இந்தியாவில் பயன்படுத்திய கார்களை வாங்குவதற்கான டிப்ஸ்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
மோட்டார்
ஹெல்த்
மோட்டார்
ஹெல்த்
More Products
மோட்டார்
ஹெல்த்
சப்போர்ட்
closeஎங்கள் வாட்ஸ்அப் எண்ணை அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியாது. இது வெறும் அரட்டை எண்.
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
Add Mobile Number
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
Terms and conditions
உங்கள் பெற்றோர் உங்களுக்கு முதல் சைக்கிளை வாங்கிய நேரம் நினைவிருக்கிறதா? அது நீண்ட காலத்திற்கு முன்பு என்று நான் நம்புகிறேன், ஆனால் அந்த மகிழ்ச்சியை இன்றும் உணர முடியும்.
அந்த வயதில் நாம் இளமையாகவும் நம் பெற்றோர்களை சார்ந்தும் இருந்தோம். இப்போது இதைப் பற்றி பேசுகையில், வசதியான காரை வாங்க முடிவு செய்யக்கூடிய சுதந்திரமான நபர்களாக நாம் வளர்ந்துள்ளோம்.
ஆனால் ஒவ்வொரு முறையும் நாம் ஒரு புதிய காரை வாங்க முடியாது, எனவே நாம் பயன்படுத்திய கார்களை வாங்க முயற்சிப்போம். பயன்படுத்திய காரை வாங்குவதை உண்மையில் பாதிக்கும் சில காரணிகளாக அதன் மதிப்பு, அம்சங்கள், வயது, கிளைம்கள் அல்லது பழுதுபார்ப்பு மற்றும் நோக்கம் ஆகியவை அடங்கும்.
உங்கள் கனவுகளின் காரைப் பரிசோதித்த பிறகு, சரிபார்க்க வேண்டிய அடுத்த முக்கியமான விஷயம் இன்சூரன்ஸ் பாலிசி. காரின் உரிமையாளரிடம் இன்சூரன்ஸ் பாலிசி இருக்கிறதா இல்லையா என்று கேட்க வேண்டும். இது போன்ற சில முக்கியமான அம்சங்களை இது உங்களுக்குக் குறிக்கும்:
அந்த காரை உரிமையாளர் போதுமான அளவு கவனித்திருக்க வேண்டும். ஒரு பொறுப்புள்ள குடிமகன் கண்டிப்பாக கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவார்.
கடந்த கால கிளைம்கள். இந்தியாவில் அதைக் கண்டுபிடிக்க எந்த ஒரு வழியுமில்லை.
செகண்ட் ஹேண்ட் காரின் பாலிசி இன்னும் இருந்தால், இன்சூரன்ஸ் பாலிசியை உங்கள் பெயரில் மாற்ற வேண்டியது அவசியம்.
கார் இன்சூரன்ஸ் என்பது உங்கள் கார் விபத்துக்குள்ளாக நேரினால் சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க, நீங்கள் வாங்க வேண்டிய ஆவணமாகும். விபத்துக்குப் பிறகு ஏற்படும் நிதிப் லையபிலிட்டிகளில் இருந்து இன்சூரன்ஸ் பாலிசி உங்களைப் பாதுகாக்கிறது. கார் மற்றும் காயமடைந்த தேர்டு பார்ட்டி ஆகிய இரண்டையும் கவர் செய்யும் அதிகபட்ச பாதுகாப்பு இதுவாகும்.
இந்தியாவில், உரிமையாளர்-ஓட்டுநர் பர்சனல் ஆக்சிடன்ட் கவருடன் தேர்டு பார்ட்டி லையபிலிடி பாலிசியை வைத்திருப்பது கட்டாயமாகும். நீங்கள் வாங்கும் பயன்படுத்திய காரில் ஏற்கனவே இன்சூரன்ஸ் பாலிசி உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அத்தகைய சூழ்நிலையில், காரின் ஆர்சி பரிமாற்றத்துடன் இன்சூரன்ஸின் பரிமாற்றத்தையும் நீங்கள் துரிதப்படுத்த வேண்டும்.
