ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி ஆன்லைன்

டிஜிட் இன்சூரன்ஸிற்கு மாறுங்கள்

ஹெல்த் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

ஹெல்த் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

போன்றவகைளினால் உங்களது உடலின் ஆரோக்கிய நிலையில் குறைபாடு அல்லது மருத்துவ அவசரநிலை நிகழும் போது ஏற்படும் எதிர்பாரா செலவுகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கும் ஒரு வகை ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகும். அதாவது உங்கள் ஆரோக்கியத்தைக் காக்க ஏற்படும் செலவுகளுக்குக் காப்பீடு அளிக்கும்.

உங்கள் கஸ்டமைஸ்ட் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பும், பின்பும் ஏற்படும் செலவுகள், வருடாந்திர ஹெல்த் செக்-அப்ஸ், மனநல ஆதரவு, ஆபத்தான நோய்கள் மற்றும் மகப்பேறு தொடர்பான செலவுகள் ஆகியவை அடங்கும். 

நீங்கள் நோய்வாய்ப்படும்போதோ அல்லது சோர்வாக உணரும் போதோ உங்களுக்கு எப்போதும் துணையாக இருக்கும் ஒரு நல்ல பரிச்சயமான நண்பராக இதை எண்ணிக்கொள்ளுங்கள்.

 

“எனக்கு எந்த ஹெல்த் இன்சூரன்ஸும் தேவையில்லை”

நீங்கள் அதை நம்பினால், தொடர்ந்து படியுங்கள்.

 

உலகிலேயே கோவிட் பரவல் இந்தியாவில் தான் அதி தீவிரமாக உள்ளது!

 

உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையே 61% மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கானக் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

 

ஒவ்வொரு நாளும் குழந்தை புற்ற நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள் மருத்துவ சிகிச்சைகளை எட்டாத கனியாக மாற்றுகிறது.

 

இந்தியாவில் மனநல பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

இந்தியாவில் வேறு எந்த தொற்றா நோயையும் விடவும், இதய நோய்கள் அதிக அளவிலான மக்களை கொன்று குவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

டிஜிட் வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸின் சிறப்பு என்ன?

எளிமையான ஆன்லைன் செயல்முறைகள் - ஹெல்த் இன்சூரன்ஸினை வாங்குவதில் இருந்து கிளைம் செய்வது வரை எந்தவொரு விஷயத்திற்கும் ஆவணங்கள் தேவையில்லை. இந்த செயல்முறைகள் அனைத்தும் எளிமையானது மற்றும் எந்த தொந்தரவும் இல்லாதது. கிளைம் செய்வதற்கு கூட நீங்கள் எந்தவொரு ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை! 

எளிமையான ஆன்லைன் செயல்முறைகள் - ஹெல்த் இன்சூரன்ஸினை வாங்குவதில் இருந்து கிளைம் செய்வது வரை எந்தவொரு விஷயத்திற்கும் ஆவணங்கள் தேவையில்லை. இந்த செயல்முறைகள் அனைத்தும் எளிமையானது மற்றும் எந்த தொந்தரவும் இல்லாதது. கிளைம் செய்வதற்கு கூட நீங்கள் எந்தவொரு ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை! 

அறை வாடகைக்கு கட்டுப்பாடு இல்லை - ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான விருப்பங்கள் இருக்கும் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அதனால் தான் எங்களிடம் அறை வாடகைக்கு எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. உங்களுக்கு விருப்பமான மருத்துவமனை அறையை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

 

எஸ்ஐ வாலட் பயன்- உங்கள் பாலிசி காலத்தின்போது இன்சூர் செய்யப்பட்ட தொகை காலியாகிவிட்டால், அதை நாங்கள் உங்களுக்காக மீண்டும் வழங்குவோம்.

 

எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் சிகிச்சை பெறுங்கள்  - பணமில்லா சிகிச்சை அல்லது ரீஇம்பர்ஸ்மென்டை தேர்வு செய்ய நீங்கள் இந்தியாவில் உள்ள எங்களது 10500+ நெட்வொர்க் ஹாஸ்பிட்டல்களில் இருந்து தேர்வு செய்யலாம்.

 

 உடல்நல பலன்கள்  - சிறந்த ஆரோக்கியம் மற்றும் உடல்நல பார்ட்னர்களுடன் இணைந்து டிஜிட் ஆப்-ல் பிரத்யேகமான உடல்நல பலன்களைப் பெறுங்கள்.

 

அனைவருக்கும் பொருந்தும் ஹெல்த் இன்சூரன்ஸ் ஆப்ஷன்கள்

எங்களது ஹெல்த் இன்சூரன்ஸில் என்னென்ன அடங்கும்?

கவரேஜ்கள்

டபுள் வாலட் பிளான்

இன்ஃபினிட்டி வாலட் பிளான்

வேர்ல்டுவைட் ட்ரீட்மெண்ட் பிளான்

முக்கிய அம்சங்கள்

அனைத்து விதமான ஹாஸ்ப்பிட்டலைசேஷன் - விபத்து, உடல்நலக் குறைவு, தீவிர சிகிச்சை அல்லது கோவிட் போன்ற அனைத்து காரணங்கள்

இது உடல்நலக்குறைவு, விபத்து, தீவிர சிகிச்சை அல்லது கோவிட் 19 போன்ற தொற்றுநோய்கள் உட்பட அனைத்திற்கும் தேவையான மருத்துவமனை செலவுகளை உள்ளடக்கியது. உங்களின் மொத்த மருத்துவமனை செலவுகள் நீங்கள் இன்சூர் செய்த தொகைக்கு உள்ளாக அடங்கும் வரை மல்டிபிள் ஹாஸ்பிட்டலைசேஷன் செலவுகளும் இதில் அடங்கும்.

ஆரம்ப காத்திருப்பு காலம்

விபத்து அல்லாத உடல்நலக்குறைவு சார்ந்த சிகிச்சை செலவுகளைப் பெற நீங்கள் பாலிசி எடுத்த முதல் நாளில் இருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீங்கள் காத்திருக்க வேண்டும். இதுவே ஆரம்ப காத்திருப்பு காலம் ஆகும்.

உடல்நல திட்டம்

வீட்டில் இருந்தபடியே சுகாதார பராமரிப்பு, போன் மூலம் கன்சல்டேஷன், யோகா மற்றும் மனந்தெளிநிலை மற்றும் பல பிரத்யேகமான உடல்நலம் சார்ந்த நன்மைகள் எங்கள் ஆப்-ல் கிடைக்கும்

இன்சூர் செய்யப்பட்ட தொகைக்கான பேக் அப்

நீங்கள் இன்சூர் செய்யப்பட்ட தொகைக்கான பேக் அப் வழங்குவதன் மூலம் உங்களின் 100% இன்சூரன்ஸ் தொகையை கட்டாயமாக பெறுவீர்கள். இன்சூர் செய்யப்பட்ட தொகைக்கான பேக் அப் எப்படி செயல்படுகிறது? உங்களின் பாலிசிக்கான இன்சூர் செய்யப்பட்ட தொகை 5 லட்சம் ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் 50,000 ரூபாய்க்கு கிளைம் செய்கிறீர்கள். இந்த நேரத்தில் டிஜிட் வாலட் பெனிஃபிட்டை தொடக்கி வைக்கும். அதனால் இந்த வருடத்தில் நீங்கள் 4.5 லட்சம் + 5 லட்சத்தை இன்சூர் செய்யப்பட்ட பணமாக வைத்திருப்பீர்கள். இருப்பினும், ஒவ்வொரு முறை செய்யும் கிளைமானது, மேற்கூறிய வழக்கில், அடிப்படை இன்சூரன்ஸ் தொகையான 5 லட்சத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது.

பாலிசி காலத்தில் ஒரு முறை மட்டும், தொடர்புடைய மற்றும் தொடர்பற்ற உடல்நலக் குறைவுகளுக்கு எதிராக, எக்ஸ்ஹாஷன் க்லாஸ் கருத்தில் கொள்ளப்படாமல், அதே நபர் காப்புறுதி செய்யப்படுவார்.
பாலிசி காலத்தில் அன்லிமிடட் ரீஇன்ஸ்டேட்மென்ட்டில், தொடர்புடைய மற்றும் தொடர்பற்ற உடல்நலக் குறைவுகளுக்கு எதிராக, எக்ஸ்ஹாஷன் க்லாஸ் கருத்தில் கொள்ளப்படாமல், அதே நபர் காப்புறுதி செய்யப்படுவார்.

குமுலேட்டிவ் போனஸ்
digit_special Digit Special

பாலிசி ஆண்டில் நீங்கள் எந்தவொரு கிளைமும் செய்யவில்லையா? அப்படி என்றால் உங்களுக்கு போனஸ் காத்திருக்கிறது- ஆரோக்கியமாக இருந்ததற்கும் & எந்தவொரு கிளைமும் செய்யாமல் இருந்ததற்கும் உங்களின் மொத்த இன்சூர் செய்யப்பட்ட தொகையுடன் ஒரு கூடுதல் தொகை சேர்க்கப்படும்!

ஒவ்வொரு கிளைம் இல்லாத வருடத்திற்கும் அடிப்படை இன்சூர் செய்யப்பட்ட தொகையில் இருந்து 10% வழங்கப்படும். அதிகபட்சம் 100% கூட வழங்கப்படலாம்.
ஒவ்வொரு கிளைம் இல்லாத வருடத்திற்கும் அடிப்படை இன்சூர் செய்யப்பட்ட தொகையில் இருந்து 50% வழங்கப்படும். அதிகபட்சம் 100% கூட வழங்கப்படலாம்.

ரூம் ரெண்ட் கேப்பிங்

வெவ்வேறு வகையைச் சார்ந்த அறைகளுக்கு வெவ்வேறு வாடகைகள் வசூலிக்கப்படும். ஹோட்டல் ரூம்களுக்கு வசூலிக்கப்படுவதை போல தான் இதுவும். நீங்கள் இன்சூர் செய்யப்பட்ட தொகைக்கு குறைவாக இருக்கும் வரை டிஜிட் எந்த விதமான ரூம் ரெண்ட் கேப்பிங்கும் விதிப்பதில்லை.

டே கேர் செயல்முறைகள்

24 மணிநேரத்திற்கு அதிகமாக மருத்துவமனையில் இருந்தால் மட்டுமே அதற்கான மருத்துவ செலவுகளை ஹெல்த் இன்சூரன்ஸ் ஏற்றுக்கொள்ளும். தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக 24 மணிநேரத்திற்கு குறைவாக தேவைப்படும் கண்புரை, டயாலிசிஸ் போன்ற மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சைகள் டே கேர் செயல்முறைகள் ஆகும்.

உலகளவு கவரேஜ்
digit_special Digit Special

உலகளவு கவரேஜுடன் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளை பெறுங்கள்! இந்தியாவில் நீங்கள் ஒரு மருத்துவ பரிசோதனை செய்தபோது உங்களுக்கு உடல்நலகுறைவு இருப்பது கண்டறியப்பட்டால், ஒரு வேலை நீங்கள் அதற்கான சிகிச்சையை அயல்நாடுகளில் மேற்கொள்ள விரும்பும் பட்சத்தில், உங்களுக்கு உதவ நாங்கள் உள்ளோம். உங்களுக்கு தேவையான பாதுகாப்பு பாலிசியில் உண்டு!

×
×

ஹெல்த் செக்-அப்

உங்களின் ஹெல்த் செக்-அப்பிற்கு ஆகும் செலவுகளை உங்கள் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை வரை நாங்களே செலுத்துவோம். நீங்கள் எடுக்கும் பரிசோதனைகளுக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது! அது இசிஜி அல்லது தைராய்டு சோதனை எதுவாக இருந்தாலும் சரி. உங்கள் கிளைம் லிமிட் என்ன என்பதை பாலிசி அட்டவணையில் பார்க்க மறந்து விடாதீர்கள்.

இன்சூர் செய்யப்பட்ட தொகையில் இருந்து 0.25%, ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் அதிகபட்சம் ₹ 1,000 வரை.
இன்சூர் செய்யப்பட்ட தொகையில் இருந்து 0.25%, ஒவ்வொரு ஆண்டுக்கு பிறகும் அதிகபட்சம் ₹ 1,500 வரை.

அவசரகால வான்வழி ஆம்புலன்ஸ் செலவுகள்

உயிருக்கு ஆபத்தான சில அச்சுறுத்தும் நிலைகளில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போக்குவரத்து தேவைப்படலாம். இதனை நாங்கள் முழுவதுமாக புரிந்துகொள்கிறோம். ஏர்பிளேன் அல்லது ஹெலிகாப்டர் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற செலவுகளை ரீஇம்பர்ஸ் செய்து கொள்ளலாம்.

×

வயது/சோன் சார்ந்த கோ–பேமெண்ட்
digit_special Digit Special

கோ–பேமெண்ட் என்பது ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் உள்ள செலவினப் பகிர்வுத் தேவையாகும், இது பாலிசிதாரர்/இன்சூர் செய்தவர் கிளைம் செய்யப்பட்ட தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஏற்க வேண்டும். இது இன்சூர் செய்யப்பட்ட தொகையைக் குறைக்காது. இந்த சதவீதமானது வயது போன்ற ஒரு சில காரணிகள், அல்லது ஒரு சில நேரங்களில் சோன் சார்ந்த கோ–பேமெண்ட் என்று அழைக்கப்படும் நீங்கள் சிகிச்சை பெறும் நகரத்தை பொறுத்து அமையும். எங்களது திட்டத்தில், வயது சார்ந்த அல்லது சோன் சார்ந்த கோ–பேமெண்ட் கிடையாது.

கோ–பேமெண்ட் கிடையாது
கோ–பேமெண்ட் கிடையாது

சாலைவழி ஆம்புலன்ஸ் செலவுகள்

ஒரு வேலை நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், சாலைவழி ஆம்புலன்ஸுக்கான செலவுகளை ரீஇம்பர்ஸ் செய்து கொள்ளலாம்.

இன்சூர் செய்யப்பட்ட அடிப்படை தொகையில் இருந்து 1%, அதிகபட்சம் ₹ 10,000 வரை.
இன்சூர் செய்யப்பட்ட அடிப்படை தொகையில் இருந்து 1%, அதிகபட்சம் ₹ 15,000 வரை.

ப்ரீ/போஸ்ட் ஹாஸ்பிட்டலைசேஷன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு முன்னும், பின்னரும் நோயறிதல், பரிசோதனைகள் மற்றும் குணமடைதல் போன்ற செலவுகளுக்கான கவர் இது.

30/60 நாட்கள்
60/180 நாட்கள்

பிற அம்சங்கள்

ஏற்கனவே இருக்கும் நோய்க்கான (பிஇடி) காத்திருப்பு காலம்

உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் ஒரு நோய் அல்லது மருத்துவ நிலை குறித்து நீங்கள் எங்களிடம் பாலிசி எடுப்பதற்கு தெரிவித்து, நாங்கள் அதை ஒப்புக்கொண்டும் இருப்பதற்கு எங்களின் திட்டப்படி ஒரு குறிப்பிட்ட காத்திருப்பு காலம் உண்டு. இது உங்களின் பாலிசி அட்டவணையில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

3 ஆண்டுகள்
3 ஆண்டுகள்
3 ஆண்டுகள்

குறிப்பிட்ட உடல்நலக்குறைவிற்கான காத்திருப்பு காலம்

ஒரு குறிப்பிட்ட உடல்நலக்குறைவிற்கு கிளைம் செய்ய நீங்கள் காத்திருக்க வேண்டிய காலத்தை இது குறிக்கிறது. டிஜிட்டில் இது 2 ஆண்டுகள் ஆகும். இது உங்கள் பாலிசி ஆக்டிவேட் ஆன நாளில் இருந்து துவங்கும். விலக்குகளுக்கான முழு பட்டியலுக்கு, உங்கள் பாலிசி வொர்டிங்களின் ஸ்டான்டர்டு விலக்குகளைப் (Excl02) படிக்கவும்.

2 ஆண்டுகள்
2 ஆண்டுகள்
2 ஆண்டுகள்

இன்பில்ட் பர்சனல் ஆக்சிடன்ட் கவர்

பாலிசி காலத்தில் உங்களுக்கு ஏதேனும் விபத்தின் விளைவாக காயம் ஏற்பட்டு, விபத்து ஏற்பட்ட தேதியில் இருந்து பன்னிரண்டு (12) மாதங்களுக்குள் ஏற்பட்ட உங்களின் இறப்பிற்கு அது மட்டுமே காரணமாக இருந்தால், பின்னர் பாலிசியில் குறிப்பிட்டுள்ளபடி இன்சூர் செய்யப்பட்ட தொகையில் 100% வழங்கப்படும்.

