ஆன்லைனில் ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குங்கள்
டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸூக்கு மாறுங்கள்.
Happy Couple Standing Beside Car
Chat with an expert

I agree to the  Terms & Conditions

Please accept the T&C
Port my existing Policy
Renew your Digit policy

(Incl 18% GST)

மகப்பேறு (மெட்டர்னிட்டி) ஹெல்த் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

மகப்பேறு (மெட்டர்னிட்டி) இன்சூரன்ஸ் என்பது தனிப்பட்ட அல்லது குடும்ப ஹெல்த் இன்சூரன்ஸில் ஒருவர் தேர்ந்தெடுக்கக் கூடிய‌ ஒரு ஆட்-ஆன் (மதிப்புக்கூட்டல்) கவராகும் (காப்பீடாகும்).‌ இதன் மூலம் மகப்பேறுக்கு ஏற்படும் அனைத்து செலவுகளையும் இன்சூரன்ஸ் கம்பெனி ஏற்றுக்கொள்கிறது.

தற்போது ஹெல்த் இன்சூரன்ஸை வைத்துள்ள அல்லது புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்-ஐ வைத்துள்ள எவரும், இந்த இன்சூரன்ஸை தங்களுக்கோ அல்லது தங்கள் துணைவிக்கோ தங்கள் பிளானோடு சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். எனவே உரிய சமயத்தில், குழந்தைப் பிறப்பின் போது ஏற்படும் அனைத்து மகப்பேறு செலவுகள் மற்றும்/அல்லது கர்ப்பகாலத்தின் போது ஏற்படும் எந்தவொரு சிக்கல்களுக்குமான சிகிச்சை சம்பந்தப்பட்ட செலவுகள் அல்லது மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு செய்யும் அவசியம் ஏற்படும் போது ஆகும் செலவுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுப் பாதுகாப்பளிக்கப்படும். மகப்பேறு சம்பந்தமாக ஏற்படும் அனைத்து செலவுகளையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம்.

கூடுதலாக, கருவுறுதிறன் பிரச்சினைகள் போன்றவற்றினால் ஏற்படும் செலவுகளுக்கும் இந்த கவர் காப்பீடு வழங்குகிறது. மேலும், பிறந்த குழந்தைக்கு ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டால், அக்குழந்தை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு ஆகும் செலவுகள், மற்றும் தடுப்பூசி கட்டணங்கள், போன்றவை பிரசவம் முடிந்து 90 நாட்கள் வரைக்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டு காப்பீடு வழங்கப்படுகிறது.

பொறுப்புத் துறப்பு: தற்போது, ​​டிஜிட்டில், நாங்கள் எங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் உடன் எந்த மெட்டர்னிட்டி இன்சூரன்ஸையும் வழங்கவில்லை

ஏனென்றால் இது போன்ற மகிழ்ச்சியான திருப்புமுனைகள் வாழ்க்கையில் அடிக்கடி நிகழ்வதில்லை.

இது உங்களுடைய முதல் அல்லது இரண்டாம் குழந்தை என எதுவாயினும், நீங்கள் உங்கள் வாழ்வில் அடுத்ததாக ஒரு பெரிய நிகழ்வுக்கு திட்டமிடுகிறீர்கள்; பெற்றோர் ஆகும் தருணம் துவங்குவது மற்றும் குழந்தையின் வருகை போன்றவை பெரும்பாலும் நம் வாழ்வின் மிக அழகான கட்டமாகவும், அதேசமயம் சவாலான கட்டமாகவும்  அமைந்து விடுகிறது. புதிதாக பெற்றோர் ஆகப்போகும் தம்பதியினர் பரபரப்பு மற்றும் நடுக்கம், உறுதியின்மை மற்றும் அமைதியின்மை, பதற்றம் மற்றும் திருப்தி போன்ற பல உணர்ச்சிகளை ஒரே நேரத்தில் எதிர்கொள்கிறார்கள்.

