ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியானது மருத்துவத் தேவை ஏற்படும் போது, நிதி ரீதியான பாதுகாப்பை வழங்க உதவுகிறது. பெரும்பாலான இன்சூரன்ஸ் வழங்குநர்கள் சரிபார்ப்பு மற்றும் பிரீமியம் கட்டணங்களுக்கு உட்பட்டு ஆன்லைனிலேயே அத்தகைய பாலிசிகளை வழங்குகின்றனர்.
உங்கள் தேவைகளுக்கு ஏற்ற ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள செயல்முறையை நீங்கள் பின்பற்றலாம். முதலில், மேலே உள்ள காரணிகளைப் படித்து உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநரைத் தேர்ந்தெடுக்கவும்.
உதாரணத்திற்கு, உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநராக நீங்கள் டிஜிட்-ஐத் தேர்வு செய்தால், ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள படிகளைப் பின்பற்றலாம்:
- படி 1 - அவர்களின் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தைப் பார்வையிடவும், உங்கள் பின் கோடை (உங்கள் நகரத்திற்காக) உள்ளிட்டு, உங்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசி தேவைப்படும் உறுப்பினர்களைத் தேர்வு செய்யவும். இந்நிலையில், நீங்கள் உங்கள் பெற்றோருக்கு பொருந்தும் விருப்பங்களை தேர்வு செய்ய வேண்டும்.·
- படி 2 - அடுத்து, உங்கள் தாயின் மற்றும் தந்தையின் பிறந்த நாள் போன்ற விவரங்களை உள்ளிடவும்.·
- படி 3 - தொடர்புக்கொள்ள வேண்டிய/கான்டாக்ட் விவரங்களை உள்ளிடவும்.·
- படி 4 - உறுதியளிக்கப்பட்ட கூட்டுத் தொகையைத் தேர்வு செய்யவும்.·
- படி 5 - தேவையான தனிப்பட்ட விவரங்களை நிரப்பவும்.·
- படி 6 - பாலிசி பிரேக்-அப்பை சரிபார்ப்பது போன்ற அனைத்து விவரங்களையும் மதிப்பாய்வு செய்யவும்
- படி 7 - ஆன்லைனில் பிரீமியம் செலுத்தவும்.
இந்த படிகள் அனைத்தும் முடிந்தவுடன், அனைத்து விவரங்கள் மற்றும் ஆவணங்கள் (ஏதேனும் இருந்தால்) சரிபார்க்கப்பட்டவுடன், உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி விரைவில் செயல்படுத்தப்படும். நாட்டில் அதிகரித்து வரும் மருத்துவ செலவுகள் மற்றும் சில்லறை பணவீக்கம் ஆகியவற்றினால், உங்கள் பெற்றோருக்கு ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுப்பது முக்கியமானது. விரிவான மருத்துவ சிகிச்சைத் தொடர் மற்றும் பல ஆட்-ஆன் பெனிபிட் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள மருத்துவக் கட்டணங்களை எளிதில் கையாண்டு அவர்களின் ஆரோக்கியத்தை நன்றாக பாதுகாக்க முடியும்.