ஆன்லைனில் மோட்டார் வெஹிக்கில் இன்சூரன்ஸ்

மோட்டார் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

இன்சூரன்ஸ் என்பது உங்களையும், உங்கள் வாகனத்தையும் (கார்/பைக்/ கமர்ஷியல் வாகனம்) இயற்கைப் பேரிடர்கள், திருட்டுகள், கொள்ளைகள், மற்றும் விபத்துக்களினால் ஏற்படும் நிதி இழப்புகள் மற்றும் சேதங்களிலிருந்து உங்களையும் உங்கள் வாகனத்தையும் பாதுகாக்கும். இந்தியாவில் 3 வகையான மோட்டார் இன்சூரன்ஸ்கள் உள்ளது.

நீங்கள் ஏன் மோட்டார் இன்சூரன்ஸ்-ஐ வாங்க வேண்டும்?

இதை வாங்காமல் யாராலும் வாகனத்தை ஓட்டி விட முடியாது! மோட்டார் வாகனச் சட்டம் 1988 -ன் படி, இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களையும் சட்டப்பூர்வமாக ஓட்டுவதற்கு குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி லையபிலிட்டி பாலிசி வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். இத்துடன், நீங்கள் உங்கள் வாகனத்தின் மேல் அதிக அக்கறை கொண்டிருக்கும்  பட்சத்தில் காம்பிரிஹென்சிவ் (முழுமையான) பாலிசி வைத்திருப்பதும் முக்கியம்.

மோட்டார் இன்சூரன்ஸ் மிகவும் முக்கியமானது ஏன்?

சட்டப்பூர்வமாக வாகனத்தை ஓட்ட (இந்தியாவில் தேர்டு  பார்ட்டி லையபிலிட்டி பாலிசி வைத்திருக்கவேண்டியது கட்டாயம் )

  • எதிர்பாராத சூழலில் மூன்றாம் தரப்பினருக்கு உங்கள் வாகனத்தால் ஏற்படும் சேதங்களிலிருந்து அவர்களை நிதி நெருக்கடியில் இருந்து  பாதுகாக்க
  • இயற்கை சீற்றங்கள், தீ விபத்து, திருட்டு போன்ற எதிர்பாராத விபரீத சூழலிலிருந்து உங்கள் வாகனத்தைப் பாதுகாக்கவும், இழப்புகளை ஈடு கட்ட.
  • குறைந்த விலை பிரீமியம்
  • வெளிப்புற  உடைமைகளால் ஏற்படும் இழப்புகளிலிருந்து உங்களைப் பாதுகாக்க
  • எதிர்பாராத விதமாக மரணம் ஏற்பட்டால் உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு உரிய இழப்பீடு கொடுக்க

குறிப்பு: நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தின் அடிப்படையில் அதன்  பலன்கள் வேறுபடலாம். நீங்கள் அனைத்து நன்மைகளையும் அனுபவிக்க, காம்பிரிஹென்சிவ் (முழுமையான) திட்டத்தை வாங்குவதே சிறந்தது.

டிஜிட் மோட்டார் இன்சூரன்ஸ் -ஐ ஏன் தேர்வு செய்ய வேண்டும் ?

