பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ்

பாலிசியை ஆன்லைனில் 2 நிமிடங்களில் வாங்கவும்/புதுப்பிக்கவும்

Third-party premium has changed from 1st June. Renew now

பம்பர் டூ பம்பர் கார் இன்சூரன்ஸ் கவர்

கற்பனை செய்து பாருங்கள்! பல மாதங்கள் திட்டம் போட்டு, அதற்கான பட்ஜெட் போட்டு வைத்து, பல கேள்விகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு, இறுதியாக நீங்கள் கனவு கண்டது போல் ஒரு கார் வாங்குவதற்கு முடிவு செய்கிறீர்கள். சில காலம் தவிப்போடு காத்திருந்த பிறகு, நீங்கள் கார் வாங்கி, உங்கள் புதிய காரின் சாவியை பெற்று, ஓட்டுநர் இருக்கையில் உட்கார்ந்து வண்டி ஓட்ட ஆரம்பிக்கிறீர்கள்.

நீங்கள் வேறொரு உலகத்தில் உங்கள் காரில் உட்கார்ந்து கொண்டு சஞ்சரிக்கும் வேளையில், திடீரென்று உங்கள் கார் எதன் மீதோ மோதுகின்ற சத்தம் கேட்டு, நீங்கள் கனவுலகிலிருந்து மீண்டு வருகிறீர்கள். ஒருவாறு சமாளித்துக் கொண்டு பார்க்கும் போது, உங்கள் கார் மீது மோதியிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்கிறீர்கள். இது மிகுந்து மன வேதனையை உண்டாக்கி விடும் அல்லவா… அடடா அப்போது தான் ஷோரூமிலிருந்தே எடுத்து வந்த புத்தம் புதிய கார் சில நொடிகளில் பயன்படுத்தப்பட்ட பழைய கார் போன்று ஆகி விடுகிறது.

இத்தகைய சமயத்தில் தான் உங்கள் கார் இன்சூரன்ஸ் உங்களுக்கு கை கொடுக்கும். நீங்கள் ஒரு வேளை பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ் கவரை தேர்வு செய்திருந்தால், இது போன்ற துன்பங்களிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம்;சில நொடிகளிலேயே நீங்கள் உங்கள் மன உளைச்சலில் இருந்து விடுபடலாம். உங்கள் புத்தம் புதிய காரானது எந்த வித சேதங்களுமின்றி அதே போன்று புத்தம் புதியதாக உங்களுக்குச் சரி செய்து தரப்படும்!

பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

பம்பர் டூ பம்பர் கவர் பொதுவாகவே காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் பாலிசியுடன் சேர்ந்த ஒரு ‘ஆட்-ஆனாகவே’ (Add-on), சிறிது கூடுதல் பிரீமியம் தொகையுடன் வருகிறது. பம்பர் டூ பம்பர் கவர் என்றால் என்ன என்பதை பற்றி முதலில் புரிந்து கொள்வோம்.

பாமரருக்கும் புரிவது போல சொல்ல வேண்டுமென்றால், இது சிற்சில என்ஜின் சேதங்கள், டயர்கள், பேட்டரிகள் மற்றும் கண்ணாடி போன்றவற்றை மட்டும் தவிர்த்து, உங்கள் காரின் மற்ற எல்லா பாகங்களுக்கும் பாதுகாப்பளிக்கின்ற ஒரு கார் இன்சூரன்ஸ் ஆட்-ஆன் (Add-on) ஆகும்.

இது ஜீரோ டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) அல்லது நில் டிப்ரிஸியேஷன் (Nil Depreciation) கார் இன்சூரன்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது. ஏனென்றால், இது இன்சூரன்ஸ் கவரிலிருந்து டிப்ரிஸியேஷனை தவிர்த்து விட்டு, முழுவதுமாக காப்புறுதியளிக்கிறது.

