ஐடிவி (IDV) கால்குலேட்டர்

அதிக ஐடிவி (IDV) மதிப்புடனான கார் இன்சூரன்ஸை பெற்றிடுங்கள்

Third-party premium has changed from 1st June. Renew now

கார் இன்சூரன்ஸில் ஐடிவி (IDV) பற்றி அனைத்தும்

ஐடிவி-யின் (IDV) விரிவாக்கம் என்ன?

இன்சூரன்ஸில் தற்போது பல வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றையெல்லாம் புரிந்துகொள்வது கடினமாக இருப்பினும், நாம் அவற்றை தெரிந்து வைத்துக் கொள்வது மிக அவசியம். அத்தகைய ஒரு வார்த்தை தான் ஐடிவி (IDV) ஆகும். ஐடிவி (IDV) என்பது ‘இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ’ (காப்பீடு செய்யப்பட்ட அறிவிக்கப்பட்ட மதிப்பு) என்பதைக் குறிக்கிறது,

கார் இன்சூரன்ஸில் ஐடிவி (IDV) என்றால் என்ன?

கார் இன்சூரன்ஸில் ஐடிவி (IDV) என்பது அவ்வளவு சிக்கலான ஒன்றும் அல்ல, அது உங்கள் காரின் மார்க்கெட் மதிப்பைத் தான் குறிக்கிறது. வேறுவிதமாக சொல்ல வேண்டுமெனில், இது இன்றைய மார்க்கெட் நிலவரப்படி உங்கள் கார் பெறக்கூடிய மதிப்புத்தொகையாகும்.

கார் இன்சூரன்ஸில் உள்ள இந்த ஐடிவி (IDV), உங்கள் இன்சூரரால், கிளைம் பேமெண்ட்களின் போது உங்கள் கிளைம் தொகையைச் சரியாகக் கண்டறிய உதவுகிறது. கூடுதலாக, இது உங்கள் கார் இன்சூரன்ஸுக்கான சரியான பிரீமியம் விலையைத் தீர்மானிக்கவும் உதவுகிறது.

ஏன் ஐடிவி முக்கியமானது?

இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ என்பது நீங்கள் பெரிதும் விரும்பும் உங்கள்  கார் இன்சூரன்ஸின் ஆன்மா என்றும் சொல்லலாம். உங்கள் வாகனத்தின் பிரீமியத்தை உங்கள் ஐடிவி (IDV) தான் தீர்மானிக்கிறது. ஆம், ஐடிவி (IDV) மற்றும் உங்கள் பிரீமியத்திற்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளது.

ஐடிவி (IDV) அதிகமாக இருந்தால், செலுத்த வேண்டிய பிரீமியமும் அதிகமாக இருக்கும். இருப்பினும், உங்கள் வாகனத்தின் ஐடிவி-யை (IDV) நீங்கள் குறைவாக மதிப்பிடுவது அறிவுறுத்தப்படக்கூடியதில்லை, ஏனெனில், சேதம் ஏற்பட்டால், அது முற்றிலும் உங்கள் இழப்பே ஆகும்.

ஐடிவி கால்குலேட்டர் - உங்கள் காருக்கான ஐடிவி-யை (IDV) கணக்கிடுங்கள்

ஐடிவி (IDV) கால்குலேட்டர் என்பது மிக முக்கியமான இன்சூரன்ஸ் கால்குலேட்டர் கருவிகளில் ஒன்றாகும், ஏனெனில் இது ஒருவரின் காரின் மார்க்கெட் மதிப்பை மட்டும் தீர்மானிக்க உதவவில்லை, உங்கள் கார் இன்சூரன்ஸுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியத்தின் சரியான தொகையை தீர்மானிக்கவும்  உதவுகிறது

அதுமட்டுமின்றி இது எங்களுக்கு(காப்பீட்டாளர்) உங்கள் கார் திருடப்பட்டாலோ அல்லது பழுதுபார்க்க முடியாத அளவுக்கு சேதமடையும் சந்தர்ப்பங்களிலோ கிளைம் செய்யும் செலுத்த வேண்டிய சரியான தொகையை தீர்மானிக்கவும் உதவுகிறது.

உங்கள் காரின் தேய்மான கட்டணங்களைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்ளுங்கள்

காரின் வயது டிப்ரிஸியேஷன்‌ (தேய்மானம்) %
6 மாதங்கள் மற்றும் அதற்கும் கீழ் 5%
6 மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை 15%
1 வருடம் முதல் 2 வருடங்கள் வரை 20%
2 வருடங்கள் முதல் 3 வருடங்கள் வரை 30%
3 வருடங்கள் முதல் 4 வருடங்கள் வரை 40%
4 வருடங்கள் முதல் 5 வருடங்கள் வரை 50%

எடுத்துக்காட்டு: உங்கள் காரை வாங்கி 6 மாத காலத்திற்கும் குறைவாக இருந்து, அதன் தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 100 ஆக இருப்பின், அதன் தேய்மான விகிதம் 5% மட்டுமே ஆகும். 