மோட்டார் இன்சூரன்ஸ் வகைகள்

கார் இன்சூரன்ஸ்

  • விபத்துகள், தீ விபத்துகள், இயற்கை பேரிடர்கள்  போன்ற நெருக்கடியான சூழலில் ஏற்படும் நிதி இழப்புகளிலிருந்து கார் இன்சூரன்ஸ்   உங்களைக் காப்பாற்றும்.
  • நாங்கள் இரண்டு வகையான கார் இன்சூரன்ஸ்களை வழங்குகிறோம்; ஒன்று, மூன்றாம் தரப்பு வாகனங்கள்/மக்கள்/சொத்துகளுக்கு ஏற்படும் சேதங்களுக்கான  இழப்புகளை மட்டுமே அளிக்கும் தேர்டு பார்ட்டி பாலிசி ஆகும். மற்றொன்று உங்களின் சொந்த இழப்புகளையும் (ஓன் டேமேஜஸ்) ,  மூன்றாம் தரப்பினரின் இழப்புகளை ஈடு செய்யும் காம்பிரிஹென்சிவ் (முழுமையான) பாலிசி ஆகும்.
  • காரின் தயாரிப்பு மற்றும் மாடல், எரிபொருள், இஞ்சின் வகை மற்றும் முந்தைய பாலிசிகள் போன்ற காரணிகளைப் பொறுத்து கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கணக்கிடப்படுகிறது . எனவே, ஒவ்வொரு கார்  இன்சூரன்ஸின் பிரீமியமானது  வேறுபடும்.  
  • ஸ்மார்ட்ஃபோன் மூலம் சுய பரிசோதனை மற்றும் நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லாத , பேப்பர்வர்க் அற்ற செயல்முறைகளைக் கொண்டதால்   கார் இன்சூரன்ஸ் தொடர்பான அனைத்து கிளைம்களும் விரைவில் வழங்கப்படும்.
கார் இன்சூரன்ஸை வாங்கவும்

பைக் இன்சூரன்ஸ்

  • விபத்துகள், தீ விபத்துகள், இயற்கை பேரிடர்கள்  போன்ற நெருக்கடியான சூழலில் ஏற்படும் நிதி இழப்புகளிலிருந்து  உங்களைக் காப்பதில் பைக் இன்சூரன்ஸ்  முக்கிய பங்கு வகிக்கிறது.
  • நாங்கள் இரண்டு வகையான பைக் இன்சூரன்ஸ்களை வழங்குகிறோம்; ஒன்று, மூன்றாம் தரப்பு வாகனங்கள்/மக்கள்/சொத்துகளுக்கு ஏற்படும் சேதங்களுக்கான  இழப்புகளை மட்டுமே அளிக்கும் தேர்டு பார்ட்டி பாலிசி ஆகும். மற்றொன்று உங்களின் சொந்த இழப்புகளையும் (ஓன் டேமேஜஸ்) ,  மூன்றாம் தரப்பினரின் இழப்புகளை ஈடு செய்யும் காம்பிரிஹென்சிவ் (முழுமையான) பாலிசி ஆகும்.
  • உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம் பெரும்பாலும் உங்கள் ஸ்கூட்டர்/பைக் மாடல் மற்றும்  அதை பதிவு ஆண்டைப் பொறுத்தது.
  • ஸ்மார்ட்ஃபோன் மூலம் சுய பரிசோதனை மற்றும் நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லாத , பேப்பர்வர்க் அற்ற செயல்முறைகளைக் கொண்டதால்  டூ வீலர்  இன்சூரன்ஸ் தொடர்பான அனைத்து கிளைம்களும் விரைவில் வழங்கப்படும்.
பைக் இன்சூரன்ஸை வாங்கவும்

கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ்

  • சட்டப்படி இன்சூரன்ஸ் அவசியம் என்றாலும் அதிக அளவு அபாயங்களை கொண்டுள்ள கமர்ஷியல் வாகனங்களுக்கு , மோட்டார் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ்  மிகவும் முக்கியமானது.
  • தேர்டு பார்ட்டி லையபிலிட்டீஸ், , வெஹிக்கில் டோவிங் மற்றும் ஓட்டுநருக்கான  தனிநபர்  ஆக்சிடென்ட் கவர் ஆகிய அனைத்தும் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸில் அடங்கும். 
  • தொழில்துறையை பொறுத்து அதில் பயன்படுத்தப்படும்  கமர்ஷியல் வெஹிக்கில்  வேறுபடும்., அதுபோல வாகனத்தின்  பாலிசிகளும் வேறுபடும். இதைப் பற்றிய இன்னும் பல விவரங்களை அறிந்துகொள்ளவும், உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப சலுகைகள் மற்றும் பயன்களை  பெறுவது எப்படி பற்றிய தகவல்களை பெற hello@godigit.com இல் எங்கள் குழுவைத் தொடர்புகொள்ளுங்கள்.
கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸை வாங்கவும்
டிஜிட் இன்சூரன்ஸில் கிளைம்கள் எத்தனை விரைவாக கிடைக்கும்? நீங்கள், உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இதுவாகத் தான் இருக்கும். இந்த கேள்வியை நீங்கள் கேட்பதும் நன்மைக்கே! டிஜிட் -ன் கிளைம் ரிப்போர்ட் கார்ட்-ஐ படிக்கவும்

மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி-ஐ தேர்வு செய்வது எப்படி?

