ஆன்லைனில் ஹெல்த் இன்சூரன்ஸை ஒப்பிட்டுப் பார்க்கவும்

டிஜிட் நிறுவனத்திலிருந்து தோராய மதிப்பீட்டினை பெற்று, மற்றவைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்
Happy Couple Standing Beside Car
Chat with an expert

I agree to the  Terms & Conditions

Please accept the T&C
Port my existing Policy
Renew your Digit policy

(Incl 18% GST)

இந்தியாவில் உள்ள ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களின் ஒப்பீடு

நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களை ஏன் ஒப்பிட வேண்டும்?

நீங்கள் உங்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸை தேர்வு செய்வதற்கு முன்னர், ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களை ஒப்பிட்டுப் பார்ப்பது மிக முக்கியமாகும். கீழ்க்கண்டவற்றை பெறுவதற்கு நீங்கள் பிளான்களை ஒப்பிட வேண்டும்:

நல்ல, கட்டுப்படியாகும் விலையில் பிரீமியம் பெறுவதற்கு

நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் வாங்கும் போது, அதன் விலை உங்களுக்கு கட்டுப்படியாகும்படி மலிவாக இருப்பது மிக முக்கியமாகும். இன்சூரன்ஸ் வழங்குநர்கள் பல்வேறு பிளான்களை வெவ்வேறு பிரீமியம் விலைகளில் வழங்குகின்றனர். நீங்கள் அந்த பிளான்களையும், பிரீமியத்தினையும் ஒப்பிட்டுப் பார்த்து, உங்களுக்கு ஏற்றது எது என்பதை கண்டறிய வேண்டும்.

தேவைக்கேற்றபடி இன்சூரன்ஸ் பிளானை பெறுவதற்கு

சந்தையில் ஒன்றுக்கு மேற்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளன. அவர்கள் தனிப்பட்ட அம்சங்களின் அடிப்படையில் வெவ்வேறு தயாரிப்புகளை வழங்குகின்றனர். முன்னரே ஹெல்த் பிளான்களை ஒப்பிட்டுப் பார்ப்பதின் மூலம் உங்கள் தேவையின் அடிப்படையில், நீங்கள் பிளானை தேர்ந்தெடுக்கலாம்.

கூடுதல் பெனிஃபிட்களை பெறுவதற்கு

ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை ஒப்பிட்டுப் பார்ப்பது, கூடுதல் பெனிஃபிட்களை பற்றி நீங்கள் மேலும் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமையும். உதாரணத்திற்கு, ஆம்புலன்ஸ் சேவை கட்டணம் வேறாக இருக்கலாம். சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஆயுஷ் (AYUSH), மாற்று குணப்படுத்தும் இயல்புடைய சிகிச்சைகள் போன்ற பெனிஃபிட்களையும் வழங்குகின்றன.

நன்கு ஆராய்ந்தறிந்த முடிவுகளை எடுப்பதற்கு

ஹெல்த் பாலிசிக்களையும், அதன் விதிகளையும் பற்றி அவற்றை ஒப்பீடு செய்து பார்க்கும் போது நீங்கள் நிறையவே தெரிந்து கொள்வீர்கள். காத்திருப்பு காலம் (வெயிட்டிங் பீரியட்), கிளைம் செய்யும் செயல்முறை, காப்புறுதியளிக்கப்படாத நோய்கள் போன்ற முக்கிய காரணிகளை பற்றி தெரிந்து கொள்வது அறிவுப்பூர்வமான முடிவுகளை எடுப்பதற்கு உதவும்.

ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது சரிபார்க்க வேண்டிய விஷயங்கள்

ஹெல்த் இன்சூரன்ஸை எப்படி ஒப்பிட்டுப் பார்ப்பது – ஆன்லைனிலா அல்லது ஆஃப்லைனிலா

ஆன்லைனில் ஒப்பிடுவது

ஆஃப்லைனில் ஒப்பிடுவது

படி 1: ஒப்பீட்டினை வழங்கக் கூடிய வெப் அக்ரிகேட்டர்கள் அல்லது நிறுவனங்களை கண்டறியவும். அல்லது நீங்கள் வெவ்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் ஆன்லைன் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரை பயன்படுத்தி, சுயமாகவே நீங்கள் ஒரு ஒப்பீட்டு விளக்கப்படத்தை தயார் செய்யலாம்.

படி 1: உங்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸை வழங்கக் கூடிய ஏஜெண்டினை கண்டறியவும். அந்த நபரை நேரில் சந்தித்து, உங்கள் தேவைகளை பற்றி விரிவாக எடுத்துரைக்கவும்.

