முழுமையான கார் இன்சூரன்ஸ்

2 நிமிடங்களில் முழுமையான கார் பாலிசியை வாங்கவும்/புதுப்பிக்கவும்

Third-party premium has changed from 1st June. Renew now

முழுமையான கார் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

முழுமையான கார் இன்சூரன்ஸ் என்பது, மூன்றாம் தரப்பினரால் ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகள் மற்றும் சொந்த சேதங்கள் போன்றவற்றிலிருந்து உங்கள் காரைப் பாதுகாக்கும் அனைத்தும்-உள்ளடங்கலான ஒரு கார் இன்சூரன்ஸ் பாலிசியாகும். இது விபத்து, இயற்கை பேரிடர், நெருப்பு அல்லது திருட்டு போன்றவற்றினால் ஏற்படும் எதிர்பாராத இழப்புகளிலிருந்தும் காருக்கு பாதுகாப்பை வழங்குகிறது.

கூடுதலாக, டிஜிட்-இன் முழுமையான கார் இன்சூரன்ஸ் மூலமாக, நீங்கள் உங்கள் பாலிசியை பலவிதமான ஆட்-ஆன் கவர்கள், அதாவது ஜீரோ மதிப்பிறக்க கவர், முழு பில் தொகை இழப்பீட்டு கவர் மற்றும் பிரேக்டவுன் சமய உதவிக்கான கவர் போன்றவற்றின் மூலம் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்.

போன்றவற்றைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்

முழுமையான கார் இன்ஷுரன்ஸ்-இல் என்னவெல்லாம் உள்ளடங்கியுள்ளது?

விபத்துகளினால் ஏற்படும் சேதங்கள்

சிறிய விபத்துக்கள் கூட பெரிய அளவிலான தொந்தரவை ஏற்படுத்தக் கூடும்! அதனால் தான் கெடுவாய்ப்பாக நேரும் எல்லா விபத்துகளிலிருந்தும் உங்களையும், உங்கள் காரையும் இது பாதுகாக்கிறது.

கார் திருட்டுக்கள்

துரதிருஷ்டவசமாக, உங்கள் அழகிய  கார் திருடு போய் விட்டால் -- உங்கள் முழுமையான கார் இன்சூரன்ஸ் உங்கள் நிலைமையைச் சீராக்குவதற்கு உதவும்!

மூன்றாம் தரப்பினருக்கு நேரும் இழப்புக்கள்

அன்னியர்களால் நேரக் கூடிய பெரிய மற்றும் சிறிய விபத்துக்களுக்காகக் கவலைப்படுவதைத் தவிர்த்து விட்டு, உங்கள் முழுமையான கார் இன்சூரன்ஸ்-இன் மூலமாக அதற்கான தீர்வை காணுங்கள்!

இயற்கை பேரழிவினால் ஏற்படும் சேதங்கள்

இயற்கையின் கோப தாபங்களுக்கு நீங்கள் பொறுப்பேற்க முடியாது! எனவே, மழை வெள்ளம் அல்லது புயல் உங்கள் காரை சேதப்படுத்தி விட்டால், கவலை கொள்ள வேண்டாம். உங்களிடம் முழுமையான கார் இன்சூரன்ஸ் பாலிசி இருந்தால், நீங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறீர்கள்!

விபத்தினால் ஏற்படும் தனிப்பட்ட காயங்கள் அல்லது மரணம்

விபத்துக்களினால் காருக்கு சேதம் விளைவதோடு மட்டுமின்றி, தனிப்பட்ட காயங்களும் ஏற்படுகின்றது! நீங்கள் இத்தகைய சம்பவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டிருப்பதை (உங்களிடம் PA காப்பீடு இருக்கின்ற பட்சத்தில்) முழுமையான கார் இன்சூரன்ஸ் உறுதிப்படுத்துகிறது.

நெருப்பினால் ஏற்படும் சேதங்கள்

சிறிய அளவு நெருப்பு கூட உங்கள் கார் அல்லது அதன் பாகங்களில் பெரிய அளவிலான சேதங்களை ஏற்படுத்தக் கூடும்! எனவே தான், நீங்கள் இதனால் ஏற்படும் துன்பங்களிலிருந்து பாதுகாக்கப்படுவதை முழுமையான கார் இன்சூரன்ஸ் உறுதிப்படுத்துகிறது.

உங்கள் முழுமையான கார் இன்சூரன்ஸ்-ஐ தனிப்பயனாக்குவதற்கான ஆட்-ஆன்ஸ்கள்(add-ons)

முழுமையான கார் இன்சூரன்ஸ் பாலிசியுடன் கிடைக்கப்பெறும் ஆட்-ஆன்(add-on) கவர்களின் மூலம் உங்கள் காருக்கான சிறந்த காப்பீட்டினை பெறவும்.

ஜீரோ மதிப்பிறக்க கவர்

உங்கள் கார் வாங்கி 5 வருடத்திற்கும் குறைவாக ஆகியிருந்தால், உங்கள் காருக்கு இன்சூரன்ஸ் கிளைம் செய்யும் போது, மதிப்பிறக்கத்திற்கான தொகையைச் செலுத்துவதைத்  தவிர்ப்பதற்கு இந்த கவரை பெறுங்கள். ஜீரோ மதிப்பிறக்க கார் இன்சூரன்ஸ்-ஐ பற்றி மேலும் படித்துத் தெரிந்து கொள்ளவும்.

பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ் கவர்

சில சமயங்களில் நம் அனைவருக்கும் உதவி தேவைப்படும்! எனவே தான், உங்களுக்கு உதவி தேவைப்படும் சமயங்களில் உதவுவதற்காக இந்த கவரை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். ரோடுசைடு அசிஸ்டன்ஸ்-ஐ பற்றி மேலும் படித்துத் தெரிந்து கொள்ளவும்.

டயர் பாதுகாப்பு கவர்

எஞ்ஜின் கியர்பாக்ஸ் கவர்-ஐ ஒத்ததாகும். விபத்து மட்டுமின்றி, அனைத்து சாத்தியமான சூழ்நிலைகளிலும், இது உங்கள் டயர்-க்கு பாதுகாப்பளிக்கிறது. டயர் பாதுகாப்பு ஆட்-ஆன்(add-on) பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.

எஞ்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் பாதுகாப்பு

கார் இன்சூரன்ஸ் என்பது, விபத்து நேரும் சமயத்தில் எஞ்ஜின் அல்லது கியர்பாக்ஸ் சேதத்திற்கு மட்டுமே பாதுகாப்பளிக்கிறது. ஆனால், இந்த கவர் அனைத்து சாத்தியமான சூழ்நிலைகளிலும், உங்கள் எஞ்ஜின் மற்றும் கியர்பாக்ஸிற்கு பாதுகாப்பளிக்கிறது. எஞ்ஜின் பாதுகாப்பு கவர்-ஐ பற்றி மேலும் படித்துத் தெரிந்து கொள்ளவும்.

முழு பில் தொகை இழப்பீட்டு கவர்

புதிய கார்களுக்கு ஏற்றது, உங்கள் காரை புதியது போன்று வைத்துக் கொள்வதற்கு இந்த கவர் உதவுகிறது. ஒரு வேளை கார் திருடு போனால், அல்லது பழுதுநீக்க முடியாத அளவிற்குச் சேதமடைந்து விட்டால், இந்த கவர் உங்கள் காரின் பில் தொகையின் முழுமையான மதிப்பினை வழங்கி விடுகிறது. கார் இன்ஷுரன்ஸ்-இல் RTI பற்றி மேலும் படித்துத் தெரிந்து கொள்ளவும்.

நுகர்பொருள் கவர்

ஒவ்வொரு சிறிய விஷயமும் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே தான், விபத்துக்களைப் பொருட்படுத்தாமல், எஞ்ஜின் ஆயில், ஸ்க்ரூ, நட் போன்ற அனைத்து விதமான உங்கள் காரின் தேவைகளையும் பாதுகாப்பதற்கு இந்த கவர் உருவாக்கப்பட்டுள்ளது. நுகர்பொருள் கவர் பற்றி மேலும் படித்துத் தெரிந்து கொள்ளவும்.

