ஆரோக்கிய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ்

Digit

High

Sum Insured

Affordable

Premium

24/7

Customer Support

Zero Paperwork. Quick Process.
Your Name
Mobile Number

High

Sum Insured

Affordable

Premium

24/7

Customer Support

ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசி என்றால் என்ன?

நீங்கள் ஏன் ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியை வாங்க வேண்டும்?

health insurance costs
இந்தியாவில் மருத்துவச் செலவுகள் மற்றும் சுகாதார நிலைமைகள் இரண்டும் அதிகரித்து வருகின்றன.
savings
ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசி என்பது தற்போது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளில் ஒன்றாகும்.
no cost emi
குறைந்தபட்சம் அடிப்படை ஹெல்த் இன்சூரன்ஸ் வைத்திருப்பது  புத்திசாலித்தனமான நிதித் திட்டமிடல் மற்றும் முதலீட்டுக்கு முக்கியமானது!
pollution
உலகையே ஆட்டிப்படைத்த கோவிட் மிகவும் பாதித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியானது, நீண்ட காலத்திற்கு  கோவிட்-19 மற்றும் பிற நோய்கள் இரண்டிலிருந்தும் உங்களைக் காப்பதற்கான செலவு குறைந்த இன்சூரன்ஸ் விருப்பமாக இருக்கலாம்.

டிஜிட்-இன் ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியின் சிறப்புகள் என்ன?

  • எளிய ஆன்லைன் செயல்முறைகள் - உங்கள் பாலிசியை வாங்குவது முதல் கிளைம் செய்வது வரை அனைத்தும் எளிதானது, விரைவானது, நேரடி காகித ஆவணங்கள் சமர்ப்பிப்பு இல்லாதது மற்றும் தொந்தரவு இல்லாதது! ஹார்டு காப்பிகள் தேவையில்லை!
  • இன்சூரன்ஸ் தொகை - உங்கள் தேவைகளின் அடிப்படையில் உங்கள் இன்சூரன்ஸ்  தொகையைத் தனிப்பயனாக்குங்கள்!
  • கொரோனா வைரஸ் போன்ற தொற்றுநோய்களை உள்ளடக்கியது - கோவிட்-19--இனால் இந்தியா மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும். எங்கள் ஹெல்த் இன்சூரன்ஸின் ஒரு பகுதியாக நாங்கள் அதைக் காப்பீடு செய்கிறோம். எனவே நீங்கள் ஒரு தனியான கொரோனா வைரஸ் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெற வேண்டியதில்லை.
  • ஒட்டுமொத்த போனஸ் - ஆரோக்கியமாக இருப்பதற்காக வெகுமதியைப் பெறுங்கள்! கிளைம் செய்யப்படாமல் இருக்கும் ஆண்டுகளுக்கான வருடாந்திர ஒட்டுமொத்த போனஸை பெற்றிட நீங்கள் தகுதி பெறுவீர்கள்.
  •  எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுங்கள் - கேஷ்லெஸ்  சிகிச்சைக்காக, இந்தியாவில் உள்ள எங்கள் 6400+ நெட்வொர்க் மருத்துவமனைகளில் இருந்து தேர்வு செய்யவும் அல்லது செலவு செய்த பணத்தைத் திருப்பிப் பெறும் ரீஇம்பர்ஸ்மென்ட் திட்டத்தைத் தேர்வு செய்யவும்.
  • குறைந்தபட்ச கோ-பேமெண்ட் - நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸூக்கான கிளைமை கோரும் போது, கிளைம் செய்யும் தொகையின் 5% மட்டுமே உங்கள் கையில் இருந்து செலவழிக்க வேண்டும்.
  • 24X7 மணி நேர வாடிக்கையாளர் உதவி - உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், தேசிய விடுமுறை நாட்களில் கூட எங்களின் 24x7 மணி நேர அழைப்பு வசதியைப் பயன்படுத்தலாம.
  • எளிய அதிவிரைவு கிளைம் செயல்முறை - எங்கள் கிளைம் செயல்முறை முற்றிலும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. அதனால்தான், கிளைம் கோருவது எளிதாக உள்ளது . மேலும், அதற்கான செட்டில்மென்ட்டைப் பெறுவதும் சுலபமானதாக இருக்கிறது.

ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசி பிரீமியம் சார்ட் மற்றும் கால்குலேட்டர்

டிஜிட்டின் ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியில் ₹3 லட்சம் முதல் ₹50,000 மடங்குகளில் ₹2 கோடி வரையிலான இன்சூரன்ஸ்  தொகை விருப்பங்கள் உள்ளன. ஒரு நபருக்கான குறைந்தபட்ச இன்சூரன்ஸ் தொகை ₹3 லட்சம் மற்றும் அதிகபட்ச இன்சூரன்ஸ் தொகை ₹2 கோடிக்கானக்கான ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசி பிரீமியம் ஒப்பீடு.*

வயது பிரிவு

ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசி பிரீமியம் (SI 3 லட்சம்)

ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசி பிரீமியம் (SI 2 கோடி)

18-25

₹2,414

₹9,642

26-30

₹2,503

₹9,999

31-35

₹2,803

₹11,197

36-40

₹3,702

₹13,333

41-45

₹4,698

₹18,764

46-50

₹6,208

₹24,799

51-55

₹8,420

₹33,633

56-60

₹11,569

₹46,211

*துறப்பு - இந்த பிரீமியத் தொகைகள் உடல்நலக் குறைபாடுகள் இல்லாத ஒரு ஆணுக்குக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பிரீமியத்தில் ஜிஎஸ்டி சேர்க்கப்படவில்லை. இந்தக் இன்சூரன்ஸ் தொகையுடன் சேர்த்து மேலும், உங்களுக்கு ₹3 லட்சம், ₹5 லட்சம், ₹10 லட்சம், ₹25 லட்சம், ₹50 லட்சம், ₹1 கோடி மற்றும் ₹2 கோடி போன்ற பிற இன்சூரன்ஸ் தொகை விருப்பங்களும் உள்ளன.

ஆரோக்கிய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் என்ன உள்ளடக்கப்பட்டுள்ளது?

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான செலவுகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான செலவுகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன்பும் 60 நாட்களுக்குப் பிறகும் நோய் அல்லது விபத்து காரணமாக ஏற்படும் அனைத்து மருத்துவமனைக்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள் (நோயறிதல், மருத்துவர் கட்டணம், அறுவை சிகிச்சை செலவுகள், மருத்துவமனையில் தங்குதல், மருந்துகள் போன்றவை) அடங்கும்.

ஆயுஷ்

ஆயுஷ்

பல முதியவர்கள் மாற்று சிகிச்சையைத் தேர்வு செய்ய விரும்புகிறார்கள். ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும்/அல்லது ஹோமியோபதி போன்ற மருத்துவமுறைகளினால் சான்றளிக்கப்பட்ட மருத்துவமனைகளில் செய்யப்படும் சிகிச்சைகள் இந்த பாலிசியில் அடங்கும்.

குமுலேட்டிவ் போனஸ்

குமுலேட்டிவ் போனஸ்

வருடத்தில் நீங்கள் எந்த கிளைமையும் செய்யாவிட்டாலும், நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை! கிளைம் கோரப்படாத ஒவ்வொரு வருடத்திற்கும், உங்கள் இன்சூரன்ஸ் தொகையில் 5% போனஸாக வெகுமதியைப் பெறுங்கள்!

அறை வாடகை

அறை வாடகை

நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய பல்வேறு மருத்துவமனை அறைகள் உள்ளன. இந்தக் பாலிசியின் மூலம், ரூ. 5,000/நாள் வரை நீங்கள் விரும்பும் எந்த அறையையும் தேர்வு செய்யலாம்.

ஐசியூ/ஐசிசியூ

ஐசியூ/ஐசிசியூ

மொத்த இன்சூரன்ஸ் தொகையில் 5% அல்லது ஒரு நாளைக்கு ₹10,000 வரை ஐசியூ மற்றும் ஐசிசியூ வசதிகளில் ஏற்படும் செலவுகள் ஈடுசெய்யப்படும்.

ஆம்புலன்ஸ் சேவைகள்

ஆம்புலன்ஸ் சேவைகள்

ஒரு மருத்துவமனைக்கு அனுமதிக்கு அதிகபட்சமாக ₹2,000 வரையிலான ஆம்புலன்ஸ் கட்டணங்கள் பாலிசியில் சேர்க்கப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் பல் சிகிச்சைகள்

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் பல் சிகிச்சைகள்

காயம் அல்லது நோய் காரணமாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை அல்லது பல் சிகிச்சைகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.