நீங்கள் கூடிய விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டிருந்தாலும், அல்லது ஏற்கனவே ஒரு குழந்தை இருந்து, இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினாலும், மகப்பேறு காலகட்டம், குழந்தைப் பிறப்பு மற்றும் இதனோடு தொடர்புடைய எல்லாமே சிறிது மன அழுத்தத்தைத் தரக் கூடியதாகவே பெரும்பாலும் அமைந்து விடுகிறது. உங்கள் மகப்பேறு பயணத்தில் உங்களுக்கு உதவவே நாங்கள் இருக்கிறோம். அதற்கான தருணம் வருவதற்கு முன்னரே நாங்கள் உங்களுடன் உள்ளோம். ஏனெனில், திட்டமிடப்படாதவைக்கு மட்டுமின்றி, திட்டமிடப்பட்டவைக்கும் முன்கூட்டியே திட்டமிடுவது எப்போதும் நல்லது.

Read More

இந்தியாவில் மகப்பேறு செலவுகளின் அதிகரிப்பு

Maternity Costs
பெரும்பாலான நகரங்களில் குழந்தையை பெற்றேடுப்பதற்கு சராசரியாக குறைந்தபட்சம் ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை செலவாகிறது.
C Section
இந்தியாவில், சிசேரியன் பிரசவங்களுக்கு ஆகும் செலவுகள் அதிகரித்து வருகின்றன, ரூ. 2 லட்சம் வரைக்கும் பல நகரங்களில் செலவாகிறது!
Pregnancy Test
இந்தியாவில் பெரும்பாலான தம்பதியர் குழந்தைப்பேற்றினால் ஏற்படும் நிதிச்சுமைகளை எண்ணி அச்சங்கொள்கின்றனர்.

மகப்பேறு கவரின் மூலம் யாரெல்லாம் பயனடையலாம்?

ஒருவர் தங்களுடைய ஹெல்த் இன்சூரன்ஸில் இந்த மகப்பேறு ஆட்-ஆன் கவரின் மூலம், கீழ்க்கண்ட விதிகளுக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே பலனடைய முடியும்:

நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கும் போது இந்த கவரை தேர்வு செய்திருந்தாலோ அல்லது பின்னாளில் இந்த கவரை சேர்த்திருந்தாலும் பலனடையலாம்.

பரிந்துரைக்கப்பட்ட காத்திருப்பு காலத்தை நீங்கள் முடித்திருந்தால், இந்த மெட்டர்னிட்டி இன்சூரன்ஸை நீங்கள் கிளைம் செய்து பயனடையலாம். 

நீங்கள் திருமணமானவராக இருந்து, 40 வயதிற்கு குறைவானவராக இருக்கும் பட்சத்தில் பலனடையலாம்.

நீங்கள் ஏற்கனவே 2 குழந்தைக பிரசவத்திற்கு இந்த கவரை உபயோகப்படுத்தியிருக்காத பட்சத்தில்.

மகப்பேறு இன்சூரன்ஸ் என்பது மக்களுக்கு சிறந்தது

1
புதுமணத் தம்பதிகள், குறைந்தபட்சம் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடுபவர்கள்
2
விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பவர்கள், மற்றும் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடுபவர்கள்
3
ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளவர்கள், குறைந்தபட்சம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அடுத்த குழந்தைக்கு திட்டமிடுபவர்கள்
4
உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்வதற்கு திட்டமிட்டிருக்காதவர்கள், எனினும் பாதுகாப்பாக இருக்க விரும்புபவர்கள்

இளம் தம்பதியருக்கு மகப்பேறு பெனிஃபிட் ஏன் முக்கியமாக கருதப்படுகின்றது?

