ஜீரோ டிப்ரிஸியேஷன்‌ கார் இன்சூரன்ஸ்

ஜீரோ டிப்ரிஸியேஷன் இன்சூரன்ஸிற்கான விலையை பெற்று ஒப்பிட்டு பாருங்கள்

Third-party premium has changed from 1st June. Renew now

ஜீரோ டிப்ரிஸியேஷன் கார் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்-ஆன் கவர் உட்பட்ட ஒரு காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ்  பாலிசியே ஜீரோ டிப்ரிஸியேஷன் கார் இன்சூரன்ஸ் ஆகும். இது கார் இன்சூரன்ஸ் கிளைம்களின் போது உங்கள் காருக்கான பொதுவான தேய்மானம் தவிர அனைத்தும் உட்படும் என்பதை குறிக்கிறது.

ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர் இல்லாமல், அனைத்து இன்சூரர்களும் உங்கள் காரின் உதிரிபாகங்களில் ஏற்பட்டுள்ள தேய்மானத்தின் மதிப்பைக் கணக்கிட்டு,  அத்தொகையைக் கழித்த பின்னரே உங்கள் கிளைம் தொகையை வழங்குகிறார்கள். ஆட்-ஆன் கவர் மூலம், தேய்மானத்திற்கான தொகை எதுவும் கழிக்கப்படாது, மேலும் கிளைமின் போது அதிகப் பணத்தைப் பெறுவீர்கள்.

டிப்ரிஸியேஷன் (தேய்மானத்தினால் ஏற்படும் மதிப்பிழப்பு) என்றால் என்ன?

டிப்ரிஸியேஷன் (தேய்மானத்தினால் ஏற்படும் மதிப்பிழப்பு) என்பது உங்கள் காரின் நீண்ட நாள் பயன்பாட்டினால் ஏற்படும் இயற்கையான தேய்மானத்தின் காரணமாக ஏற்படும் அதன் விலை குறைப்பாகும். உங்கள் கார் பழையதாக இருந்தால், அதன் டிப்ரிஸியேஷன் (தேய்மானத்தினால் ஏற்படும் மதிப்பிழப்பு) அதிகமாகும்

டிப்ரிஸியேஷன் (தேய்மானத்தினால் ஏற்படும் மதிப்பிழப்பு) எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) படி டிப்ரிஸியேஷன் (தேய்மானத்தினால் ஏற்படும் மதிப்பிழப்பு) விகிதங்கள் பின்வருமாறு, கீழ்கொடுக்கப்பட்டுள்ளவையின் அடிப்படையில், உங்கள் காரின் மொத்த டிப்ரிஸியேஷன் (தேய்மானத்தினால் ஏற்படும் மதிப்பிழப்பு) கணக்கிடப்படும்:

  • ரப்பர், நைலான் மற்றும் பிளாஸ்டிக் பாகங்கள் மற்றும் பேட்டரிகள்: 50%
  • ஃபைபர் கண்ணாடி கூறுகள்: 30%
  • மர பாகங்கள்: முதல் ஆண்டில் 5%, இரண்டாம் ஆண்டில் 10%, மற்றும் பல.

வாகனங்களின் ஏற்படும் தேய்மான %

வாகனத்தின் வயது தேய்மானத்தின் %
6 மாதங்களுக்கு மேல் இல்லாதவை 5%
6 மாதங்களுக்கு மேற்பட்டவை ஆனால் 1 வருடத்திற்கு உட்பட்டவை 15%
1 வருடத்திற்கு மேற்பட்டவை ஆனால் 2 வருடத்திற்கு உட்பட்டவை 20%
2 வருடத்திற்கு மேற்பட்டவை ஆனால் 3 வருடத்திற்கு உட்பட்டவை 30%
3 வருடத்திற்கு மேற்பட்டவை ஆனால் 4 வருடத்திற்கு உட்பட்டவை 40%
4 வருடத்திற்கு மேற்பட்டவை ஆனால் 5 வருடத்திற்கு உட்பட்டவை 50%

வாகனங்களின் தேய்மானத்திற்கான % (இரும்பு பாகங்கள்)

