ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை குறைப்பது எப்படி

விபத்து, நோய் மற்றும் கோவிட்-19 முதலியவை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது ஏற்படக்கூடிய செலவுகள் யாவும் டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸில் அடங்கும்.

I agree to the  Terms & Conditions

Port my existing Policy

உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை குறைப்பது பற்றிய அனைத்து விவரங்களும் இதோ

உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை குறைக்க 9 வழிகள்

கோ–பேமெண்ட்

டிடக்டபிள்

கோ- இன்சூரன்ஸ்

கோ–பேமெண்ட் என்பது உங்களின் சிகிச்சைக்கு ஆகும் செலவில் நீங்கள் குறிப்பிட்டத் தொகை கட்ட வேண்டியிருக்கும் அதே சமயம் கிளைம் செட்டில்மெண்ட்டின் போது உங்கள் இன்சூரன்ஸ் பாலிசி மீதமுள்ள தொகையை கவர் செய்யும்.

டிடக்டபிள் என்பது இன்சூரன்ஸ் பாலிசியின் பயனை அனுபவிப்பதற்கு முன்பு சிகிச்சைக்கு ஆகும் செலவுகளுக்கான நீங்கள் கட்ட வேண்டிய நிலையான தொகையே ஆகும்.

சில நேரங்களில் இன்சூரன்ஸ் வழங்குநர்களால் கோ–பேவிற்கு பதிலாக கோ- இன்சூரன்ஸ் பயன்படுத்தப்படுகிறது.

கோ–பே என்பது நிர்ணயிக்கப்பட்ட தொகை ஆகும். ஆனால், சேவைகளுக்கு ஏற்றார் போல இந்தத் தொகையானது மாறுபடும்.

இறுதியில், உங்கள் பில்-ன் பெரும் பகுதியை இந்த இன்சூரன்ஸ் பாலிசி கவர் செய்யும்.

கோ- இன்சூரன்ஸில், ​​சிகிச்சைக்கு ஆகும் செலவில் ஒரு நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தை நீங்கள் கட்ட வேண்டியிருக்கும். அதே சமயம் இன்சூரன்ஸ் நிறுவனமானது மீதமுள்ள தொகையை ஈடுசெய்யும். மேலும், கோ- இன்சூரன்ஸில் தொகையானது நிர்ணயிக்கப்படவில்லை.

இது போன்ற செலவை பகிர்ந்து கொள்ளும் பிளான்களை தேர்வு செய்வதன் மூலம் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியத்தை குறைக்கலாம் என்பதை நீங்கள் இப்பொழுது அறிந்து கொண்டிருப்பீர்கள்.

மேலும், இதிலிருந்து அதிக பலனை அனுபவிக்க, இந்த இது போன்ற செலவை பகிர்ந்து கொள்ளும் வசதியை அளிக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

 ஏனென்றால், நீங்கள் கோ–பே, டிடக்டபிள் ஆகியவற்றிருக்கு சரியான தொகையை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் உங்கள் பிரீமியத் தொகையில் நீங்கள் சேமித்ததைக் காட்டிலும் உங்கள் சிகிச்சைச் ஆகும் செலவில் அதிகமாக செலுத்தும் நிலை ஏற்படலாம்.

கோ–பே, கோ- இன்சூரன்ஸ் மற்றும் டிடக்டபிள் இடையே உள்ள வேறுபாடு பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்

ஸோன் A

ஸோன் B

ஸோன் C

டெல்லி/என்சிஆர்(NCR), மும்பை (நவி மும்பை, தானே மற்றும் கல்யாண் உட்பட)

ஹைதராபாத், செகந்திராபாத், பெங்களூர், கொல்கத்தா, அகமதாபாத், வதோதரா, சென்னை, புனே மற்றும் சூரத்

A & B இல் பட்டியலிடப்பட்டுள்ள நகரங்கள் தவிர அனைத்து நகரங்களும் மண்டலம் C க்கு சொந்தமானவை

தோராயமாக ₹6,448 பிரீமியம்

தோராயமாக ₹5,882 பிரீமியம்

சுமார் ஒரு பிரீமியம் ₹5,315

எனவே, நீங்கள் வசிக்கும் ஸோன்-க்கான சரியான பாலிசியை வாங்குவது அவசியம் ஆகும். உதாரணத்திற்கு, நீங்கள் ஸோன் B அல்லது Cயில் இருக்கும் ஒரு நகரத்தில் வசிக்கிறீர்கள் என்றால், ஸோன் Aக்கான பாலிசியை வாங்காதீர்கள். ஏன்னென்றால் நீங்கள் பிரீமியத்திற்காக அதிக பணம் செலுத்த வேண்டிய்இருக்கும். எனவே, உங்கள் பாலிசிக்கான சரியான ஸோனை தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் பிரீமியத் தொகையிலிருந்து திறம்படச் சேமிக்கலாம்.

அளவுருக்கள்

தனிநபர் (இன்டிஜுவல்) பிளான்கள்

குடும்பத்திற்கான ஃப்ளோட்டர் பிளான்கள்

பொருந்துந் தன்மை / அப்பளிகபிலிட்டி

இந்தப் பிளானைப் பொருத்த வரையில், ஒரு இன்சூரன்ஸ் பிளானிற்கு கீழ் வரும் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் இன்சூரன்ஸ் தொகையானது நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.

இந்தத் பிளானில், ஒரு தனிநபரின் சிகிச்சைக்கு ஆகும் செலவை ஈடுசெய்ய முழு இன்சூரன்ஸ் தொகையும் பயன்படுத்தப்படலாம்.

பிரீமியம் பேமெண்ட்

இந்த வகையான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியமானது அதன் கீழ் உள்ள ஒவ்வொரு நபரின் வயது மற்றும் இன்சூரன்ஸ் தொகையின் அடிப்படையில் பொறுத்து கணக்கிடப்படும்.

இந்த வகை ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களுக்கான பிரீமியமானது பெரும்பாலும் குடும்பத்தின் மூத்த உறுப்பினரின் வயதை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.

விலைகளுக்கு இடையிலான வேறுபாடு

பொதுவாக, ஒவ்வொரு பாலிசிக்கும் செலுத்த வேண்டிய பிரீமியமானது அதிகமாக இருக்கும்.

பேமிலி- ஃப்ளோட்டர் இன்சூரன்ஸ் பிளான்களில், பாலிசியின் விலையானது தனிநபர் (இன்டிஜுவல்) ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களை விட 20% வரை குறைவாக இருக்கும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பார்த்த பின், ஃபேமிலி- ஃப்ளோட்டர் இன்சூரன்ஸ் பிளான்கள் தனிநபர் (இன்டிஜுவல்) பிளான்களை விட மலிவானவை என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

 அதனால்தான், உங்கள் குடும்பத்திற்கான இன்சூரன்ஸ் பிளான்களை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ஃபேமிலி- ஃப்ளோட்டர் இன்சூரன்ஸ் பாலிசி-ஐ தேர்ந்தெடுங்கள். இதன் மூலம் நீங்கள் பிரீமியத்தை குறைக்கலாம்.

ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை குறைப்பது குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்