படி 2: அந்த வலைப்பக்கம் உங்கள் ஊர் (ஸோன்), பிறந்த தேதி, நீங்கள் காப்புறுதி பெற விரும்பும் நபர்களின் எண்ணிக்கை, தொடர்பு கொள்வதற்கான தகவல்கள், மற்றும் இன்சூர் செய்யப்படும் தொகை போன்ற அவசியமான தகவல்களை கேட்கும். உங்கள் தகவல்களை அந்த வலைப்பக்கத்தில் பதிந்தவுடன், தோராய மதிப்பீடு (quote) உங்களுக்குக் கிடைக்கப்பெறும். அதற்கேற்றவாறு இன்சூரன்ஸ் நிறுவனத்தினையும், பிளானையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

படி 2: உங்கள் வயது, ஏற்கனவே இருக்கும் நோய்கள், கிரிட்டிக்கல் இல்னஸ், மெடிக்கல் ஹிஸ்டரி, ஃபேமிலி ஹிஸ்டரி, இன்சூரன்ஸ் தொகை போன்ற அனைத்து விவரங்களையும் ஏஜெண்டிடம் அளிக்கவும். நீங்கள் வழங்கிய தகவல் சரியானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

படி 3: ஏற்கனவே இருக்கும் நோய்கள், பொதுவான அறிகுறிகள், மருந்துகள் அல்லது இணை மருந்துகள் போன்றவற்றை பற்றி இன்சூரன்ஸ் நிறுவனம் கேட்கும். அப்படி ஏதேனும் இருப்பின், பிரீமியம் தொகை பாதிக்கப்படும்.

படி 3: வெவ்வேறு இன்சூரர்களிடமிருந்து தோராய மதிப்பீடுகளை (quotes) பெற்று, ஏஜெண்ட் உங்களிடம் வழங்குவார். அதனை முழுமையாக வாசித்து பார்த்து, அதற்கேற்றவாறு இன்சூரன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்யவும்.

படி 4: மேற்கொண்டு உங்கள் பெயர், வயது, பாலினம் மற்றும் எடை போன்ற உங்கள் தனிப்பட்ட விவரங்களை நீங்கள் வழங்க வேண்டியிருக்கும். இந்த நடைமுறையை பூர்த்தி செய்வதற்கு சில தனிப்பட்ட தகவல்களையும் இது கேட்கும்.

-

ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களை ஆன்லைனில் ஒப்பிடுவது சிறந்ததா அல்லது ஆஃப்லைனில் ஒப்பிடுவது சிறந்ததா?

ஆன்லைன்

ஆஃப்லைன்/ஏஜெண்ட்

நேரத்தை மிச்சப்படுத்தும்

ஆன்லைனில் ஹெல்த் இன்சூரன்ஸை ஒப்பிடுவது நிறைய நேரத்தை மிச்சப்படுத்தும்.

உங்கள் ஏஜெண்டை ஒப்பீடு செய்வதற்கு கேட்பதற்கு அதிக நேரமெடுக்கும்.

சிக்கனமானது

இடைத்தரகர்கள் யாருமில்லாததால் ஆன்லைன் ஒப்பீடு சிக்கனமானது. மேலும் நிர்வாக செலவுகளும் குறையும்.

ஒப்பீடு செய்வதற்கு ஏஜெண்டிற்கு கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கும். இன்சூரரிடமிருந்து தோராய மதிப்பீட்டினை பெறுவதற்கும் நிர்வாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

நடுநிலையான முடிவு

இடைத்தரகர் இல்லாததால், ஆன்லைனில் ஒப்பிடும் போது நீங்கள் ஒரு சார்பான அல்லது பிறர் தாக்கத்தின் காரணமாக முடிவெடுப்பதற்கு வாய்ப்பே இல்லை.

ஆஃப்லைனில் ஒப்பிடும் போது, ஒரு சார்பாக முடிவெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். ஏஜெண்ட் தனக்கு அதிக கமிஷன் கிடைக்கும் ஹெல்த் பிளானை பரிந்துரைப்பதற்கு முயற்சி செய்யலாம்.

காப்புறுதி பற்றிய விழிப்புணர்வு

ஆன்லைனில் ஒப்பிடும் போது, பிளானை பற்றிய அனைத்து தகவல்களையும் நீங்கள் வலைதளத்தில் பார்க்கலாம். மேலும் வாடிக்கையாளர் சேவையிடம் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.

