ஆரோக்கிய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ்

Zero Paperwork. Quick Process.

ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசி என்றால் என்ன?

ஆரோக்கிய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது மருத்துவச் செலவுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் ஸ்டாண்டர்ட் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும். இதன் மூலம் 3 லட்சம் முதல் 2 கோடி வரைக்கான  காப்பீட்டுத் தொகையை இன்சூரன்ஸாக எடுக்கலாம். இந்த காப்பீட்டில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரும் பின்னரும் ஆகும் செலவுகள், மருத்துவமனை அறை வாடகை (தங்கும் மற்றும் படுக்கைக் கட்டணம்), ICU சேவைகள் மற்றும் புதிய அதிநவீன சிகிச்சைகள் ஆகியவை அடங்கும்.

டிஜிட் வழங்கும் ஆரோக்கிய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ் மூலம், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஃபேமிலி ஃப்ளோட்டர் பிளான் அல்லது இன்டிஜுவல் பாலிசி என்றிருக்கும் இரண்டு இன்சூரன்ஸ் பிளான்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.

ஆரோக்கிய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் முக்கியத்துவம் என்ன?

நீங்கள் அடிக்கடி ஆன்லைனில் உள்ள பல்வேறு ஹெல்த் இன்சூரன்ஸ்களைப் பற்றி குழப்பமடைபவராகவும், தெளிவில்லாமல் இருப்பவராகவும் இருந்தால், நீங்கள் மட்டும் அப்படியில்லை. அப்படிப்பட்ட பலரின் குழப்பத்தைத் தீர்ப்பதற்காகவே, ஆரோக்கிய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ் ஐஆர்டிஏஐ-ஆல் தொடங்கப்பட்டது. இம்மாதிரியான ஒரு பேசிக், ஸ்டாண்டர்ட் பாலிசி திட்டத்தை வழங்குவது என்பது ஹெல்த் இன்சூரன்ஸை எளிதாக்கும் அணுகுமுறையாகும். இதனால், அனைத்து ஹெல்த் இன்சூரன்ஸ்  நிறுவனங்களும் இந்த பாலிசியை ஒரே மாதிரியான ஒத்த பலன்களுடன் வழங்குகிறது.

வாங்கும் போது மற்றும் கிளைம் செய்யும் போது ஒவ்வொரு ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குநரும் வழங்கும் சேவை, இன்சூர் செய்யப்பட்ட ஒவ்வொரு நபரின் நெட்வொர்க்கிலும் கிடைக்கும் பணம் செலுத்த தேவையில்லா மருத்துவமனைகளின் எண்ணிக்கை மற்றும் ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசி பிரீமியம் ஆகியவையே ஒரு இன்சூரன்ஸ் வழங்குநரின் பாலிசியில் இருந்து மற்றொன்றை வேறுபடுத்துகிறது.

*Disclaimer - *உரிமைத்துறப்பு - உடல்நலக் குறைவு இல்லாத 20 வயது ஆணுக்கு 3 லட்சம் இன்சூரன்ஸ் தொகைக்கு ஒரு மாதத்திற்கு ரூ.201 பிரீமியம்  கணக்கிடப்படுகிறது. இந்த பிரீமியம் தொகையில் ஜிஎஸ்டி சேர்க்கப்படவில்லை.

நீங்கள் ஏன் ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியை வாங்க வேண்டும்?

இந்தியாவில் மருத்துவச் செலவுகள் மற்றும் சுகாதார நிலைமைகள் இரண்டும் அதிகரித்து வருகின்றன.

ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசி என்பது தற்போது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளில் ஒன்றாகும்.

குறைந்தபட்சம் அடிப்படை ஹெல்த் இன்சூரன்ஸ் வைத்திருப்பது  புத்திசாலித்தனமான நிதித் திட்டமிடல் மற்றும் முதலீட்டுக்கு முக்கியமானது!

உலகையே ஆட்டிப்படைத்த கோவிட் மிகவும் பாதித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியானது, நீண்ட காலத்திற்கு  கோவிட்-19 மற்றும் பிற நோய்கள் இரண்டிலிருந்தும் உங்களைக் காப்பதற்கான செலவு குறைந்த இன்சூரன்ஸ் விருப்பமாக இருக்கலாம்.

டிஜிட்-இன் ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியின் சிறப்புகள் என்ன?