பொருளாதார பாதுகாப்பு

பொருளாதார பாதுகாப்பு

உங்கள் வாழ்க்கையில் பெற்றோராகும் முக்கியமானதொரு தருணத்தில், இந்த கவரின் எடுத்துக்கொண்டதன் மூலம் பொருளாதார ரீதியாக நீங்கள் தைரியமாக இருக்கலாம். நீங்கள் உங்கள் சேமிப்பிலிருந்து செலவு செய்வதை தவிர்க்க உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸில் அடங்கியுள்ள மகப்பேறு பெனிஃபிட் கவர் உதவுகிறது. இதன் மூலம், நீங்கள் பிரசவத்தின் போது பதற்றமில்லாமல் இருப்பதோடு, நீங்கள் பெற்றோராகும் உங்களின் பொன்னான தருணத்தை முழுமையாக அனுபவித்து மகிழலாம்.

பெற்றோராக உங்கள் வாழ்க்கையை மன நிம்மதியுடன் தொடங்குங்கள்.

பெற்றோராக உங்கள் வாழ்க்கையை மன நிம்மதியுடன் தொடங்குங்கள்.

மகப்பேறு பெனிஃபிட் கவர் என்பது பிரசவம் நிகழும் சமயத்தில் ஏற்படும் செலவுகளை ஏற்றுக் கொண்டு பாதுகாப்பளிப்பது மட்டுமல்லாமல், உங்கள் குழந்தை பிறந்து முதல் 90 நாட்கள் வரை (எந்தவொரு மருத்துவ பிரச்சினைகள் மற்றும் அவசியமான தடுப்பூசிகளுக்கு ஆகும் செலவுகளையும் ஏற்றுக் கொள்ளும்) ஆகும் செலவுகளையும் ஏற்றுக் கொண்டு பாதுகாப்பளிக்கிறது. எனவே, நீங்கள் நிதானமாக பிரசவத்தினால் ஏற்படும் களைப்பிலிருந்து மீண்டு வந்து, உங்கள் வாழ்க்கை பயணத்தின் புதியதொரு துவக்கத்தை அனுபவிக்கலாம்.

அருமையான நீண்ட கால நன்மைகள்

மதிப்புமிக்க நீண்ட கால பயன்கள்

சில மெட்டர்னிட்டி இன்சூரன்ஸ்கள் உங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும் போது காப்பீட்டுத் தொகையில் கூடுதல் பலன்களை வழங்குகின்றன.

மருத்துவரீதியாக கருக்கலைப்பு அவசியமாக இருக்கும் பட்சத்தில் உதவுகின்ற கவர்

மருத்துவரீதியாக கருக்கலைப்பு அவசியமாக இருக்கும் பட்சத்தில் உதவுகின்ற கவர்

ஒரு வேளை அவசியம் ஏற்பட்டால், நீங்கள் மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான வாய்ப்பை இது அளிக்கிறது. நாங்கள் வழங்குகின்ற மகப்பேறு பெனிஃபிட் கவர் என்பது, மருத்துவ ரீதியாக அவசியமானதாக கருதப்படுகிற கருகலைப்பு மற்றும் சட்டப்படி அனுமதிக்கப்படும் கருக்கலைப்பிற்கான செலவுகளை ஏற்றுக் கொண்டு பாதுகாப்பளிக்கிறது.

மனநிம்மதி

மனநிம்மதி

மன அமைதி. நம் குழந்தைகள் நம் மகிழ்ச்சியின் பொக்கிஷமாவர்கள், மேலும் மகப்பேறு மருத்துவ செலவுகளைப் பற்றி கவலைப்பட்டு, தாய் ஆகும் சந்தோசத்தை உங்களிடமிருந்து பறிக்க நாங்கள் விரும்பவில்லை. ஒரு மெட்டர்னிட்டி கவர் உங்களுக்கு சரியான நேரத்தில் தோல் கொடுக்கும்!

மகப்பேறு கவருடன் கூடிய ஹெல்த் இன்சூரன்ஸை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்

மகப்பேறு இன்சூரன்ஸ் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்