போர்ட் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி ஆன்லைன்
No Capping
on Room Rent
24/7
Customer Support
Zero
Co-payment
No Capping
on Room Rent
24/7
Customer Support
Zero
Co-payment
இந்தியாவில் ஹெல்த் இன்சூரன்ஸை போர்ட் செய்வது: அட்வான்டேஜ்கள் & எப்படி டிரான்ஸ்பர் செய்வது?
ஹெல்த் இன்சூரன்ஸ் போர்டபிலிட்டி என்றால் என்ன?
ஹெல்த் இன்சூரன்ஸ் போர்டபிலிட்டி என்பது தற்போது நீங்கள் செலுத்தி கொண்டிருக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை நீங்கள் விரும்பும் வேறொரு இன்சூரன்ஸ் வழங்குநருக்கு மாற்றும் செயல்முறையே ஆகும். இது அப்படியே நீங்கள் ஒரு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரிடமிருந்து மற்றொருவருக்கு மாறுவதை போன்று எளிமையானது!
இருப்பினும், இதை வெறும் இன்சூரர் மாற்றமாக மட்டும் எண்ண வேண்டாம். ஹெல்த் இன்சூரன்ஸ் போர்ட்டபிலிட்டியின் சிறப்புத் தன்மை என்னவென்றால், நீங்கள் சிறந்த திட்டத்திற்கு மாற்றப்படுவது மட்டுமல்லாமல், உங்கள் வெயிட்டிங் பீரியட்ஸ் (காத்திருப்பு காலங்கள்) மற்றும் நோ கிளைம் போனஸும் மாற்றப்படும். எனவே, உங்கள் வெயிட்டிங் பீரியட்ஸ் (காத்திருப்பு காலங்களை) தொடக்கத்திலிருந்து மீண்டும் துவங்குதல் அல்லது இதுவரை சேர்ந்திருக்கும் உங்கள் குமுலேட்டிவ் போனஸை இழத்தல் போன்றவை நடைபெறாது.
டிஜிட் வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸின் சிறப்பு என்ன?
எனது ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை டிஜிட்டிற்கு மாற்றுவதற்கான செயல்முறை என்ன?
- படி 1: மேலே கொடுக்கப்பட்டுள்ள போர்ட் டு டிஜிட் ஹெல்த் என்பதைக் கிளிக் செய்யவும்
- படி 2: உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணை ஆன்லைனில் உள்ளிடவும்.
- படி 3: அவ்வளவுதான், இதுபோதும். மீதியை எங்களிடம் விடுங்கள்! உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸை வெற்றிகரமாக மாற்ற உதவும் எங்கள் ஹெல்த் நிபுணர்களில் ஒருவரிடமிருந்து 48 மணி நேரத்திற்குள் உங்களுக்கு அழைப்பு வரும்
டிஜிட் உடனான ஹெல்த் இன்சூரன்ஸ் போர்ட்பிலிட்டிக்கு தேவையான ஆவணங்கள் யாவை?
- நீங்கள் போர்ட் செய்ய விரும்பும் தற்போதைய ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குநரிடமிருந்து உங்கள் தற்போதைய ஹெல்த் இன்சூரன்ஸின் பாலிசிக்கான அட்டவணையை சேகரிக்கவும்.
- உங்கள் அடையாளச் சான்று
- உங்கள் மருத்துவ விவரங்கள் மற்றும் கிளைம் ஹிஸ்டரி போன்ற பிற விவரங்கள் அழைப்பின் மூலம் உங்களிடமிருந்து கேட்டுக்கொள்ளப்படும்.
உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் நீங்கள் எதையெல்லாம் போர்ட் செய்யலாம்?
ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை போர்ட் செய்வதற்கான ஒரு பாலிசிதாரரின் (அதாவது நீங்கள்!) உரிமைகள்
ஐ.ஆர்.டி.ஏ.ஐ(IRDAI)-ஆல் அமைக்கப்பட்டுள்ள ஹெல்த் இன்சூரன்ஸ் போர்ட்டபிளிட்டி விதிகள் - உங்களுக்காக எளிமைப்படுத்தப்பட்டுள்ளன
உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை எப்போது போர்ட் செய்ய வேண்டும்?
உங்கள் தற்போதைய ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குனரின் சேவைகளில் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாதபோது
அதன் சேவை, மோசமான அனுபவம், வருடாந்திர பிரீமியம் விலை அல்லது இந்தத் திட்டம் உங்களுக்கும் உங்கள் ஹெல்த்கேர் தேவைகளுக்கும் சரியாகப் பொருந்தாதது போன்ற காரணங்களால் உங்களின் தற்போதைய ஹெல்த் இன்சூரன்ஸில் நீங்கள் மிகவும் திருப்தியடையாமல் இருக்கலாம்.
இந்த நிலையில், ரினீவல் செய்வதற்கான நேரம் வரும்போது (உங்கள் தற்போதைய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் காலாவதி தேதிக்கு குறைந்தது 45 நாட்களுக்கு முன்னதாக) நீங்கள் உங்கள் விருப்பங்களை மதிப்பீடு செய்து, உங்களுக்கும் உங்கள் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்றதாகத் தோன்றும் திட்டத்திற்கும் இன்சூரருக்கும் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை போர்ட் செய்யலாம்.