எளிய ஆன்லைன் செயல்முறைகள் - உங்கள் பாலிசியை வாங்குவது முதல் கிளைம் செய்வது வரை அனைத்தும் எளிதானது, விரைவானது, நேரடி காகித ஆவணங்கள் சமர்ப்பிப்பு இல்லாதது மற்றும் தொந்தரவு இல்லாதது! ஹார்டு காப்பிகள் தேவையில்லை!

இன்சூரன்ஸ் தொகை - உங்கள் தேவைகளின் அடிப்படையில் உங்கள் இன்சூரன்ஸ்  தொகையைத் தனிப்பயனாக்குங்கள்!

கொரோனா வைரஸ் போன்ற தொற்றுநோய்களை உள்ளடக்கியது - கோவிட்-19--இனால் இந்தியா மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும். எங்கள் ஹெல்த் இன்சூரன்ஸின் ஒரு பகுதியாக நாங்கள் அதைக் காப்பீடு செய்கிறோம். எனவே நீங்கள் ஒரு தனியான கொரோனா வைரஸ் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெற வேண்டியதில்லை.

ஒட்டுமொத்த போனஸ் - ஆரோக்கியமாக இருப்பதற்காக வெகுமதியைப் பெறுங்கள்! கிளைம் செய்யப்படாமல் இருக்கும் ஆண்டுகளுக்கான வருடாந்திர ஒட்டுமொத்த போனஸை பெற்றிட நீங்கள் தகுதி பெறுவீர்கள்.

 எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுங்கள் - கேஷ்லெஸ்  சிகிச்சைக்காக, இந்தியாவில் உள்ள எங்கள் 6400+ நெட்வொர்க் மருத்துவமனைகளில் இருந்து தேர்வு செய்யவும் அல்லது செலவு செய்த பணத்தைத் திருப்பிப் பெறும் ரீஇம்பர்ஸ்மென்ட் திட்டத்தைத் தேர்வு செய்யவும்.

குறைந்தபட்ச கோ-பேமெண்ட் - நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸூக்கான கிளைமை கோரும் போது, கிளைம் செய்யும் தொகையின் 5% மட்டுமே உங்கள் கையில் இருந்து செலவழிக்க வேண்டும்.

24X7 மணி நேர வாடிக்கையாளர் உதவி - உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், தேசிய விடுமுறை நாட்களில் கூட எங்களின் 24x7 மணி நேர அழைப்பு வசதியைப் பயன்படுத்தலாம.

எளிய அதிவிரைவு கிளைம் செயல்முறை - எங்கள் கிளைம் செயல்முறை முற்றிலும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. அதனால்தான், கிளைம் கோருவது எளிதாக உள்ளது . மேலும், அதற்கான செட்டில்மென்ட்டைப் பெறுவதும் சுலபமானதாக இருக்கிறது.

ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசி பிரீமியம் சார்ட் மற்றும் கால்குலேட்டர்

டிஜிட்டின் ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியில் ₹3 லட்சம் முதல் ₹50,000 மடங்குகளில் ₹2 கோடி வரையிலான இன்சூரன்ஸ்  தொகை விருப்பங்கள் உள்ளன. ஒரு நபருக்கான குறைந்தபட்ச இன்சூரன்ஸ் தொகை ₹3 லட்சம் மற்றும் அதிகபட்ச இன்சூரன்ஸ் தொகை ₹2 கோடிக்கானக்கான ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசி பிரீமியம் ஒப்பீடு.*

வயது பிரிவு ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசி பிரீமியம் (SI 3 லட்சம்) ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசி பிரீமியம் (SI 2 கோடி)
18-25 ₹2,414 ₹9,642
26-30 ₹2,503 ₹9,999
31-35 ₹2,803 ₹11,197
36-40 ₹3,702 ₹13,333
41-45 ₹4,698 ₹18,764
46-50 ₹6,208 ₹24,799
51-55 ₹8,420 ₹33,633
56-60 ₹11,569 ₹46,211
*துறப்பு - இந்த பிரீமியத் தொகைகள் உடல்நலக் குறைபாடுகள் இல்லாத ஒரு ஆணுக்குக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பிரீமியத்தில் ஜிஎஸ்டி சேர்க்கப்படவில்லை. இந்தக் இன்சூரன்ஸ் தொகையுடன் சேர்த்து மேலும், உங்களுக்கு ₹3 லட்சம், ₹5 லட்சம், ₹10 லட்சம், ₹25 லட்சம், ₹50 லட்சம், ₹1 கோடி மற்றும் ₹2 கோடி போன்ற பிற இன்சூரன்ஸ் தொகை விருப்பங்களும் உள்ளன.