இன்றைய சூழலில்  பலவகையான  இன்சூரன்ஸ்கள்  கிடைக்கின்றன. இருப்பினும் சரியான விலையில் கிடைக்கக் கூடியதாகவும் , எளிமையான செயல்முறைகளைக் கொண்டதாகவும், எல்லா சூழலிலும் உங்களுக்கு பாதுகாப்பாகவும், சேதத்தினால் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்யக்கூடியதாகவும் இருக்கும் இன்சூரன்ஸ்-ஐ தேர்வு செய்ய வேண்டும்.  இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கிளைம்களுக்கான  நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்தக்கூடிய இன்சூரன்ஸ்-ஐ தேர்வு செய்ய வேண்டும்.

ஆன்லைன் மூலம் உங்கள் வாகனத்திற்கான சரியான மோட்டார் இன்சூரன்ஸ்-ஐ  தேர்வுசெய்ய உதவும் சில குறிப்புகள் இதோ:

  • சரியான இன்சூர்ட் டிக்ளேர்ட் வேல்யூ-ஐ பகிருங்கள் – ஐடிவி (IDV ) என்பது உங்கள் காரின் சந்தை மதிப்பு (மார்க்கெட் வேல்யூ) ஆகும். உங்கள் பிரீமியம் இதை வைத்து  கணக்கிடப்படும். உங்கள் வாகனத்திற்கான மோட்டார் வெஹிக்கில் இன்சூரன்ஸ்-ஐ ஆன்லைனில் தேடும் போது, சரியான ஐடிவி (IDV )-ஐ பகிர்ந்து கொள்ளுங்கள். பைக் இன்சூரன்ஸுக்கான  ஐடிவி (IDV )  மற்றும்  கார்  இன்சூரன்ஸுக்கான  ஐடிவி (IDV ) ஐடிவி (IDV ) பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்  
  • சேவைகளால் பெறக்கூடிய பயன்கள் -  24x7 வாடிக்கையாளர் உதவி,  பிக்கப் மற்றும் டிராப் வசதி மற்றும் பரந்து விரிந்த கட்டணமில்லா கேரேஜ்களின் நெட்வொர்க் போன்ற சேவைகளையும் கருத்தில் கொள்ளுங்கள். ஏனென்றால் சில நேரங்களில், இந்த சேவைகளும் நமக்கு தேவைப்படும்.
  • மதிப்புக்கூட்டல் ஆட்ஆன்களை மதிப்பிடுங்கள் - உங்கள் வாகனத்திற்கான சரியான மோட்டார் இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்கும் போது, ​​அதிகபட்ச பலன்களை அளிக்கும் மதிப்புக்கூட்டல் ஆட்ஆன்களை (addon) மதிப்பீடு செய்யுங்கள். டிஜிட் வழங்கும் கார் இன்சூரன்ஸுக்கான ஆட்ஆன்கள்  மற்றும்  பைக் இன்சூரன்ஸுக்கான ஆட்-ஆன்களை பார்க்கவும்.
  • கிளைம் எவ்வளவு துரிதமாக செயல்படுத்தப்படுகிறது - எந்தவொரு இன்சூரன்ஸிலும் இது கவனிக்க வேண்டிய  மற்றும் மிகவும் முக்கியமான அம்சமாகும். கிளைம்களை துரிதமாக செயல்படுத்தும் மோட்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்யுங்கள்.
  • பணத்திற்கேற்ற மதிப்பு - பிரீமியம் ,  சேவைகள், கிளைமுக்கான இழப்பீடுகள் மற்றும் மதிப்புக்கூட்டல் ஆட்ஆன் (addon ) போன்ற அம்சங்களைப் போல நீங்கள்  அவசியமானவை என்று நினைக்கும் பலன்களை ஒரு சேர்த்து மிகச் சிறந்த விலையில்  கிடைக்கும்  மோட்டார்  இன்சூரன்ஸ்-ஐ  தேர்ந்தெடுங்கள்

