சப்போர்ட்
closeஎங்கள் வாட்ஸ்அப் எண்ணை அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியாது. இது வெறும் அரட்டை எண்.
டயாபெட்டீஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது சர்க்கரை நோயை குணப்படுத்துவதற்காக எடுத்துக் கொள்ளப்படும் சிகிச்சை மற்றும் அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் செலவுகளையும் ஈடுசெய்வதற்காக கொண்டு வரப்பட்ட ஒரு தனிப்பயனாக்கப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் ஆகும். கூடுதலாக, டயாபெட்டீஸ் நோய் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது, சர்க்கரை நோய்க்கான காப்புறுதி மற்றும் அதன் பலன்கள் போன்றவற்றை உள்ளடக்கும் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை, அதாவது உதாரணமாக, டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸைக் குறிக்கின்றது.
டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸின் கீழ் சர்க்கரை நோயிற்கு காப்புறுதி அளிக்கப்பட்டிருந்தாலும், இந்த நோயின் தன்மையும், அதன் வேறுபடுகின்ற உடல்நல சிக்கல்களையும் கருத்தில் கொண்டு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. சர்க்கரை நோயிற்கான உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் காப்புறுதியை குறித்த, இந்த குறிப்பிட்ட நிபந்தனைகளை பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் அவசியமான நேரத்தில் ஏற்படக் கூடிய சங்கடங்களை தவிர்க்கலாம். நாங்கள் வெளிப்படைத் தன்மையை விரும்புகிறோம். எனவே, தான் எந்தெந்த சூழ்நிலைகளில் செலவுகள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதையும், எந்தெந்த சூழ்நிலைகளில் செலவுகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதையும் உங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்!
டைப் 1 சர்க்கரை நோயானது, பொதுவாக குழந்தைகள் மற்றும் இள வயதினரிடையே கண்டறியப்படுகிறது. இந்த வகை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இன்சுலின்-ஐ சார்ந்தே இருக்கிறார்கள்.
கெடுவாய்ப்பாக, (இவ்வாறு இருப்பதற்கு நாங்கள் வருந்துகிறோம்!) ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் சமயத்தில், உங்களுக்கு ஏற்கனவே டைப் 1 சர்க்கரை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்காக இன்சுலின்-ஐ சார்ந்திருக்கும் பட்சத்தில், உங்களுக்கு டிஜிட்-இன் ஸ்டாண்டர்ட் ஹெல்த் இன்சூரன்ஸிற்கு கீழ் காப்புறுதி வழங்கப்படாது. டைப் 1 சர்க்கரை நோயின் வேறுபட்ட உடல்நல அபாயங்கள் மற்றும் சிக்கல்களின் காரணமாக, டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கென்று வடிவமைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சர்க்கரை நோய்க்கான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை எடுத்துக் கொள்ளுமாறு உங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
இந்தியாவில் டைப் 2 சர்க்கரை நோய் தான் பொதுவாக காணப்படுகிறது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். எனவே தான், எங்களுடைய ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் இதற்கு காப்புறுதி வழங்குகிறோம்.
எனினும், சர்க்கரை நோய் உட்பட ஏற்கனவே இருக்கும் அனைத்து நோய்களுக்கும் காத்திருப்பு காலம் (வெயிட்டிங் பீரியட்) உள்ளது.
ஏற்கனவே இருக்கும் நோயான சர்க்கரை நோயிற்கு டிஜிட்-இல் காத்திருப்பு காலமானது (வெயிட்டிங் பீரியட்), உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்கிய தேதியிலிருந்து 4 வருட காலமாகும். அதற்கு பிறகு நீங்கள் அது சம்பந்தப்பட்ட கிளைம்களை செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு ஹெல்த் இன்சூரன்ஸும் சில கட்டுப்பாடுகளுடனேயே வருகிறது, கெடுவாய்ப்பாக, இது எங்களுடைய வரையறையாகும்; அதாவது சர்க்கரை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்காக 10 வருடங்களுக்கும் மேலாக சிகிச்சை எடுத்து வருபவர்களுக்கு நாங்கள் காப்புறுதி வழங்குவதில்லை.