ஆரோக்கிய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் என்ன உள்ளடக்கப்பட்டுள்ளது?

இந்த காப்பீட்டில் உள்ளடங்காதது எவை?

  • மருத்துவ கிளைமுக்குத் தொடர்பில்லாத எந்தவொரு மருத்துவ அனுமதி (ஹாஸ்பிட்டலைசேஷன்) அல்லது மருத்துவமனைக்கு செல்லும் முன்  (ப்ரீ ஹாஸ்பிட்டலைசேஷன்) செலவுகளுக்குக் காப்பீடு அளிக்கப்படாது.
  • எந்த ஒரு இணை-நோய்க்கும் தொடர்பு இல்லாதது உடல் பருமன் அல்லது எடை கட்டுப்பாடு தொடர்பான அறுவை சிகிச்சைகளுக்கான செலவுகள் காப்பீட்டில் உள்ளடங்காது.
  • பாலின மாற்று சிகிச்சைகள் இந்த பாலிசியின் கீழ் காப்பீடு அளிக்கப்படாது.
  • விபத்து, புற்றுநோய் மற்றும் உடனடி சுகாதார ஆபத்தை அகற்றுவதைத் தொடர்ந்து மேற்கொள்ள்ளப்படும் அழகுசாதன மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் தவிர்த்து பிற ழகுசாதன மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளுக்குக் காப்பீடு இல்லை .
  • ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியில் வீட்டில் மருத்துவ பராமரிப்பு வழங்குவது அல்லது புறநோயாளியாக இருப்பதற்கான செலவுகளுக்குக் காப்பீடு இல்லை.
  • குற்றச் செயலைச் செய்தல் அல்லது செய்ய முயற்சிப்பதால் ஏற்படும் செலவுகளுக்கான கிளைம்களுக்கு இதில் காப்பீடு அளிக்கப்படுவதில்லை.
  • போதைப்பொருள் பயன்பாட்டின் காரணமாக ஏற்படும் சிகிச்சைகள் ஆரோக்கிய பாலிசியில் காப்பீடு செய்யப்படவில்லை.
  • அபாயகரமான அல்லது சாகச விளையாட்டுகளில் பங்கேற்பது தொடர்பான மருத்துவச் செலவுகள் விலக்கப்பட்டுள்ளன.
  • மகப்பேறு தொடர்பான செலவுகள் இந்த பாலிசியில் சேர்க்கப்படவில்லை.
  • மலட்டுத்தன்மை மற்றும் கருவுறுதல் சிகிச்சைகள் உள்ளடக்கப்படவில்லை.
  • மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் அல்லது மருத்துவ ரீதியாக அவசியமில்லாத சிகிச்சைகள் இன்சூர் செய்யப்படாது.

கிளைமை எவ்வாறு தாக்கல் செய்வது?

ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைம்கள் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் 1800-258-4242 என்ற எண்ணில் எங்களுக்குத் தெரியப்படுத்தவும் அல்லது healthclaims@godigit.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். உங்கள் மருத்துவமனை கட்டணங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தையும் பதிவேற்றுவதற்கான இணைப்பை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்.

கேஷ்லெஸ் கிளைம்கள் - நெட்வொர்க் மருத்துவமனையைத் தேர்வு செய்யவும். நெட்வொர்க் மருத்துவமனைகளின் முழுமையான பட்டியலை இங்கே காணலாம். மருத்துவமனை உதவி மையத்தில் இ-ஹெல்த் கார்டைக் காட்டி, கேஷ்லெஸ் கிளைம்  படிவத்தைக் கேட்கவும். எல்லாம் சரியாக இருந்தால், உங்கள் கிளைம் அப்போதே செயல்படுத்தப்படும்.