₹ 50,000
₹ 1,00,000
₹ 1,00,000

உறுப்பு தானம் செய்தவருக்கான செலவுகள்
digit_special Digit Special

உங்களுக்கு உறுப்பு தானம் கொடுத்த நபரும் இந்த பாலிசி மூலம் பாதுகாக்கப்படுவார். தானம் கொடுப்பவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்பும், பின்னரும் ஆகும் செலவுகள் ஏற்கப்படும். உடலுறுப்பு தானம் செய்வது மிகப்பெரிய பண்புகளில் ஒன்றாகும். ஆதலால், நாங்களும் இதில் பங்குபெற ஆசைப்படுகிறோம்!

டாமிசிலியரி ஹாஸ்பிட்டலைசேஷன்

மருத்துவமனைகளில் காலியான படுக்கைகள் இல்லாமல் போகலாம் அல்லது நோயாளியின் நிலை கருதி அவரை மருத்துவமனையில் அனுமதிக்க முடியாத சூழ்நிலை ஏற்படலாம். பதட்டப்படாதீர்கள்! நீங்கள் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தால் கூட, அதற்கான செலவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

உடல் பருமனியல் அறுவை சிகிச்சை

பல உடல்நல பிரச்சினைகளுக்கு உடல் பருமன் ஒரு காரணமாக உள்ளது. இதனை நாங்கள் முழுவதுமாக புரிந்துகொள்கிறோம். ஆகவே, உடல் பருமனியல் அறுவை சிகிச்சை செய்வதற்கான மருத்துவ தேவை ஏற்பட்டால் அதற்கான செலவுகளையும் நாங்கள் ஏற்கிறோம். இருப்பினும், இந்த சிகிச்சை அழகு சார்ந்த தேவைகளுக்கு செய்யப்படும்போது, அதற்கான மருத்துவ செலவுகளை நாங்கள் ஏற்க மாட்டோம்.

சைக்கியாட்ரிக் இல்னஸ்

மனஉளைச்சல் காரணமாக மனநோய் மருவத்துவம் செய்ய ஒருவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், இந்த பலன்களின் கீழ் 1,00,000 ருபாய் வரை கிடைக்கும். இருப்பினும், ஓபிடி ஆலோசனைகள் இந்த பலன்களின் கீழ் வராது. குறிப்பிட்ட உடல்நலகுறைவுக்கான காத்திருப்பு காலம் சைக்கியாட்ரிக் இல்னஸுக்கான காத்திருப்பு காலம் குறிப்பிட்ட உடல்நலகுறைவுக்கான காத்திருப்பு காலத்திற்கு ஒத்தது.

கன்ஸ்யூமபிள் கவர்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்பும், மருத்துவமனையில் இருக்கும்போதும், அதற்கு பின்னரும் வாக்கிங் எய்டுகள், கிரீப் பேண்டேஜ்கள், பெல்ட்டுகள் போன்ற பல மருத்துவ எய்டுகள் மற்றும் செலவுகளுக்காக அவசியம் ஏற்படலாம். பாலிசியில் சேர்க்கப்படாத இந்த செலவுகளையும் நாங்களே ஏற்றுக்கொள்வோம்.

ஆட்-ஆன் ஆக உள்ளது
ஆட்-ஆன் ஆக உள்ளது
ஆட்-ஆன் ஆக உள்ளது

எதற்கெல்லாம் காப்பீடு அளிக்கப்படுவதில்லை?

ப்ரீ-நேட்டல் & போஸ்ட் நேட்டல் செலவினங்கள்

மருத்துவமனை அனுமதிக்கப்படுதலினால் ஏற்படும் ப்ரீ-நேட்டல் & போஸ்ட் நேட்டலுக்கான மருத்துவ செலவுகள், 

ஏற்கனவே இருக்கும் நீரிழிவு நோய்கள்

ஒருவேளை ஏற்கனவே இருக்கும் நீரிழிவு நோய்கள் இருப்பின், காத்திருப்பு காலம் முடியும் வரை, அந்த நோய் அல்லது குறைபாட்டிற்கான கிளைமை தாக்கல் செய்யப்படமுடியாது.  

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல்

உங்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான எந்த நிலையும், மருத்துவரின் பரிந்துரையுடன் பொருந்தவில்லை எனில் கிளைம் செய்ய முடியாது.

எவ்வாறு கிளைமை தாக்கல் செய்வது?·

இம்பர்ஸ்மென்ட்ஸ்கான கிளைம்கள்- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள்  எங்களுக்கு 1800-258-4242 இல் அல்லது healthclaims@godigit.com க்கு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள், அதன்[பின்னர் உங்கள் மருத்துவமனை பில்கள் மற்றும் அது தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் நீங்கள் பதிவேற்றக்கூடிய இணைப்பை நாங்கள்  உங்களுக்கு அனுப்புவோம்.   

கேஷ்லெஸ் கிளைம்கள் - நீங்கள் நெட்வொர்க் மருத்துவமனையைத் தேர்வு செய்யவும். நெட்வொர்க் மருத்துவமனைகளின் முழுமையான பட்டியலை இங்கே காணலாம். மருத்துவமனை உதவி மையத்திடம் இ-ஹெல்த் கார்டைக் காண்பித்து, கேஷ்லெஸ் கிளைமிற்கான படிவத்தைக் கோருங்கள். எல்லாம் சரியாக இருந்தால், உங்கள் கிளைம் உடனடியாக செயல்படுத்தப்படும்.       

 

ஒருவேளை நீங்கள் கொரோனா வைரஸ்காக கிளைம் செய்திருந்தால், புனேவில் உள்ள தேசிய வைராலஜி - ஐசிஎம்ஆர் இன் அங்கீகரிக்கப்பட்ட மையத்திலிருந்து நோயிருப்பதைஉறுதிபடுத்தும் வகையில் இருக்கும் சோதனை அறிக்கை இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

டிஜிட்டின் கேஷ்லெஸ் நெட்ஒர்க் மருத்துவமனைகள்

List of 10500+ Network Hospitals >

ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைம் எவ்வாறு செயல்படுகிறது?

ஹெல்த் இன்சூரன்சுக்கு புதிதா, அத்துடன் ஹெல்த் இன்சூரன்ஸ் கோரிக்கைகள்  எவ்வாறு வேலை செய்கின்றன என்று குறித்து குழப்பமாக இருக்கிறதா?, குறிப்பாக டிஜிட்டின் சுகாதார காப்பீடு தொடர்பாக? அதை உங்களுக்காக கீழே எளிமைப்படுத்தி கூறியிருக்கிறோம். 

கிளைம், அப்படியென்றால் என்ன?

ஆகவே, நீங்கள் இந்த வார்த்தையை எல்லா இடங்களிலும் பார்த்திருப்பீர்கள், ஆனால் அதற்கு சரியான அர்த்தம் என்ன வென்று தெரியவில்லை. எளிமையாக  சொல்வதானால், ஒரு சிகிச்சையின் போது உங்களுக்கு மருத்துவமனையில் ஆகும்  செல்விற்கு செலுத்த இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் நீங்கள் கோரவேண்டியது கிளைம். 

திட்டமிடப்பட்ட சிகிச்சைகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான கிளைம்கள் பொதுவாக முன்கூட்டியே தெரிவிக்கப்படும், அதேசமயம் மருத்துவ அவசரகாலங்களில் நீங்கள் செல்லும் கிளைமின் வகையின் அடிப்படையில் சூழ்நிலை வேறுமாதிரி இருக்கும். டிஜிட்டில், நீங்கள் தேர்வு செய்யக்கூடிய இரண்டு வகையான ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைம்கள்  முதன்மையாக உள்ளன.

 

கேஷ்லெஸ் கிளைம்கள்:

பணமில்லா கிளைம்களில் பெயர் குறிப்பிடுவது போல், கேஷ்லெஸ்  கிளைம்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் உங்கள் பாக்கெட்டிலிருந்து நீங்கள் பணம் செலுத்தத் தேவையில்லை என்ற கிளைம்களைக் குறிக்கின்றன."ஆனாலும் “என் ஹெல்த் இன்சூரர் எப்படியும் பணம் செலுத்த வேண்டும் அல்லவா?" என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். அதற்கு பதில் ஆம், நிச்சயமாக.

இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் உங்கள் சிகிச்சை செலவுகளுக்கு நீங்கள் செலுத்தும் ரீஇம்பர்ஸ்மென்ட்ஸ் கிளைம்களுக்கு செல்லும்  விருப்பமும் உள்ளது, பின்னர் - 20 முதல் 30 நாட்களுக்குள் உங்கள் இன்சூரரால் பில்கள்  ரீஇம்பர்ஸ் செய்யப்படும். 

இருப்பினும், நீங்கள் கேஷ்லெஸ் கிளைம்களைத் தேர்ந்தெடுக்கும்போது, மருத்துவமனை நேரடியாக உங்கள் இன்சூரர் மூலம் பில்களை கவனித்துக்கொள்ளும் என்பதால் நீங்கள் அதை செய்ய தேவையில்லை. இதைப் பற்றி நீங்கள் இங்கே விரிவாகப் படிக்கலாம். 

 

ரீஇம்பர்ஸ்மென்ட்ஸ் கிளைம்கள்

மேலே குறிப்பிட்டுள்ளபடி, ரீஇம்பர்ஸ்மென்ட்ஸ் கிளைம்கள் ஒரு வகையான ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைமாகும், இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, உங்கள் மருத்துவமனை பில்களுக்கு நீங்கள் பணம் செலுத்துகிறீர்கள், பின்னர், உங்கள் மருத்துவமனை பில்களை ரீஇம்பர்ஸ் செய்ய உங்கள் ஹெல்த் இன்சூரரை  தொடர்பு கொள்வீர்கள். 

இந்த செயல்முறை உங்கள் இன்சூரரை பொறுத்து 2 வாரங்கள் முதல் 4 வாரங்கள் வரை நடக்கும். டிஜிட்டில், அனைத்து செயல்முறைகளும் டிஜிட்டல் (ஆவணப்படுத்தல் நோக்கங்களுக்காகவும் கூட!) கிளைம்களை செட்டில் செய்ய எடுக்கப்பட்ட நேரம் உண்மையில் மிகவும் அதி விரைவானது!

டிஜிட் வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸின் முக்கிய பலன்கள்

கோ–பேமெண்ட் இல்லை
ரூம் ரெண்ட் கேப்பிங் இல்லை
கேஷ்லெஸ் மருத்துவமனைகள் இந்தியா முழுவதும் 10500+ நெட்வொர்க் மருத்துவமனைகள்
இன்பில்ட் பர்சனல் ஆக்சிடன்ட் கவர் ஆம்
உடல்நலம் சார்ந்த பெனிஃபிட்கள் 10+ உடல்நலம் சார்ந்த பார்ட்னர்கள் மூலம் கிடைக்கிறது
நகரம் சார்ந்த தள்ளுபடி 10% வரை தள்ளுபடி
உலகளவு கவரேஜ் ஆம்*
ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான தள்ளுபடி 5% வரை தள்ளுபடி
கன்ஸ்யூமபிள் கவர் ஆட்-ஆன் ஆக உள்ளது

*வேர்ல்டுவைட் ட்ரீட்மெண்ட் பிளானில் மட்டுமே கிடைக்கும் 

 

இந்தியாவில் உள்ள ஹெல்த் இன்சூரன்ஸ் வகைகள்

ஃபேமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் இன்சூரன்ஸ்

ஃபேமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது முழு குடும்பமும் பகிர்ந்து கொள்ளக் கூடிய ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் ஆகும்.

 

இண்டிவிஜ்வல் ஹெல்த் இன்சூரன்ஸ்

உங்களுக்கென தனிப்பயனாக்கப்பட்ட தனிப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம்!

மூத்த குடிமக்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ்

60 வயதுக்கு மேற்பட்ட வயதினருக்கென தனிப்பனாக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ். 

சூப்பர் டாப் அப் ஹெல்த் இன்சூரன்ஸ்

உங்கள் கார்ப்பரேட் திட்டம் தீர்ந்து போய்விட்ட தருணத்தில் சூப்பர் டாப் அப் திட்டங்கள் உங்களுக்கு கைகொடுக்கும். இதனால் உங்கள் பாக்கெட்டில் இருந்து நீங்கள் செலவு செய்யத் தேவையில்லை.

குரூப் மெடிக்கல் இன்சூரன்ஸ்

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் என பல நபர்கள் அடங்கிய குழுவிற்கு குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்கலாம். 

மெட்டர்னிட்டி ஹெல்த் இன்சூரன்ஸ்

நீங்கள் உங்கள் செல்லக் குழந்தையை பெற்றெடுப்பதற்கு ஆகும் மருத்துவ செலவுகளை ஈடு செய்ய மெட்டர்னிட்டி ஹெல்த் இன்சூரன்ஸ் உதவும்! 

பர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸ்

பர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸ் என்பது எதிர்பாராத விதமாக சாலையில் நேரும் விபத்துக்களின் மூலம் ஏற்படும் செலவுகள் மற்றும் இழப்புகளுக்கு ஈடு செய்ய உதவுகிறது! 

ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி

சிறந்த விஷயங்களை தேர்வு செய்பவர்களுக்கு ஸ்டாண்டார்ட் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது ஒரு சரியான தேர்வாக அமையும். ஆரோக்ய சஞ்சீவனி பாலிசியும் அப்படியான ஒன்று தான்! 

கொரோனா கவச்

இது கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கான செலவுகளை ஈடு செய்வதற்கான பாதுகாப்பு கவசம் என்று சொல்லலாம்.

கொரோனா ரக்ஷக்

இது கோவிட் காரணமாக ஏற்படக் கூடிய செலவுகளை ஈடுசெய்ய ஒரு பெரும் தொகையை வழங்கக்கூடிய ஒரு வகையான கொரோனா வைரஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் ஆகும்.

நீங்கள் ஏன் ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்க வேண்டும்?

இதனால் தான் இந்தியாவில் பலர் ஹெல்த் இன்சூரன்ஸை தேர்வு செய்கிறார்கள்.

 

1. ஏனெனில் இது உங்கள் மருத்துவ செலவுகளை ஈடு செய்கிறது!

ஒரு இன்சூரன்ஸ் பாலிசியின் முதன்மை நன்மையானது என்னவென்றால், துரதிருஷ்டவசமாக ஏற்படும் விபத்து அல்லது நோய் போன்றவற்றிற்கு நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன் மற்றும் பின்னாகும் செலவுகளுக்கு இது காப்பீடு வழங்கும், இல்லையென்றால், இந்த செலவுகள் உங்கள் வங்கி இருப்பை காலி செய்து விடும்! இதில் கொரோனா வைரஸ் தொடர்பான நோய் சிகிச்சைக்கான செலவுகளும் அடங்கும், இது தற்போது இந்தியாவில் உள்ள நிலைமையை கருத்தில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.  

2. ஏனெனில் இது உங்கள் வரி சேமிப்பை அதிகப்படுத்த உதவுகிறது!

கூடுதலாக வரி சேமிப்பு கிடைத்தால், யாராவது அதை வேண்டாம் என்று சொல்வோமா? வருமான வரி பிரிவு 80டி-ன் படி, தங்களுக்கென அல்லது தங்கள் பெற்றோருக்கு ஒரு இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் எவரும், அவர்கள் ஆண்டுதோறும் செலுத்தும் பிரீமியம் மீது வரி சலுகைகளைக் கோர முடியும்!  

3. ஏனெனில் இது உங்களை கடுமையான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது

தற்பொழுது இளம் வயதினருக்கு, 40 வயதுக்கும் குறைவானவர்களில் கூட இதய கோளாறு, புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் வந்துவிடுகின்றன. இத்தகைய சூழலில் உங்களுக்கு ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பக்க பலமாக இருக்கும். 

4. இது உங்களுக்கு நிதி சார்ந்த பாதுகாப்பு வழங்கும்!

எல்லாவற்றிற்கும் மேலாக, ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது ஒரு வகையான ஸ்மார்ட் முதலீடாகும். இது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுவதோடு நிதி சார்ந்த பாதுகாப்பையும் கொடுக்கிறது. நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கக் கூடிய நோ கிளைம் போனஸ் போன்ற நன்மைகளை வழங்கி உங்களுக்கு தக்க வகையில் உதவுகிறது! 

5. ஏனெனில் இது சரியான நேரத்தில் சரியான சிகிச்சையைப் பெற உதவும்!

ஏதேனும் சில காரணத்தினால், உங்களுக்கு அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு சிகிச்சை தேவை என்று கற்பனை செய்து கொள்வோம். ஆனால், அதற்கு உங்களிடம் போதுமான பணம் இல்லை என்று வைத்துக் கொள்வோம். எனவே, நீங்கள் சிகிச்சை மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைக்கிறீர்கள். இது பெரும்பாலும் உடல்நிலையை மோசமாக்கக்கூடும். இவ்வாறு நடக்காமல் காக்க ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் உங்களுக்கு உதவும். மேலும், இது உங்களுக்குத் தேவையான சிகிச்சைகளை சரியான நேரத்தில் பெறுவதை உறுதி செய்யும். கூடுதலாக, ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களில் வருடாந்திர மருத்துவ பரிசோதனைகள்  சேர்க்கப்பட்டுள்ளன. ஆகையால், பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகக் கூடிய உடல்நல உபாதைகைளையும் சரியான நேரத்தில் கண்டறிந்து தக்க நேரத்தில் சிகிச்சை பெறலாம். 

ஏனெனில் இது உங்களுக்கு மனநிம்மதி அளிக்கிறது !

உங்களுக்கு எதிர்பாராத தீமை நேரும் போதெல்லாம் யாரேனும் உங்களுக்கு உதவ இருந்தகால், உங்களுக்கு எப்படி இருக்கும்? மன நிம்மதி கிடைக்கும் அல்லாவா? அதே போல் தான், ஹெல்த் இன்சூரன்ஸ் உங்களுக்கு எதிர்பாராத விதமாக என்ன நோய் ஏற்பட்டாலும், இது உங்களை தக்க விதத்தில் பாதுக்காக்கும். எனவே, மன நிம்மதியுடன் இருக்கலாம். 

நான் ஏன் ஆன்லைனில் ஹெல்த் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?

ஆன்லைனில் ஹெல்த் இன்சூரன்ஸை வாங்குவது விரைவான ஒரு செயல்முறையாகும். மேலும் சில நிமிடங்களில் அதனை செய்துவிடலாம்.

இதன் டிஜிட்டல் நட்பு செயல்முறைகளுக்கு நன்றி. ஆன்லைனில் ஹெல்த் இன்சூரன்ஸை  வாங்குவது என்பது படிவங்களை நிரப்புவது அல்லது முகவரைப் பார்ப்பது போன்றவற்றுடன் ஒப்பிடும்போது அது பூஜ்ஜிய தொடுதல் மற்றும் தொடர்பு இல்லாத ஒரு செயல்முறையாக உள்ளது.

உங்கள் விரல் நுனியில் உள்ள அனைத்து தகவல்களையும் கொண்டு, உங்கள் வீட்டில் வசதியாக இருந்து கொண்டு, நீங்கள் எளிதாக ஹெல்த் இன்சூரன்ஸ்  திட்டங்களை மதிப்பீடு செய்து சரியான முடிவை எடுக்கலாம்.

ஆன்லைனில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் வாங்குவது, இடைத்தரகர்கள் யாரும் இல்லாத காரணத்தால், உங்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட பணத்தை நீங்கள் சேமிக்கலாம்.

மருத்துவப் பரிசோதனைகள் தேவைப்படுபவர்களைத் தவிர, உங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்து பிரீமியம் செலுத்திய பிறகு, ஆன்லைனில் நிறைய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் உடனடியாக வழங்கப்படுகின்றன.

எளிமைப்படுத்தப்பட்டுள்ள பொதுவான ஹெல்த் இன்சூரன்ஸ் சொற்கள்

காத்திருப்பு காலம்

உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் எந்தப் பலனையும் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன் நீங்கள் காத்திருக்க வேண்டிய நேரம்.

 

கோ-பேமெண்ட்

கோ-பேமெண்ட் என்பது நீங்களும் உங்கள் இன்சூரரும் பில்களைப் பிரித்துக் கொள்ளப் போகிறீர்கள், அதாவது உங்கள் இன்சூரர் பில்லின் பெரும் பங்கினை செலுத்தும்போது, அதில் ஒரு பகுதியை மட்டும் நீங்கள் செலுத்த வேண்டும்.

ஏற்கனவே இருக்கும் நோய்கள்

உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவதற்கு முன்பு நீங்கள் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டு இருந்தாலோ அல்லது சிகிச்சை பெற்றுள்ள எந்தவொரு நோய் அல்லது சுகாதார நிலையும் ஏற்கனவே இருக்கும் நோயாகக் கருதப்படுகிறது.

தினப்பராமரிப்பு நடைமுறைகள்

ஒரு சாதாரண சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24-மணி நேரத்திற்குள்ளாக இருக்கும் சிகிச்சைகள் தினப்பராமரிப்பு நடைமுறைகள் என குறிப்பிடப்படுகின்றன.

மருத்துவமனைக்குச் செல்லும் முன் ஏற்படும் செலவுகள்

நீங்கள் மருத்துவமனையில் தங்குவதற்கு செலுத்த வேண்டிய பணத்தைத்  தாண்டி மருத்துவக் கட்டணம் அதிகமாகலாம். மருத்துவமனையில் சேர்வதற்கு முன் ஏற்படும் மருத்துவச் செலவுகள், மருத்துவமனைக்குச் செல்லும் முன் ஏற்படும் செலவுகள் எனப்படும். எ.கா: நோயறிதல் சோதனைகள் காரணமாக ஏற்படும் செலவுகள். 

குமுலேட்டிவ் போனஸ்

வருடத்தில் நீங்கள் எந்த ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைம்களையும் செய்யாமல் இருக்கும்போது, உங்கள் இன்சூரர் உங்கள் இன்சூரன்ஸ் தொகையை கூடுதல் பிரீமியத்தை உங்களிடம் வசூலிக்காமலேயே தொகையை அதிகரிப்பார். உங்கள் இன்சூரன்ஸ் தொகையின் இந்த அதிகரிப்பு குமுலேட்டிவ் (ஒட்டுமொத்த) போனஸ் எனப்படும். 

டிடக்டபிள்ஸ்

சில ஹெல்த் இன்சூரன்ஸ்  திட்டங்கள் உங்களுக்காகப் பணம் செலுத்துவதற்கு முன் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டி இருக்கும். இந்த தொகை டிடக்டபிள்ஸ் என்று அழைக்கப்படுகிறது. உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும்போது இந்தத் தொகை பொதுவாக உங்களால் தீர்மானிக்கப்படும்.

இன்சூர் செய்யப்பட்ட தொகை

ஒரு வருடத்தில் உங்களது ஹெல்த் இன்சூரர்  உங்களுக்காகக் கட்டக்கூடிய அதிகபட்சத் தொகை இன்சூர் செய்யப்பட்ட தொகை ஆகும்.

போர்டபிளிட்டி

உங்கள் தற்போதைய ஹெல்த் இன்சூரருடன்  உங்களுக்கு திருப்தி இல்லாதபோது மற்றும் காத்திருப்பு காலங்களை இழக்காமல் மாற விரும்பும்  இந்த செயல்முறை ஹெல்த் இன்சூரன்ஸில் போர்டபிளிட்டி என்று அழைக்கப்படுகிறது.

ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

 • உங்கள் பிரீமியத்தைச் சேமிப்பதற்காக குறைந்த இன்சூரன்ஸ் தொகையைத் தேர்வு செய்யாதீர்கள். உங்கள் வயது, உங்கள் உடல்நலத் தேவைகள் மற்றும் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் நீங்கள் உள்ளடக்கும் நபர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் சரியான இன்சூரன்ஸ் தொகையை எப்போதும் தேர்வு செய்யவும்

 • உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் உள்ளடக்கப்பட்டவை மற்றும் உள்ளடக்கப்படாதவைகளை எப்பொழுதும் சரிபார்த்து, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்கவும். இதனால் நீங்கள் இன்சூரன்ஸ் குறித்து மிகவும் தெளிவாக இருப்பீர்கள்! இதைப் படிப்பது உங்களுக்கு சலிப்பாகத் தோன்றலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதனால்தான் டிஜிட்டில் நாங்கள் இந்த செயல்முறையை எளிதாக்குவதற்கு குறுகிய சுருக்கங்களையும் எளிமையான பாலிசி  ஆவணங்களையும் உருவாக்கியுள்ளோம்!

 • உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தைத் தனிப்பயனாக்க விருப்பம் இருந்தால், எப்போதும் அதைச் செய்யுங்கள். எடுத்துக்காட்டாக: சிறந்த கவரேஜுக்காக உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வெவ்வேறு ஆட்-ஆன்களுடன் தனிப்பயனாக்கலாம்.

 • ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்க அதிக நேரம் காத்திருக்க வேண்டாம். வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே ஒரு ஹெல்த் இன்சூரன்ஸை  வாங்குங்கள். இதன் மூலம் நீங்கள் அதிக நியாயமான பிரீமியங்களைப் பெறுவீர்கள். மேலும் இது நீங்கள் காத்திருப்பு காலங்களை விரைவாகக் கடந்து செல்வதை உறுதிசெய்யவும்!

 • ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது ஒரு முக்கியமான நிதிநிலை முடிவாகும். எனவே நீங்கள் பார்க்கும் முதல் விருப்பத்திற்குச் செல்வதற்கு முன் உங்கள் எல்லா விருப்பங்களையும் ஆன்லைனில் எப்போதும் மதிப்பீடு செய்யுங்கள்!

ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை ஒப்பிடுவதற்கான உதவிக்குறிப்புகள்:

ஆன்லைனில் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்குவதன் நன்மைகளில் ஒன்று, உங்கள் சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளவும், ஆன்லைனில் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்கவும் உங்களுக்கு வாய்ப்பு மற்றும் முடிவற்ற சாத்தியம் உள்ளது.

 

உங்கள் முடிவெடுக்கும் செயல்முறையை எளிதாக்க, சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்குவதற்கு முன் நீங்கள் ஒப்பிட வேண்டிய காரணிகளின் பட்டியல் இங்கே:

 • கவரேஜ் விவரங்கள்:  ஹெல்த் இன்சூரன்ஸின்  முழு நோக்கமும் மருத்துவச் செலவுகளில் அதிகபட்ச கவரேஜைப் பெறுவதாகும். எனவே, நீங்கள் பெறும் கவரேஜை எப்போதும் ஒப்பிட்டு, இன்சூரன்ஸ் தொகையை ஒப்பிட்டுப் பாருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில்  உங்களுக்கு எவ்வளவு செலவாகும் என்பதைப் பொறுத்தது.

 • சேவைப் பயன்கள்: பல்வேறு ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் அடிப்படைக் கவரேஜ்களை வழங்கும் அதே வேளையில், சில கூடுதல் பயன்கள் மூலம் உங்களைச் சிறப்பாகக் கவனித்துக்கொள்வதற்கும் சில வழிகளில் ஈடுபடும். எனவே, பல்வேறு ஹெல்த் இன்சூரன்ஸ்  வழங்குநர்கள் வழங்கும் சேவைப் பயன்களை ஒப்பிட்டு, உங்களுக்கு எது சிறந்தது என்பதைப் பார்க்கவும்.

 • மருத்துவமனைகளின் நெட்வொர்க்:: ஒவ்வொரு ஹெல்த் இன்சூரன்ஸ்  வழங்குநரிடமும் மருத்துவமனைகளின் நெட்வொர்க் உள்ளது. நீங்கள் தேவைப்படும் நேரங்களில் அங்கு சென்று கேஷ்லெஸ் கிளைம்களைப் பெறலாம். இருப்பினும், இந்த பலனைப் பெறுவதற்கு – உங்கள் இன்சூரன்ஸ் வழங்குனருடன் கிடைக்கும் மருத்துவமனைகளின் வரம்பை ஒப்பிட்டுப் பார்த்து, உங்களுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.

 • கிளைம்களின் வகை: ஹெல்த் இன்சூரன்ஸ்  திட்டத்தில் பொதுவாக இரண்டு வகையான கிளைம்கள் உள்ளன; கேஷ்லெஸ் மற்றும் ரீஇம்பர்ஸ்மென்ட்.  தேவைப்படும் சமயங்களில், கேஷ்லெஸ் கிளைம்கள் மிகவும் எளிதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். எனவே, கேஷ்லெஸ் கிளைம்களின் பலனை அவை உங்களுக்கு வழங்குகின்றனவா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள  ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.

 • ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம்: இதனை  சொல்லவே தேவை இல்லை, சரிதானா? இருப்பினும், உங்கள் பிரீமியம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்துடன் தொடர்புடையதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கண்மூடித்தனமாக மலிவான பிரீமியங்களுக்கு ஏமாந்து விடாதீர்கள். ஆனால் எப்போதும் கவரேஜ் விவரங்களை பிரீமியத்துடன் ஒப்பிட்டு அதற்கேற்ப சரியான முடிவை எடுங்கள்..

உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கும் காரணிகள்

ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியங்கள் ஏன் வேறுபடுகின்றன என்று யோசிக்கிறீர்களா?பின்வரும் வெவ்வேறு காரணிகளின் கலவைகளால், உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:

 • வயது - இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்து வரும் நிலையில், வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு காரணமாக இளைஞர்கள் பெரியவர்களைக் காட்டிலும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். கூடுதலாக, நீங்கள் எவ்வளவு இளமையாக இருக்கிறீர்களோ, அந்த அளவு குறிப்பிட்ட நோய்கள் மற்றும் கவர்களுக்காக உங்கள் காத்திருப்பு காலத்தை முடிக்க வேண்டியிருக்கும். எனவே, நீங்கள் இளமையாக இருந்தால், உங்கள் பிரீமியம் குறைவாக இருக்கும்! 

 • வாழ்க்கை முறை - இந்தியாவில் 61% க்கும் அதிகமான இறப்புகள் மாசு அளவுகள் உட்பட வாழ்க்கை முறை நோய்களால் ஏற்படும் பிரச்சினைகளால் ஏற்படுகின்றன! எனவே, நீங்கள் புகைப்பிடிப்பவரா இல்லையா என்பது போன்ற உங்கள் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

 • ஏற்கனவே உள்ள நோய்கள் அல்லது மருத்துவ நிலைகள்

 • ஏற்கனவே இருக்கும் நோய்கள் அல்லது நிலைமைகள்- நீங்கள் ஏற்கனவே ஏதேனும் ஒரு வகையான அறிகுறிகளை எதிர்கொண்டிருந்தால் அல்லது குறிப்பிட்ட நோய்க்கான குடும்ப வரலாற்றைக் கொண்டிருந்தால், உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ்  பிரீமியம் அதிக ஆபத்து காரணமாக அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். 
 • இருப்பிடம் - ஆபத்துகள் மற்றும் மருத்துவச் செலவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு நகரமும் வித்தியாசமாக இருப்பதால், நீங்கள் வசிக்கும் நகரத்தால் உங்கள் பிரீமியம் பாதிக்கப்படும். உதாரணமாக, வட இந்தியாவில் வசிப்பவர்கள் அதிக அளவு மாசுபாட்டின் காரணமாக நுரையீரல் நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 

 • கூடுதல் கவர்கள் - ஒருவர் அவர்களின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் சுகாதார நிலைமைகளின் அடிப்படையில் அவர்களின் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தைத் தனிப்பயனாக்கலாம். எனவே, மகப்பேறு பலன் அல்லது ஆயுஷ் பலன் போன்ற கூடுதல் கவர்களை நீங்கள் தேர்வு செய்யும்போது, உங்கள் பிரீமியமும் சிறிய அளவு அதிகரிக்கிறது.

சரியான இன்சூரன்ஸ் தொகையை எவ்வாறு தேர்வு செய்வது?

 • வாழ்க்கை நிலை: வாழ்க்கை நிலை மாறும் போது, உங்களுக்கு அதிக இன்சூரன்ஸ் தொகை தேவைப்படலாம். நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா அல்லது ஒரு குழந்தையைத் திட்டமிடுகிறீர்களா என்று சொல்லுங்கள். 

 • சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை: குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் காப்பீடு செய்வது, அதிக மருத்துவச் செலவுகள் தொடர்பான எதிர்கால நிதி அபாயங்களிலிருந்து உங்கள் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழியாகும்.