பயணி கவர்

உங்கள் முழுமையான கார் இன்சூரன்ஸ் உங்களைப் பாதுகாக்கிறது, பிறகு உங்களுடன் சேர்ந்து பயணம் செய்யும் நபரையும் ஏன் பாதுகாக்கக் கூடாது? பயணி கவர்-ஐ பற்றி மேலும் படித்துத் தெரிந்து கொள்ளவும்.

என்னவெல்லாம் உள்ளடக்கப்படவில்லை?

முழுமையான கார் இன்சூரன்ஸ் உங்கள் காருக்கு 360-டிகிரி பாதுகாப்பை வழங்குகின்றது என்பது உண்மையாக இருப்பினும், சில விதிவிலக்குகள் இருக்கின்றன.

குடித்து விட்டு வண்டி ஓட்டுதல்

நீங்கள் மது அருந்தி விட்டு வண்டி ஓட்டுவதால் ஏற்படக் கூடிய எந்தவொரு பாதிப்பிற்கும் நீங்கள் முன்வைக்கும் கிளைம்-கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

லைசென்ஸ் இன்றி வண்டி ஓட்டுதல்

செல்லத்தக்க ஓட்டுநர் லைசென்ஸின்றி நீங்கள் வண்டி ஓட்டியிருந்தால், நீங்கள் கிளைம் செய்ய முடியாது.

ஆட்-ஆன்கள்(add-ons) வாங்கப்படவில்லை

இது மிகத் தெளிவாக இருக்கிறது, இல்லையா? ஒரு வேளை நீங்கள் குறிப்பிட்ட ஆட்-ஆன்((add-on) வாங்கவில்லையென்றால், அதன் பயன்களுக்கு நீங்கள் கிளைம் செய்ய முடியாது!

பின்விளையும் சேதங்கள்

விபத்திற்குப் பிறகு நேரும் சேதங்களே பின்விளையும் சேதங்கள் எனப்படுகின்றன. குறிப்பிட்ட ஆட்-ஆன்(add-on) -இற்கு காப்பீடு செய்யப்படவில்லையெனில், இத்தகைய சேதங்கள் உள்ளடக்கப்பட மாட்டாது.

அலட்சியத்தின் காரணமாக விளைகிற சேதங்கள்

எளிமையாகச் சொல்வதெனில், நீங்கள் செய்யக் கூடாத விஷயங்களைச் செய்யாதீர்கள்!

செல்லத்தக்க லைசென்ஸ்தாரர் இன்றி வண்டி ஓட்டுவது

ஒரு வேளை உங்களிடம் கற்பவர் லைசென்ஸ்(learner’s license) இருப்பின், நீங்கள் ஒரு செல்லத்தக்க லைசென்ஸ்தாரருடன் சேர்ந்து வண்டி ஓட்ட வேண்டும். இல்லையென்றால், உங்கள் கார் இன்சூரன்ஸ் உங்களுக்கு பாதுகாப்பளிக்காது.

மூன்றாம்-தரப்பினர் மற்றும் முழுமையான கார் இன்சூரன்ஸ்-இன் வேறுபாடுகள்

மூன்றாம்-தரப்பினர் முழுமையானது

விபத்தின் காரணமாகச் சொந்த காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புக்கள்

×

தீவிபத்து காரணமாகச் சொந்த காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புக்கள்

×

இயற்கை பேரிடர் நேரும் பட்சத்தில் சொந்த காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புக்கள்

×

மூன்றாம்-தரப்பினர் வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள்

×

மூன்றாம்-தரப்பினர் சொத்திற்கு ஏற்படும் சேதங்கள்

×

பர்சனல் ஆக்ஸிடன்ட் கவர்

×

மூன்றாம்-தரப்பினருக்கு ஏற்படும் காயங்கள்/மரணம்

×

உங்கள் கார் திருடு போவது

×

உங்கள் ஐடிவி-ஐ தனிப்பயனாக்குவது

×

தனிப்பயனாக்கப்பட்ட ஆட்-ஆன்களுடன்(add-ons) கூடுதல் பாதுகாப்பு வழங்குவது

×
Get Quote Get Quote

முழுமையான இன்சூரன்ஸ் மற்றும் மூன்றாம் தரப்பினர் இன்சூரன்ஸுக்குமான வேறுபாடுகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

முழுமையான கார் இன்சூரன்ஸ் -இன் பயன்கள்

முழுமையான கார் இன்சூரன்ஸ்-ஐ யார் வாங்க வேண்டும்?

புதிய கார் உரிமையாளர்

பெரும்பாலான மக்களுக்கு புது கார் வாங்குவதென்பது மிகப் பெரிய சாதனையாகும். உங்கள் புது காருக்கு இவ்வளவு செலவு செய்த பின்னர், குறைந்தபட்சமாக உங்கள் காருக்கும், நீங்கள் மன நிம்மதி அடைவதற்கும், நீங்கள் செய்ய வேண்டியது முழுமையான காப்பீட்டினால் அதற்கு பாதுகாப்பளிப்பதே ஆகும்.

பெரிய பரபரப்பான நகரத்தில் வாழும் ஒருவர்

டிராஃபிக் நெருக்கடி, விபத்துக்கள் மற்றும் மாசு போன்றவற்றினால், பெரிய மெட்ரோ நகரங்களில் வண்டி ஓட்டுவது மிகவும் ஆபத்து நிறைந்ததாகவே எப்போதும் கருதப்படுகின்றது. எனவே தான், பத்திரமாக இருப்பதற்கு, முழுமையான கார் இன்சூரன்ஸ்-இன் மூலம் உங்கள் காரை பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும்.

ஃபேன்ஸி கார் உரிமையாளர்

நீங்கள் அருமையான BMW அல்லது ஆடி கார்-ஐ வைத்திருப்பவராக இருந்தால், உங்கள் காரை சேதங்கள் மற்றும் திருட்டுப் போகும் ஆபத்துக்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பளிக்கும் முழுமையான கார் இன்சூரன்ஸ்-ஐ கண்டிப்பாகத் தேர்வு செய்ய வேண்டும். இது பிற எதிர்பாராத செலவினங்களிலிருந்தும் உங்களுக்கு பாதுகாப்பளிக்கும்!

அதிக பாதுகாப்புணர்ச்சியுடைய கார் உரிமையாளர்

உங்கள் பிரியமான கார் குறித்து அதிக உரிமையுணர்ச்சி கொள்வது இயல்பானது தான். சில சமயங்களில், சிறிய கீறல் கூட வேதனையை ஏற்படுத்தும்! நீங்கள் உங்கள் கார் குறித்து அதிக கவலை கொள்பவராக இருந்தால், சொல்ல வேண்டியதே இல்லை - கண்டிப்பாக உங்களுக்கு முழுமையான கார் இன்சூரன்ஸ் தேவைப்படும்.

திறமையற்ற ஓட்டுநர்

நம்மில் சிலர், சில சமயங்களில், அசட்டுத் தனமாக நடந்து கொள்கிறோம். ஆனால் சிலர், அதற்கும் மேல் மோசமாக நடந்து கொள்கின்றனர்! நீங்கள் எப்போதும் இது போன்ற சிறிய விபத்துக்கள் மற்றும் எதிர்பாரா இடையூறுகளைச் சந்திப்பவராக இருப்பின், நீங்கள் முழுமையான கார் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். இது உங்களையும், உங்கள் காரையும் இது மாதிரியான கெடுவாய்ப்பான சூழ்நிலைகளில் இருந்து பாதுகாக்கிறது!

நீண்ட தூர பயணம் செல்பவர்

உங்கள் வண்டியில் நீங்கள் நெடுந்தொலைவு பயணம் செய்பவராக இருந்தால், முழுமையான கார் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்வது கட்டாயமானது! பயணம் செய்யும் போது எதிர்பாராத இழப்புக்களை தவிர்ப்பது மிக முக்கியமாகும். அது மட்டுமின்றி, முழுமையான கார் இன்சூரன்ஸ் பிரேக்டவுன் சமய உதவிக்கான கவர்-ஐ பெறுவதற்கு உதவுவதால், நீங்கள் நாடு முழுவதும் பயணம் செய்யும் சமயத்தில் பேருதவியாக இருக்கும்.