மோட்டார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர்

ஆன்லைனில் உங்கள் மோட்டார் இன்சூரன்ஸ்-ஐ  வாங்குவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு முன்பு , பிரீமியம் கால்குலேட்டரைப் பயன்படுத்துவது சிறந்த பழக்கம் ஆகும். இதன் மூலம் வெவ்வேறு மதிப்புக்கூட்டல் ஆட்ஆன்களைக் (addon) கொண்ட வெவ்வேறு திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதனால் உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் ஏற்படும் மாற்றத்தை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

சரியான மாற்றங்களைச் செய்து, இறுதியில் வரும் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பார்த்த பின் உங்களுக்கான சரியான மோட்டார் இன்சூரன்ஸ்-ஐ தேர்ந்தெடுங்கள்.

கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் அல்லது பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் பயன்படுத்தி உங்கள் வாகனத்திற்கான இன்சூரன்ஸ் பிரீமியமியத்தை கணக்கிடுங்கள்

உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியத்தை தீர்மானிக்கும் அளவுருக்கள்

இரண்டு வாகனத்தின் இன்சூரன்ஸ்களும் ஒரே மாதிரியாக இருக்காது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாலிசி வகை (தேர்டு பார்ட்டி மற்றும் ஸ்டாண்டர்ட்/ காம்பிரிஹென்சிவ் (முழுமையான)), உங்கள் வாகனத்தின் தயாரிப்பு மற்றும் மாதிரி (மாடல்), உங்கள் வாகனத்தின் சந்தை மதிப்பு (/ மார்க்கெட் வேல்யூ), நீங்கள் வசிக்கும் நகரம், உங்கள் இஞ்சினின் குணங்கள் (/இயல்புகள்)  , உங்கள் வாகனத்தின் பயன்பாடு (தனிநபர்/வணிகம்), மற்றும் உங்கள் வாகனம் பெட்ரோல், டீசல் அல்லது சிஎன்ஜி(CNG)ல் இயங்குகிறதா போன்ற பல காரணிகளின் அடிப்படையில் உங்கள் இன்சூரன்ஸின் பிரீமியமானது வேறுபடும்.

உங்கள் மோட்டார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை குறைப்பதற்கான உதவிக்குறிப்புகள்

மலிவான பிரீமியத்தில் பாலிசி என்பது பலரின் கவனத்தை இழுக்கும். உங்கள் வாகனத்திற்கான இன்சூரன்ஸ்-ஐ தேர்வு செய்யும் போது  உங்கள் ஐடிவி (IDV)-ஐ தவறாகக் குறிப்பிடவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் நீங்கள் பணத்தை சேமிக்க வேண்டும் என்பதற்காக தேர்டு பார்ட்டி பாலிசி-ஐ மட்டும் வாங்கிவிடாதீர்கள்.

உங்களுக்கோ அல்லது உங்கள் வாகனத்திற்கோ எந்த வித ஆபத்தும் இல்லாமல், உங்கள் பிரீமியத்தைக் குறைப்பதற்கான வழிகள் இதோ:

  • போனஸ்-ஐ மாற்றலாம்: ஆட்டோ இன்சூரன்ஸ் என்பது வாகனத்தின் உரிமையாளருடன் தொடர்புடையதே தவிர அந்த வாகனத்தோடு தொடர்புடையதல்ல. நீங்கள் இதற்கு முன் மோட்டார் இன்சூரன்ஸ் வைத்திருந்தால், உங்கள் போனஸ்-ஐ  புதிய காருக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.
  • உங்கள் என்சிபி (NCB)-ஐ பயன்படுத்துங்கள்: குறிப்பிட்ட ஆண்டில் நீங்கள் எவ்வித கிளைமும் செய்யாதிருந்தால், நீங்கள் என்சிபி (NCB) – நோ கிளைம் போனஸ்-ஐ பெறுவீர்கள்.  இதனால் அடுத்தமுறை  நீங்கள்,  உங்கள் பாலிசி-ஐ ஆன்லைனில் புதுப்பிக்கும் போது  தள்ளுபடி பெறலாம். எனவே, நீங்கள் வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டுகிறீர்களா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். உங்கள் வாகனத்திற்கு  ஏற்பட்ட சிறு சேதங்களுக்காக கிளைம் செய்வதை தவிர்த்திடுங்கள். இதை செய்வதன் மூலம் நீங்கள்  அதிகமான  தொகையை   சேமித்திடலாம்!
  • மட்டான டிடக்டபில் தொகையை முடிவு செய்யுங்கள்: எந்தவொரு வெஹிக்கில் இன்சூரன்ஸிலும், கிளைம் செய்யும் போது நீங்கள் செலுத்தக்கூடிய  ஒரு தொகையின் பெயரே டிடக்டபில் ஆகும். எனவே, உங்கள் டிடக்டபில்-ஐ தேர்ந்தெடுக்கும்போது அதை  ​​பூஜ்ஜியமாகவோ (/ 0அகவோ) அல்லது மிகக் குறைவான தொகையையோ  தேர்ந்தெடுப்பதற்கு  பதிலாக, உங்களால்  செலுத்தக்கூடிய தொகையைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் டிடக்டபில் அதிகமாக இருந்தால், உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியமும் குறையும். நீங்கள் வாகனத்தை  பாதுகாப்பாக ஓட்டுபவராக இருந்தால் மற்றும் சிறிது காலத்திற்கு எந்த  கிளைமும் செய்யாமல் இருந்தால், இதன் மூலம் நீங்கள் சிறந்த பலனை அடையலாம்.

மோட்டார் இன்சூரன்ஸ் தொகைகளை ஒப்பிடுவதற்கான உதவிக்குறிப்புகள்

குறைந்த பிரீமியத்தைக் கொண்ட இன்சூரன்ஸ்-ஐ உடனடியாக வாங்கிவிடாதீர்கள். மோட்டார் இன்சூரன்ஸ்களை ஆன்லைனில் ஒப்பிடும் போது, ​​பின்வருவனவற்றை மனதில் கொள்ளுங்கள்:

  • சேவைகளின் பயன்கள்: இக்கட்டான சூழலில் சிறந்த சேவைகளை  நமக்காக வழங்குபவர்களையே நாம் விரும்புவோம். ஒவ்வொரு இன்சூரன்ஸ் நிறுவனமும் அளிக்கும் சேவைகளை மதிப்பீடு செய்து, உங்களின் தேவைகளுக்கு ஏற்ப சரியான இன்சூரன்ஸ்-ஐ தேர்வு செய்யுங்கள். வீட்டு வாசலில் பிக் அப் , பழுது பார்த்தல் (/ ரிப்பேர்) உடன் 6 மாத உத்தரவாதம் , 24*7 வாடிக்கையாளர் சேவை, 1000+ கேரேஜ்களில் பணமில்லா சேவைகளை டிஜிட் மூலம்  பெறலாம்.
  • கிளைம்களுக்கு விரைவான தீர்வு: இன்சூரன்ஸ் பெறுவதற்கான முக்கிய காரணம் சரியான சமயத்தில் கிளைம்களை பெறுவதே ஆகும். எனவே கிளைம்களை விரைவாக அளித்திடும் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தேர்வுசெய்து கொள்ளுங்கள். டிஜிட்-ன் 90.4% கிளைம்கள் 30 நாட்களுக்குள் வழங்கப்படுகிறது! இத்துடன் நாங்கள் காகிதமற்ற செயல்முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதையே எங்களின் கொள்கையாக கொண்டுள்ளோம் , அதாவது எங்கள் செயல்முறைகள் அனைத்திற்கும் ஆவணங்களின் சாஃப்ட் காபி-ஐ மட்டுமே கேட்கிறோம்.  எங்களுடைய செயல்முறைகள் அனைத்தும்  காகிதமற்ற, ஆன்லைன் மூலமான  செய்யக் கூடியவை. ஆதலால் , இது விரைவானது மற்றும் தொந்தரவு இல்லாமல் பயன்களை அனுபவிக்கலாம்!
  • ஐடிவி (IDV )-ஐ சரிபார்க்கவும்: ஆன்லைனில் கிடைக்கும்  பல இன்சூரன்ஸ்கள் உங்கள் வாகனத்திற்கான ஐடிவி  (IDV- இன்சூர்ட் டிக்ளேர்ட் வேல்யூ ) , அதாவது உங்கள் வாகனத்தின் மார்க்கெட் வேல்யூ-வை குறைத்து  மதிப்பிட்டு காட்டுவர் . ஐடிவி  (IDV) உங்கள் பிரீமியத்தில்  பாதிப்பை ஏற்படுத்தும் , அதே சமயம்  உங்கள் கிளைமுக்கான சரியான இழப்பீடை கிடைக்கச் செய்யும். உங்கள் வாகனம் திருடு போன பின்னர் அல்லது  வாகனம் சேதம் அடைந்த பின் உங்கள்  ஐடிவி (IDV ) குறைவாக/தவறாக  மதிப்பிடப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரிய வந்தால் அப்போது  உங்களின் நிலை !  டிஜிட் மூலம் உங்கள் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் வாங்கும் போது உங்கள் ஐடிவி (IDV ) -ஐ  நீங்களே  குறிப்பிடும் வாய்ப்பினை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
  • பணத்திற்கேற்ற மதிப்பு: இறுதியாக, உங்களுக்கு ஏற்ற விலையில், சேவைகள் மற்றும் கிளைம்களை விரைவாக செயல்முறைப் படுத்தும் வெஹிக்கில் இன்சூரன்ஸ்-ஐ தேர்ந்தெடுங்கள்.