இதிலுள்ள பெரும் உடல்நல அபாயங்கள் மற்றும் சிக்கல்களின் காரணமாகவே இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, சர்க்கரை நோயினால் 10 வருடங்களுக்கும் மேலாக அவதிப்படுபவர்களுக்கு பொருந்துகிறபடியான பிரத்யேகமான சர்க்கரை நோய்க்கான திட்டத்தை எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
கெட்ட செய்தி என்னவென்றால், உலகிலேயே சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதன் காரணம், டைப் 2 சர்க்கரை நோய் நகர்ப்புற மக்களிடையே மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களின் காரணமாக மிக அதிகமாக காணப்படுகிறது.
எனினும், உங்களுக்கு ஏற்கனவே நோய் இருப்பது கண்டறியப்பட்டிருந்தாலும் அல்லது எதிர்காலத்தில் கண்டறியப்பட்டாலும் (அவ்வாறு ஏற்படாது என்றே நம்புகிறோம்!), டிஜிட்-இன் ஹெல்த் இன்சூரன்ஸ் காத்திருப்பு காலம் (வெயிட்டிங் பீரியட்) முடிவடைந்த பிறகு காப்புறுதி வழங்குகின்றது.
பொறுப்புத்துறப்பு - இவை எங்கள் ஹெல்த் இன்சூரன்ஸிற்கு பொருந்தக் கூடிய பொதுவான நிபந்தனைகளாகும். ஆயினும், உங்கள் ஒட்டுமொத்த உடல்நிலையை கருத்தில் கொண்டே உங்களுக்கு காப்புறுதி வழங்கப்படுகிறதா இல்லையா என்பது முடிவெடுக்கப்படும். நீங்கள் டிஜிட்-இல் உங்களுடைய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் போது, உங்களுடைய உடல்நிலை எங்கள் உடல்நல நிபுணர்களால் பரிசோதித்து பார்த்து மதிப்பீடு செய்யப்படும். பொதுவாக அவசியமான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தியே உங்கள் உடல்நிலை மதிப்பிடப்படுகிறது.
கவரேஜ்கள்
டபுள் வாலட் பிளான்
இன்ஃபினிட்டி வாலட் பிளான்
வேர்ல்டுவைட் ட்ரீட்மெண்ட் பிளான்
முக்கிய அம்சங்கள்
இது உடல்நலக்குறைவு, விபத்து, தீவிர சிகிச்சை அல்லது கோவிட் 19 போன்ற தொற்றுநோய்கள் உட்பட அனைத்திற்கும் தேவையான மருத்துவமனை செலவுகளை உள்ளடக்கியது. உங்களின் மொத்த மருத்துவமனை செலவுகள் நீங்கள் இன்சூர் செய்த தொகைக்கு உள்ளாக அடங்கும் வரை மல்டிபிள் ஹாஸ்பிட்டலைசேஷன் செலவுகளும் இதில் அடங்கும்.
விபத்து அல்லாத உடல்நலக்குறைவு சார்ந்த சிகிச்சை செலவுகளைப் பெற நீங்கள் பாலிசி எடுத்த முதல் நாளில் இருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீங்கள் காத்திருக்க வேண்டும். இதுவே ஆரம்ப காத்திருப்பு காலம் ஆகும்.
வீட்டில் இருந்தபடியே சுகாதார பராமரிப்பு, போன் மூலம் கன்சல்டேஷன், யோகா மற்றும் மனந்தெளிநிலை மற்றும் பல பிரத்யேகமான உடல்நலம் சார்ந்த நன்மைகள் எங்கள் ஆப்-ல் கிடைக்கும்
நீங்கள் இன்சூர் செய்யப்பட்ட தொகைக்கான பேக் அப் வழங்குவதன் மூலம் உங்களின் 100% இன்சூரன்ஸ் தொகையை கட்டாயமாக பெறுவீர்கள். இன்சூர் செய்யப்பட்ட தொகைக்கான பேக் அப் எப்படி செயல்படுகிறது? உங்களின் பாலிசிக்கான இன்சூர் செய்யப்பட்ட தொகை 5 லட்சம் ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் 50,000 ரூபாய்க்கு கிளைம் செய்கிறீர்கள். இந்த நேரத்தில் டிஜிட் வாலட் பெனிஃபிட்டை தொடக்கி வைக்கும். அதனால் இந்த வருடத்தில் நீங்கள் 4.5 லட்சம் + 5 லட்சத்தை இன்சூர் செய்யப்பட்ட பணமாக வைத்திருப்பீர்கள். இருப்பினும், ஒவ்வொரு முறை செய்யும் கிளைமானது, மேற்கூறிய வழக்கில், அடிப்படை இன்சூரன்ஸ் தொகையான 5 லட்சத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது.
