2035 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாகும், மேலும் சிகிச்சையின் செலவும் அதிகரிக்கும். யார் வேண்டுமானாலும், அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் குடும்ப வரலாற்றைப் பொருட்படுத்தாமல், புற்றுநோயால் பாதிக்கப்படலாம், நீங்கள் கேன்சர் இன்சூரன்ஸை வாங்குவது நல்லது, இதனால் நிதி என்று வரும்போது நீங்கள் குறைந்தபட்சம் மன அழுத்தமின்றி இருப்பீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, வரும்முன் காப்பதே சிறந்தது!
இப்போது நிம்மதி பெருமூச்சு விட வேண்டிய நேரம் வந்துவிட்டது. கேன்சர் டிரீட்மென்ட் இன்சூரன்ஸ் பொதுவாக பின்வரும் வகையான புற்றுநோய் வகைகளை உள்ளடக்கியது:
வாழ்க்கை மிகவும் சிக்கலானது. அதிர்ஷ்டவசமாக, உங்களுக்கான கேன்சர் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுப்பது எளிது!
கேன்சர் இன்சூரன்ஸ் பிளானை வாங்குவதற்கு முன்பு மனதில் கொள்ள வேண்டிய பயனுள்ள உதவிக்குறிப்புகள் இங்கே:
1. அதிக இன்சூரன்ஸ் தொகைக்குச் செல்லுங்கள் - ஏனெனில் புற்றுநோய் சிகிச்சையின் காலம் நீண்டது. எனவே, அதிக இன்சூரன்ஸ் தொகையை வழங்கும் கேன்சர் இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமானது.
2. உங்கள் பிளான் புற்றுநோயின் அனைத்து நிலைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் - கேன்சர் இன்சூரன்ஸ் பாலிசியின் விகிதங்கள் அதிகமாக இருந்தாலும், புற்றுநோயின் அனைத்து நிலைகளிலும் உங்களை உள்ளடக்கும் ஒரு பிளானை தேர்வுசெய்யுங்கள்.
3. பிளானானது பிரீமியம் தள்ளுபடி மற்றும் வருமான நன்மையை வழங்க வேண்டும் - புற்றுநோய் சிகிச்சையின் அதிக செலவு தவிர்க்க முடியாமல் உங்கள் வருமானத்தை பாதிப்புக்குள்ளாக்கலாம். எனவே, இந்த சூழ்நிலைகளில் ஃபைனான்ஸியல் பேக்அப்பாக செயல்படும் ஒரு பிளானை தேர்ந்தெடுங்கள்.
4. பாலிசியின் சர்வைவல் மற்றும் வெயிட்டிங் பீரியடின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பாருங்கள் - பாலிசியின் வெயிட்டிங் பீரியடை மீண்டும் சரிபார்க்கவும், அதாவது பாலிசி கவரேஜ் வழங்கத் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் காத்திருக்க வேண்டிய கால அளவை சரிபார்க்கவும். மேலும், அதிகபட்ச நன்மைகளைப் பெற பாலிசியின் சர்வைவல் பீரியடை சரிபார்க்கவும்.
5. குடும்ப உடல்நல வரலாற்றை சரிபார்க்கவும் - உங்களிடம் புற்றுநோய்க்கான குடும்ப வரலாறு இருந்தால் கேன்சர் இன்சூரன்ஸ் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். கேன்சர் இன்சூரன்ஸ் புற்றுநோய்க்கான பாதுகாப்பை மட்டுமே வழங்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஸ்கிரீனிங் செய்வது ஆபத்தை சிறப்பாக நிர்வகிக்க உதவும்.
6. டபுள் பாலிசி என்பது இரட்டை கவரேஜ் என்று அர்த்தமல்ல - ஒரு விரிவான ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானுடன் ஒரு தனி கேன்சர் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பது, நீங்கள் கேன்சர் பெனிஃபிட் பாலிசியைத் தேர்வு செய்யாவிட்டால், இரண்டு பிளான்களின் நன்மைகளையும் ஒரே நேரத்தில் பெற முடியும் என்று அர்த்தமல்ல. கேன்சர் பெனிஃபிட் பாலிசி எடுக்கப்பட்டால், வழக்கமான ஹாஸ்பிடலைஷேஷன் மற்றும் சிகிச்சை செலவுகள் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானின் கீழ் ஈடுசெய்யப்படுகின்றன, மேலும் கேன்சர் பெனிஃபிட் பிளானின் கீழ் ஒரு பெருந்தொகை கோரப்படலாம், இது மற்ற செலவுகளுக்கு உதவும்.
முக்கியமானது: கோவிட் 19 ஹெல்த் இன்சூரன்ஸில் உள்ள நன்மைகள் மற்றும் என்னென்ன கவர் செய்யப்படுகிறது என்பதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்