பே ஆஸ் யூ டிரைவ் கார் இன்சூரன்ஸ்
குறைவாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஏற்றது. உங்கள் கார் இன்சூரன்ஸில் 85% வரை சேமிக்கவும்!

Third-party premium has changed from 1st June. Renew now

'பே-ஆஸ்-யூ-டிரைவ் (PAYD)' ஆட்-ஆன் கவர்

கார் இன்சூரன்ஸின் எதிர்காலத்திற்கு வரவேற்கிறோம் - உங்கள் கவரேஜ் மற்றும் இன்சூரன்ஸ் விலைகளை நீங்களே இனி முடிவு செய்திடலாம். பே-ஆஸ்-யூ-டிரைவ் கார் ஆட்-ஆன் உடன் டிஜிட் கார் இன்சூரன்ஸை அறிமுகப்படுத்துகிறது. இப்போது நீங்கள் குறைவாக வாகனம் ஓட்டினால், நீங்கள் குறைவாக பணம் செலுத்தலாம்!

குறைவாக வாகனம் ஓட்டுவது குறைந்த பிரீமியக் கட்டணத்திற்கு வழிவகுக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் எங்கள் புதுமையான அணுகுமுறை மூலம், நீங்கள் ஆண்டுக்கு 10,000 கி.மீ க்கும் குறைவாக வாகனம் ஓட்டினால், உங்கள் கார் இன்சூரன்ஸில் 85% வரை சேமிக்க முடியும். பொதுவான பாலிசிகளுக்கு பாய் சொல்லுங்க உங்கள் தனிப்பட்ட லைஃப்ஸ்டைலுக்கு ஏற்ற இன்சூரன்ஸிற்கு ஹேலோ சொல்லுங்க.😎

டிஜிட் கார் இன்சூரன்ஸ் மூலம், நீங்கள் எவ்வளவு குறைவாக ஓட்டுகிறீர்களோ, அவ்வளவு குறைவாக உங்கள் கட்டணமும் குறையும்!

இது யாருக்கு சரியானது?

'பே-ஆஸ்-யூ-டிரைவ்' ஆட்-ஆன் கவர் என்றால் என்ன?

பெயர் குறிப்பிடுவது போல, நீங்கள் ஆண்டுக்கு 10,000 கி.மீ-க்கும் குறைவாக வாகனம் ஓட்டினால் உங்கள் கார் இன்சூரன்ஸில் (காம்ப்ரிஹென்சிவ் அல்லது ஓன் டேமேஜ் கார் இன்சூரன்ஸை வாங்கும்போது) நீங்கள் தேர்வு செய்யக்கூடிய ஒரு இன்சூரன்ஸாக பே-ஆஸ்-யூ-டிரைவ் (PAYD) ஆட்-ஆன் கவராகும். இது ஒரு வருடத்தில் நீங்கள் எவ்வளவு வாகனம் ஓட்டுகிறீர்கள் என்பதன் அடிப்படையில் உங்கள் ஓன் டேமேஜ் பிரீமியத்தில் 85% வரை தள்ளுபடியை வழங்குகிறது.



முதலில் 2022 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அம்சத்தை, டிஜிட் இன்சூரன்ஸ்
தான் முதலில் வழங்கிய நிறுவனமாகும், இது ஆரம்பத்தில் ஆண்டுக்கு 15,000 கி.மீ-க்கும் குறைவாக ஓட்டுபவர்களுக்கு இருந்தது, இப்போது ஆண்டுக்கு 10,000 கி.மீ-க்கும் குறைவாக ஓட்டுபவர்களுக்கு மேலும் தள்ளுபடிகளை வழங்குவதன் மூலம் இந்த கவரை மேலும் பயனுள்ளதாக ஆக்கியுள்ளோம். 😎

பே-ஆஸ்-யூ-டிரைவ் ஆட்-ஆன் எவ்வாறு செயல்படுகிறது?

உங்கள் கார் கிலோமீட்டர் ரீடிங்கைக் கண்காணிக்க புதுமையான வழிகள் அல்லது அதிநவீன தொழில்நுட்ப சாதனங்கள் அவசியம் என்று நீங்கள் நம்பினால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். (நாங்கள் எளிமைக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள், இல்லையா?) 😉).