பாலிசி ஆண்டில் நீங்கள் எந்தவொரு கிளைமும் செய்யவில்லையா? அப்படி என்றால் உங்களுக்கு போனஸ் காத்திருக்கிறது- ஆரோக்கியமாக இருந்ததற்கும் & எந்தவொரு கிளைமும் செய்யாமல் இருந்ததற்கும் உங்களின் மொத்த இன்சூர் செய்யப்பட்ட தொகையுடன் ஒரு கூடுதல் தொகை சேர்க்கப்படும்!
வெவ்வேறு வகையைச் சார்ந்த அறைகளுக்கு வெவ்வேறு வாடகைகள் வசூலிக்கப்படும். ஹோட்டல் ரூம்களுக்கு வசூலிக்கப்படுவதை போல தான் இதுவும். நீங்கள் இன்சூர் செய்யப்பட்ட தொகைக்கு குறைவாக இருக்கும் வரை டிஜிட் எந்த விதமான ரூம் ரெண்ட் கேப்பிங்கும் விதிப்பதில்லை.
24 மணிநேரத்திற்கு அதிகமாக மருத்துவமனையில் இருந்தால் மட்டுமே அதற்கான மருத்துவ செலவுகளை ஹெல்த் இன்சூரன்ஸ் ஏற்றுக்கொள்ளும். தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக 24 மணிநேரத்திற்கு குறைவாக தேவைப்படும் கண்புரை, டயாலிசிஸ் போன்ற மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சைகள் டே கேர் செயல்முறைகள் ஆகும்.
உலகளவு கவரேஜுடன் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளை பெறுங்கள்! இந்தியாவில் நீங்கள் ஒரு மருத்துவ பரிசோதனை செய்தபோது உங்களுக்கு உடல்நலகுறைவு இருப்பது கண்டறியப்பட்டால், ஒரு வேலை நீங்கள் அதற்கான சிகிச்சையை அயல்நாடுகளில் மேற்கொள்ள விரும்பும் பட்சத்தில், உங்களுக்கு உதவ நாங்கள் உள்ளோம். உங்களுக்கு தேவையான பாதுகாப்பு பாலிசியில் உண்டு!
உங்களின் ஹெல்த் செக்-அப்பிற்கு ஆகும் செலவுகளை உங்கள் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை வரை நாங்களே செலுத்துவோம். நீங்கள் எடுக்கும் பரிசோதனைகளுக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது! அது இசிஜி அல்லது தைராய்டு சோதனை எதுவாக இருந்தாலும் சரி. உங்கள் கிளைம் லிமிட் என்ன என்பதை பாலிசி அட்டவணையில் பார்க்க மறந்து விடாதீர்கள்.
உயிருக்கு ஆபத்தான சில அச்சுறுத்தும் நிலைகளில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போக்குவரத்து தேவைப்படலாம். இதனை நாங்கள் முழுவதுமாக புரிந்துகொள்கிறோம். ஏர்பிளேன் அல்லது ஹெலிகாப்டர் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற செலவுகளை ரீஇம்பர்ஸ் செய்து கொள்ளலாம்.
கோ–பேமெண்ட் என்பது ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் உள்ள செலவினப் பகிர்வுத் தேவையாகும், இது பாலிசிதாரர்/இன்சூர் செய்தவர் கிளைம் செய்யப்பட்ட தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஏற்க வேண்டும். இது இன்சூர் செய்யப்பட்ட தொகையைக் குறைக்காது. இந்த சதவீதமானது வயது போன்ற ஒரு சில காரணிகள், அல்லது ஒரு சில நேரங்களில் சோன் சார்ந்த கோ–பேமெண்ட் என்று அழைக்கப்படும் நீங்கள் சிகிச்சை பெறும் நகரத்தை பொறுத்து அமையும். எங்களது திட்டத்தில், வயது சார்ந்த அல்லது சோன் சார்ந்த கோ–பேமெண்ட் கிடையாது.
