ஆயுஷ், என்பது ஹெல்த்கேர் அமைப்புடன் இணைந்திருக்கும் ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி என்றும் அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுஷின் சிகிச்சைகள் பெரும்பாலும் இயற்கை வைத்தியங்களாக இருந்தாலும் குறிப்பிட்ட நோய்களுக்காகவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை நிர்வகிக்கவும் ஆயுஷ் சிகிச்சைகளில் மருந்து சார் தெரப்பிகளும் (சிகிச்சைகளும்) செய்யப்படுகின்றன
இருப்பினும், இத்தகைய மருந்துகள் பெரும்பாலும் இயற்கை மூலிகைகளை ஒன்று சேர்த்து தயாரிக்கப்பட்டவையே, அவை உடலால் நன்கு உட்கிறத்துக்கொள்ளப்பட்டுக் குறைவான பக்க விளை வுகளுடன் அதிக பயன்கள் தருகின்றன.
ஐஆர்டிஏஐ(IRDAI) விதிகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு, எங்களை போன்ற ஏராளமான ஹெல்த் இன்சாரன்ஸ் நிறுவனங்கள் இப்போது ஆயுஷ் சிகிச்சைகளையும் காப்பீடு செய்யகின்றன, குறிப்பாக 60 மற்றும் அதற்கு மேல் இருக்கும் காப்பீடு செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: டிஜிட் தற்சமயம் எங்களது ஹெல்த் பிளான்களுடன் ஆயுஷ் பெனிபிட்டை வழங்குவதில்லை.
ஆயுஷ் சிகிச்சையின் முக்கியத்துவம்
சமீப வருடங்களாக, வழக்கமான மருத்துவ முறைகளை விடுத்து ஹோமியோபதி, ஆயுர்வேதா, நேச்சுரோபதி மற்றும் யோகா போன்ற மாற்று சிகிச்சை முறைகளை மக்கள் எடுத்துக்கொள்ள விரும்பும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுவருகிறது. இந்த நடைமுறையை ஆதரிக்கும் வகையில், எங்களை போன்ற ஹெல்த் இன்சூரர்ஸ் ஆயுர்வேதிக் சிகிச்சைக்கான காப்பீட்டையும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அவர்களது ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் அதை ஒரு பகுதியாக வழங்க துவங்கியுள்ளோம்.
எனவே, நீங்கள் மாற்று சிகிச்சைகளின் சக்தியில், அதிக நம்பிக்கை உடையவராக இருப்பின், அதை மேற்கொள்வதற்கான காப்பீடு என்னும் சக்தியை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். ஹெல்த் இன்சூரன்ஸில் ஆயுஷ் போன்ற மாற்று சிகிச்சையைப் பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே இருக்கிறது.
இன்று ஹெல்த்கேர் சேவைகளில் ஆயுஷ்
ஆயுஷ் சார்ந்த சிகிச்சைகளில் இன்னும் அதிகமான ஈர்ப்பை கொண்டு வரும் நோக்கத்துடன், இந்திய அரசாங்கம் 2014 ஆம் ஆண்டு ஆயுஷின் அமைச்சகத்தை உருவாக்கியது மட்டுமின்றி மருத்துவமனைகளுக்கான தேசிய வாரியம் (NABH-என்ஏபிஹெச்) மருத்துவமனைகளில் ஆயுஷ் சிகிச்சைகளை வழங்கும் தரம்வாய்ந்த ஹெல்த் கேர் நடைமுறைகளை செயல்படுத்தும் மாற்றத்தையும் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று, இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் நம்பகமான மற்றும் உண்மையான ஆயுஷ் சார்ந்த சிகிச்சைகளை வழங்க அங்கீகாரம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: