கார் இன்சூரன்ஸ்-ல் என்சிபி(NCB)

50% வரையான நோ கிளைம் போனஸுடன் கார் இன்சூரன்ஸ் பெறுங்கள்

Third-party premium has changed from 1st June. Renew now

கார் இன்சூரன்ஸ்-ல் என்சிபி(NCB) என்றால் என்ன?

இந்தியாவில் நான்கு சக்கர வாகனத்தின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் மோட்டார் வெஹிகிள் இன்சூ ரன்ஸ் வைத்திருக்க வேண்டியது கட்டாயம்.   மேலும், உங்களின் காருடன் சேர்த்தே இன்சூரன்ஸ்-ஐ வாங்கி விட வேண்டும் என்பதை நீங்கள், உங்கள் கார்-ஐ வாங்குவதற்கு முன்பு  தெரிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலான இன்சூரன்ஸ்  நிறுவனங்கள் என்சிபி-ன் நன்மைகளை பாலிசிதாரர்களுக்கு வழங்குகிறார்கள் என்பது இதில் கூடுதல் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஆகும்.

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மக்களுக்கு என்சிபி என்றால் என்ன என்பது கூட தெரியாது. ஆகவே, பொதுவாக கேட்கப்படும் இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவின் மூலம் நாங்கள் கொடுக்க உள்ளோம்.

இன்சூரன்ஸ்-ல் என்சிபி(NCB) என்பதன் விரிவாக்கம்

என்சிபி என்றால் ‘ நோ கிளைம் போனஸ்’ ( No Claim Bonus) என்பதை குறிக்கும். வாடிக்கையாளர் ஒருவர் பாலிசி பெற்ற குறிப்பிட்ட ஆண்டில் எந்தவொரு கிளைமும் செய்யாதபோது கார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அவர்களுக்கு வழங்கும் ஒரு வகையான வெகுமதியே என்சிபி ஆகும். இதனால், இன்சூர் செய்யப்பட்ட நபர் தனது இன்சூரன்ஸ்-ஐ அடுத்த ஆண்டு புதுப்பிக்கும்போது அதன் பிரீமியத்தில் தள்ளுபடியை வெகுமதியாக பெறுவார்

கார் இன்சூரன்ஸில் என்சிபி(NCB) எவ்வாறு செயல்படும்?

நீங்கள் வாங்கும் பொருட்களின் விலையானது ஏறிக்கொண்டே இருந்தாலும், உங்களின் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை குறைப்பதற்கான சிறந்த வாய்ப்பினை உங்களின் கார் இன்சூரன்ஸ் உங்களுக்கு அளிக்கிறது. “ இது எப்படி சாத்தியம்” என்று நீங்கள் கேட்கிறீர்களா?

இது வெகுமதி (ரிவார்ட்) திட்டத்தை போன்று செயல்படும். இன்சூரன்ஸ் செய்த முதலாம் ஆண்டில் எந்தவொரு கிளைமும் செய்யாவிட்டால் 20% என்சிபி தள்ளுபடியைப் பெறுவீர்கள். இதனைத் தொடர்ந்து இரண்டாம் ஆண்டும் எவ்வித கிளைமும் செய்யாவிட்டால் கூடுதலாக 5% தள்ளுபடியாகப் பெறுவீர்கள். இது தொடர்ந்து கொண்டே போகும் பட்சத்தில் அதன் ஆறாம் ஆண்டில் 50% ஆக உயர்வதற்கான  வாய்ப்பும் உள்ளது. சுருக்கமாக சொல்லப்போனால், நீங்கள் உங்கள் கார்-ஐ சரியாக ஓட்டுவதன் மூலம் உங்கள் கார்-ஐ  சிறந்த முறையில் பாதுகாக்கலாம்.  மேலும், நாளடைவில் இதன்மூலம் நீங்கள் அதிக பலனை அடையலாம்.

சிறு கிளைம்களை செய்து, நோ கிளைம் போனஸ்- ஐ இழப்பது என்பது நல்ல யோசனையா?