ஒரு வேலை நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், சாலைவழி ஆம்புலன்ஸுக்கான செலவுகளை ரீஇம்பர்ஸ் செய்து கொள்ளலாம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு முன்னும், பின்னரும் நோயறிதல், பரிசோதனைகள் மற்றும் குணமடைதல் போன்ற செலவுகளுக்கான கவர் இது.
பிற அம்சங்கள்
உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் ஒரு நோய் அல்லது மருத்துவ நிலை குறித்து நீங்கள் எங்களிடம் பாலிசி எடுப்பதற்கு தெரிவித்து, நாங்கள் அதை ஒப்புக்கொண்டும் இருப்பதற்கு எங்களின் திட்டப்படி ஒரு குறிப்பிட்ட காத்திருப்பு காலம் உண்டு. இது உங்களின் பாலிசி அட்டவணையில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட உடல்நலக்குறைவிற்கு கிளைம் செய்ய நீங்கள் காத்திருக்க வேண்டிய காலத்தை இது குறிக்கிறது. டிஜிட்டில் இது 2 ஆண்டுகள் ஆகும். இது உங்கள் பாலிசி ஆக்டிவேட் ஆன நாளில் இருந்து துவங்கும். விலக்குகளுக்கான முழு பட்டியலுக்கு, உங்கள் பாலிசி வொர்டிங்களின் ஸ்டான்டர்டு விலக்குகளைப் (Excl02) படிக்கவும்.
பாலிசி காலத்தில் உங்களுக்கு ஏதேனும் விபத்தின் விளைவாக காயம் ஏற்பட்டு, விபத்து ஏற்பட்ட தேதியில் இருந்து பன்னிரண்டு (12) மாதங்களுக்குள் ஏற்பட்ட உங்களின் இறப்பிற்கு அது மட்டுமே காரணமாக இருந்தால், பின்னர் பாலிசியில் குறிப்பிட்டுள்ளபடி இன்சூர் செய்யப்பட்ட தொகையில் 100% வழங்கப்படும்.
உங்களுக்கு உறுப்பு தானம் கொடுத்த நபரும் இந்த பாலிசி மூலம் பாதுகாக்கப்படுவார். தானம் கொடுப்பவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்பும், பின்னரும் ஆகும் செலவுகள் ஏற்கப்படும். உடலுறுப்பு தானம் செய்வது மிகப்பெரிய பண்புகளில் ஒன்றாகும். ஆதலால், நாங்களும் இதில் பங்குபெற ஆசைப்படுகிறோம்!
மருத்துவமனைகளில் காலியான படுக்கைகள் இல்லாமல் போகலாம் அல்லது நோயாளியின் நிலை கருதி அவரை மருத்துவமனையில் அனுமதிக்க முடியாத சூழ்நிலை ஏற்படலாம். பதட்டப்படாதீர்கள்! நீங்கள் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தால் கூட, அதற்கான செலவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
பல உடல்நல பிரச்சினைகளுக்கு உடல் பருமன் ஒரு காரணமாக உள்ளது. இதனை நாங்கள் முழுவதுமாக புரிந்துகொள்கிறோம். ஆகவே, உடல் பருமனியல் அறுவை சிகிச்சை செய்வதற்கான மருத்துவ தேவை ஏற்பட்டால் அதற்கான செலவுகளையும் நாங்கள் ஏற்கிறோம். இருப்பினும், இந்த சிகிச்சை அழகு சார்ந்த தேவைகளுக்கு செய்யப்படும்போது, அதற்கான மருத்துவ செலவுகளை நாங்கள் ஏற்க மாட்டோம்.