 • சுகாதார நிலைமைகள்: குடும்பத்தில் ஒரு பரம்பரை நோய் அல்லது அந்த நபர் தங்கியிருக்கும் நகரத்தில் ஏதேனும்  பொதுவான உடல்நிலை கோளாறுகள் அதிகரித்துக் காணப்பட்டால், நீங்கள் அதிக இன்சூரன்ஸ் தொகையைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

 •  வாழ்க்கை முறை: நீங்கள் மாசுபட்ட நகரங்களில் வசிப்பவராக இருந்தால், போக்குவரத்து நெரிசலில் பயணம் செய்து, ஒவ்வொரு நாளும் அலுவலக மன அழுத்தத்தைச் சுமந்தால், நீங்கள் நோய்வாய்ப்படும் அபாயம் அதிகமாக இருக்கலாம். இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் சிறந்த கவரேஜை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவதற்கான உதவிக்குறிப்புகள்

இளைஞர்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவதற்கான உதவிக்குறிப்புகள்

 • வாழ்க்கையின் ஆரம்பத்தில் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுங்கள்.

 • தற்செயலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழ்நிலை வரும்போது, உங்களிடம் உள்ள இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பதால் அதிக இன்சூரன்ஸ் தொகைக்கு செல்லுங்கள். 5-10 லட்சம் சரியான தேர்வாக இருக்கும். 

 • கிரிட்டிகல் இல்னஸ் கவர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 • நீங்கள் எதிர்காலத்தில் குழந்தை பெற்றெடுக்க  திட்டமிட்டால், மகப்பேறு பலனைத் தேர்வுசெய்யவும். இதனால் உங்கள் காத்திருப்பு காலம் முடிவடைவதற்கு சரியாக இருக்கும்.

குடும்பங்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவதற்கான உதவிக்குறிப்புகள்

 • குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் காப்பீடு செய்யுங்கள்.

 • அதிக இன்சூரன்ஸ் தொகைக்கு செல்லுங்கள். ஏனெனில் இது அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது. நீங்கள் ஒரு நபருக்கு 10 லட்சத்தை வைத்து இன்சூரன்ஸ் தொகையை கணக்கிடலாம்.

 • உங்களிடம் ஃப்ளோட்டர்  திட்டம் இருந்தால், மறுசீரமைப்பு நன்மையுடன் கூடிய திட்டத்திற்குச் செல்லவும்

 • வழங்கப்படும் அனைத்து நன்மைகளுக்கான காத்திருப்பு காலங்களைச் சரிபார்க்கவும்.

 • உங்கள் பெற்றோருக்கு காப்பீடு செய்ய நீங்கள் திட்டமிட்டால், முழங்கால் மாற்று, கண்புரை அறுவை சிகிச்சை போன்ற பொதுவான சிகிச்சைகள் உள்ளதா என சரிபார்க்கவும்.

சீனியர் சிட்டிசன்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவதற்கான குறிப்புகள்

 • வயதுக்கு ஏற்ப இன்சூரன்ஸ் பிரீமியம் உயரும். எனவே, உங்களிடம் ஏற்கனவே திட்டம் இருந்தால், டாப்-அப் திட்டத்துடன் அதன் இன்சூரன்ஸ் தொகையை அதிகரிக்கலாம்.

 • உங்கள் இன்சூரர்  உங்களுக்கு வழங்கும் மருத்துவமனை டை-அப்கள் மற்றும் சேவை டை-அப்களின் வகையைச் சரிபார்க்கவும்.

 • நீங்கள் பெறும் திட்டத்தில் முழங்கால் மாற்று, கண்புரை அறுவை சிகிச்சை போன்ற பொதுவான சிகிச்சைகள் உள்ளதா என சரிபார்க்கவும்.

 • உங்களுக்கு வழங்கப்படும் பயன்களின் அதிகபட்ச வரம்புகளை அறிந்துகொள்ளவும்.

 • ஏற்கனவே உள்ள பல்வேறு நோய்களுக்கான காத்திருப்பு காலத்தை சரிபார்க்கவும்.

ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றிய கட்டுக் கதைகள்

 • ஹெல்த் இன்சூரன்ஸ் தீவிர நோய்களுக்கு மட்டுமே காப்பீடு கொடுக்கும்: ஹெல்த் இன்சூரன்ஸ் மோசமான அல்லது கடுமையான நோய்களுக்கு மட்டுமே காப்பீடு வழங்கும் என்று பலர் எண்ணுகின்றனர். ஆனால், அது உண்மையல்ல! எப்போதும் இருக்கக்கூடிய சாதாரண உடற் சம்பந்தமான பிரச்சனைகள், விபத்துக்கள், மனநல ஆலோசனை, குழந்தைப்பேறு மற்றும் அடிப்படை வருடாந்திர ஹெல்த் செக்கப் என அனைத்தையுமே இது உள்ளடுக்குகிறது!

 • இந்த இளம் வயதில் எனக்கு எந்த நோயும் வராது, அதனால் எனக்கு எந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியும் தேவையில்லை”: இளமையில் நோய்கள் வராது என்ற நம் பொதுவான நம்பிக்கையை தகர்த்தெறியும் வகையில்,  இப்பொழுதெல்லாம் நோய்கள் எந்த வயதிலும் வருகின்றன. தற்போதுள்ள வானிலை மாற்றங்கள், வாழ்க்கை முறை, உணவு முறை போன்ற பல காரணங்களினால் பிசிஓஎஸ், நுரையீரல் சம்பந்தமான நோய்கள், புற்றுநோய் போன்ற பல நோய்கள் இளம் வயதினருக்குத் தான் வருகிறது. 

 • ஹெல்த் இன்சூரன்ஸ் தொடர்பான செயல்பாடுகள் உங்கள் நேரத்தை வீணடிக்கும்:இது நீங்கள் எந்த வகையான ஹெல்த் இன்சூரன்ஸை தேர்வு செய்கிறீர்கள் மற்றும் உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநர் பொறுத்து அமையும்! தற்போதுள்ள தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மூலம் நம்மால் சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை இப்போது மிகவும் விரைவாகவும் எந்த வித சிரமும் இன்றி எளிதில் பெறலாம்!

 •  உங்களுக்கு சேமிப்புகள் இருந்தால், ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்கத் தேவை இருக்காது: நாம் பெரும்பாலும் நம்பிக்கையுடன் தான் செயல்படுவோம், இல்லையா? நம்முடைய சேமிப்புகள் நமக்கு தேவைப்படும் நேரத்தில் உதவ முடியும் என்றாலும், எந்த அளவிற்கு தேவை ஏற்படும் என்பதை ஒருபோதும் முன்பே கணிக்க முடியாது. மறுபுறம் ஒரு சிறந்த ஹெல்த் இன்சொர்ரன்ஸ் ஆனது, நீங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கென மட்டுமே செய்யும் ஒரு பிரத்யேக முதலீடு ஆகும். எனவே, நீங்கள் உங்கள் சேமிப்புகளை செலவு செய்யவோ அல்லது எதிர்காலத்தில் பணம் இல்லை என்று கவலைப்படவோ தேவையில்லை!

இந்தியாவில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

டிஜிட் வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸில் அப்படி என்ன சிறப்பு உள்ளது?

ஆன்லைன் செயல்முறை மற்றும் டிஜிட்டல் நட்பாக இருப்பதற்கு அப்பால், டிஜிட்டின் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டமானது கஸ்டமைசேஷன்கள், இலவச வருடாந்திர ஹெல்த் செக்-அப்கள், அறை வாடகைக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருத்தல், அன்றாட ஹாஸ்பிட்டல் கேஷ் அலவன்ஸ், மனநோய்களுக்கான ஆதரவு மற்றும் பல பலன்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் பார்த்துக்கொள்கிறது.  

 

ஏற்கனவே இருக்கும் உடல்நலக்குறைவுகளுக்கு எனக்கு பாதுகாப்பு கிடைக்குமா?

இது உங்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவின் வகை மற்றும் தீவிரம் பொறுத்து அமையும். உங்களுக்கு ஏற்கனவே புற்றுநோய், எச்ஐவி, பார்கின்சன் நோய், தலாசீமியா, நியூரோபதி, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள், டவுன் சிண்ட்ரோம் மற்றும் அல்சீமர்  போன்ற நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கான செலவுகளை டிஜிட் ஏற்காது. 

 

கிளைம் செய்வதற்கு நான் என்னென்ன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்?

