ஓபிடி (OPD) கவருடன் கூடிய ஹெல்த் இன்சூரன்ஸ்

Digit

No Capping

on Room Rent

24/7

Customer Support

Zero

Co-payment

Zero Paperwork. Quick Process.
Your Name
Mobile Number

No Capping

on Room Rent

24/7

Customer Support

Zero

Co-payment

ஓபிடி (OPD)-யின் நன்மைகள் யாவை?

எல்லா நோய்களுக்கும் அல்லது காயங்களுக்கும் நாம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆம், ஆலோசனைகள், நோயறிதல் மற்றும் சிகிச்சைகள் போன்றவற்றை மருத்துவமனையில் தங்காமலேயே விரைவாகவும் நம் வசதிக்கு ஏற்பவும் செய்து கொள்ளலாம். ஹெல்த்கேர் உலகில், இது ஓபிடி (OPD) அதாவது 'அவுட்-பேஷண்ட் டிபார்ட்மெண்ட் (வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு) என்று அழைக்கப்படுகிறது.

எனவே, ஓபிடி (OPD) கவர் என்ன செய்கிறது என்றால், உங்கள் உடல்நிலைக்கு ஏற்ப, உங்களுக்குத் தேவைப்படும் ஓபிடி (OPD) சிகிச்சையின் மூலம் ஏற்படும் மருத்துவக் கட்டணங்களை அது கவனித்துக்கொள்கிறது.

ஏதேனும் உடல் நலக்கோளாறு அல்லது காயத்திற்கான உங்கள் மருத்துவரின் ஆலோசனைகள் அல்லது உங்கள் பல் மருத்துவர் அறிவுறுத்திய ரூட் கேனால் சிகிச்சை போன்ற உங்கள் மருத்துவரின் அனைத்து விதமான ஆலோசனைகளும் இதில் அடங்கும். உங்கள் தனிப்பட்ட உடல்நலப் பயணத்தில் ஏற்படும் இந்த ஏற்றத் தாழ்வுகள் அனைத்துமே ஓபிடி (OPD)-யின் கீழ் வருகின்றன.

Read More

நான் ஏன் ஓபிடி (OPD) கவருடனான ஹெல்த் இன்சூரன்ஸைப் பெற வேண்டும்?

ஏன் என்று தெரியவில்லையா? தொடர்ந்து படிக்கவும்…

OPD Expenses

இந்தியாவில் ஓபிடி (OPD) செலவுகள் மொத்த ஹெல்த் கேர் செலவுகளில் 62% வரை உள்ளது. (1)

 

Treatment
மருத்துவர் கிளினிக்குகளுக்கான வருகைகள் 2017-இல் 2.7 மடங்கிலிருந்து 2018-இல் 3.2 மடங்காக அதிகரித்துள்ளது. (2)
Health Guard
ஆய்வின்படி, உடற்பயிற்சி செய்வதனால் ஏற்படும் காயங்களில் மிக அதிகமாக மற்றும் பெதுவாக ஏற்படும் காயங்களில் ஒன்று முழங்கால் காயங்களே ஆகும். (3)

ஓபிடி (OPD) கவருடனான டிஜிட்டல் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பற்றிய சிறந்த விஷயம் என்ன?

 •  எளிதான ஆன்லைன் செயல்முறைகள் - ஓபிடி (OPD) கவருடன் கூடிய ஹெல்த் இன்சூரன்ஸை வாங்குவதிலிருந்து கிளைம்கள் செய்வது வரை, அனைத்துமே காகிதமில்லாத, எளிதான, விரைவான மற்றும் தொந்தரவில்லாத செயல்முறையாகும்! கிளைம்களுக்கு கூட எந்த ஹார்டு காப்பீஸும் தேவை இல்லை!
 • தொற்றுநோய்களையும் கவர் செய்கிறது - 2020 நமக்கு எல்லாம் கற்பித்த முக்கியமான பாடம் என்னவென்றால், எதிர்பாராததை எதிர்பார் என்பது தான்! கோவிட்-19 அல்லது வேறு எந்த வைரஸாக இருந்தாலும், அதன் மூலம் பரவும் தொற்றுநோய்கள் அனைத்தும் இதன் மூலம் கவர் செய்யப்படும்!