உங்கள் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதற்கு முன் அல்லது புதுப்பிக்கும் முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

ஐடிவி (IDV) என்றால் என்ன?

இது மோட்டார் இன்சூரன்ஸின் முக்கிய அங்கம் ஆகும். ஐடிவி (IDV ) என்பது உங்கள் வாகனத்தின் இன்சூர்ட் டிக்ளேர்ட் வேல்யூ ஆகும். ஏதேனும் எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டால் இதில் குறிப்பிடப்பட்ட தொகையானது உங்களுக்கு வழங்கப்படும்.

இது உங்கள் வாகனத்தின் சந்தை மதிப்பின் (டிப்ரிஸியேஷன் / தேய்மானம் உட்பட) அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், இது உங்கள் பிரீமியத்தை நேரடியாக பாதிக்கும். நாட்கள் நகர  வாகனத்தில் தேய்மானம் ஏற்படும், இது  ஐடிவி(IDV )-ஐ நேரடியாக பாதிக்கும். இறுதியில் இவை அனைத்தின் அடிப்படையில் உங்கள் பிரீமியமும் குறையும்.

என்சிபி (NCB) என்றால் என்ன?

பாலிசி ஆண்டில் நீங்கள் எந்த கிளைம்களும் செய்யாத போது, நீங்கள் என்சிபி (NCB) என்னும் நோ கிளைம் போனஸ்-ஐ பெறுவீர்கள். அதாவது நீங்கள், உங்கள் வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டி இருந்தால், அடுத்த முறை  உங்கள் பிரீமியத்தை புதுப்பிக்கும் போது, உங்களின் இன்சூரர் அதில் தள்ளுபடியை வழங்குவார்.  பைக் இன்சூரன்ஸ்-கான என்சிபி (NCB)  & கார் இன்சூரன்ஸ் - கான என்சிபி (NCB) பற்றி இன்னும் பல தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.

எரிபொருள் பயன்பாடும் முக்கியமானதே

முன்பே குறிப்பிட்டது போல, உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம் என்பது பல காரணிகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. உங்கள் காரை இயக்க பயன்படுத்தப்படும் எரிபொருளும் அந்த காரணிகளில் ஒன்றாகும். உதாரணத்திற்கு; சிஎன்ஜி(CNG), எல்பிஜி(LPG) மற்றும் டீசலில் இயங்கும் காரின் பிரீமியமானது  பெட்ரோலில் இயங்கும் வாகனத்தை விட அதிகமானதாக இருக்கும்.