இந்த இன்சூரன்ஸானது இந்தியாவில் 2009-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, அப்போதிலிருந்து கார் உரிமையாளர்களுக்கு, குறிப்பாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு, இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமாகவே இருந்து வருகிறது:

  • புதிய கார் உரிமையாளர் அல்லது 5 வருடத்திற்கும் குறைவாக காரை பயன்படுத்தியிருப்பவர்
  • புதிய அல்லது அனுபவமில்லாத ஓட்டுநர்கள்
  • விலையுயர்ந்த உதிரி பாகங்களை உடைய உயர்தர சொகுசு கார்களின் உரிமையாளர்கள்
  • விபத்துகள் அதிகமாக நடைபெறும் பகுதிகளில்/பகுதிகளின் பக்கத்தில் குடியிருக்கும் உரிமையாளர்கள்
  • வண்டியில் ஏற்படும் சின்னஞ்சிறிய கீறல்கள் மற்றும் சொட்டைகள் குறித்து கவலைப்படும் நபர்கள்

தங்கள் புத்தம் புதிய காரில் சிறிய கீறல் அல்லது சொட்டை விழுவது பற்றி கவலை கொள்கின்ற நபர்கள் மற்றும் அரிய, விலையுயர்ந்த உதிரி பாகங்களை கொண்ட உயர்தர விலையுயர்ந்த கார்களை வாங்க விரும்பும் புதிய கார்களின் உரிமையாளர்களிடத்தில் தான் குறிப்பாக இந்த இன்சூரன்ஸ் திட்டம் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த உரிமையாளர்களிடத்தில் தங்களுடைய காருக்கு 100% காப்புறுதி வழங்கப்படுவதன் பொருட்டு, கூடுதல் பிரீமியம் தொகையை கேட்கும் போது, அவர்கள் தங்கள் காரின் பாதுகாப்பிற்கு தாங்கள் செலுத்தும் சிறிய தொகையாகவே இதனை எண்ணுகின்றனர்.


பயன்படுத்துக : பம்பர் டூ பம்பர் கவருடன் கூடிய கார் இன்சூரன்ஸின் பிரீமியத்தினை கணக்கிடுவதற்கான கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டர்

ஒப்பிடவும்: பம்பர் டூ பம்பர் கவர் இருக்கும் மற்றும் இல்லாத காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) பாலிசி

பம்பர் டூ பம்பர் கவர் இருப்பது பம்பர் டூ பம்பர் கவர் இல்லாதது
நில் டிப்ரிஸியேஷனுடன் 100% காப்புறுதி வழங்குகிறது டிப்ரிஸியேஷனை கழித்த பிறகே காப்புறுதியளிக்கப்படும்
சிறிது அதிகமான பிரீமியம் ஸ்டாண்டர்ட் பாலிசி பிரீமியம்
5 வருடம் அல்லது அதற்கு மேல் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு காப்புறுதி கிடையாது பழைய வாகனங்களுக்கும் காப்புறுதி உண்டு

இதில் விஷயம் என்னவென்றால், உங்கள் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் பாலிசியுடன் கூடிய பம்பர் டூ பம்பர் ஆட்-ஆனை (Add on) நீங்கள் தேர்வு செய்யும் போது, நீங்கள் சிறிதளவு அதிகமாக பிரீமியம் தொகையை செலுத்த வேண்டும். ஒன்றை பெறுவதற்கு இன்னொன்றை இழக்க வேண்டும் என்னும் போதும் கூட, அதிக பிரீமியம் செலுத்துவதனால் நீங்கள் எதையும் இழக்க போவதில்லை. மாறாக நீங்கள் மன நிம்மதியுடன் வாழலாம்.

பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸை தேர்வு செய்வதற்கு முன்னர் இந்த காரணிகளை கருத்தில் கொள்ளவும்

இந்த கவரை நீங்கள் தேர்வு செய்வதற்கு முன்னர், பின்வரும் காரணிகளை கருத்தில் கொள்வது முக்கியமாகும்:

கிளைம்களின் எண்ணிக்கை: ஒரு வருடத்தில் நாம் செய்யக் கூடிய கார் இன்சூரன்ஸ் கிளைம்களின் எண்ணிக்கையை இன்சூரர்கள் கட்டுப்படுத்துவார்கள். வாடிக்கையாளர்கள் தங்கள் காருக்கு ஏற்படும் ஒரு சின்ன சொட்டைக்கு கூட கிளைம் செய்வதை கட்டுப்படுத்துவதற்காக இது ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, உங்கள் இன்சூரர் வழங்குகின்ற கிளைம்களின் எண்ணிக்கையை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது மிக முக்கியமாகும்.

விலை: பம்பர் டூ பம்பர் பெறுவதற்கு அதிக பிரீமியத்தை செலுத்த வேண்டும், ஏனென்றால், அது டிப்ரிஸியேஷனை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் முழுவதுமான காப்புறுதியை உங்கள் காருக்கு வழங்குகின்றது. எனவே, இதனை பெறுவதற்கு காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) பாலிசியை விடவும் சற்று பிரீமியம் தொகை அதிகமாக செலுத்த வேண்டும்.