கண்புரை அறுவை சிகிச்சை

கண்புரை அறுவை சிகிச்சை

கண்புரை அறுவை சிகிச்சைக்கான செலவுகள் ஈடுசெய்யப்படுகின்றன. நீங்கள் ₹40,000 வரை அல்லது மொத்த இன்சூரன்ஸ் தொகையில் 25%, எது குறைவாக இருந்தாலும் அதைக் காப்பீடாகப் பெறலாம்.

புதிய அதிநவீன சிகிச்சைகள்

புதிய அதிநவீன சிகிச்சைகள்

பலூன் சினுபிளாஸ்டி, இம்யூனோதெரபி மற்றும் ஸ்டெம் செல் தெரபி உள்ளிட்ட பல நவீன சிகிச்சைகளுக்கு (கீழே உள்ள பட்டியலைப் பார்க்கவும்) உங்கள் இன்சூரன்ஸ் தொகையில் 50% வரை காப்பீடு செய்யலாம்.

இந்த காப்பீட்டில் உள்ளடங்காதது எவை?

கிளைமை எவ்வாறு தாக்கல் செய்வது?

  • ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைம்கள் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் 1800-258-4242 என்ற எண்ணில் எங்களுக்குத் தெரியப்படுத்தவும் அல்லது healthclaims@godigit.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். உங்கள் மருத்துவமனை கட்டணங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தையும் பதிவேற்றுவதற்கான இணைப்பை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்.
  • கேஷ்லெஸ் கிளைம்கள் - நெட்வொர்க் மருத்துவமனையைத் தேர்வு செய்யவும். நெட்வொர்க் மருத்துவமனைகளின் முழுமையான பட்டியலை இங்கே காணலாம். மருத்துவமனை உதவி மையத்தில் இ-ஹெல்த் கார்டைக் காட்டி, கேஷ்லெஸ் கிளைம்  படிவத்தைக் கேட்கவும். எல்லாம் சரியாக இருந்தால், உங்கள் கிளைம் அப்போதே செயல்படுத்தப்படும்.
  • நீங்கள் கொரோனா வைரஸுக்கு கிளைம் செய்துள்ளீர்கள் எனில், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனமான ICMR-ன் அங்கீகாரத்தைப் பெற்ற மையத்திலிருந்து நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதற்கான அறிக்கை உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியின் முக்கிய அம்சங்கள்

இன்சூர் செய்யப்பட்ட தொகை

3 லட்சம் முதல் 2 கோடி வரை

கோ-பேமெண்ட்

5% கட்டாய கோ-பேமெண்ட்

பிரீமியம்

ஆண்டுக்கு ₹2414 முதல்*

ரூம் ரெண்ட் கேப்பிங்

உங்கள் இன்சூரன்ஸ் தொகையில் 2% (5,000 வரை)

குமுலேட்டிவ் போனஸ்

கிளைம் இல்லாத ஒவ்வொரு ஆண்டிற்கும் உங்களுக்கு இன்சூரன்ஸ் தொகையில் 5% கூடுதல் போனஸ்

கிளைம் ப்ராஸஸ்

டிஜிட்டல் ஃப்ரெண்ட்லி, ஹார்ட்காப்பிகள் கிடையாது!

திட்டத்தில் உள்ள விருப்பங்கள்

ஃபேமிலி ஃப்ளோட்டர்& இன்டிஜுவல் பாலிசி

ஆரோக்கிய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் ஸ்டாண்டார்ட் பெனிபிட்ஸ்

வாழ்நாள் முழுவதுமான புதுப்பித்தல் தன்மை

இந்த பாலிசியை வாங்குவதற்கான வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே என்றாலும், நீங்கள் சரியான நேரத்தில் புதுப்பித்து கொண்டே இருப்பதன் மூலம், இந்த பாலிசியை வாழ்நாள் முழுவதும் புதுப்பித்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியின் குறைந்த பிரீமியம்

இது ஐஆர்டிஏஐ-ஆல் நிர்ணயம் செய்யப்பட்ட பேசிக், ஸ்டாண்டர்ட் பாலிசி என்பதால், பிற ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுடன் ஒப்பிடும் போது பிரீமியம் குறைவாக உள்ளது.