வாகனத்தின் வயது வாகனத்தின் வயது %
6 மாதங்களுக்கு கீழ் Nil
6 மாதங்களுக்கு மேற்பட்டவை ஆனால் 1 வருடத்திற்கு உட்பட்டவை 5%
1 வருடத்திற்கு மேற்பவை ஆனால் 2 வருடத்திற்கு உட்பட்டவை 10%
2 வருடத்திற்கு மேற்பட்டவை ஆனால் 3 வருடத்திற்கு உட்பட்டவை 15%
3 வருடத்திற்கு மேற்பட்டவை ஆனால் 4 வருடத்திற்கு உட்பட்டவை 25%
4 வருடத்திற்கு மேற்பட்டவை ஆனால் 5 வருடத்திற்கு உட்பட்டவை 35%
5 வருடத்திற்கு மேற்பட்டவை ஆனால் 10 வருடத்திற்கு உட்பட்டவை 40%
10 வருடத்திற்கு மேற்பட்டவை 50%

ஜீரோ டிப்ரிஸியேஷன் கார் இன்சூரன்ஸ் ஆட்-ஆனின் சிறப்பு பயன்கள்

பணத்தை சேமித்திடுங்கள்

ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்-ஆன் கவர் இருந்தால், கிளைம் செய்யும்போது  உதிரிபாகங்களின் தேய்மானச் செலவிற்கு உங்கள் பாக்கெட்டில் இருந்து நீங்கள் பணம் செலவழிக்க வேண்டியதில்லை என்பது உறுதி, ஒருவேளை ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்-ஆன் கவர் இல்லையெனில் அதற்கான முழு செலவையும் நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் ஜீரோ டிப்ரிஸியேஷன்  ஆட் ஆன் கவர் இருந்தது எனில், அச்செலவு உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தாலேயே கவனித்துக்கொள்ளப்படும்.

அதிக கிளைம் தொகையைப் பெறுங்கள்

ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்-ஆன் மூலம் உங்கள் காரைப் பாதுகாப்பது என்றால் உங்கள் காரின் பாகங்களில் உள்ள தேய்மானம் கணக்கிடப்படாது, எனவே கிளைமின் போது அதிக தொகையைப் பெறுவீர்கள்.

மன அமைதி

ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்-ஆனை தேர்ந்தெடுப்பதன் மூலம் கிளைமின் போது நீங்கள் உங்கள் பாக்கெட்டில் இருந்து தேவையில்லாத செலவு செய்வதற்கான அவசியமிருக்காது. மேலும் உங்கள் துரதிர்ஷ்டவசமான நேரங்களில் யாரோ ஒருவர் உங்கள் பின்னால்  உறுதுணையாக இருக்கிறார்கள் என்பது மிகுந்த திருப்தியையும் மனநிம்மதியும் தரும் என்று  உறுதியளிக்கப்படுகிறது.

ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்-ஆன் கவரில் உட்படாதவை எவை?

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

உங்களிடம் காருக்கான சரியான ஓட்டுநர் உரிமம் இல்லையென்றால், ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்-ஆனின் பயன்களை உங்களால் பெற முடியாது.

5 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட கார்கள்

துரதிர்ஷ்டவசமாக, உங்கள் கார் ஐந்து வருட வயதுடைய காராக இருந்தால், உங்களால் ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்-ஆனை தேர்வுசெய்ய முடியாது

மது அருந்தி வாகனம் ஓட்டுதல்

போதைப்பொருள் அல்லது மதுவின் போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், கிளைமின் போது ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர் மூலம் பயனடைவதிலிருந்து  விலக்கப்படுவார்கள்.

கட்டாய விலக்குகளை கவர் செய்யாது

ஜீரோ டிப்ரிஸியேஷனில் உங்கள் கார் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள உங்கள் கட்டாய விலக்குகள்(ஏதேனும் இருந்தால்) உள்ளடங்காது.

இயந்திர சார்ந்த பிரச்சனைகளை(மெக்கானிக்கல் பிரேக் டவுன்) கவர் செய்யாது

ஒரு நிலையான விதியாக, ஜீரோ டிப்ரிஸியேஷன் உங்கள் காரின் மெக்கானிக்கல் செயலிழப்புகள் அல்லது இயற்கையான தேய்மானம் ஆகியவற்றிற்கு பொருந்தாது.

என்ஜின் ஆயிலின் விலை

என்ஜின் ஆயில், கிளட்ச் ஆயில், கூலன்ட் போன்ற செலவுகளுக்கு இந்த ஆட்-ஆன் ஈடுசெய்யாது.

ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட் -ஆன் கவருக்கு எவ்வளவு செலவாகும்? அது அந்த விலைக்கேற்ற மதிப்புடையதா?