அதாவது வாங்கிய பிறகு, ஐடிவி  (IDV) ரூ. 95-க்கு குறைகிறது, மேலும் 6 மாதங்களை கடந்து 1 வருடத்திற்கு உட்பட்டும் இருந்தால் ரூ. 85-க்கு குறையும், வாகனத்தின் வயது 1 ஆண்டுக்கு மேலும் ஆனால் 2 ஆண்டுகளுக்கு உட்பட்டும் இருப்பின் ரூ. 80 க்கு குறையும், வாகனத்தின் வயது 2 ஆண்டுகளுக்கு மேலும் ஆனால் 3 ஆண்டுகளுக்கு உட்பட்டும் இருப்பின் ரூ. 70 ஆக குறையும், இவ்வாறு அதன் 5வது ஆண்டில் 50% தேய்மானத்திற்குப் பிறகு ரூ.50 ஆக குறையும் வரை நடக்கும் .

உங்கள் காரை வாங்கி 5 ஆண்டுகளுக்கும் மேற்பட்டு இருந்தால், ஐடிவி (IDV) ஆனது காரின் நிலை - உற்பத்தியாளர், மாடல் மற்றும் அதன் உதிரி பாகங்களின் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து கணிக்கப்படும்.

மறுவிற்பனையின் போது, ​​உங்கள் ஐடிவி (IDV) உங்கள் காரின் மார்க்கெட்       மதிப்பைக் குறிக்கிறது. இருப்பினும், உங்கள் காரை நீங்கள் நன்றாகப் பராமரித்து, புதியது போல் பளபளப்பாக வைத்திருந்தால், உங்கள் ஐடிவி (IDV) உங்களுக்கு வழங்குவதை விடவும், கூடுதல் விலையை நீங்கள் எப்போதும் இலக்காக தீர்மானிக்கலாம். இறுதியாக, இது உங்கள் கார் நீங்கள் எவ்வளவு பத்திரமாக பாதுகாத்து இருக்கிறீர்கள் என்பதிலேயே இருக்கிறது.

உங்கள் காரின் ஐடிவி-யைத் (IDV) தீர்மானிக்க உதவக்கூடிய காரணிகள் யாவை?

  •  காரின் வயது: உங்கள் காரின் மார்க்கெட் மதிப்பை ஐடிவி (IDV) குறிப்பதால், சரியான ஐடிவி-யை (IDV) தீர்மானிக்க உங்கள் காரின் வயது மிகவும் முக்கியமானது. உங்கள் கார் பழையதாக இருந்தால், அதன் ஐடிவி (IDV) குறைவாகவே இருக்கும்.

  • வாகனத்தின் உற்பத்தியாளர், தயாரிப்பு மற்றும் மாடல்: உங்கள் காரின் தயாரிப்பு மற்றும் மாடல் உங்கள் ஐடிவி-யை (IDV) நேரடியாகப் பாதிக்கக்கூடியது. எடுத்துகாட்டாக; லம்போர்கினி வெனினோ (Lamborghini Veneno) போன்ற ஒரு கார், அதன் தயாரிப்பு மற்றும் மாடலில் உள்ள வித்தியாசத்தினால் ஆஸ்டன் மார்ட்டின் (Aston Martin) காரை விட அதிக ஐடிவி-யைக் (IDV) கொண்டிருக்கும்,

  • நகரத்தின் பதிவு விவரங்கள்: உங்கள் கார் பதிவு விவரங்கள் உங்கள் பதிவுச் சான்றிதழில் கிடைக்கும். மேலும், உங்கள் கார் பதிவு செய்யப்பட்ட நகரமும் அதன் இன்சூர்ட் டிக்லேர்ட் ஐடிவி-ல் (IDV) தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மெட்ரோ நகரத்தில் உங்கள் காரின் ஐடிவி (IDV), அடுக்கு-II நகரத்தில் உள்ள ஐடிவி-யை (IDV) விடக் குறைவாக இருக்கலாம்.

  • நிலையான டிப்ரிஸியேஷன்‌ (தேய்மானம்) (இந்திய மோட்டார் கட்டணத்தின்படி): நீங்கள் ஷோரூமை விட்டு வெளியே வந்த தருணத்திலிருந்தே உங்கள் காரின் மதிப்பின் டிப்ரிஸியேஷன்‌ (தேய்மானம்) ஆரம்பிக்கிறது- மேலும் அதன் தேய்மானத்தின் சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது. இதுவும் இறுதியில் உங்கள் ஐடிவி-யை (IDV) பாதிக்கிறது. உங்கள் காரின் வயதுக்கு ஏற்ப அந்தந்த தேய்மான விகிதங்களைப் புரிந்துகொள்ள உதவும் அட்டவணை பின்வருமாறு.

உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை எவ்வாறு ஐடிவி பாதிக்கிறது?

ஐடிவி (IDV) மற்றும் உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியம் ஆகிய இரண்டும் நெருங்கியத் தொடர்பு கொண்டுள்ளன. அதாவது, உங்கள் ஐடிவி (IDV) அதிகமாக இருந்தால், உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகமாகும் - மேலும் உங்கள் வாகனத்தின் வயது மற்றும் ஐடிவி (IDV) மதிப்பு குறையும் போது, ​​உங்கள் பிரீமியமும் குறைகிறது.

மேலும், உங்கள் காரை விற்க முடிவு செய்யும் போது, ​​அதிக ஐடிவி (IDV) என்றால் அதற்கு அதிக விலை கிடைக்கும். பயன்பாடு, கடந்தகால கார் காப்பீட்டு கிளைமின் அனுபவம் போன்ற பிற காரணிகளாலும் விலை பாதிக்கப்படலாம்.

எனவே, உங்கள் காருக்கான சரியான கார் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​பிரீமியம் மட்டும் இல்லாமல், வழங்கப்படும் ஐடிவி-யைக் (IDV) குறித்துக் கொள்ள மறக்காதீர்கள்.

குறைந்த பிரீமியத்தை வழங்கும் நிறுவனம் ஈர்க்கக்கூடியதாக இருக்கலாம், இது வழங்கப்படும் ஐடிவி (IDV) குறைவாக இருப்பதால் இவ்வாறு இருக்கலாம். உங்கள் கார் மொத்தத்தையும் இழக்க நேரிட்டால், அதிக ஐடிவி (IDV) அதிக இழப்பீடுகளுக்கு வழிவகுக்கும்.

ஐடிவி (IDV) குறைவதின்/அதிகரிப்பதின் நன்மைகள் யாவை?

  • உயர் ஐடிவி (IDV) : உயர் ஐடிவி (IDV) என்றால் அதிக பிரீமியம் ஆகும். அதே சமயம், உங்கள் இன்சூர் செய்யப்பட்ட காரை இழந்த தருணத்திலோ அல்லது இன்சூர் செய்யப்பட்ட கார் திருடப்படும் நேரத்திலோ அதிக இழப்பீடு கிடைக்கும்.
  • குறைந்த ஐடிவி (IDV) : குறைந்த ஐடிவி (IDV) என்றால் குறைந்த பிரீமியம் ஆகும். ஆனால், பிரீமியத்தில் சிறிய தொகை செலுத்து நீங்கள் சேமிப்பதன் மூலம், இன்சூர் செய்யப்பட்ட காரை இழந்த தருணத்திலோ அல்லது இன்சூர் செய்யப்பட்ட கார் திருடப்படும் நேரத்திலோ உங்களுக்கு பெரிய இழப்பாக அமையும்.

கார் இன்சூரன்ஸில் ஐடிவி-யின் (IDV) முக்கியத்துவம்

  • உங்கள் ஐடிவி (IDV) என்பது உங்கள் காரின் மார்க்கெட் மதிப்பாகும், எனவே இது உங்கள் கார் இன்சூரன்ஸின் பிரீமியத்தை நேரடியாக பாதிக்கிறது.
  • உங்கள் காரின் ஐடிவி (IDV) அதன் ஆபத்தின் அளவை தீர்மானிக்கிறது. உங்கள் காரின் ஐடிவி (IDV) அதிகமாக இருந்தால், அதன் ஆபத்தும் அதிகமாகும், இதன் விளைவாக, இது அதிக பிரீமியம் கோரலை விளைவிக்கும்.
  • கிளைமின் போது, ​​உங்கள் காரின் மதிப்பின் அடிப்படையில் இழப்பீடுகள் வழங்கப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக, பழுதுபார்த்தல் அல்லது ரீப்ளேஸ்மென்ட்டுக்கான செலவுகளும் அதை பொருத்தே இருக்கும். எனவே, இது உங்கள் கார் இன்சூரன்ஸில் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும், இதனால் தேவைப்படும் நேரங்களில், இழப்பு மற்றும் கிளைமுக்கான சரியான இழப்பீட்டைப் பெறுவீர்கள்.
  • ஒருவேளை உங்கள் கார் திருடப்பட்டாலோ அல்லது பழுதுபார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்தாலோ, உங்கள் இழப்பிற்கு நீங்கள் பெறும் இழப்பீடு உங்கள் ஐடிவி-ன் (IDV) தொகையாக இருக்கும். எனவே, உங்கள் காரின் உண்மையான மதிப்பின்படி, உங்கள் ஐடிவி (IDV) சரியானதா என்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