புதிய கார்களுக்கு கிடைக்கப்பெறும்: இது புதிய கார்களுக்கும், 5 வருடம் வரை பயன்படுத்திய கார்களுக்கும் கிடைக்கப்பெறும். மக்கள் தங்களின் புத்தம் புதிய காரை பாதுகாப்பதற்காக சிறிது கூடுதலாக பணம் செலுத்துவதற்கு தயங்குவதில்லை என்பதால், வாடிக்கையாளர்களுக்கும் இது அவர்கள் கொடுக்கும் விலைக்கேற்ற பயன்தரத்தக்க ஒரு திட்டம் தான்;

பம்பர் டூ பம்பர் கார் இன்சூரன்ஸின் பலன்கள்

உங்கள் வண்டியின் இன்சூரன்ஸ் பாலிசி ஒரு சாதாரண இன்சூரன்ஸ் பாலிசியாக இருக்கும் பட்சத்தில், உங்கள் காருக்கு இந்திய மதிப்பில் ரூ.15,000 செலவு செய்யக் கூடிய அளவு சேதங்கள் ஏற்படும் போது, நீங்கள் உங்கள் பாக்கெட்டிலிருந்து 50% தொகையை மட்டும் செலுத்த வேண்டியிருக்கும். பாக்கித் தொகையை, சேதமேற்பட்ட பாகங்களின் டிப்ரிஸியேஷன் சந்தை மதிப்பினை கணக்கில் எடுத்துக் கொண்ட பின், உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியானது செலுத்தும். டிப்ரிஸியேஷன் என்பது உங்கள் வண்டியின் தினசரி பயன்பாட்டினால் ஏற்படக் கூடிய தேய்மானங்கள் அல்லது அதன் சேதம் காரணமாக சந்தை மதிப்பில் ஏற்படும் உங்கள் வண்டியின் விலை வீழ்ச்சியை குறிக்கிறது.

  • ஃபைபர்கிளாஸ் பாகங்கள் – 30% டிப்ரிஸியேஷன் பிடித்தம்
  • ரப்பர், பிளாஸ்டிக் பாகங்கள், மற்றும் பேட்டரிகள் மீது – 50% டிப்ரிஸியேஷன் பிடித்தம்
  • கண்ணாடி பாகங்கள் – எதுவும் இல்லை

 

இந்த விபரங்கள் மிகவும் ஏமாற்றம் தருபவையாக உள்ளன, அதனால் தான் சாதாரண வெஹிக்கில் இன்சூரன்ஸை விடவும் இந்த பம்பர் டூ பம்பர் கவர் மக்களிடையே அதிக செல்வாக்கு பெற்று வருகிறது. டிஜிட் இன்சூரன்ஸ் போன்ற நம்பகமான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களின் நன்மையை கருத்தில் கொண்டு காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) பாலிசியுடன், இந்த ஆட்-ஆன் கவரை வழங்குகின்றார்கள்.

இப்போது உங்கள் வண்டி இன்சூரன்ஸ் ஜீரோ டிப்ரிஸியேஷன் இன்சூரன்ஸாக இருந்தால், உங்கள் கார் சேதமடைந்து ரூ.15000-க்கு செலவு வரும் போது, டிப்ரிஸியேஷனுக்கு எந்த பிடித்தமுமின்றி எல்லா ஃபைபர், ரப்பர் மற்றும் மெட்டல் பாகங்களுக்கும் முழுவதுமாக (100%) காப்புறுதியை நீங்கள் பெறலாம்.

பொதுவாக இருக்கும் லாபகரமான சலுகைகளைப் போலவே, பம்பர் டூ பம்பர் பாலிசியும் அதன் தனிப்பட்ட கட்டுப்பாடுகளுடனேயே வருகிறது.

பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸில் எதற்கெல்லாம் காப்புறுதி வழங்கப்படவில்லை

  • உங்கள் வாகனம் வாங்கி  5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இருந்தால், இந்த கவரை பெறுவதற்கான தகுதி உங்களுக்கு இருக்காது.
  • ஏதேனும் சட்டவிரோதமான அல்லது அநீதியான நடவடிக்கையில் உங்கள் வாகனம் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், நீங்கள் செய்த கிளைமை இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தாது.
  • தனியார் வாகனத்தின் வர்த்தக பயன்பாடு
  • என்ஜின் சேதங்கள், பேட்டரி/டயர்/கிளட்ச் பிளேட்கள்/பேரிங் சேதங்கள்
  • கார் சேதமடைந்த போது ஓட்டுநர் போதை பொருட்கள் அல்லது மது அருந்தியிருப்பது
  • வாகனத்தின் ஆவணங்கள் முழுமையற்று இருப்பத
  • பாலிசியின் கால வரையறைக்கு தகுந்தவாறு கிளைம் செய்யாதது
  • இன்சூர் செய்யப்படாத ஆபத்துக்கள் மூலம் ஏற்படும் சேதம்
  • மெக்கானிக்கல் பிரேக்டவுன் காரணமாக ஏற்படும் சேதம்.
  • துணைப் பொருள்கள், கேஸ் கிட் (gas kit) மற்றும் டயர்கள போன்ற பொருட்களுக்கு ஏற்படும் சேதம்

நீங்கள் பம்பர் டூ பம்பர் ‘ஆட்-ஆன்’ (add-on) கவரை தேர்வு செய்வதினால் உங்களுக்கு பாலிசி மட்டுமல்ல மன நிம்மதியும் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எதிர்பாராத சந்தர்ப்பங்களில் உங்கள் வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களிலிருந்து இந்த இன்சூரன்ஸ் பரவலான பாதுகாப்பளிக்கிறது, அது மட்டுமின்றி உங்கள் பணத்தையும் மிச்சப்படுத்துகின்றது. எதிர்பாராத, அவசியமற்ற செலவுகள் ஏற்படுவதிலிருந்து உங்களை முழுவதுமாக பாதுகாக்கிறது. உங்கள் பாலிசியுடன் இந்த கவரை தேர்வு செய்வதன் மூலம் உங்கள் காருக்கும், உங்களுக்குமான ஒரு சிறந்த திட்டத்தை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள்.

பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

விபத்து நடந்த 24 மணி நேரத்திற்குள் நீங்கள் தெரிவிக்கவில்லையெனில் என்ன ஆகும்?

உங்கள் இன்சூரர் வழங்கியுள்ள கால அவகாசத்திற்குள், நீங்கள் உடனடியாக விபத்து நடந்தவுடன் தெரிவித்து விட வேண்டும். ஒரு வேளை நீங்கள் அவ்வாறு செய்யத் தவறினால், உங்கள் கார் இன்சூரன்ஸ் கிளைம் நிராகரிக்கப்படலாம்.

என்னுடைய சொந்த காரினை நான் விபத்தில் சேதப்படுத்தி விட்டால், நான் பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸிற்கு கிளைம் செய்ய முடியுமா?

ஆம், கிளைம் தொகை வழங்கப்படும் போது டிப்ரிஸியேஷன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்று மட்டுமே பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ் குறிப்பிடுகிறது. உங்கள் சொந்த சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

பார்க்கிங்-இல் நிறுத்தப்பட்டிருந்த என்னுடைய காரை யாரேனும் இடித்து சேதப்படுத்தி விட்டால், பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ் என்னுடைய சேதங்களுக்கு இழப்பீடு வழங்குமா?

ஆம், உங்கள் கார் இன்சூரன்ஸில் உள்ள உங்களுடைய ஓன் டேமேஜஸ் கவர் (சொந்த சேதங்களுக்கான இன்சூரன்ஸ்) இத்தகைய சேதங்களுக்கு காப்புறுதி வழங்குகிறது. பம்பர் டூ பம்பர் கவர் என்பது, கிளைம் இழப்பீடு வழங்கப்படும் போது டிப்ரிஸியேஷன் கணக்கிடப்படுவதில்லை என்பதை மட்டுமே உறுதிப்படுத்துகிறது.

கார் இன்சூரன்ஸின் கீழ் கார் பம்பருக்கு காப்புறுதி வழங்கப்படுகிறதா?

ஆம், நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கார் இன்சூரன்ஸ் அல்லது சொந்த சேதங்களுக்கான கார் இன்சூரன்ஸை எடுத்திருந்தால், உங்கள் கார் பம்பருக்கு காப்புறுதிப் பாதுகாப்பு வழங்கப்படும்.