    பொதுவாக, உங்கள் விரிவான பாலிசியில் ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்ஆன்  கவரைத் தேர்ந்தெடுப்பதற்கான செலவு உங்கள் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை விட தோராயமாக 15% கூடுதலாக இருக்கும்.

உங்கள் காரின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்காக நீங்கள் 15% கூடுதல் பிரீமியத்தை செலுத்தினால், அது முற்றிலும் மதிப்புக்குரியது, ஏனெனில் கிளைம்களின் போது நீங்கள் சேமிக்கும் தொகை ஆட்ஆனின் விலையை விட அதிகமாக இருக்கும்.

மேலும் அறிந்துக்கொள்ள:

உங்கள் ஜீரோ டிப்ரிஸியேஷன் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கும் காரணிகள் யாவை?

உங்கள் ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்ஆன் கவரின் பிரீமியத்தைப் பாதிக்கும் காரணிகள் பின்வருமாறு:

உங்கள் காரின் வயது

ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்ஆன் என்பது உங்கள் கார் மற்றும் அதன் பாகங்களின் வயதுடன்  நேரடியாக தொடர்புடையது என்பதால், உங்கள் ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்ஆனுக்கான பிரீமியத்தை நிர்ணயிப்பதில் உங்கள் காரின் வயது ஒரு பெரிய காரணியாக உள்ளது.

உங்கள் காரின் மாடல்

ஒரு கார் இன்சூரன்ஸ், உங்கள் காரின் மாடல் மற்றும் வகையைப் பொறுத்தது. ஏனெனில் அதன் பாகங்களின் விலையும் அதைப் பொறுத்தது. எனவே, உங்கள் ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்ஆன் கவரின் விலையை நிர்ணயிப்பதில் நீங்கள் வைத்திருக்கும் கார் ஒரு பெரிய காரணியாக உள்ளது.

உங்கள் காரின் இடம்

ஒவ்வொரு நகரமும் எதிர்கொள்ளும் ஆபத்துகளும் வேறுபட்டவை. எனவே, கார் இன்சூரன்ஸில், உங்கள் பிரீமியம்- உங்கள் ஜீரோ டிப்ரிஸியேஷன்த்தின் ஆட்-ஆன் பிரீமியம் உட்பட அனைத்தும், நீங்கள் வாகனம் ஓட்டும் நகரத்தைப் பொறுத்தது.

காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசியை விட ஜீரோ டிப்ரிஸியேஷன் கார் இன்சூரன்ஸ் ஏன் சிறந்தது?

சாத்தியமான அனைத்து சேதங்களிலிருந்தும் உங்கள் காரைப் பாதுகாப்பதில் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) பாலிசி சாலசிறந்தது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. இருப்பினும், கிளைமின் போது- உங்கள் காரின் பாகங்களின் தேய்மானத்திற்கு நீங்கள் எப்படியும் பணம் செலுத்த வேண்டியிருக்கும். அதனால்தான், உங்கள் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசியில் ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்ஆன் கவரைத் தேர்ந்தெடுப்பது சிறந்த தேர்வாகும், ஏனெனில் இது உங்கள் காருக்கு அதிகபட்ச கவரேஜை வழங்குவது மட்டுமல்லாமல், கிளைம்களின் போது உங்கள் காரின் தேய்மானச் செலவை செலுத்துவதிலிருந்தும் உங்களைக் காப்பாற்றும்.