குறைந்த கோ-பேமெண்ட்

ஒவ்வொரு ஹெல்த் இன்சூரன்ஸூக்கும் தனிப்பட்ட கோ-பேமெண்ட்கள் இருக்கிறது. சிலவற்றில் 10-20% கோ-பேமெண்ட் உள்ளது, சிலவற்றில் எந்த கோ-பேமெண்டும் இல்லை. இந்த பாலிசியில், குறைந்தபட்ச கோ-பேமெண்ட் 5% மட்டுமே உள்ளது; அதாவது கிளைம்களின் போது, நீங்கள் 5% செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இன்டிஜுவல் & ஃபேமிலி ஃப்ளோட்டர் கிடைக்கிறது

கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் வழங்கும் ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியானது இரண்டு திட்டங்களுடன் கிடைக்கிறது: அவை இன்டிஜுவல் ஹெல்த் பாலிசி (ஒரு குடும்ப உறுப்பினருக்கு ஒரு பாலிசி) மற்றும் ஃபேமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் இன்சூரன்ஸ் (முழு குடும்பத்திற்கும் ஒரு பாலிசி).

வரையறுக்கப்பட்ட இன்சூரன்ஸ் தொகை

ஆரோக்கிய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ், இன்சூரன்ஸ் தொகையை உங்களால் 3 லட்சத்தில் இருந்து 2 கோடி வரம்பிற்குள் மட்டுமே தேர்வு செய்யமுடியும்.

ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியை யார் வாங்க வேண்டும்?

முதல்-முறையாக ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பவர்கள்

ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசி நன்மைகள் அனைத்து இன்சூரர்களிடமும்  கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் உள்ளன. அதுமட்டுமின்றி, இது தற்போது சந்தையில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியாகவும் இருக்கின்றது. எனவே, நீங்கள் இளமை பருவத்தில் இருப்பவராகவும், இப்போதுதான் ஹெல்த் இன்சூரன்ஸில் உங்கள் பயணத்தைத் தொடங்குகிறீர்கள் எனும் பட்சத்திலும், உங்களுக்கு மொத்த காப்பீட்டு தொகை 5 லட்சத்திற்கும் மேல் தேவைப்படாத சூழ்நிலையில், நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்திற்கு அதிகமாக செலவிடுவதைத் தவிர்ப்பதற்கு, ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசி போன்ற ஒரு அடிப்படை ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்குவது சால சிறந்ததாக அமையும்.

கோவிட்-19 பாதுகாப்பை முதன்மையாக கருதும் மக்கள்

கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்ட காலத்திலிருந்து, அதனால் பாதிக்கப்படக்கூடும் என்று அஞ்சும் மக்கள் அதற்கான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்துக்கொள்ள அதிகமாக விரும்புகிறார்கள். நீங்களும் அத்தகைய பாலிசியைத் தேடுகிறீர்கள் என்றால், ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். கொரோனா வைரஸூக்கென இருக்கும் குறிப்பிட்ட திட்டங்களுக்கு ஆகும் செலவு போலவே தான் இதற்கும் செலவாகும். மேலும் ஒரு சிறப்பம்சமாக இத்திட்டத்தின் மூலம் கோவிட்-19உடன், மற்ற நோய்கள் மற்றும் குறைபாடுகளுக்கும் காப்பீடு அளிக்கப்படுகிறது. மற்றுமொரு சிறந்த அம்சம், ஒரு சில மாதங்களில் காலாவதியாகும் தனிப்பட்ட கொரோனா வைரஸ் திட்டங்களுடன் ஒப்பிடுகையில், இது வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கப்படும் பொன்னான வாய்ப்புடன் வருகிறது.

பேசிக், குறைந்த விலை ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேடும் மக்கள்

நீங்கள், உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸின்  மூலம் பாதுகாக்க விரும்பும் அதே சமயத்தில் உங்கள் வருடாந்திர ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்திற்கு அதிகமாகச் செலவழிக்க விரும்பவில்லை எனும் பட்சத்தில், நீங்கள் ஆரோக்கிய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்வுசெய்யலாம். இது தற்போது சந்தையில் கிடைக்கும் மிகவும் குறைந்த விலை விருப்பங்களில் ஒன்றாக இருக்கிறது.

ஆரோக்கிய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் எப்படி வாங்குவது?

கோ டிஜிட்டின் ஆரோக்கிய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்