நீங்கள் கொரோனா வைரஸுக்கு கிளைம் செய்துள்ளீர்கள் எனில், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனமான ICMR-ன் அங்கீகாரத்தைப் பெற்ற மையத்திலிருந்து நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதற்கான அறிக்கை உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியின் முக்கிய அம்சங்கள்

இன்சூர் செய்யப்பட்ட தொகை 3 லட்சம் முதல் 2 கோடி வரை
கோ-பேமெண்ட் 5% கட்டாய கோ-பேமெண்ட்
பிரீமியம் ஆண்டுக்கு ₹2414 முதல்*
ரூம் ரெண்ட் கேப்பிங் உங்கள் இன்சூரன்ஸ் தொகையில் 2% (5,000 வரை)
குமுலேட்டிவ் போனஸ் கிளைம் இல்லாத ஒவ்வொரு ஆண்டிற்கும் உங்களுக்கு இன்சூரன்ஸ் தொகையில் 5% கூடுதல் போனஸ்
கிளைம் ப்ராஸஸ் டிஜிட்டல் ஃப்ரெண்ட்லி, ஹார்ட்காப்பிகள் கிடையாது!
திட்டத்தில் உள்ள விருப்பங்கள் ஃபேமிலி ஃப்ளோட்டர்& இன்டிஜுவல் பாலிசி

ஆரோக்கிய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் ஸ்டாண்டார்ட் பெனிபிட்ஸ்

வாழ்நாள் முழுவதுமான புதுப்பித்தல் தன்மை

இந்த பாலிசியை வாங்குவதற்கான வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே என்றாலும், நீங்கள் சரியான நேரத்தில் புதுப்பித்து கொண்டே இருப்பதன் மூலம், இந்த பாலிசியை வாழ்நாள் முழுவதும் புதுப்பித்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியின் குறைந்த பிரீமியம்

இது ஐஆர்டிஏஐ-ஆல் நிர்ணயம் செய்யப்பட்ட பேசிக், ஸ்டாண்டர்ட் பாலிசி என்பதால், பிற ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுடன் ஒப்பிடும் போது பிரீமியம் குறைவாக உள்ளது.

குறைந்த கோ-பேமெண்ட்

ஒவ்வொரு ஹெல்த் இன்சூரன்ஸூக்கும் தனிப்பட்ட கோ-பேமெண்ட்கள் இருக்கிறது. சிலவற்றில் 10-20% கோ-பேமெண்ட் உள்ளது, சிலவற்றில் எந்த கோ-பேமெண்டும் இல்லை. இந்த பாலிசியில், குறைந்தபட்ச கோ-பேமெண்ட் 5% மட்டுமே உள்ளது; அதாவது கிளைம்களின் போது, நீங்கள் 5% செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இன்டிஜுவல் & ஃபேமிலி ஃப்ளோட்டர் கிடைக்கிறது

கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் வழங்கும் ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியானது இரண்டு திட்டங்களுடன் கிடைக்கிறது: அவை இன்டிஜுவல் ஹெல்த் பாலிசி (ஒரு குடும்ப உறுப்பினருக்கு ஒரு பாலிசி) மற்றும் ஃபேமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் இன்சூரன்ஸ் (முழு குடும்பத்திற்கும் ஒரு பாலிசி).

வரையறுக்கப்பட்ட இன்சூரன்ஸ் தொகை

ஆரோக்கிய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ், இன்சூரன்ஸ் தொகையை உங்களால் 3 லட்சத்தில் இருந்து 2 கோடி வரம்பிற்குள் மட்டுமே தேர்வு செய்யமுடியும்.

ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியை யார் வாங்க வேண்டும்?

முதல்-முறையாக ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பவர்கள்

ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசி நன்மைகள் அனைத்து இன்சூரர்களிடமும்  கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் உள்ளன. அதுமட்டுமின்றி, இது தற்போது சந்தையில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியாகவும் இருக்கின்றது. எனவே, நீங்கள் இளமை பருவத்தில் இருப்பவராகவும், இப்போதுதான் ஹெல்த் இன்சூரன்ஸில் உங்கள் பயணத்தைத் தொடங்குகிறீர்கள் எனும் பட்சத்திலும், உங்களுக்கு மொத்த காப்பீட்டு தொகை 5 லட்சத்திற்கும் மேல் தேவைப்படாத சூழ்நிலையில், நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்திற்கு அதிகமாக செலவிடுவதைத் தவிர்ப்பதற்கு, ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசி போன்ற ஒரு அடிப்படை ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்குவது சால சிறந்ததாக அமையும்.