மனஉளைச்சல் காரணமாக மனநோய் மருவத்துவம் செய்ய ஒருவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், இந்த பலன்களின் கீழ் 1,00,000 ருபாய் வரை கிடைக்கும். இருப்பினும், ஓபிடி ஆலோசனைகள் இந்த பலன்களின் கீழ் வராது. குறிப்பிட்ட உடல்நலகுறைவுக்கான காத்திருப்பு காலம் சைக்கியாட்ரிக் இல்னஸுக்கான காத்திருப்பு காலம் குறிப்பிட்ட உடல்நலகுறைவுக்கான காத்திருப்பு காலத்திற்கு ஒத்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்பும், மருத்துவமனையில் இருக்கும்போதும், அதற்கு பின்னரும் வாக்கிங் எய்டுகள், கிரீப் பேண்டேஜ்கள், பெல்ட்டுகள் போன்ற பல மருத்துவ எய்டுகள் மற்றும் செலவுகளுக்காக அவசியம் ஏற்படலாம். பாலிசியில் சேர்க்கப்படாத இந்த செலவுகளையும் நாங்களே ஏற்றுக்கொள்வோம்.
கோ–பேமெண்ட் |
இல்லை |
ரூம் ரெண்ட் கேப்பிங் |
இல்லை |
கேஷ்லெஸ் மருத்துவமனைகள் |
இந்தியா முழுவதும் 10500+ நெட்வொர்க் மருத்துவமனைகள் |
இன்பில்ட் பர்சனல் ஆக்சிடன்ட் கவர் |
ஆம் |
உடல்நலம் சார்ந்த பெனிஃபிட்கள் |
10+ உடல்நலம் சார்ந்த பார்ட்னர்கள் மூலம் கிடைக்கிறது |
நகரம் சார்ந்த தள்ளுபடி |
10% வரை தள்ளுபடி |
உலகளவு கவரேஜ் |
ஆம்* |
ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான தள்ளுபடி |
10% வரை தள்ளுபடி |
கன்ஸ்யூமபிள் கவர் |
ஆட்-ஆன் ஆக உள்ளது |
*வேர்ல்டுவைட் ட்ரீட்மெண்ட் பிளானில் மட்டுமே கிடைக்கும்
“ஏனென்றால் சர்க்கரை நோய், அதன் வேறுபட்ட உடல்நல சிக்கல்களின் காரணமாக அதிகம் செலவு வைக்கக் கூடிய நிலைக்கு மாறி விடக் கூடும்.” இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, ஏழை நகர்ப்புற மக்கள் தங்கள் வருமானத்தில் ஏறக்குறைய 34%-ஐ சர்க்கரை நோய் சிகிச்சைக்காக பயன்படுத்துகிறார்கள் மற்றும் கிராமப்புற மக்கள் சர்க்கரை நோய் சிகிச்சைக்காக தங்கள் வருமானத்தில் ஏறக்குறைய 27%-ஐ செலவு செய்கிறார்கள் என்றும் அறியப்படுகிறது.
சர்க்கரை நோய் சிகிச்சைக்கான செலவு என்பது, அதன் வாடிக்கையான செலவுகள், உடல்நல சிக்கல்கள் மற்றும் பெரும் உடல்நல அபாயங்கள் காரணமாகவே அதிகமாக உள்ளது. சர்க்கரை நோயிற்கான ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பது இது போன்ற செலவுகளை நீங்கள் சற்று எளிதாக சமாளிப்பதற்கு உதவுகிறது.
“ஏனென்றால் இந்தியாவில் மருத்துவம் சம்பந்தப்பட்ட விலை உயர்வுகள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகின்றன.” கெடுவாய்ப்பாக, இந்தியாவில் மருத்துவ செலவுகள் வருடா வருடம் அதிகரித்து வருகின்றன, நீங்கள் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பெறும் வாய்ப்பிருக்கிறதோ இல்லையோ, நீங்கள் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்வது, அனைத்து விதமான நோய்களுக்கும் தேவையான சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு உங்களுக்கு உதவும். ஓபிடி (OPD) ஆலோசனை போன்ற சிறிய பிரச்சனைகளுக்கும் கூட இது உதவும்.
“ஏனென்றால் சர்க்கரை நோயாளிகளுக்கு தீவிர நோய்கள் ஏற்படும் அபாயங்கள் அதிகமாக உள்ளது.” தீவிர நோய்களால் பாதிக்கப்படும் அபாயங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகமாக இருக்கிறதென்பது சர்க்கரை நோய் பற்றிய கசப்பான உண்மையாகும். இதய குழலிய (கார்டியோவாஸ்குலர்) நோய்கள் மற்றும் சிறுநீரக செயலிழப்புகள் போன்றவை சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படக் கூடிய கிரிடிக்கல் இல்நஸ்களாகும்.