எனக்கு ஐந்து வயதாகிறது என்று எண்ணி அதற்கேற்ப விளக்குங்கள்

நாங்கள் மிகவும் எளிமையாக இன்சூரன்ஸ் செய்கிறோம், ஆம், இப்போது 5 வயது குழந்தைகளாலும் இதனைப் பற்றி எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

உங்களிடம் விலையுயர்ந்த கடிகாரம் உள்ளது. ஒரு நாள், நீங்கள் அதை விற்றால் உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள எண்ணுகிறீர்கள். நீங்கள் அதை ஒரு வாட்ச்மேக்கரிடம் எடுத்துச் செல்லுங்கள். வாட்ச்மேக்கர் உங்கள் கடிகாரத்தைப் பார்த்து, அது கண்ணாடி, உலோகம், தோல் மற்றும் ஸ்க்ரூக்களால் ஆனது என்று விளக்குகிறார். எனவே, அவர் முதலில் அந்த பொருட்களின் விலையை கூட்டுகிறார். அப்போது அவர் உங்களிடம் வாட்ச் எவ்வளவு பழையது என்று கேட்கிறார், அதற்கு 5 வயது என்று சொல்லுங்கள். அவர் அதையும் குறித்துக்கொள்கிறார். இதையெல்லாம் அடிப்படையாக வைத்து, உங்கள் கடிகாரத்தை விற்றால், உங்களுக்கு ரூ. 500 கிடைக்கும். இங்கு, ரூ. 500 தான் உங்கள்  ஐடிவி (IDV) ஆகும்!

கார் இன்சூரன்ஸில் ஐடிவி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

புதிய காருக்கான ஐடிவி (IDV) எவ்வளவு?

ஐடிவி (IDV) என்பது உங்கள் புதிய காரின் விலைப்பட்டியல் மதிப்புடன், நீங்கள் ஏற்கனவே காரைப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தால், அதன் டிப்ரிஸியேஷன்‌ (தேய்மானம்) ஆகிய இரண்டையும் சேர்த்து கணக்கிடப்படும் தொகையாகும்.

ஷோரூமுக்கு வெளியே காரின் ஐடிவி (IDV) எவ்வளவு?

நீங்கள் ஏற்கனவே உங்கள் காரைப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தால், அதாவது அதை ஷோரூமிலிருந்து வெளியே எடுத்திருந்தால், உங்கள் காரின் ஐடிவி (IDV) என்பது உங்கள் புதிய காரின் விலைப்பட்டியல் மதிப்புடன் அதற்கு பொருந்தும் குறைந்தபட்ச டிப்ரிஸியேஷன்‌ (தேய்மானம்) சேர்த்து கணக்கிடப்படும்.

வாங்கி 5 ஆண்டுகளுக்கும் குறைவாக ஆன பழைய கார்களுக்கான ஐடிவி (IDV) எவ்வளவு?

இந்திய மோட்டார் கட்டணத்தின் நிலையான தேய்மான விகிதங்களின்படி, 5 ஆண்டுகளுக்கும் மேலான காரின் சரியான ஐடிவி-யை (IDV) தீர்மானிக்க குறைந்தபட்சம் 50% டிப்ரிஸியேஷன்‌ (தேய்மானம்) பொருந்தும்.

கூடுதலான ஐடிவி (IDV) தொகைக்கு செல்வது நல்ல யோசனையா?

நேர்மையாக சொல்ல வேண்டுமெனில், இது உங்களிடம் உள்ள கார் வகை மற்றும் அது எந்த நிலையில் உள்ளது என்பதைப் பொறுத்தது. மிகவும் பழையது அல்லாத மற்றும் சிறந்த நிலையில் உள்ள கார்களுக்கு உயர் ஐடிவி (IDV) ஏற்றது. நினைவில் கொள்ளுங்கள், ஐடிவி (IDV) அதிகமாக இருந்தால், நீங்கள் ஆண்டுதோறும் செலுத்தும் பிரீமியம் அதிகமாக இருக்கும்.

ஒருவர் குறைந்த ஐடிவி-யை (IDV) அறிவித்தால் என்ன நடக்கும்?

சில நேரங்களில், குறைந்த ஐடிவி-யை (IDV) அறிவிப்பதன் மூலம் குறைந்த பிரீமியங்களுக்காக  மக்கள் அதை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். இருப்பினும், உங்கள் பிரீமியம் மலிவாக இருந்தாலும், கிளைம்களின் போது உங்கள் இழப்பீடுகளும் குறைவாக இருக்கும். மேலும், இது உங்கள் காருக்குப் போதுமானதாக இருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, அதிக அல்லது குறைந்த ஐடிவி-க்கு (IDV) செல்லாமல் சரியான ஐடிவி-க்கு (IDV) செல்ல வேண்டும் என்பதே எங்கள் ஆலோசனை.