“என்னுடைய ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் எப்படி கணக்கிடப்படுகிறது? “ என்ற கேள்வி பரவலாக கேட்கப்படுகிறது. பல்வேறு காரணிகளின் அடிப்படையில், உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கணக்கிடப்படுகிறது. அவை:
உங்கள் வயது: வயது வரம்புகள் ஏதும் இன்றி பெரியவர்கள், இளவயதினர்கள் வரை அனைவரும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.இதில் இளவயதினர் அதிக ஆரோக்கியத்துடன் இருப்பர். வயது எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, கிரிட்டிக்கல் இல்னஸ், மெட்டர்னிட்டி (பேறு காலத்திற்கான இழப்பீடு) போன்ற பலன்களை பெறுவதற்கான காத்திருப்பு காலமானது (வெயிட்டிங் பீரியட்) முடிப்பதற்கு நிறைய அவகாசம் கிடைக்கும். எனவே, நீங்கள் இளமையாக இருந்தால், உங்கள் பிரீமியம் குறைவாகத் தான் இருக்கும்! “இள வயதிலேயே ஹெல்த் இன்சூரன்ஸை பெற வேண்டும்” என்கிற ஆலோசனையை பலர் வழங்குவதற்கான காரணம் என்னவென்று இப்போது புரிகிறதா?
வாழ்க்கை முறை: இன்றைய சூழலில் அனைத்துமே வாழ்க்கை முறை பொறுத்து தான் அமைகிறது, அதை ஒப்புக்கொள்கிறீர்களா? அதுபோலத் தான், நமது உடல் ஆரோக்கியமும் நம்முடைய வாழ்க்கை முறை தேர்வுகளைப் பொறுத்து தான் இருக்கிறது. நல்ல வழக்கங்களோ அல்லது கெட்ட வழக்கங்களோ அவை உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கும்.
எனவே, தயவு செய்து உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் குறிப்பிடுங்கள். ஜிம்முக்கு செல்லும் பழக்கம் முதல் நீங்கள் புகைபிடிப்பவரா என்பது வரை அனைத்தையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் இங்கே தவறான விவரங்களை அளிக்க முயற்சித்தாலும், அது எதிர்காலத்தில் நீங்கள் கிளைம் செய்யும் போது கண்டுபிடிக்கப்படும், இதனால் உங்கள் கிளைமானது ஓட்டுமொத்தமாக ரத்து செய்யப்படலாம்!
ஏற்கனவே இருக்கும் நோய்கள் அல்லது அதன் நிலைகள்: நீங்கள் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்தாலோஅல்லது உங்களுக்கு அடிப்பட்டிருந்தாலோ உங்கள் முந்தைய பாலிசி காலத்திற்கு குறைந்தது 48 மாதங்களுக்கு முன்பு உங்களுக்கு ஏற்பட்ட அறிகுறிகள் போன்ற தகவல்களை நீங்கள் வாங்க/புதுப்பிக்க இருக்கும் உங்களின் இன்டிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் குறிப்பிட வேண்டும். நீங்கள் குறிப்பிட்டுள்ள நோய் அல்லது அடியின் தன்மை பொறுத்து உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் வேறுபடும்.
இடம் : உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் நீங்கள் வசிக்கும் இடத்தை பொறுத்து வேறுபடும். ஏன்னென்றால், ஒவ்வொரு நகரத்தின் மாசுபாடு நிலைகள், விபத்து, அபாயம் மற்றும் மருத்துவ செலவுகளும் வேறுபடுகின்றன. உதாரணத்திற்கு: வட இந்தியாவில் வசிக்கும் மக்கள் நுரையீரல் நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர், அங்கு அதிக அளவவிலான மாசுபாடு மற்றும் காற்றின் தரமும் குறைவு.
ஆட்-ஆன்கள் மற்றும் கவர்கள்: உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை உங்களுக்கும், நீங்கள் வாழ விரும்பும் வாழ்க்கைக்கும் பொருத்தமானதாக்க, உங்கள் இன்டிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி உங்களின் கூடுதல் பாதுகாப்பிற்காக குறிப்பிட்ட சில கவர்களை விருப்பத்தேர்வுகளாக அளிக்கிறது.
கிரிட்டிக்கல் இல்னஸ் கவர், மெட்டர்னிட்டி (பேறு காலத்திற்கான இழப்பீடு) மற்றும் இன்ஃபர்டிலிட்டி தொடர்பான செலவுகள் போன்ற பல கவர்கள் இதில் அடங்கும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் கவர்களை பொறுத்து உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம் மாறுபடும்.