விரிவான கார் இன்சூரன்ஸ் மற்றும் ஜீரோ டிப்ரிஸியேஷனிற்கு இடையிலிருக்கும் வேறுபாடு

ஜீரோ ப்ரிஸியேஷன் உடைய கார் இன்சூரன்ஸ் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ்
அப்படியென்றால் என்ன? ஜீரோ டிப்ரிஸியேஷனிற்கான இன்சூரன்ஸ் என்பது உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியில் நீங்கள் விரும்பினால் தேர்வுசெய்யக்கூடிய ஒரு ஆட்-ஆன் ஆகும். உங்கள் திட்டத்தில் இந்த ஆட்-ஆன் இருப்பதால், கிளைம்களின் போது உங்கள் காரின் தேய்மானத்திற்கு உங்கள் இன்சுரர் கட்டணம் வசூலிக்க மாட்டார் என்பதை இது உறுதிசெய்கிறது. எனவே, கிளைம்களின் போது உங்கள் காரின் உதிரிபாகங்களின் தேய்மானச் செலவை நீங்கள் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஒரு காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசி என்பது உங்கள் காரின் சொந்த சேதங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு சேதங்களை உள்ளடக்கும் ஒரு வகை கார் இன்சூரன்ஸ் பாலிசி ஆகும். மேலும் இவ்வகையை சேர்ந்த பாலிசியை விரிவான காப்பீட்டிற்காக தனிப்பயனாக்கவும் செய்யலாம்.
பிரீமியம் இந்த ஆட்-ஆனைத் தேர்வுசெய்தால், உங்கள் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பிரீமியம் தோராயமாக 15% அதிகரிக்கும். காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியம், ஆட் ஆன் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசியை விடக் குறைவு.
தேய்மான கட்டணம் ஜீரோ டிப்ரிஸியேஷனிற்கான ஆட் ஆன் இருந்தால், உங்கள் கார் இன்சூரன்ஸ் கிளைம்களின் போது தேய்மானச் செலவுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசியில், கார் இன்சூரன்ஸ் கிளைம்களின் போது உங்கள் காரின் உதிரிபாகங்களின் தேய்மானத்திற்கான பணத்தை நீங்கள் அவசியம் செலுத்த வேண்டும்.
காரின் வயது ஐந்து வருடங்களுக்கும் குறைவான அனைத்து கார்களுக்கும் ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட் ஆனை தேர்வு செய்யலாம். பதினைந்து வருடங்களுக்கும் குறைவான அனைத்து கார்களுக்கும் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்யலாம்.
நீங்கள் எவ்வளவு சேமிப்பீர்கள்? நீங்கள் கொஞ்சம் அதிக பிரீமியத்தைச் செலுத்துவதினால், ​​உங்கள் காரின் தேய்மானத்திற்கான செலவுகளை கிளைம்களின் போது நீங்கள் செலுத்த வேண்டியதில்லை என்பதால், உங்கள் நீண்ட கால சேமிப்பு அதிகமாக இருக்கும். ஆட்ஆன்களைத் தேர்வு செய்யாததினால் நீங்கள் அதில் சேமிக்கும் எக்ஸ்ட்ரா பிரீமியமே உங்களிடம் இருக்கும் ஒரே சேமிப்பு.

கிளைம் செட்டில்மென்டின் போது ஜீரோ டிப்ரிஸியேஷன் கவரின்‌ பங்கு

  கிளைம் செய்யும் போது உங்கள் பாக்கெட்டில் இருந்து நீங்கள் செலவழிக்கும் பணத்தை சேமிப்பதே ஜீரோ டிப்ரிஸியேஷன் கவரின் முக்கிய பங்காகும். இதை உங்களுக்கு எளிமையாக்க ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்; உங்களின் மொத்த கிளைம் தொகை ரூ. 20,000 ஆகவும், உங்கள் காரின் பாகங்களின் தேய்மானத்தின் மொத்தச் செலவு ரூ. 6,000 ஆகவும் இருந்தால், ஜீரோ டிப்ரிஸியேஷன் இல்லாமல், உங்கள் இன்சூரர் இந்தச் செலவைக் கணக்கிட்டு உங்களுக்கு ரூ. 14,000 மட்டுமே செலுத்துவார். இருப்பினும், உங்களிடம் ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர் இருந்தால், உங்கள் கிளைம்த் தொகையாக நீங்கள் ரூ.20,000 முழுவதும் பெறுவீர்கள்.

ஜீரோ டிப்ரிஸியேஷன் பற்றி நினைவில் கொள்ள வேண்டியவை

  • ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்-ஆன் கவர் ஐந்து வருடங்களுக்கும் குறைவான கார்களுக்கு மட்டுமே பொருந்தும்.
  • ஜீரோ டிப்ரிஸியேஷன் என்பது, கிளைம் செய்யும் போது உங்கள் காரின் பாகத்தின் தேய்மானத்தின் விலையை மட்டுமே உள்ளடக்கும் மற்றும் உங்கள் கட்டாயமான விலக்குகளுக்கு ஈடுசெய்யாது.
  • ஐந்து வருடங்களுக்கு மேற்பட்ட கார்களுக்கு ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட் ஆன் கவரை தேர்வு செய்ய முடியாது.

ஜீரோ டிப்ரிஸியேஷன் கவரை யாரெல்லாம் தேர்வு செய்யலாம்?