இன்சூரன்ஸை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லையா? பொறுங்கள், அதற்கு முன்னதாக நாம் முதலில், உங்கள் பெயரில் உள்ள செகண்ட் ஹேண்ட் காரின் ஆர்சி-ஐப் பெற வேண்டும்.
ஆர்சி-ஐ உங்கள் பெயருக்கு மாற்ற, அருகிலுள்ள ஆர்டிஓ-வைச் சென்று இந்தப் படிகளைப் பின்பற்றவும்.
படிவம் 29 மற்றும் படிவம் 30ஐக் கேளுங்கள். இந்தப் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு நீங்களும் முந்தைய உரிமையாளரும் முறையாக கையொப்பமிட வேண்டும்.
நீங்கள் வாங்கும் செகண்ட் ஹேண்ட் கார் உங்களுடையதல்லாத தனி அதிகார வரம்பில் இருந்தால் ஆர்டிஓ-விடமிருந்து என்ஓசி-க்கு ஏற்பாடு செய்யுங்கள்.
இடமாற்றத்தைத் தொடங்க உள்ளூர் ஆர்டிஓ-விற்கு உதவும் படிவங்களைச் சமர்ப்பிக்கவும்.
செயல்முறை முடிந்ததும், ஆர்டிஓ உங்களுக்கு 15 முதல் 18 நாட்களுக்குள் ரசீது தருவார். மாற்றப்பட்ட ஆர்சி-இன் இறுதி நகலை 40-45 நாட்களில் பெறுவீர்கள்.
இன்சூரன்ஸிற்கு மீண்டும் வருவோம், இன்சூரன்ஸை உங்கள் பெயரில் மாற்றுவதற்கான வழிகளை தெரியப்படுத்துகிறோம். உங்கள் பெயரில் ஆர்சி பெற்றிருந்தாலும், இன்சூரன்ஸ் முந்தைய உரிமையாளரின் பெயரில் இருந்தால், அது உங்களுக்கு எந்தப் பலனையும் அளிக்காது. நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும், சாலையில் உங்களின் செகண்ட் ஹேண்ட் காரில் செல்வதற்கும், நீங்கள் இன்சூரன்ஸ் பரிமாற்ற செயல்முறையை உடனடியாக செய்வது புத்திசாலித்தனமாக இருக்கும். ஆனால் அதை எப்படி செய்வது, யோசனை ஏதும் உள்ளதா?
செகண்ட் ஹேண்ட் காருக்கு இன்சூரன்ஸ் பாலிசி தொடர்ந்து இருக்கும் போது நீங்கள் செய்யக்கூடிய ஒரே விஷயம், பெயர் மாற்றத்தைக் கோருவதுதான். விவரங்களின் இந்த மாற்றம் இன்சூரன்ஸ் ஆவணத்தில் செய்யப்பட வேண்டும். இன்சூரரின் ரசீதுகளுடன் படிவம் 29 மற்றும் படிவம் 30-ஐ சமர்ப்பிக்கவும்.
நீங்கள் இன்சூரரின் அலுவலகத்திற்கு செல்லலாம் அல்லது ஏதேனும் இன்சூரன்ஸ் முகவர் அல்லது தரகரைத் தொடர்பு கொள்ளலாம். இந்த செயல்முறை சில நாட்களில் முடிந்து விடும்!! அவ்வாறாக உங்களின் செகண்ட் ஹேண்ட் கார் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுவிட்டது.
கிளைம் இல்லாத ஆண்டிற்கு, நீங்கள் நோ கிளைம் போனஸைப் பெறுவீர்கள் என்பதை அறிந்திருங்கள். இப்போது பயன்படுத்திய காரின் ஆர்சியை மாற்றலாம், ஆனால் என்சிபி-ஐ மாற்ற முடியாது. எனவே, பாலிசியின் மீதமுள்ள காலத்திற்கு, செகண்ட் ஹேண்ட் காரை வாங்குபவர் தேவையான வித்தியாசத் தொகையை செலுத்த வேண்டும்.