மேலும், ஹெல்த் பிளானை ஆஃப்லைனில் அல்லது ஏஜெண்ட் மூலமாக ஒப்பிடும் போது, சம்பந்தப்பட்ட சில தகவல்களை ஏஜெண்ட் பகிர்ந்து கொள்வதற்கு தவறி விடக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

சௌகரியம்

ஹெல்த் பிளான்களின் தோராய மதிப்பீடுகளை ஆன்லைனில் ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் சௌகரியமானது.

தோராய மதிப்பீட்டினை ஒப்பீடு செய்வதற்கு ஏஜெண்டினை கேட்டுக் கொள்வது மிக சிரமமானது.

ஆன்லைனில் ஹெல்த் இன்சூரன்ஸை ஏன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்?

உணவிலிருந்து கேப்கள் வரை மற்றும் மளிகை பொருட்களிலிருந்து பாலிசிக்கள் வரை எல்லாமே ஆன்லைனில் கிடைக்கின்றன. ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது ஒப்பிட்டுப் பார்ப்பதை வசதியாக்கி விட்டது. ஒரே இயங்குதளத்தில் உங்கள் விரல்நுனியிலேயே, பல விருப்பத் தேர்வுகளை நீங்கள் ஆய்வு செய்து பார்க்கலாம். ஹெல்த் இன்சூரன்ஸ் என்று வரும் போது, நீங்கள் அதனை ஆன்லைனில் கீழ்க்கண்டவாறு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்:

ஜீரோ முதலீடு

ஆன்லைனில் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களை ஒப்பீடு செய்து பார்ப்பதற்கு உங்களுக்கு ஜீரோ முதலீடு தான் தேவைப்படும். பல தகவல்களை வழங்கக் கூடிய இன்சூரன்ஸ் வழங்குநர் அல்லது அக்ரிகேட்டர் வலைதளங்களில் நீங்கள் தேடி பார்த்தால் போதுமானது. இத்தகைய வெப் அக்ரிகேட்டர்கள் தொகுக்கப்பட்டப் தகவல்களை வழங்குகின்றனர். இது ஒப்பீட்டினையும், ஆய்வினையும் எளிதாக்குகிறது.

இன்சூரன்ஸ்/ஏஜெண்ட் அலுவலகத்தில் காத்திருக்க தேவையில்லை

நீங்கள் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க விரும்புகிறீர்கள், நல்லது! ஆனால் நீங்கள் இரு வேறு தயாரிப்புகளை எப்படி ஒப்பிடுவீர்கள்? இன்சூரன்ஸ் நிறுவனம்/ஏஜெண்ட் அலுவலகத்திற்கு நேரடியாக சென்றோ அல்லது ஆன்லைனிலோ செய்ய வேண்டும். ஏற்கனவே வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் இடையே நீங்கள் ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், நீங்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து செல்லுகின்ற நேரத்தை ஆன்லைனில் ஒப்பிட்டுப் பார்ப்பதால் மிச்சப்படுத்தலாம்.

மறைக்கப்பட்ட தகவல்கள் இல்லை

ஹெல்த் இன்சூரன்ஸை ஆன்லைனில் ஒப்பிடுவதன் சிறப்பான அம்சமே அதன் வெளிப்படைத்தன்மை தான். மறைக்கப்பட்ட தகவல்கள் ஏதும் இல்லை. ஏஜெண்ட்டுகள் அல்லது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முக்கியமான தகவல்களை தெரிவிப்பதற்கு தவறிவிடலாம். ஆன்லைனில் ஒப்பீடு செய்யும் போது இது நேராது.

நேரத்தை மிச்சப்படுத்துகிறது

வெப் அக்ரிகேட்டர்களின் மூலமாக ஆன்லைனில் ஹெல்த் இன்சூரன்ஸை ஒப்பிடுவதால் உங்களுக்கு நேரம் மிச்சமாகும். ஏதேனும் நிறுவனத்தின் பிரதிநிதி அல்லது ஏஜெண்டிற்காக நீங்கள் காத்திருக்க தேவையில்லை. உங்கள் தகவல்களை உள்ளிட்டு, பின்னர் ஒப்பீடுகளை வாசிக்கவும். அக்ரிகேட்டர்களை தவிர்த்து, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்குகிற ஆன்லைன் ஹெல்த் இன்சூரன்ஸ் கால்குலேட்டரை நீங்கள் பயன்படுத்தலாம். சுயமாகவே நீங்கள் ஒப்பீட்டு விளக்கப் படத்தை உருவாக்கலாம்.

நீங்கள் அனைத்து ஹெல்த் இன்சூரன்ஸையும் ஒப்பிடவில்லையெனில் என்ன ஆகும்?