  •  நீங்கள் விரைவில் ஒரு புதிய காரை வாங்க திட்டமிட்டிருந்தால், உங்கள் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் கொள்கையில் ஜீரோ டிப்ரிஸியேஷன் இன்சூரன்ஸைத் தேர்வுசெய்ய வேண்டும். நீங்கள் ஏற்கனவே உங்கள் புதிய காருக்காக நிறைய பணம் செலவழித்திருப்பீர்கள், சரியான ஆட்-ஆன்களுடன் அதன் இன்சூரன்ஸில்  கொஞ்சம் கூடுதலாக செலவழிப்பது உங்களுக்கு உதவுவதோடு மேலும் பணம் செலவழிப்பதையும் தடுக்கும்.
  • நீங்கள் சமீபத்தில் ஒரு புதிய காரை வாங்கியிருந்தால் அல்லது உங்கள் கார் 5 ஆண்டுகளுக்கு குறைவானதாக இருந்தால், உங்கள் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் கொள்கையில் ஜீரோ டிப்ரிஸியேஷன் இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுப்பது உங்கள் கார் இன்சூரன்ஸ் கிளைம்களின் போது சேமிக்க உதவும். ஏனென்றால், உங்கள் காரின் தேய்மானத்தின் விலை காலப்போக்கில் அதிகரிக்கும், ஆனால், ஜீரோ டிப்ரிஸியேஷனிற்கான ஆட் ஆன், கிளைம்களின் போது நீங்கள் அதற்குப் பணம் செலுத்த வேண்டியதில்லை என்பதை உறுதி செய்கிறது!

கார் இன்சூரன்ஸில் ஜீரோ டிப்ரிஸியேஷன் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

என்னால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஜீரோ டிப்ரிஸியேஷன் கார் இன்சூரன்ஸைப் பெற முடியுமா? Can I get a zero depreciation car insurance after 5 years?

இல்லை, உங்கள் காரின் வயது 5 வருடங்களுக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியில் ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்-ஆனை தேர்வுசெய்ய முடியும்.

என்னால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஜீரோ டிப்ரிஸியேஷன் கார் இன்சூரன்ஸைப் பெற முடியுமா?

ஆம், உங்கள் கார் 5 வயதுக்குக் குறைவாக இருக்கும் வரை - உங்கள் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசியில் ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்-ஆனைத் தேர்வுசெய்யலாம்.

கிளைம்களின் எண்ணிக்கையில் ஏதேனும் கட்டுப்பாடு உள்ளதா? ஒரு ஜீரோ டிப்ரிஸியேஷனிற்கான இன்சூரன்ஸ் பாலிசி, கிளைம் செட்டில்மென்ட் செயல்முறையை எவ்வாறு பாதிக்கிறது?

இல்லை,உங்கள் மொத்த இன்சூரன்ஸ் தொகை வரை இருக்கும் வரை, கிளைம்களின் எண்ணிக்கைக்கு எந்த வரம்பும் இல்லை. உங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட் ஆனை வைத்திருப்பது, கிளைம் செட்டில்மென்ட்டின் போது, ​​உங்கள் காரின் தேய்மானத்தைக் கழிக்காமல் அல்லது கணக்குப் பார்க்காமல் உங்கள் முழுமையான கிளைம் தொகையை முற்றிலும் பெறுவதை உறுதிசெய்கிறது.

ஜீரோ டிப்ரிஸியேஷன் என்பது காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கவரில் இருந்து வேறுபட்டதா?

ஆம், ஜீரோ டிப்ரிஸியேஷன் இன்சூரன்ஸ் என்பது உங்கள் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) பாலிசியில் நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய ஆட் ஆன் அம்சமாகும், அதே சமயம் மூன்றாம் தரப்பு மற்றும் சொந்த சேதங்கள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய உங்கள் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் பாலிசிக்கு இணையாக வேறு விரிவான இன்சூரன்ஸ் வேறில்லை. மற்ற இன்சூரன்ஸ்களைக் காட்டிலும், ஜீரோ டிப்ரிஸியேஷன் காப்பீட்டில் ஆட் ஆனை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் இன்சூரன்ஸை மேலும் தனிப்பயனாக்கலாம்.

ஜீரோ டிப்ரிஸியேஷன் புதிய கார்களுக்கு மட்டுமே பொருந்துமா?

ஆம், ஜீரோ டிப்ரிஸியேஷன் என்பது புதிய அல்லது 5 வருடங்களுக்கு குறைவான கார்களுக்கு மட்டுமே பொருந்தும்.