இல்லை. சிறு விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கோ அல்லது சிறிய டயர் வெடிப்புக்கோ கிளைம் செய்வதை தவிர்த்து, உங்களின் சொந்த செலவிலே  (உங்களால் அந்த செலவை செய்ய முடியும் என்கிற பட்சத்தில் ) அதை சரி செய்து கொள்ளலாம். ஒரு வருடத்திற்கு கிளைம்கள் எதுவும் செய்யாமல் இருந்தால் அடுத்த முறை உங்களின் கார் இன்சூரன்ஸ்-ஐ புதுப்பிக்கும் போது நோ கிளைம் போனஸ் பெறலாம்.

நோ கிளைம் போனஸ் கால்குலேட்டர்

இன்சூரன்ஸ் வரையறைகளின் படி என்சிபி பாலிசி என்றால் என்ன என்பதை புரிந்துகொண்ட பின்,  கார் இன்சூரன்ஸிற்கான நோ கிளைம் போனஸ் எவ்வளவு? என்கிற அடுத்த கேள்வி எழும்.

உங்களின் காருக்கான நோ கிளைம் போனஸ்-ஐ கணக்கிடுவது என்பது அவ்வளவு கடினமான காரியம் இல்லை. பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அவர்களின் இணையதளத்தில் (வெப்சைட்டில்) நோ கிளைம் போனஸ் கால்குலேட்டர்-ஐ  உங்களின் பயன்பாட்டிற்காக வைத்திருப்பார்கள், அதை வைத்து உங்களின் நோ கிளைம் போனஸ் தொகையை கணக்கிடலாம். இது வழக்கமாக உங்கள் பாலிசியின் இரண்டாம் வருடத்திலிருந்து தொடங்கும்.

தற்போதைய விதிமுறைப்படி, இந்தியாவில் என்சிபி 20 சதவீதத்தில் தொடங்கி ஆறாவது ஆண்டில் 50 சதவீதமாக உயரும். பொதுவாக, நான்கு சக்கர வாகனத்தின் நோ கிளைம் போனஸ் சதவீதமானது பின்வரும் முறையில் கணக்கிடப்படுகிறது.

கார் இன்சூரன்ஸுக்கான என்சிபி(NCB) கணக்கீடு

கிளைம் ஃப்ரீ இயர்ஸ் (கிளைம் இல்லா வருடங்கள்) நோ கிளைம் போனஸ்
1 வருடத்திற்கு பின் 20%
2 வருடங்களுக்குப் பின் 25%
3 வருடங்களுக்குப் பின் 35%
4 வருடங்களுக்குப் பின் 45%
5 வருடங்களுக்குப் பின் 50%

கார் இன்சூரன்ஸில் என்சிபி-ன்(NCB) பயன்கள்

1. உங்களை ஊக்குவிக்கும் விதமான வெகுமதிகளை அளிக்கும்:  என்சிபி என்பது நீங்கள் ஒரு சிறப்பான மற்றும் பொறுப்பான கார் ஓட்டுநராகவும், உரிமையாளராகவும்  இருப்பதற்காக உங்களுக்கு அளிக்கப்படும் வெகுமதி ஆகும்.

2. இது உங்கள் காரோடு தொடர்புடையது அல்ல, உங்களோடு தொடர்புடையது:  என்சிபி என்பது  தனிநபரான உங்களோடு தொடர்புடையதே தவிர உங்கள் காரோடு அல்ல. இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் எந்த கார் வைத்திருந்தாலும்- உங்கள் கார் பாலிசிகள் முடிவடையும் தேதிக்கு முன்னர், நீங்கள் அதை புதுப்பித்துக் கொண்டிருக்கும் வரை, உங்கள் கார் இன்சூரன்ஸின்  நோ கிளைம் போனஸ் மூலம் நீங்கள் பயனடையலாம்.

3. கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் சேமிக்கலாம்: அனைவரும் மிகவும் விரும்பக்கூடிய பயன் இது தான்! அது தான் தள்ளுபடிகள்! நோ கிளைம் போனஸ் மூலம் உங்களின் வருடாந்திர கார் இன்சூரன்ஸ் பிரீமியத்திலிருந்து 20% வரை நீங்கள் சேமிக்கலாம்.