உங்களுக்கு மாற்று சிறந்த பிளான்கள் இருக்கும்போது!
உங்களின் தற்போதைய ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குநர் சிறந்தவராக இருந்தாலும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் தேவையான மதிப்புகள் நிறைந்த பலன்களை உங்களுக்கு வழங்காமல் இருக்கும் சூழ்நிலையும் ஏற்படலாம்.
எடுத்துக்காட்டுக்கு: ஒருவேளை நீங்கள் உங்கள் பெற்றோருக்கான ஆயுஷ் பெனிஃபிட் அல்லது உங்களுக்காக மெட்டர்னிட்டி கவரை எதிர்பார்க்கிறீர்கள், ஆனால் உங்கள் தற்போதைய ஹெல்த் இன்சூரன்ஸ் நீங்கள் விரும்பியவற்றை கவர் செய்வதில்லை.
இம்மாதிரி சூழ்நிலைகளில், குறைந்தபட்சம் மூன்று இன்சூரர்களிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பலன்களை மதிப்பீடு செய்து, உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமான வழங்குநர் மூலம் போர்ட் செய்யவும்.
உங்கள் தற்போதைய பாலிசியின் காலாவதித் தேதிக்கு 45-நாட்களுக்கு முன்னதாக இந்தச் செயல்முறையைத் தொடங்குதலை உறுதிசெய்து கொள்ளுங்கள், எனவே உங்கள் போர்டபிலிட்டி செயல்முறை சரியான நேரத்தில் முடிக்கப்படும்.
நீங்கள் டிஜிட்டல் ஃபிரண்ட்லியான ஒரு ஹெல்த் இன்சூரன்ஸுக்கு மாற விரும்பினால்
ஒருவேளை நீங்கள் நீண்ட காலமாக ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருந்தால், உங்கள் தற்போதைய ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குநர் டிஜிட்டல் ஃபிரண்ட்லி அல்லது கான்டாக்ட்லெஸ்ஸாக இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றது, மேலும் நீண்ட, பிரச்சனை தரும் செயல்முறைகள் உங்கள் நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்பவையாக இருக்கும்.
இம்மாதிரியான சூழ்நிலையில், உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸை டிஜிட்டல் ஹெல்த் இன்சூரன்ஸ் ஆப்ஷனுக்கு போர்ட் செய்யுங்கள், அதனால் நீங்கள் மீண்டும் அதே பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏற்படாது.
உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸை போர்ட் செய்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 3 விஷயங்கள்
1. உங்கள் தற்போதைய பாலிசியின் காலாவதி தேதி குறித்து எச்சரிக்கையாக இருங்கள்!
நேரமே எல்லாவற்றிற்கும் முக்கியமானது, ஆனால் இது குறிப்பாக, ஹெல்த் இன்சூரன்ஸ் போர்டிங் என்று வரும்போது உண்மையாக இருக்கிறது. நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று, உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸை ரினீவ் செய்யும் போது மட்டுமே உங்கள்ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் போர்ட் செய்ய முடியும்.
மிக முக்கியமாக, நீங்கள் இதற்கான செயல்முறையை விரைவாகவும் சரியான நேரத்திலும் முடிக்க விரும்பினால், உங்கள் தற்போதைய இன்சூரருக்கு குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு முன்பே தெரியப்படுத்த வேண்டும். உங்கள் பாலிசி காலாவதியானதும், வேறு வழங்குநருக்கு உங்களால் போர்ட் செய்ய முடியாது.
2. நிராகரிப்புகளைத் தவிர்க்க உங்கள் புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குநரிடம் நேர்மையாக இருங்கள்
எத்தகைய உறவிலும் வெளிப்படைத்தன்மை என்பது மிக முக்கியமானது. அதேபோல், உங்கள் புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குநருடன் உங்கள் உறவைத் தொடங்கும்போது, எதிர்காலத்தில் நிராகரிப்புகள் அல்லது பிரச்சனைகளைத் தவிர்க்க உங்கள் கிளைம் வரலாறு மற்றும் மருத்துவ வரலாறு என அனைத்தும் அவர்களிடம் விரிவாக கூறி நீங்கள் நேர்மையாக இருப்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
3. ஒரே மாதிரியான பிளான்கள் கூட பல்வேறு பெனிஃபிட்களுடன் வரலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
நீங்கள் அதே மாதிரியான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்திற்குச் செல்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், இதே மாதிரியான திட்டங்களுக்கு கூட - ஒவ்வொரு இன்சூரரும் பல்வேறு பயன்களுடன் வருவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எடுத்துக்காட்டாக, வெவ்வேறு இன்சூரர்களுக்கு வெவ்வேறு அறை வாடகை எவ்வளவு தொகை செலவு செய்யப்பட வேண்டும் என்பதற்கு வரம்புகள் இருக்கும் (அல்லது அறை வாடகை செலவிற்கு எந்த வரம்பும் இல்லை!). எனவே, அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று நீங்களே யூகித்து கொள்வதற்கு பதிலாக, ஒவ்வொரு பயன்களையும் கவனமாகப் படிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!
உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸின் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன?
நன்மைகள் |
தீமைகள் |
பயன்களை தொடர்ந்து பெற்று மகிழுங்கள் - உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை போர்ட் செய்வதன் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, நீங்கள் எந்தப் பலன்களையும் இழக்க வேண்டிய அவசியமில்லை. எடுத்துக்காட்டாக: உங்கள் புதிய ஹெல்த் இன்சூரர் குறிப்பிட்ட நோய்களுக்கு 3 ஆண்டுகள் காத்திருப்பு காலத்தை/வெயிட்டிங் பீரியடை கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், நீங்கள் ஏற்கனவே உங்களின் முந்தைய பிளானில் 2 வருடங்கள் வைத்திருக்கிறீர்கள் - அப்படியெனில் போர்ட் செய்யும் போது அந்த குறிப்பிட்ட நோய்களுக்கு நீங்கள் ஒரு வருடம் மட்டுமே காத்திருந்தால் போதும், இதுவே நீங்கள் ஒரு புதிய திட்டத்தை வாங்கினால் காத்திருப்பு காலங்களை/வெயிட்டிங் பீரியடை மீண்டும் முதலிருந்து தொடங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்! |
புதுப்பிப்பு செய்யும் போது மட்டுமே நீங்கள் போர்ட் செய்ய முடியும் - எனவே, போர்டிங் அபாரமானது என்று நினைக்கும் போது - அதன் தீமைகளில் ஒன்று, உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸை புதுப்பிப்பு செய்யும் நேரம் வரும்போது மட்டுமே உங்களால் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸை போர்ட் செய்ய முடியும். இருப்பினும், இதோ உங்களுக்கான டிப்ஸ் - நீங்கள் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸை போர்ட் செய்ய விரும்பினால், உங்கள் ரினீவலுக்கு 2 மாதங்களுக்கு முன்பே உங்கள் விருப்பங்களை ஆராய்ந்து மதிப்பீடு செய்தப்பிறகு உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்கு போர்ட் செய்யுங்கள். |
நோ கிளைம் போனஸை வைத்திருக்கும் - ஒருவரும் அவரது நோ கிளைம் போனஸை விட விரும்ப மாட்டர்கள், இன்சூரன்ஸ் வழங்குநர்களுக்கும் அது தெரியும் என்று நான் நினைக்கிறேன்! அதனால்தான், உங்கள் ஹெல்த் போனஸை போர்ட் செய்வதன் நன்மைகளில் ஒன்றாக, உங்கள் நோ கிளைம் போனஸை நீங்கள் இழக்கும் சூழ்நிலை ஏற்படாது, அது உங்கள் புதிய ஹெல்த் போனஸ் பாலிசியில் அப்படியே சேர்க்கப்படும். |
உங்கள் பிளானில் ஏற்படும் வரம்புக்குட்பட்ட மாற்றங்கள் - உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை ஒரு சிறந்த ஹெல்த் இன்சூரர் மற்றும் பிளானுக்கு உங்களால் போர்ட் செய்ய முடியும் போது- உங்களால் பல மாற்றங்களைச் செய்ய முடியாது மேலும் இதேபோன்ற பிளானிற்கு செல்ல வேண்டியிருக்கும். பிளான் மற்றும் கவரேஜில் ஏற்படும் அதிக மாற்றங்கள் அல்லது கஸ்டமைசேஷன்களுக்கு - உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளும் அதற்கேற்ப மாற்றப்படும். |
இன்சூரரில் மாற்றம் இருந்தாலும் உங்கள் வெயிட்ங் காலம் காத்திருப்பு காலம்) பாதிக்கப்படாது - மேலே குறிப்பிட்டுள்ளபடி, போர்ட்டிங் செய்யும் போது தொடர்ச்சியான பலன்களை நீங்கள் அனுபவிப்பதால், உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸை போர்ட் செய்யும் போது உங்கள் காத்திருப்பு காலம்/வெயிட்ங் காலம் பாதிக்கப்படாது. உங்கள் முந்தைய ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குனருடன் நீங்கள் எவ்வளவு நேரம் முடித்துள்ளீர்கள் என்பதன் அடிப்படையில் அவை சேர்க்கப்படுகின்றன. |
ஒருவேளை உங்களின் முந்தைய பிளானுடன் ஒப்பிடுகையில் விரிவான கவரேஜ் தேவைப்பட்டால் அதிக பிரீமியம் ஆகும் - ஒருவேளை உங்கள் முந்தைய இன்சூரரிடம் இருந்ததை விட மிகவும் வித்தியாசமான பிளானிற்கும் அதிக கவரேஜுக்கும் செல்ல வேண்டும் என நீங்கள் முடிவு செய்திருந்தால், உங்கள் பிரீமியமும் அதற்கேற்ப மாறுபடலாம். |