நீங்கள் ஏன் முழுமையான கார் இன்சூரன்ஸ்-ஐ பெற வேண்டும்?

உங்கள் கார் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு! பெரும்பாலான மக்கள், மலிவாக இருப்பதினால் மூன்றாம்-தரப்பினர் கார் இன்ஷுரன்ஸ்-ஐ மட்டும் பெறும் தவற்றினை செய்கிறார்கள். எனினும், தன்னுடைய காருக்கு நேரும் சிறிய விபத்து மற்றும் சேதங்களுக்கு, தன் பாக்கெட்டிலிருந்து தான் செலவு செய்ய வேண்டும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. அதற்குப் பதிலாக, முழுமையான கார் இன்சூரன்ஸ் பெறுவதற்குச் சிறிது அதிகமாகச் செலவு செய்து, எதிர்பாராத செலவுகளிலிருந்து விடுதலை பெறுங்கள்!

 

கார் இன்சூரன்ஸ் ஒப்பீடு பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் ஏன் முழுமையான கார் இன்சூரன்ஸ்-ஐ டிஜிட்-இல் வாங்க வேண்டும்?

முழுமையான கார் இன்சூரன்ஸ் பாலிசி குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஜீரோ மதிப்பிறக்க கார் இன்சூரன்ஸிலிருந்து, முழுமையான கார் இன்சூரன்ஸ் எவ்வாறு வேறுபடுகிறது?

இரண்டும் முற்றிலும் வெவ்வேறான விஷயங்களாகும்! முழுமையான கார் இன்சூரன்ஸ் என்பது கார் இன்சூரன்ஸ் பாலிசியின் ஒரு வகையாகும். ஜீரோ மதிப்பிறக்கம் என்பது, உங்கள் முழுமையான கார் இன்சூரன்ஸ் பாலிசியில் நீங்கள் தேர்வு செய்து கொள்ளக் கூடிய ஒரு ஆட்-ஆன் வாய்ப்பாகும்.

பழைய காருக்கு முழுமையான கார் இன்சூரன்ஸ் வாங்குவது நல்ல யோசனையாக இருக்குமா?

இது உங்கள் காரின் வயது, நீங்கள் எந்தளவு அதிகமாக அதனைப் பயன்படுத்துகிறீர்கள் மற்றும் இன்னும் எவ்வளவு காலத்திற்குப் பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளீர்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது. உங்கள் கார் வாங்கி 15 வருடத்திற்குள் தான் இருக்கும் மற்றும் நீங்கள் அதனை வாடிக்கையாகப் பயன்படுத்தி வருகிறீர்கள் என்னும் பட்சத்தில், முழுமையான கார் இன்சூரன்ஸ் பெறுவதற்கு நீங்கள் அதிகமாகப் பணம் செலுத்த வேண்டியிருக்காது. மேலும் இந்த முழுமையான கார் இன்சூரன்ஸ் கெடுவாய்ப்பான சூழ்நிலைகளில் நீங்கள் உங்கள் காருக்கு செலவு செய்வதிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.

முழுமையான கார் இன்சூரன்ஸ் பாலிசியை எப்போது வாங்க வேண்டும்?

நீங்கள் கார் வாங்கியவுடனேயே முழுமையான கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது தான் சிறந்தது. எனினும், இன்னும் தாமதமாகவில்லை! உங்களிடம் தற்போது மூன்றாம்-தரப்பினர் பாலிசி மட்டும் தான் உள்ளதென்றால், நீங்கள் சொந்த சேத இன்சூரன்ஸை வாங்கி புதுப்பித்துக் கொள்ளலாம். அல்லது, உங்கள் பாலிசி ரினியூவல் செய்யும் நேரம் வந்து விட்டதென்றால் - இந்த முறை முழுமையான கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கி ரினியூ செய்து கொள்ளவும்.