இது முழுவதுமாக நீங்கள் செய்யவிருக்கும் கிளைம் வகையைப் பொறுத்து அமையும். அது கேஷ்லெஸ் கிளைமாக இருந்தால், மருத்துவமனையில் டிபி-யால் வழங்கப்பட்ட தேவையான படிவத்தை நீங்கள் நிரப்ப வேண்டும். ஒரு வேலை அது ரீஇம்பர்ஸ்மென்ட்டாக இருந்தால், நீங்கள் உங்களின் ஹெல்த் இன்வாய்ஸ்களை அப்லோடு/சமர்ப்பிக்க வேண்டும். 

 

நான் நெட்வொர்க்கில் இல்லாத ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாமா?

ஆம், நீங்கள் அவ்வாறு செய்யலாம். ஆயினும், இந்த நேர்வில் நீங்கள் ரீஇம்பர்ஸ்மென்டை கிளைம் செய்ய வேண்டும். ஏனெனில், கேஷ்லெஸ் கிளைம்கள் எங்களின் நெட்வொர்க் மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும்.

 

ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவதற்கான சிறந்த வயது என்ன?

தற்கான பதில் மிகவும் எளிமையானது. நீங்கள் எவ்வளவு இளமையாக இருக்கிறீர்களோ, உங்களின் ஆரம்ப மற்றும் அதற்கடுத்த பிரீமியம்கள் அவ்வளவு குறைவாக இருக்கும். மேலும், நீங்கள் இளமையாக இருந்தால், பல்வேறு கவர்கள் செல்லுபடியாக தேவைப்படும் காத்திருப்பு கால ஆண்டுகளை நீங்கள் எளிதில் கடந்து விடலாம். இந்த இரண்டு காரணங்களுக்காகவே நீங்கள் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை உங்கள் வாழ்க்கையின் இளமை காலத்தில் வாங்க வேண்டும் என்பதற்கு போதுமானது.  

நோய்கள் அல்லது விபத்துகள் வயதானவர்களை மட்டுமே தாக்குவதில்லை. இளைஞர்களும் அதற்கு ஆளாகிறார்கள். எனவே, இளைஞர்கள் பாலிசியை எடுக்க வேண்டும் என்பதற்கான மற்றொரு காரணம் இது ஆகும். 

இளைஞர்கள் நிதி சார்ந்த பாதுகாப்பினை கொண்டிருக்க மாட்டார்கள் என்பதால், மருத்துவமனை சார்ந்த செலவுகளை சந்திப்பது அவர்களுக்கு கடினம்.

 

அவசர கால ஹாஸ்பிட்டலைசேஷனுக்கு நான் யாரை அழைக்க வேண்டும்?

எந்த நேரமாக இருந்தாலும், என்ன நாளாக இருந்தாலும் நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம். 1800-258-4242 என்ற எண்ணை அழைத்தால் மட்டும் போதும். உங்களுக்கு தேவையான அனைத்தையும் நாங்கள் உங்களுக்கு செய்து கொடுப்போம்.

 

லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?

லைஃப் இன்சூரன்ஸ் என்பது ஒரு நீண்ட கால இன்சூரன்ஸ் பாலிசி. இது இன்சூர் செய்யப்பட்ட நபர் இறந்த பிறகு, கிளைம் தொகையை அவரின் குடும்பத்தாருக்கு வழங்கும் ஒரு பாலிசி. அதே நேரத்தில், ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது இன்சூர் செய்யப்பட்ட நபருக்கு ஏதேனும் உடல்நலக்குறைவு, நோய்கள் மற்றும் விபத்துகள் ஏற்பட்டால் அதற்கான மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு பாலிசி.   

 

என்னுடைய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி இந்தியா முழுவதிலும் செல்லுபடியாகுமா?

ஆம், டிஜிட்டின் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி இந்தியா முழுவதும் செல்லுபடியாகும்.

 

ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைம் நிராகரிக்கப்படுவதற்கோ அல்லது மாறுக்கப்படுவதற்கோ வாய்ப்பு உள்ளதா?

ஆம், உங்களின் ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைம் பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை எனில், அது நிராகரிக்கப்படும். உதாரணமாக: உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் ஒரு உடல்நலக்குறைவுக்கான சிகிச்சைக்கு, நீங்கள் காத்திருப்பு காலத்திற்கு முன்னதாகவே கிளைம் செய்தால் அது நிராகரிக்கப்படும்.

 

நான் ஒன்றுக்கு மேற்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்கலாமா?

ஆம், நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்கலாம்!

 

நான் ஒன்றுக்கு மேற்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்கலாமா?

ஆம், நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்கலாம்!

 

நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரம் 24 மணிநேரத்திற்கு குறைவாக இருந்தாலும், என்னால் கிளைம் செய்ய முடியுமா?

ஆம், அது ஒரு டே கேர் செயல்முறையாகவோ அல்லது ஓபிடி-யாகவோ இருக்கும் பட்சத்தில் நீங்கள் கிளைம் செய்யலாம். எனினும், உங்களின் ஹெல்த் இன்சூரன்ஸில் நீங்கள் ஓபிடி-க்கான பாதுகாப்பை பெற்றிருக்க வேண்டும்.

 

நான் என்னுடைய புதுப்பிப்பு பிரீமியத்தை சரியான நேரத்தில் செலுத்தவில்லை என்றால் என்ன ஆகும்?

அப்படி செய்துவிடாதீர்கள்! ஒரு வேலை நீங்கள் உங்களின் புதுப்பிப்பு பிரீமியத்தை சரியான நேரத்தில் செலுத்தவில்லை என்றால், உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி காலாவதியாகிவிடும். மேலும், நீங்கள் உங்களின் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் செயல்முறைகளை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டி இருக்கும்!

 

என்னுடைய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை நாள் ஒன்றிலிருந்து பயன்படுத்த முடியுமா?

இல்லை, ஆரம்ப காத்திருப்பு காலமாக நீங்கள் 30 நாட்கள் காத்திருக்க வேண்டும். இருப்பினும், தற்செயலாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு, கிளைமகள் செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும்போது, அதற்கு எந்தவொரு காத்திருப்பு காலமும் இல்லை. மேலும் இதன்போது உங்களின் பாலிசியை வாங்கிய பின் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம்.

 

ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவதற்கான சரியான வயது எது?

உங்களின் இளைமை பருவமே நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவதற்கான சரியான வயது ஆகும். ஏனெனில், உங்களுக்கான பிரீமியம்கள் மிகவும் குறைவானதாகவும், உங்களின் காத்திருப்பு காலமும் விரைவில் முடிவடையும். கூடுதலாக, ஒரு உடல்நலக்குறைவிற்கு ஆகும் மருத்துவ செலவுகளுக்கு உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் – உங்களின் பயணங்களுக்காக நீங்கள் சேமித்து வைத்த பணம் செலவாகாமல் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பார்த்துக்கொள்ளும்.

 

ஒரு குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை எத்தனை பேர் கொண்ட குழு வாங்கலாம்?

ஒரு குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் குறைந்தபட்சம் எத்தனை நபர்கள் வரை அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது இன்சூரரைப் பொறுத்து மாறுபடும். டிஜிட்டில், குறைந்தபட்சம் 10 நபர்கள் வரை சேர்ந்து  ஒரு குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கலாம். 

 

சோன் சார்ந்த தள்ளுபடியைப் பெற நான் வசிக்கும் சோன்(மண்டலத்தை) நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுமா?

அப்படி இல்லை, உங்கள் பிரீமியத்தில் சோன் சார்ந்த தள்ளுபடியைப் பெற நீங்கள் எந்த விதமான ஆதாரத்தையும் சமர்ப்பிக்க வேண்டியது இல்லை. எனினும், கிளைம் செய்யும்போது, நீங்கள் கிளைமில் குறிப்பிட்டுள்ள மண்டலத்தில் தான் வசிக்கிறீர்கள் என்பதை உறுதிசெய்ய உங்களின் வீட்டு முகவரிக்கான சான்றினை வழங்க வேண்டி இருக்கும். அப்படி சமர்ப்பிக்க தவறும் பட்சத்தில்,  10% கோ–பேமெண்டை நீங்கள் செலுத்த வேண்டும். தேவையான சான்றினை நீங்கள் சமர்ப்பித்து விட்டால், கோ–பேமெண்ட் எதுவும் கிடையாது.