4. இதை எளிதில் மாற்றலாம்: உங்கள் பாலிசியின் இன்சூரர் அல்லது காரை மாற்றும் நிலை ஏற்பட்டால், உங்கள் என்சிபிஐ எளிமையான செயல்முறை பின்பற்றி சுலபமாகவும், விரைவாகவும் மாற்றிடலாம். நீங்கள் தற்போது வைத்துள்ள பாலிசியின் காலமானது முடிவடையும் முன்னர் பாலிசியை மாற்ற வேண்டும்.

இன்சூரன்ஸில் என்சிபி(NCB) பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

என்சிபி(NCB) எப்போது முடிவடையும்?

என்சிபி மிகவும் நன்மை பயக்கும் திட்டமாகும். நீங்கள் எவ்வித கிளைமும் செய்யாத வரை என்சிபி-யினால் கிடைக்கும் பலன்களையும்  பாதுகாப்பையும் தொடர்ந்து  அனுபவிக்கலாம். ஆனால், குறிப்பிட்ட பாலிசி ஆண்டில் ஏதோ ஒரு காரணத்திற்காக நீங்கள் கிளைம் செய்ய வேண்டியிருந்தால், அடுத்த பாலிசி ஆண்டில் நீங்கள் என்சிபி--ன் பலனைப் பெற இயலாது. தற்போது நீங்கள் வைத்திருக்கும் இன்சூரன்ஸ் பாலிசி முடிவடைந்த தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் புதுப்பிக்கவில்லை என்றால் உங்களின் என்சிபி முடிந்துவிடும், மேலும் அதன் பின் நீங்கள் நோ கிளைம் போனஸின் பலனைப் பெற முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவே, சரியான நேரத்தில் உங்கள் பாலிசியை புதுபிக்க வேண்டியது அவசியமாகும்.

என்சிபி(NCB) சான்றிதழை எப்படி பெறலாம்?

என்சிபி சான்றிதழை எப்படி பெறலாம்? என்கிற கேள்வி என்சிபி குறித்து எழும் அடுத்த கேள்வி ஆகும். பாலிசிதாரர் ஒருவர் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் போது அத்துடன்  என்சிபி சான்றிதழ் வழங்கப்படுகிறது. ​மேலும் பாலிசிதாரர் குறிப்பிட்ட பாலிசி ஆண்டில் ஏதேனும் கிளைம் அவர் செய்தாரா இல்லையா என்பதைப் பொறுத்தே அதன் பயன்களை அனுபவிக்கலாம். நடப்பு ஆண்டில், கிளைம் ஏதேனும் செய்திருந்தால் அடுத்த ஆண்டுக்கான என்சிபி--ன் பலனை அனுபவிக்கும் தகுதியினை இழப்பார், ஆனால், அந்த ஆண்டு முழுவதும் அவர் கிளைம் எதுவும் செய்யவில்லை என்றால், அவர் என்சிபி--ன் பலன்களை அனுபவிக்கும் தகுதியினை பெறுவார்.

இன்சூரன்ஸ்-ல் முந்தைய என்சிபி(NCB) என்றால் என்ன?

நீங்கள் இதுவரை எந்தவொரு கிளைமும் செய்யவில்லை, மேலும் ஆண்டிற்கு மத்தியில் உங்கள் காரை விற்க முடிவு செய்தாலோ அல்லது மற்றொரு காரை வாங்க முடிவு செய்தாலோ என்ன நடக்கும் என்று யோசிக்கிறீர்களா?

நீங்கள் டீலர் இடமிருந்தோ அல்லது மூன்றாம் தரப்பினரிடமிருந்தோ ஒரு பழைய கார்-ஐ வாங்க இருந்தால் , அந்த கார் என்சிபிக்கு தகுதியானதாக இருந்தால், நீங்கள் நோ கிளைம் போனஸை மாற்றம் செய்வதற்காக விண்ணப்பிக்கலாம். அப்படி இருக்கையில் , நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், உங்களின் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நீங்கள், உங்கள் பழைய காரை விற்பனை செய்ய இருப்பதை பற்றித் தெரியப்படுத்தி, உங்களின் என்சிபிஐ நீங்கள் வாங்க இருக்கும் புதிய காருக்கு மாற்றும்படி அவர்களிடம் கோரிக்கை வையுங்கள்.

இப்போது நீங்கள் டிஜிட்-ல் புதிய கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க இருந்தால், நீங்கள் செய்ய வேண்டியது உங்களின் தற்போதைய என்சிபி மற்றும் உங்கள் முந்தைய இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பெயர் அத்தோடு (எங்களிடம் முதன்முறையாக புதிய கார் பாலிசியை வாங்குவதாக இருந்தால்) முந்தைய இன்சூரரின் பாலிசி எண்ணை எங்களோடு பகிர்ந்திடுங்கள். எஞ்சியவற்றை நாங்கள் பார்த்துக்கொள்வோம்

என்சிபி-ஐ(NCB) புதிய கார் இன்சூரன்ஸுக்கு மாற்றுவது எப்படி?

இது, உங்கள் புதிய கார் இன்சூரன்ஸ்- ஐ ஆன்லைனில் வாங்குகிறீர்களா அல்லது ஏஜென்ட் மூலமாக அல்லது நேரடியாக வாங்குகிறீர்களா என்பதைப் பொறுத்தது. உங்களின் புதிய கார் இன்சூரன்ஸ் பாலிசி-ஐ நேரடியாகவோ அல்லது ஏஜென்ட் மூலமாக வாங்கினால், உங்களின் பையர்- செல்லர்  அக்ரீமென்ட் (வாங்குபவர்-விற்பனையாளர் ஒப்பந்தம்) ஃபார்ம்  (படிவம்) 29 மற்றும் 30ஐ  சமர்ப்பித்து, உங்கள் என்சிபி-ஐ முந்தைய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து  மாற்றம் செய்வதற்கான கோரிக்கையை கடிதம் மூலமாக சமர்ப்பியுங்கள்.  

இதற்குப் பின் சம்பந்தப்பட்ட இன்சூரர் என்சிபி சான்றிதழை வழங்குவார். அதை நீங்கள் உங்கள் புதிய கார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் புதிய கார் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்கப் போகிறீர்கள் என்றால், இவை எதையும் நீங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் சரியான என்சிபி , பழைய பாலிசி எண் மற்றும் இன்சூரரின் பெயரை பகிர்ந்தால் போதும், உங்களின் புதிய இன்சூரன்ஸ் நிறுவனம் எஞ்சிய  செயல்முறைகளை கவனித்துக்கொள்வார்கள்.

என்சிபி(NCB) மாற்றம் செய்வதற்கு தேவையான ஆவணங்கள்

ஆவணத்தைப் பொறுத்த வரையில், விண்ணப்பத்தோடு சேர்த்து பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க  வேண்டும்:

  • பழைய கார் விற்பனை ஆனதற்காக  நீங்கள் பெற்ற டெலிவரி ரசீதின் நகல்
  • பழைய காரின் இன்சூரன்ஸ் பாலிசியின் நகல்.
  • கார் வாங்குவதற்காக  நீங்கள் பெற்ற முன்பதிவு படிவத்தின் நகல்

மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகு, நோ கிளைம் போனஸ் புதிய காருக்கு மாற்றப்படும். தற்போதுள்ள என்சிபி சான்றிதழின் அடிப்படையில் வாடிக்கையாளர் புதிய காருக்கான இன்சூரன்ஸ் பிரீமியத்தில் தள்ளுபடியாக பெறலாம்

நோ கிளைம் போனஸ் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Can I have a No Claim Bonus for more than 1 car? 1க்கும் மேற்பட்ட காருக்கு நோ கிளைம் போனஸ் பெற முடியுமா?

உங்களின் நோ கிளைம் போனஸ் ஒரு காருக்கு மட்டுமே பொருந்தும். உங்களின் பிறந்தநாளுக்கு புதியதாக இரண்டாவது  கார்-ஐ வாங்குவதாக இருந்தால் அதை தனியாக இன்சூர் செய்ய வேண்டும், மேலும் எவ்வித கிளைமும் செய்யாமல் அதற்கென்று தனியாக என்சிபி உருவாக்கி அதன் மூலம் சலுகைகளை பெறலாம்.

நான் ஒரு இன்சூரரிடமிருந்து மற்றொரு இன்சூரர்-க்கு நோ கிளைம் போனஸை மாற்ற முடியுமா?

நீங்கள் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து மற்றொரு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மாற விரும்பினால், நீங்கள் உங்களின் நோ கிளைம் போனஸ்-ஐ ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து மற்றொரு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மாற்றலாம். மேலும், உங்கள் பாலிசியை புதுப்பிக்கும் போதே நீங்கள் வேறொரு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மாற்றினால், உங்கள் முந்தைய ஆண்டு பாலிசி ஆவணம் அல்லது உங்கள்  என்சிபி கொண்டுள்ள புதுப்பித்தல் ஆவணத்தை மட்டும் நீங்கள் சமர்ப்பித்து மாற்றிக்கொள்ளலாம். ஆன்லைனில் கார் இன்சூரன்ஸ்-ஐ வாங்குவதன் மூலம் இந்த நீண்ட செயல்முறைகளை தவிர்த்து, நோ கிளைம் போனஸ் சான்றிதழ் இல்லாமல், நீங்கள் அளித்த தகவல்களின்  அடிப்படையில் உங்கள் என்சிபி-ஐ மாற்றிடலாம்.

தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸுக்கு நோ கிளைம் போனஸ் பொருந்துமா?

உங்கள் பிரீமியத்தின் அங்கமான தேர்டு பார்ட்டி லையபிலிட்டீஸ் என்சிபி-ல் அடங்காது. இது உங்கள் பிரீமியத்தில் 15-20% வரை அங்கமாக இருக்கிறது. நீங்கள் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ்  மட்டும் வைத்திருந்தால், உங்களால் NCB-ஐ பெற முடியாது. என்சிபி பெறுவதற்கு  நீங்கள் காம்பிரிஹென்சிவ் அல்லது ஓன் டேமேஜ் இன்சூரன்ஸ் பெற்றிருக்க வேண்டும். நீங்கள் தேர்டு பார்ட்டி கிளைம் செய்வதால், உங்கள் என்சிபி-க்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பது உறுதி. நீங்கள்  புத்திசாலித்தனமாக கிளைம்களை செய்வதன் மூலம் உங்கள் நோ கிளைம் போனஸைப் பராமரிக்கலாம். ஆண்டுகள் ஓட, இதனால் உங்களின் பிரீமியம் குறையும். விபத்துக்கள் எப்போது நடக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆதலால் நீங்கள், உங்கள் வாகனத்தை பாதுகாப்பாக ஓட்ட வேண்டும் என்கிற ஒரே விஷயத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நோ கிளைம் போனஸ் ஒரு மதிப்புக்கூட்டல் ஆட்ஆன்(addon) திட்டமா?

இல்லை. நோ கிளைம் போனஸ் என்பது ஒரு மதிப்புக்கூட்டல் (ஆட்ஆன் ) திட்டம் இல்லை. நீங்கள், ஓன் டேமேஜ் இன்சூரன்ஸ் அல்லது காம்பிரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பாலிசி-ஐ பெற்றுருந்தால் மட்டுமே நோ கிளைம் போனஸ்-ஐ பெற இயலும்.  ஆம், பல ஆண்டுகளாக எந்தவொரு கிளைமும் செய்யாமல் நீங்கள் ஈட்டியுள்ள நோ கிளைம் போனஸைப் பாதுகாக்க விரும்பினால், நீங்கள் நோ கிளைம் போனஸ் புரொடெக்ஷன் என்கிற மதிப்புக்கூட்டலை (ஆட்ஆன் ஐ) வாங்கலாம்.

கார் இன்சூரன்ஸில் அதிகபட்சமான நோ கிளைம் போனஸ் என்ன?

கார் இன்சூரன்ஸில் அதிகபட்சமாக 50% வரை என்சிபி பெறலாம். முதலாம் ஆண்டில் எந்தவித கிளைமும் செய்யாவிட்டால் உங்களின் என்சிபி ஆனது 20% இல் தொடங்கி, அடுத்த ஐந்து வருடங்களிலும் நீங்கள் எந்த ஒரு  கிளைமும் செய்யாவிட்டால் அது  50% வரை அதிகரிக்கும்.