எனவே, உங்கள் சர்க்கரை நோயை சரியான மருத்துவ ஒத்துழைப்போடு கவனித்து, அதனை கட்டுப்படுத்துவதன் மூலம் இத்தகைய நோய்களை தவிர்ப்பது மட்டுமின்றி, ஒரு நல்ல ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் சர்க்கரை நோய்க்கு காப்புறுதி எடுப்பதும் மிகவும் முக்கியமாகும்.
“ஏனென்றால் ஒரு நல்ல ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் என்பது, நீங்கள் எப்போதும் வருடாந்திர ஹெல்த் செக்-அப்களை செய்து உங்கள் உடல்நலத்தை சரியாக கவனித்துக் கொள்கிறீர்களா என்பதை எப்போதுமே கவனித்துக் கொள்கிறது.” டிஜிட் உள்ளிட்ட சில ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள், தங்கள் இன்சூரன்ஸ் பெனிஃபிட்-இன் ஒரு பகுதியாக, இலவசமாக வருடந்தோறும் ஹெல்த் செக்-அப் செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவசியம் ஏற்பட்டாலேயொழிய நம்மில் எவ்வளவு பேர் வருடாந்திர ஹெல்த் செக்-அப்பிற்கு செல்கிறோம்?
உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு வருடாந்திர ஹெல்த் செக்-அப் செய்து கொள்வது மிக முக்கியமாகும். ஏனென்றால், சர்க்கரை நோய் உட்பட பெரும்பாலான நோய்கள், நிலைமை மோசமாகும் வரை கண்டறியப்படுவதில்லை.
வருடாந்திர ஹெல்த் செக்-அப் செய்யும் வசதியுடன் கூடிய ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சினை தோன்றாது.
“ஹெல்த் இன்சூரன்ஸில் சர்க்கரை நோயிற்கு காப்புறுதி வழங்கப்படுவதில்லை”. இது உண்மையல்ல. உடல்நலக் கேடுகள் மற்றும் நோய்களுக்கான இன்சூரன்ஸ் என்பது ஒவ்வொரு இன்சூரருக்கும் இடையே வேறுபடும். இதை நீங்களே மேலே படித்துள்ளீர்கள்.
ஹெல்த் இன்சூரன்ஸில் சர்க்கரை நோயிற்கு காப்புறுதி வழங்கப்படுகிறது, ஆனால் அது வெவ்வேறு நிலைமைகளை சார்ந்துள்ளது. உதாரணத்திற்கு, நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கும் போது சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்படுவது, உங்களுக்கு இருக்கும் சர்க்கரை நோயின் வகை, உங்கள் சர்க்கரை நோய் கட்டுப்பாடு அளவுகள் மற்றும் உங்களுக்கு எவ்வளவு காலம் இந்த நோய் இருக்கிறது போன்ற பல காரணிகளை பொறுத்தே வழங்கப்படும்.
“உடல் பருமனாயிருப்பவர்களுக்கு மட்டுமே சர்க்கரை நோய் வரும்.” இது உண்மையல்ல. பருமனாக இல்லாதவர்களுக்குக் கூட சர்க்கரை நோய் வரும் வாய்ப்பிருக்கிறது, பருமனாக உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் வந்தே தீரும் என்றும் சொல்வதற்கில்லை.
சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு ஒரு தனித்த காரணத்தை கூற இயலாது. குடும்ப வரலாறு, சோம்பலான வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல காரணிகள் உள்ளன. மேலும் குளுக்கோஸ் அல்லது இன்சுலின் தயாரிப்பதில் அல்லது/மற்றும் உடலெங்கும் விநியோகிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும் வேறு காரணங்கள் போன்றவையும் சர்க்கரை நோயிற்கு இட்டுச் செல்லக் கூடும்.
“நிறைய இனிப்பு/ஸ்வீட் சாப்பிடுவதனால் சர்க்கரை நோய் வருகிறது!” இல்லை, ஆரோக்கியமற்ற, ஒழுங்கில்லாத உணவுமுறையே அபாய காரணியாகும், சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு அதிகப்படியான சர்க்கரை உட்கொள்வது மட்டுமே காரணமல்ல.