நீங்கள் வாங்கத் திட்டமிடும் பயன்படுத்திய காருக்கு இன்சூரன்ஸ் கவர் இல்லாத நிலை இருக்கலாம். அப்படியானால என்ன செய்வது? கார் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்களே வாங்குங்கள்!
அருகிலுள்ள எந்தவொரு இன்சூரரையும் நேரில் அணுகி அல்லது ஆன்லைனில் சிறந்த கார் இன்சூரன்ஸ் பாலிசிகளைக் கண்டறியவும்.
ஆர்சி-இன் நகல், விலைப்பட்டியல் (கிடைத்தால்) மற்றும் உங்களின் அடையாளச் சான்று ஆகியவற்றைச் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
பயன்படுத்திய காரின் ஆய்வு அல்லது கணக்கெடுப்புக்கு இன்சூரர் ஏற்பாடு செய்வார்.
பிரீமியத்தைச் செலுத்தி, சில நிமிடங்களில் இன்சூரன்ஸ்த் தொகையைப் பெறுவீர்கள்.
உங்கள் காருக்கான இன்சூரன்ஸ்த் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது, அது தனிப்பட்டதாக இருந்தாலும் அல்லது கமர்ஷியலாக இருந்தாலும், அது முழுவதுமாக உரிமையாளரைப் பொறுத்தது. மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் படி தேர்டு பார்ட்டி லையபிலிட்டி கவர் கட்டாயம், ஆனால் சொந்த சேதம் விருப்பத் தேர்வு மட்டுமே. ஆனால் விரிவான கவரேஜை வழங்குவதால், காம்ப்ரிஹென்சிவ் கவரைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
பின்வரும் சூழ்நிலைகளில், நீங்கள் காரின் தேர்டு பார்ட்டி லையபிலிட்டி கவரை மட்டுமே தேர்வு செய்ய முடியும்:
பயன்படுத்திய காரின் வயது 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இருப்பது.
காரின் பயன்பாடு குறைவு, அதனால் வேர் அண்ட் டேர் குறைவாக இருப்பது. நீங்கள் இந்தியாவிற்கு வெளியே வசிப்பதால், மாதந்திரம் நீங்கள் வருகை தரும் போது மட்டும் காரைப் பயன்படுத்துவது.
காருக்கு ஏற்படும் சேதத்திற்கு எந்த விதமான செலவையும் தாங்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கொள்வது.
அனைத்தும் முடிந்து, இன்சூரன்ஸ் பாலிசியுடன் கார் உங்கள் பெயருக்கு மாற்றப்படும் போது, நீங்கள் மிகுந்த உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் இருப்பீர்கள். இப்போது நீங்கள் ஒரு காரை வைத்திருப்பதால், அதை பாதுகாப்பாக ஓட்டி உலகை ஆளுங்கள்.
Please try one more time!
மற்ற முக்கியமான கட்டுரைகள்
மோட்டார் இன்சூரன்ஸ் பற்றி அனைத்தும்
Get 10+ Exclusive Features only on Digit App
closeAuthor: Team Digit
Last updated: 28-08-2024
CIN: U66010PN2016PLC167410, IRDAI Reg. No. 158.
கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் (முன்பு ஓபன் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது) - பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி - 1 முதல் 6 மாடிகள், அனந்தா ஒன் (ஏ.ஆர் ஒன்), பிரைட் ஹோட்டல் லேன், நர்வீர் தானாஜி வாடி, சிட்டி சர்வே எண்.1579, சிவாஜி நகர், புனே-411005, மகாராஷ்டிரா | கார்ப்பரேட் அலுவலக முகவரி - அட்லாண்டிஸ், 95, 4 வது பி கிராஸ் ரோடு, கோரமங்களா இண்டஸ்டிரியல் லேஅவுட், 5 வது பிளாக், பெங்களூரு-560095, கர்நாடகா | மேலே காட்டப்பட்டுள்ள கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் டிரேடு லோகோ கோ டிஜிட் எல்என்ஃபோவொர்க்ஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது மற்றும் உரிமத்தின் கீழ் கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் வழங்கப்படுவதுடன் பயன்படுத்தப்படுகிறது.