2020 வரலாற்றில் ஒரு முக்கியமான காலமாக நினைவுகூறப்படும். நாம் அனைவரும் கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமி பற்றிய பயம் கொண்டதில் இருந்து இப்போது அதனுடன் எப்படி வாழ்வது என்பது வரை கற்றுக்கொண்டுள்ளோம். இன்று நாம் அனைவரும் சொல்வது போல் இதுதான் புதிய இயல்பு. ஆரோக்கியம் மற்றும் செல்வம் ஆகிய இரண்டிலும் நாம் நல்ல நிலையில் இருப்பதை உறுதிசெய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் அவசியமானது.
கொரோனா வைரஸ் ஒரு தொற்று வைரஸை உருவாக்கியது மட்டுமல்லாமல், நிதி உறுதியற்ற தன்மை மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை போன்ற பிற விளைவுகளையும் கொண்டு வந்துவிட்டது. இதன் அர்த்தம் நீங்கள் வைரஸ் மற்றும் பிற நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும், நிதி ரீதியாகப் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதாகும்.
அதனால்தான், முன்பை விட இன்று; கோவிட்-19க்கான ஹெல்த் இன்சூரன்ஸ் பெறுவது, கைகளைக் கழுவுவது போலவே அவசியமானதாகும்! கொரோனா வைரஸ் ஹெல்த் இன்சூரன்ஸானது, நீங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அப்போது உங்களுக்கு ஏற்படும் உடல்நலச் செலவுகளை நிர்வகிக்கவும், அத்தகைய நேரத்தில் நீங்கள் எந்த நிதி அவசரச் சூழலையும் எதிர்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்தவும் உதவும்.
இன்று, கோவிட்-19ஐ உள்ளடக்கிய பல ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் உள்ளன. சில ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் கொரோனா வைரஸ் உட்பட அனைத்து நோய்களையும் உள்ளடக்கும் வகையில் தனிப்பயனாக்கப்பட்டாலும், அவற்றில் கொரோனா கவச் கவர் போன்ற சில பாலிசிகள் கொரோனா வைரஸ் தொடர்பான சிகிச்சைகளை மட்டுமே உள்ளடக்கும்.
உங்கள் உடல்நலம் மற்றும் நிதித் தேவைகளின் அடிப்படையில், பாலிசிகள் ஒவ்வொன்றையும் பற்றி மேலும் அறிந்து கொண்டு, உங்கள் விருப்பங்களை மதிப்பீடு செய்து அதற்கேற்ப சரியான முடிவை நீங்கள் எடுக்கலாம்.