இந்த தள்ளுபடியைப் பெறுவதற்கான முறையை மிகவும் எளிமையானதாக மாற்ற நோக்கம் கொண்டிருக்கிறோம். இது உங்கள் எதிர்கால டிரைவிங் பிஹேவியர், டெலிமேடிக்ஸ் அல்லது உங்கள் டிரைவிங் திறன்களைக் கண்காணிக்கும் எந்தவொரு ஆப்பையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாக ஆண்டுக்கு நீங்கள் ஓட்டும் சராசரி கிலோமீட்டர்களை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்.

உங்கள் ஓடோமீட்டர் ரீடிங்கைக் குறித்து, அதை உங்கள் காரின் பயன்பாட்டு வயதால் வகுத்தால் எளிதில் சரிபார்த்துவிடலாம்!

எங்களுடன் உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும்போது, உங்கள் கார் மற்றும் ஓடோமீட்டர் ரீடிங்கின் வீடியோவை எடுக்குமாறு நாங்கள் உங்களிடம் கேட்போம் (கவலை வேண்டாம், இது அனைத்தும் எளிமையானது, ஆப்பிற்குள் உள்ளது).

அவ்வளவுதான்!
இந்த முறையில்தான் நீங்கள் குறைவாக வாகனம் ஓட்டுகிறீர்களா என்பதை நாங்கள் சரிபார்ப்போம் 😊

நீங்கள் குறைவாக வாகனம் ஓட்டுகிறீர்களா என்பதை எவ்வாறு சரிபார்ப்பது?

ஸ்டெப் 1: முதலில், அந்த ஓட்டுனர் இருக்கையில் ஏறுங்கள்!

ஸ்டெப் 2: பொதுவாக ஐந்து அல்லது ஆறு எண்களைக் கொண்ட சிறிய செவ்வகத்தைப் பாருங்கள். இது பொதுவாக ஸ்பீடோமீட்டருக்கு அருகில் அமைந்திருக்கும். உங்கள் கார் புதிதாக இருந்தால், அது டிஜிட்டல் வடிவில் இருக்கும். உங்கள் கார் பழையதாகவோ அல்லது குறைந்த நவீனத்துவமாகவோ இருந்தால், அது எண்களின் பிஸிக்கல் அல்லது மெக்கானிக்கல் செட்டாக இருக்கும்.

இப்போது, பார்த்த எண்ணைக் குறித்துக் கொள்ளுங்கள். இது உங்கள் கார் அதன் லைஃப்டைமில் எத்தனை கிலோமீட்டர் தூரம் ஓடியுள்ளது என்பதைக் காட்டும் எண்.

ஸ்டெப் 3: நீங்கள் கார் ஓட்டிய மொத்த தூரத்தை காரின் பயன்பாட்டு வயதால் வகுக்கவும். எடுத்துக்காட்டாக, உங்கள் கார் ரீடிங் சுமார் 45,000 கி.மீ மற்றும் 6 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம், அதை கணக்கிடும்போது 45,000/6 ஆண்டுகள் என்றால் 7500 கி.மீ கிடைக்கும். அதாவது, உங்கள் கார் ஆண்டுக்கு சராசரியாக 7500 கி.மீ ஓடியுள்ளது.

ஆமாம், அவ்வளவு சுலபமாகக் கணக்கிடலாம்! நீங்கள் எவ்வளவு தூரம் வாகனம் ஓட்டுகிறீர்கள் என்பதையும், பே-ஆஸ்-யூ டிரைவ் ஆட்-ஆன் கொண்ட இந்த கார் இன்சூரன்ஸ் உங்களுக்கும் சரியானதாக இருக்குமா என்பதையும் நீங்கள் எவ்வாறு கண்டுபிடிக்க முடியும்! 😊

நீங்கள் குறைவாக வாகனம் ஓட்டுகிறீர்களா என்பதை சரிபார்க்க இன்றே உங்கள் கிலோமீட்டர் ரீடிங்கை சரிபாருங்கள்! 😊