கோவிட்-19 பாதுகாப்பை முதன்மையாக கருதும் மக்கள்

கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்ட காலத்திலிருந்து, அதனால் பாதிக்கப்படக்கூடும் என்று அஞ்சும் மக்கள் அதற்கான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்துக்கொள்ள அதிகமாக விரும்புகிறார்கள். நீங்களும் அத்தகைய பாலிசியைத் தேடுகிறீர்கள் என்றால், ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். கொரோனா வைரஸூக்கென இருக்கும் குறிப்பிட்ட திட்டங்களுக்கு ஆகும் செலவு போலவே தான் இதற்கும் செலவாகும். மேலும் ஒரு சிறப்பம்சமாக இத்திட்டத்தின் மூலம் கோவிட்-19உடன், மற்ற நோய்கள் மற்றும் குறைபாடுகளுக்கும் காப்பீடு அளிக்கப்படுகிறது. மற்றுமொரு சிறந்த அம்சம், ஒரு சில மாதங்களில் காலாவதியாகும் தனிப்பட்ட கொரோனா வைரஸ் திட்டங்களுடன் ஒப்பிடுகையில், இது வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கப்படும் பொன்னான வாய்ப்புடன் வருகிறது.

பேசிக், குறைந்த விலை ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேடும் மக்கள்

நீங்கள், உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸின்  மூலம் பாதுகாக்க விரும்பும் அதே சமயத்தில் உங்கள் வருடாந்திர ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்திற்கு அதிகமாகச் செலவழிக்க விரும்பவில்லை எனும் பட்சத்தில், நீங்கள் ஆரோக்கிய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்வுசெய்யலாம். இது தற்போது சந்தையில் கிடைக்கும் மிகவும் குறைந்த விலை விருப்பங்களில் ஒன்றாக இருக்கிறது.

ஆரோக்கிய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் எப்படி வாங்குவது?

ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியை ஆன்லைனில் வாங்குவது 123 படிப்பது போன்று மிகவும் எளிமையானது, அதன் படிகள் பின்வருமாறு:

படி 1: டிஜிட் வெப்சைட் அல்லது மொபைல் ஆப் பக்கத்திற்கு சென்று ஆரோக்கிய சஞ்சீவனி பக்கத்தில், உங்கள் மொபைல் எண் மற்றும் பின்கோடை உள்ளிடவும்.

படி 2: பாலிசியில் சேர்க்கப்படவேண்டியவர்கள், பிறந்த தேதி, விருப்பமான இன்சூரன்ஸ் தொகை, அடிப்படை மருத்துவத் தகவல் மற்றும் தொடர்பு விவரங்கள் போன்ற சில விவரங்களை உள்ளிடவும்.

படி 3: இந்தத் தகவலைப் பகிர்ந்தவுடன், இறுதியாக செலுத்த வேண்டிய கட்டணத்தைப் பெறுவீர்கள். மேலும், நீங்கள் கட்டணத்தை செலுத்த தொடரலாம். பிறகு, ஒரு சில நிமிடங்களிலேயே உங்கள் இன்பாக்ஸில் பாலிசியைப் பெறுவீர்கள்.

உங்கள் பாலிசியை புதுப்பிப்பது (ரினீவ் செய்வது) இன்னும் எளிமையாகிவிட்டது. நீங்கள் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் (அல்லது பாலிசி விவரங்கள்) உள்நுழைந்து, உங்கள் விவரங்களை உறுதிப்படுத்தி, பணம் செலுத்தினால் மட்டும் போதும். மிக சுலபம்!

கோ டிஜிட்டின் ஆரோக்கிய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஆரோக்கிய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் கொரோனா வைரஸ் தொற்றும் காப்பீடு செய்யப்படுகிறதா?

ஆம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான நன்மையின் கீழ் கொரோனா வைரஸ் காப்பீடு செய்யப்படும்.

கோ-டிஜிட், ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியை யார் வாங்கலாம்?

18 வயது முதல் 60 வயது வரை உள்ள எவரும் ஆரோக்கிய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க தகுதியுடையவர்கள்.

ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசி, கோ டிஜிட்டின் கீழ் அதிகபட்ச இன்சூரன்ஸ் தொகை எவ்வளவு?

ஆரோக்கிய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி கோ டிஜிட்டின் கீழ், நீங்கள் குறைந்தபட்சம் 3 லட்சம் மற்றும் அதிகபட்சம் 2 கோடி வரையிலான இன்சூரன்ஸை வாங்கலாம்.

இன்டிஜுவல் மற்றும் ஃபேமிலி ஃப்ளோட்டர் ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசிக்கு என்ன வித்தியாசம்?