மேற்சொன்னது போல், பிறப்பின் போது ஏற்படும் உள்-கர்ப்பப்பை விளைவுகள், குடும்ப வரலாறு, வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்கள், தகுந்த உடற்கட்டோடு இல்லாதிருப்பது, வயது அதிகரித்தல், உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்தக் கொழுப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளும் ஒன்று சேர்வதன் மூலமாகவும் சர்க்கரை நோய் ஏற்படக் கூடும். எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஒருவர் அதிக அளவு இனிப்பு உட்கொள்ளவில்லை என்றாலும் கூட, அவருக்கு சர்க்கரை நோய் ஏற்படலாம்!
“வயதானவர்களுக்கு மட்டுமே சர்க்கரை நோய் வரும்.” வயதானவர்களுக்கு (45 வயதுக்கு மேற்பட்டவர்கள்) சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளதென்றாலும் கூட, சமீபத்திய போக்கு என்னவென்றால், குறிப்பாக இந்தியாவின் நகர்ப்புறங்களில், இளம் வயதுடையவர்களே அதிகமாக சர்க்கரை நோயால் பாதிப்படைந்து வருகின்றனர்.
ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்களின் காரணமாகவே இது பெரும்பாலும் ஏற்படுகிறது – ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளாததும், சோம்பியிருப்பதும், அதாவது தகுந்த உடற்கட்டோடு இல்லாதிருப்பதும் போன்றவையே காரணங்களாகும், ஆயினும் பிற காரணங்களும் இருக்கலாம். எனவே, வயதானவர்களுக்கு மட்டுமே சர்க்கரை நோய் வரும் என்று இனிமேல் நீங்கள் சொல்ல முடியாது!
“உங்கள் தாத்தா பாட்டிக்கு சர்க்கரை நோயிருந்தால், உங்களுக்கும் சர்க்கரை நோய் வரும்!” ஒருவருக்கு சர்க்கரை நோய் வருவதற்கு குடும்ப வரலாறு மற்றும் மரபியல் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறதென்றாலும் கூட, அது மட்டுமே ஒரே காரணமல்ல. சொல்லப் போனால், பரம்பரை பரம்பரையாக குடும்பத்தில் எவருக்கும் சர்க்கரை நோய் இல்லாத போதிலும், சிலருக்கு சர்க்கரை நோய் வரக் கூடும்.
கூடுதலாக, உங்கள் தாத்தா பாட்டி அல்லது பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால், உங்களுக்கும் சர்க்கரை நோய் வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது!. சர்க்கரை நோய்த்தடுப்பு மற்றும் அதன் காரணங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு எங்களுடைய விரிவான சர்க்கரை நோய் உடல்நல கையேட்டினை நீங்கள் இங்கே படிக்கலாம்.
“உங்கள் இன்சூரரிடம் உங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது பற்றி தெரிவிக்கக் கூடாது!” கெடுவாய்ப்பாக, பல பேருக்கு இன்னும் இன்சூரன்ஸ் காரியங்களில் ஒரு நம்பகத்தன்மையற்ற மனப்பாங்கு இருக்கிறது. எனினும், நாங்கள் உங்களிடம் முழுவதும் வெளிப்படையாக எல்லா விஷயங்களிலும் இருப்பதன் மூலம் இது மாதிரியான மனப்போக்கினை மாற்ற முயற்சி செய்கிறோம்.
நீங்கள் எங்களிடம் ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்கினாலும் சரி அல்லது வேறு யாரிடமும் வாங்கினாலும் சரி, உங்கள் தற்போதைய உண்மையான உடல்நல நிலவரங்களை நீங்கள் தெரிவிக்கவில்லையெனில், நீங்கள் பின்னொரு காலகட்டத்தில் கிளைம் செய்யும் போது பிரச்சினைகளும், நிராகரிப்புகளும் தான் மிஞ்சும். அல்லது அதற்கு முன்னமேயே – அதாவது ஆரம்பகட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யும் போதே பிரச்சினைகள் ஏற்படக் கூடும். அதனால் தான் எப்போதுமே வெளிப்படையாக இருப்பது சிறந்த பலனைத் தரும்.