   

 • வயது அடிப்படையிலான கோப்பேமெண்ட் இல்லை - எங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் வயது அடிப்படையிலான கோப்பேமெண்ட் இல்லாமல் வருகிறது. இதன் பொருள், உங்கள் கிளைமின் போது- உங்கள் பாக்கெட்டில் இருந்து நீங்கள் எதையும் செலுத்த வேண்டியதில்லை.
 • அறை வாடகைக்கான கட்டுப்பாடு இல்லை - ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விருப்பத்தேர்வுகள் உள்ளன, அதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதனால்தான், எங்களுக்கு அறை வாடகைக்கான கட்டுப்பாடுகள் இல்லை. நீங்கள் விரும்பும் எந்த மருத்துவமனை அறையை வேண்டுமானாலும் தேர்வு செய்யவும்.

   

 •  குமுலேட்டிவ் போனஸ் - ஆரோக்கியமாக இருப்பதற்கான வெகுமதி! வருடாந்திர குமுலேட்டிவ் போனஸ் கிடைக்கும்.
 • எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் சிகிச்சை பெறலாம் - பணமில்லா கிளைம்கள் அல்லது இழப்பீடுகளைக் கோர இந்தியாவில் உள்ள எங்கள் 10500+ நெட்வொர்க் மருத்துவமனைகளில் இருந்து எதனை வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

ஓபிடி (OPD) கவருடனான டிஜிட்டல் ஹெல்த் இன்சூரன்ஸில் என்ன கவர் செய்யப்படுகிறது?

ஸ்மார்ட் + ஓபிடி

10% சிபி (CB) ஒவ்வொரு கிளைம் ஃப்ரீ ஆண்டிற்கும் (50% வரை)

கவர் செய்யப்படாதது எது?

கிளைமை எவ்வாறு தாக்கல் செய்வது?

 •  திரும்பி பெறும் கிளைம்கள் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் 1800-258-4242 என்ற எண்ணில் எங்களுக்குத் தகவல் தெரியப்படுத்தவும் அல்லது healthclaims@godigit.com என்ற இமெயில் ஐடி-க்கு இமெயில் செய்யவும். திரும்ப பெரும் செயல்முறைக்கு உங்கள் மருத்துவமனை பில்கள் மற்றும் அது தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தையும் பதிவேற்றுவதற்கான லிங்கை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்.
 • கேஷ்லெஸ் கிளைம்கள் - நெட்வொர்க் மருத்துவமனையைத் தேர்வு செய்யவும். நீங்கள் நெட்வொர்க் மருத்துவமனைகளின் முழுமையான பட்டியலை இங்கே காணலாம். மருத்துவமனை உதவி மையத்தில் இ-ஹெல்த் கார்டைக் காட்டி, கேஷ்லெஸ் கிளைம்ஸ் படிவத்தைக் கேட்கவும். எல்லாம் சரியாக இருந்தால், உங்கள் கிளைம் அப்போதே செயல்படுத்தப்படும்.
 • நீங்கள் கொரோனா வைரஸுக்கு கிளைம் எழுப்பியுள்ளீர்கள் எனில், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனமான ஐசிஎம்ஆர்-ன் (ICMR) அங்கீகரிக்கப்பட்ட மையத்திலிருந்து நோய் இருப்பதற்கான சோதனை அறிக்கை உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஓபிடி (OPD) கவருடன் கூடிய ஹெல்த் இன்சூரன்ஸை யார் வாங்க வேண்டும்?

ஃபிட்னஸ் ஆர்வலர்கள்

ஃபிட்னஸ் ஆர்வலர்கள்

ஃபிட்னஸ் ஆர்வலர்களுக்கான ஓபிடி கவருடனான ஃபிட் ஆப்ஷன் எனப்படும் ஹெல்த் இன்சூரன்ஸை நாங்கள் தனிப்பயனாக்கியுள்ளோம், அதீத ஃபிட்டாகவும், நோய் ஏற்படும் அபாயம் குறைவாகவும் இருக்கும் சிலர் உடற்பயிற்சி சார்ந்த காயங்களுக்கு ஆளாகிறார்கள். அவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடும். கூடுதலாக, உங்கள் வருடாந்திர வரிச் சேமிப்பிலும் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் உங்களுக்கு எப்போதும் உதவும்.

25-40 வயதுக்கு உட்பட்டு இருப்பவர்கள்

25-40 வயதுக்கு உட்பட்டு இருப்பவர்கள்

இன்று பெரும்பாலான இளைஞர்கள், காத்திருப்பு காலத்தை விரைவில் முடிக்கவும், நிச்சயமாக, வரியை மிச்சப்படுத்தவும், மலிவான பிரீமியங்களைக் கொடுக்கும் ஹெல்த் இன்சூரன்ஸைத் தேர்வு செய்கிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவராக இருந்தால்- ஓபிடி (OPD) கவருடன் கூடிய ஹெல்த் இன்சூரன்ஸைத் தேர்வுசெய்யலாம். இந்த வழியில், உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸில் இருந்து மற்ற பலன்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தாலும், உங்கள் ஓபிடி (OPD) பயன் ஏதாவது ஒன்றுன்றுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்கள்

ஹெல்த் இன்சூரன்ஸ் அதிகம் தேவைப்படும் நபர்களில் மூத்த குடிமக்களும் அடங்குவர். எவ்வாறாயினும், வழக்கமான ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குவதைத் தவிர, முதியவர்களுக்கு பொதுவாக பல சிகிச்சைகள் மற்றும் சிறிய அறுவை சிகிச்சைகள் போன்ற ஓபிடி (OPD) சிகிச்சைகள் தேவைப்படுவதால், ஓபிடி (OPD) கவருடன் ஒரு இன்சூரன்ஸை எடுத்துக்கொள்வதைக் கருத்தில் கொள்வது அவசியம். எனவே, ஓபிடி (OPD) கவருடன் கூடிய ஹெல்த் இன்சூரன்ஸ், வழக்கமான ஹெல்த் இன்சூரன்ஸ்ப் பலன்கள் மற்றும் ஓபிடி (OPD) சிகிச்சைகள் ஆகிய இரண்டையும் காப்பீடு செய்ய உதவும்.

லிமிடெட் குரூப் மெடிக்கல் இன்சூரன்ஸ் கவரேஜ் உடைய ப்ரொபஷனல்கள்

லிமிடெட் குரூப் மெடிக்கல் இன்சூரன்ஸ் கவரேஜ் உடைய ப்ரொபஷனல்கள்

நீங்கள் ஏற்கனவே பணிபுரியும் நிறுவனத்திலிருந்து குரூப் மெடிக்கல் இன்சூரன்ஸை பெற்றிருந்தும், சிறந்த பாதுகாப்பிற்காக கூடுதல் மெடிக்கல் இன்சூரன்ஸ் விண்ணப்பிக்க விரும்பினால், நீங்கள் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் அல்லது ஓபிடி (OPD) கவருடன் கூடிய ஹெல்த் இன்சூரன்ஸைத் தேர்வுசெய்யலாம். குரூப் மெடிக்கல் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஓபிடி (OPD)-யின் பயன்கள் அடங்காது. எனவே, கூடுதல் ஹெல்த் இன்சூரன்ஸ் உங்கள் நிறுவனத்தின் திட்டத்தைத் தாண்டி பலன்களைத் தருவதோடு, உங்கள் வருடாந்திர வரியை சேமிக்கவும் உதவும்!

ஓபிடி (OPD) கவருடனான ஹெல்த் இன்சூரன்ஸைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்