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நோ கிளைம் போனஸ் மற்றும் முந்தைய கிளைம் விவரங்களை சரிபார்க்கிறதா?

ஆம். நீங்கள் கார் இன்சூரன்ஸ்-ஐ வாங்கும் போது உரிய  இன்சூரன்ஸ் நிறுவனம் நீங்கள் பகிர்ந்த நோ கிளைம் போனஸ் மற்றும் பிற விவரங்கள் அனைத்தும் சரியானதா இல்லையா என்பதை சரிபார்க்கும். நீங்கள் ஏதேனும் தவறான தகவல்களை அளித்திருப்பதாக தெரியவந்தால், உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனம் உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை வழங்க மறுக்கவோ அல்லது ((ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தால்) அதை ரத்து செய்யலாம்.

நீங்கள் வாகனம் ஓட்டுவதை நிறுத்தினால் நோ கிளைம் போனஸை இழந்துவிடுவீர்களா?

இல்லை, நீங்கள் வாகனம் ஓட்டுவதை நிறுத்துவதால்  உங்கள் நோ கிளைம் போனஸை இழக்க மாட்டீர்கள். பாலிசி ஆண்டில் நீங்கள் கிளைம் செய்தாலோ அல்லது உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை அதன் முடிவடையும் தேதிக்கு முன்பு  புதுப்பிக்காமல் இருந்தால் மட்டுமே உங்கள் என்சிபிஐ இழப்பீர்கள்.

கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் என்சிபி-ன்(NCB) தாக்கம் என்ன?

நீங்கள் பாலிசி வாங்கிய முதலாம் ஆண்டில் எவ்வித கிளைமும் செய்யாவிட்டால்,  உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியைப் புதுப்பிக்கும் போது உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் 20% தள்ளுபடி வழங்கப்படும். இதனை தொடர்ந்து அடுத்து வரும் ஆண்டுகளும் நீங்கள் எந்தவித கிளைமும் செய்யாமல் இருந்தால், உங்களுக்கு கிடைக்கும் தள்ளுபடியானது 20% முதல் 50% வரை அதிகரித்துக்கொண்டே இருக்கும்! எனவே  உங்கள் பாலிசி செல்லுபடியாகும் கடைசி தேதிக்கு முன் அதை புதுப்பிக்குமாறு பார்த்துக்  கொள்ளுங்கள்!

என்சிபி(NCB) எத்தனை காலத்திற்கு செல்லுபடியாகும்?

நீங்கள் உங்களின் அடுத்த கிளைம் செய்யும் வரை உங்கள் என்சிபி  செல்லுபடியாகும்.

நீங்கள் இன்சூரன்ஸ்- ஐ ரத்து செய்வதன் மூலம் என்சிபி-ஐ(NCB) இழப்பீர்களா?

உங்கள் இன்சூரன்ஸ் காலாவதியாகும் முன்பு அதை  முழுமையாக ரத்து செய்தால் நீங்கள் , உங்கள் என்சிபிஐ இழப்பீர்கள். இருப்பினும், நீங்கள் உங்களின் இன்சூரரை மட்டுமே மாற்ற விரும்பினால், உங்களின் தற்போதைய என்சிபி ஐ முற்றிலுமாக ரத்து செய்வதற்குப் பதிலாக உங்கள் என்சிபி ஐ பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது உங்களின் தற்போதைய இன்சூரர் வழங்கிய என்சிபி  சான்றிதழை நீங்கள் புதிதாக பெறவிருக்கும் இன்சூரரிடம் அளித்து நிலுவையில் இருக்கும் என்சிபி -ன்  பலன்களை தொடர்ந்து அனுபவியுங்கள். முன்பே குறிப்பிட்டபடி, என்சிபி என்பது தனிநபரான உங்களோடு  தொடர்புடையதே தவிர உங்கள் காருடனோ  அல்லது உங்கள் இன்சூரருடன் தொடர்புடையது இல்லை.