1.சுறுசுறுப்பாக இருத்தல் - வயது முதிர்ச்சியடைய, அடைய பலர் தான் அன்றாடம் செய்யும் விஷயங்களில் நிறுத்தும் ஒன்று, உடற்பயிற்சி! நேர்மையாக சொல்லப்போனால், அதுவே பல உடல் நல குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம். நீங்கள் இதை உங்களுக்காகவோ அல்லது உங்கள் பெற்றோருக்காகவோ படித்தாலும் - உடற்பயிற்சி என்பது முக்கியம். அது நடைபயிற்சி அல்லது யோகா போன்று எளிமையானதாக இருந்தாலும் கூட பரவாயில்லை. தினமும் குறைந்தது 15-20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது ஒருவரின் உடல் மற்றும் மன நலத்திற்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
2.ஆரோக்கியமான உணவு - நமது உணவுகள் நமது ஆரோக்கியத்தில் 70% பங்களிக்கிறது. நீங்களும் உங்கள் பெற்றோரும் சத்தான உணவை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதையும். குறிப்பாக அவற்றில் கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைய இருப்பதையும் உறுதி செய்துக்கொள்ளுங்கள். எண்ணெய் ஆகாரம், வறுத்த பொருட்கள் மற்றும் அதிகளவிலான பால் பொருட்களை தவிர்க்கவும்.
3. தடுப்பதில் கவனம் வேண்டும் - வருமுன் காப்பதே சாலச்சிறந்தது 😊 என்பது நாம் அனைவருக்கும் தெரியும். எனவே, அந்த வருடாந்திர ஹெல்த் செக் அப்க்கு செல்லுங்கள், மேலும் எப்போதும் உங்கள் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருந்திடுங்கள். விழிப்புடன் இருப்பது பல உடல்நல அபாயங்கள் மற்றும் நிலைமைகளைத் தவிர்க்க உதவும்.
4. உங்கள் மன நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள் - 65 வயதிற்கு மேற்பட்டவர்களில் 50% க்கும் அதிகமானவர்கள் ஏதோ ஒரு வகையான மனநோய் அல்லது மற்ற நோய்களை கடந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது. பாசிட்டிவ் மன நிலையை பராமரிக்க இருக்கும் எளிமையான படிகளை மேற்கொள்ளவும். வழக்கமான உடற்பயிற்சி, தியானம், தோட்டக்கலை, அல்லது ஏதேனும் ஒரு பொழுதுபோக்கை தெரிந்து கொள்வதன் மூலம் இதைச் செய்யலாம். மேலும், உங்கள் வயது முதிர்ந்த பெற்றோருக்கு ஏற்படும் மன அழுத்தம், பதட்டம் அல்லது வேறு வித மன நோய் அறிகுறிகளைக் எதிர்கொள்கிறீர்கள் என்றால், சரியான சிகிச்சை அல்லது ஆலோசனைக்காக சைக்காலஜிஸ்ட்டை சந்திக்கவும்.
5. பல் சிகிச்சைக்கு செல்லுங்கள் - வயது முதிர்ந்தவர்களுக்கு அவர்களது வாய் சார்ந்த ஆரோக்கியத்தில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவது பொதுவானது. எனவே டென்டல் அப்பாயின்மென்ட் எடுத்துக்கொண்டு ரெகுலரான டென்டல் செக் அப்களை செய்து கொள்ளவும்.
6. உறவினர்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் - பல சீனியர் சிட்டிஸன்ஸ் தனிமையில் வாடுவதில் எந்தவித ஆச்சரியமுமில்லை. இறுதியாக, மனிதன் ஒரு சமூக விலங்காக தான் கருதப்படுகிறான். சொல்லப்போனால், வேறு எதையும் விட அவர்கள் உறவுகளுடன் இணைந்திருப்பதும், மேலும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்திருப்பதும் முக்கியம். ஆரோக்கியமான உறவுகளை பராமரிப்பது என்பது ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு சிறந்த பயனளிக்கும்.
7. நன்றாக ஓய்வெடுக்கவும் - ஆழ்ந்த தூக்கம் என்பது ஒருவரின் மனநிலையை உடனடியாக அதிகரிக்கக்கூடியது. நீங்கள் அல்லது உங்கள் பெற்றோர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது எட்டு மணி நேரதிற்கான ஆழ்ந்த தூக்கத்தை பெறுதலை உறுதி செய்யவும்.
8. புகைபிடிப்பதை நிறுத்தவும் - நீங்கள் அல்லது உங்கள் பெற்றோர் புகைபிடித்தால், அந்த பழக்கத்தை நிறுத்துவதற்கான சரியான நேரமாக இது இருக்கலாம். புகைபிடித்தல் அவர்களின் வாழ்வின் எந்த நேரத்திலும் யாருக்கும் பயனுள்ளதாக நிரூபிக்கப்படவில்லை. எனினும், நாம் முதிர்ச்சியடையும் போது அதற்கான விளைவுகள் நம் உடல்களுக்கு மட்டுமே அதிக தீங்கு விளைவிக்கின்றன.
9. படிக்கவும் - நாம் முதுமை பருவத்தை அடைய அடைய, நமது நினைவுகள் பலவீனமடைகின்றன என்று ஒரு கட்டுக்கதை இருக்கின்றது. இருப்பினும், அது ஒரு கட்டுக்கதையாக மட்டுமே இருக்கிறது, அது அனைத்தும் நீங்கள் உங்கள் மூளைக்கு எவ்வளவு உடற்பயிற்சி கொடுக்கிறீர்கள் என்பதை பொறுத்தது. படிப்பது என்பது டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற நோய்களைத் தவிர்ப்பதற்கான அறிவியலால் நிரூபிக்கப்பட்ட தீர்வாக அமையும். ஏனெனில் இது நினைவகத்தை மேம்படுத்த உதவுகிறது, ஆனால் அறிவாற்றல், மன அழுத்தத்தைக் குறைத்தல், கவனத்தை அதிகரித்தல் மற்றும் பாசிட்டிவான மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வையும் அதிகரிக்கிறது.
10.நீரேற்றத்துடன் இருத்தல் - தண்ணீர்! நமது வாழ்க்கையின் மிக முக்கியமான பானம். இது நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்கவும் நச்சுகளை வெளியேற்றுவதற்கும் சிறந்த வழியாக அமைகிறது. நாங்கள் விளையாடிற்காக சொல்லவில்லை, ஆனால் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறோம்! நீங்களும் உங்கள் பெற்றோரும் ஒவ்வொரு நாளும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யுங்கள்.அதற்கு மேல் குடித்தால், இன்னும் சிறப்பு!