கிரிட்டிகல் இல்னெஸ் பாதுகாப்பு என்பது உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் அல்லது உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானின் வகையைப் பொறுத்து கூடுதல் பாதுகாப்புடன் கிடைக்கும் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் ஆகும்.
இது குறிப்பிட்ட கிரிட்டிகல் இல்னெஸ் பாதிப்புகளுக்கு எதிராக உங்களுக்கு இது பாதுகாப்பு வழங்கும்; மிகவும் பொதுவானவையாக புற்றுநோய், நுரையீரல் அல்லது கல்லீரல் செயலிழப்பு, பக்கவாதம் மற்றும் பல ஆபத்தான நோய்களை சொல்லலாம். டிஜிட்டில், எங்களின் அனைத்து ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களிலும் கிரிட்டிகல் இல்னெஸ் பாதுகாப்பு பெனிஃபிட் தற்போது நிரந்தரமாக சேர்க்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டியதில்லை.
கிரிட்டிகல் இல்னெஸ்கள் என்றால் என்ன?
கிரிட்டிகல் இல்னெஸ் ஒரு தனிநபரின் ஹெல்த், வாழ்க்கை முறை மற்றும் நிதிநிலைகளை முக்கியமான அளவில் தீவிரமாக பாதிக்கும் தீவிர மருத்துவ நிலைகள் எனக் கூறலாம். புற்றுநோய், ஸ்க்லெரோசிஸ் (Sclerosis), கோமா, மாரடைப்பு, பக்கவாதம் (Paralysis) போன்ற இல்னெஸ் இதற்கான சில எடுத்துக்காட்டுகள்.
துரதிர்ஷ்டவசமாக, காலப்போக்கில் அதிகரித்து வரும் புற்றுநோய் நிகழ்வுகளைப் பற்றி நாம் அடிக்கடி படித்து அறிந்து கொள்கிறோம். அது உங்களுக்குத் தெரிந்த ஒருவராக இருந்தாலும் சரி, அல்லது செய்தித்தாளில் அல்லது இன்டர்நெட்டில் நீங்கள் படித்த கட்டுரையாக இருந்தாலும் சரி; புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் மற்றும் ஹார்ட் ஃபெயிலியர், லிவர் ஃபெயிலியர், நுரையீரல் ஃபெயிலியர் போன்றவை பலரின் வாழ்க்கையில் ஒரு சோகமான பகுதியாகவும் மாறியுள்ளன.
இது ஒருவரின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை மட்டும் பாதிக்காது, அதேநேரம் ஒருவரின் நிதியையும் பாதிக்கிறது. அதிர்ஷ்டவசமாக, ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ், இதற்கு ஏற்படும் எக்ஸ்பென்ஸை மேனேஜ் செய்ய உங்களுக்கு உதவுகிறது. எனவே நீங்கள் அல்லது உங்கள் அன்புக்குரியவர்களின் சிறந்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் எளிதாக உறுதிப்படுத்த முடியும்.