டிஜிட்டில், ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியை தேர்வு செய்ய இரண்டு விருப்பங்கள் இருக்கிறது; உங்கள் முழு குடும்பத்தையும் ஒரே பாலிசி மூலம் பாதுகாக்கலாம், அதாவது ஃபேமிலி ஃப்ளோட்டர்  (அதிகபட்ச காப்பீடு தொகை 2 கோடி) அல்லது ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் இன்டிஜுவல்(தனிப்பட்ட) பாலிசியை வாங்கலாம். (நீங்கள் 3 லட்சம் முதல் 2 கோடி வரை இன்சூரன்ஸ் தொகையாக தேர்வு செய்யலாம்).

ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசிக்கு ஏதேனும் காத்திருப்பு காலம்(வெயிட்டிங் பீரியட்) உள்ளதா?

ஆம், இருக்கிறது. இந்த பாலிசியில் காத்திருப்பு காலம்(வெயிட்டிங் பீரியட்)  நோயின் வகையைப் பொறுத்து மாறுபடும்: 24 மாதங்கள் மற்றும் 48 மாதங்கள். அதாவது, சில நோய்களுக்கு, அந்த நோய்க்காகக் குறிப்பிடப்பட்ட காத்திருப்பு காலத்தை(வெயிட்டிங் பீரியட்) கடந்தால் மட்டுமே இன்சூரன்ஸ் செய்யப்படும்.

எனது தற்போதைய பாலிசியை ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசி, கோ டிஜிட்டிற்கு போர்ட் செய்ய முடியுமா?

ஆமாம், உங்களால் முடியும்!

கிளைம்களின் போது நான் பணம் செலுத்த வேண்டி இருக்குமா?

ஆம், பாலிசி நிபந்தனைகளின்படி, அனைத்து ஆரோக்கிய சஞ்சீவனி ஹெல்த் பாலிசிகளும் 5% கோப்பேமெண்டுடன் வருகின்றன.

ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியில், சிகிச்சைக்காகத் தங்கும் அறைக்கான வாடகை (ரூம் ரெண்ட் கேப்) வழங்கப்படுமா?

ஆம், அனுமதிக்கப்படும் போது நிலையான ரூம் ரெண்ட் 2% SI ஆக இருந்தாலும், அதிகபட்ச வரம்பு ஒரு நாளைக்கு ரூ. 5,000 ஆகும், பெரும்பாலான மருத்துவமனைகள் இந்த விலைக்கு நல்ல அறைகளை வழங்குகின்றன.

வழங்கப்பட்டவற்றை விட கூடுதல் கவரேஜ்களை பெற்றிட முடியுமா?

இல்லை, ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசி என்பது அதில் உட்படுத்தப்பட்டிருக்கும் ஸ்டாண்டர்ட் பெனிபிட்களுடன் மட்டுமே வருகிறது. இதில் உங்களால் ஆட்-ஆன்கள் அல்லது கவர்கள் எதையும் கூடுதலாக தேர்வு செய்யமுடியாது.

நிர்ணயிக்கப்பட்ட பிராக்கெட்களுக்கு மேல் எனது இன்சூரன்ஸ் தொகையை அதிகரிக்க முடியுமா?

இல்லை, ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, உங்கள் இன்சூரன்ஸ் தொகையை 3 லட்சத்தில் இருந்து 2 கோடி வரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்.

நான் கட்டாயமாக கோ-பேமெண்ட் செலுத்த வேண்டுமா?

ஆம், ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, கிளைம்களின் போது 5% கட்டாய கோ-பேமெண்ட் செலுத்த வேண்டும்.

டிஜிட்டின் ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியின், பாலிசி காலம் என்ன?

டிஜிட்டின் ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசிக்கான காலம் 1 வருடம். இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு உங்கள் கவரேஜ் தொடர வேண்டுமெனில், உங்கள் பாலிசியைப் புதுப்பிக்க வேண்டும்.

கோ-டிஜிட் வழங்கும் ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசிக்கான வயது வரம்பு மற்றும் தகுதி என்ன?

ஆம். இந்த பாலிசியின் கீழ், பெரியவர்களுக்கான நுழைவு வயது வரம்பு 18 வயது முதல் 60 வயது வரை. இது  ஃபேமிலி ஃப்ளோட்டர் திட்டத்தின் கீழிருக்கும் குழந்தைகளுக்கு 3 மாதங்கள் முதல் 25 ஆண்டுகள் ஆகும். இருப்பினும், புதுப்பித்தலுக்கு(ரினீவலுக்கு) வயது வரம்பு இல்லை.