீங்கள் உண்மையில் எலக்ட்ரிக் கார்களுக்கான இன்சூரன்ஸை ஒப்பிடக்கூடிய மற்றும் குறைந்த கட்டணத்தில் பெறலாம். 

திருட்டு, தீ அல்லது இயற்கை பேரிடர்களின் போது ஏற்படும் சேதங்கள் அல்லது இழப்புகளுக்கு எலக்ட்ரிக் கார் இன்சூரன்ஸ் கவர் அளிக்குமா?

ஆம்! டிஜிட்டின் காம்ப்ரிஹென்சிவ் எலக்ட்ரிக் கார் இன்சூரன்ஸை நீங்கள் தேர்வு செய்யும் போது, உங்கள் கார் துரதிர்ஷ்டவசமாக திருடப்பட்டாலும், தீவிபத்து அல்லது வெள்ளம், பூகம்பம், சூறாவளி போன்ற இயற்கைப் பேரிடரால் ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு எதிராகவும் கவர் செய்யப்படும்.