பைக் இன்சூரன்ஸை ஒப்பிட்டுப் பார்க்கவும்

ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை அறிந்து கொண்டு, ஒப்பிட்டுப் பார்க்கவும்

Third-party premium has changed from 1st June. Renew now

ஏன் டூ வீலர் இன்சூரன்ஸை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்?

நீங்கள் புதுச் சட்டை வாங்க எண்ணும் போது, ஜவுளிக் கடைக்கு சென்று ஏதோ ஒரு சட்டையை வாங்குவீர்களா? இல்லை, என்பது தான் உண்மை! நீங்கள் அங்கிருக்கும் எல்லா சட்டைகளையும் பார்ப்பீர்கள், ஒப்பிடுவீர்கள், அதில் ஒன்றை தேர்வு செய்து டிரையல் ரூமிற்கு சென்று, அது உங்களுக்கு பொருத்தமாகவும், சரியான அளவிலும் இருக்கிறதா எனவும் சோதித்துப் பார்ப்பீர்கள்.

பணம் செலுத்துமிடத்திற்கு செல்வதற்கு முன், அந்த சட்டை எந்த சேதமும் இல்லாமல் இருக்கிறதா என்பதை பரிசோதித்துப் பார்த்து விட்டு தான் நீங்கள் பணம் செலுத்துவீர்கள். நீங்கள் பைக் இன்சூரன்ஸ் வாங்குவதற்கு முன்னும் கூட இதையே தான் செய்ய வேண்டும், கிடைக்கப்பெறும் விருப்பத்தேர்வுகளை சரிபார்த்து, உங்களுக்குப் பொருந்தும் பாலிசியையே நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால், பிற்காலத்தில் பாலிசிக்கு பணம் செலுத்திய பிறகு, உங்களுக்குச் சாதகமல்லாத விதிமுறைகள் ஏதேனும் இருப்பின் உங்களுக்குச் சங்கடங்கள் நேரக் கூடும்.

உங்கள் தேவைகளுக்கேற்றவாறு பொருந்துகின்ற, விலை மலிவாகவும் கிடைக்கிற பாலிசி இருப்பது பின்னர் உங்களுக்குத் தெரிய வந்தால், நீங்கள் வருந்தக்கூடும். எனவே நீங்கள் பாலிசியை வாங்குவதற்கு முன்பு பல்வேறு பைக் இன்சூரன்ஸ் பாலிசிக்களை ஆய்வு செய்து, ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமாகும்.

நீங்கள் ஏன் பைக் இன்சூரன்ஸை ஒப்பிட வேண்டும்?

இன்சூரர்களின் நம்பகத்தன்மையை சோதித்துப் பார்க்கவும்

இன்சூரன்ஸ் நிறுவனங்களை அவைதம் நம்பகத்தன்மையை வைத்து நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்து, அவற்றை தரவரிசைப்படுத்தலாம். மக்களின் மதிப்புரைகளை நீங்கள் ஆய்வு செய்து பார்க்கலாம், அதனை வைத்து எந்தெந்த நிறுவனங்கள் தம் சேவைகளில் சிறப்பாக விளங்குகிறதென்பதையும், கிளைம்களை செட்டில் செய்வதில் எது சிறந்து விளங்குகிறதென்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் நல்லதொரு இன்சூரன்ஸ் நிறுவனத்தினை தேர்ந்தெடுப்பது சுலபமானது.

உங்கள் பாலிசியின் விதிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளவும்

நீங்களாகவே பாலிசியை குறித்து புரிந்து கொண்ட பிறகு, எந்தவொரு  நிபுணரையோ அல்லது இன்சூரன்ஸ் முகவரையோ நீங்கள் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. பாலிசியில் காப்புறுதி வழங்கப்பட்டிருப்பவை பற்றியும், வழங்கப்படாதவை குறித்தும் நீங்களே முழுமையாக தெரிந்து கொண்ட பின், பாரபட்சமில்லாத முடிவுகளை நீங்களே சுயமாக எடுக்கலாம். பல இன்சூரர்களின் பாலிசிக்களை ஆய்வு செய்து, ஒப்பிட்டுப் பார்க்கும் போது தான் இது சாத்தியப்படும்.

கிளைம் நடைமுறையின் ஒத்தியல்பு குறித்து கவனமாக இருக்கவும்

பல்வேறு பாலிசிக்களை சரியான முறையில் ஆய்வு செய்து, ஒப்பிட்டுப் பார்ப்பதின் மூலமாக, நீங்கள் உச்ச இன்சூரன்ஸ் நிறுவனங்களின் கிளைம் நடைமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். கிளைம் கோரிக்கையை நீங்கள் எழுப்பிய பின்னர் நீங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். பின்னர் உங்களுக்கு ஏற்றதாயிருக்கிற ஒரு பாலிசியை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். 

கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கும் பாலிசியை கண்டறியவும்

இந்தியாவில் உச்ச இன்சூரன்ஸ் நிறுவனங்களில் கிடைக்கப்பெறும் பாலிசிக்களை நீங்கள் ஆய்வு செய்து பார்க்கலாம். பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பாலிசிக்களுக்கு பெறும் பிரீமியம் தொகையினை ஆய்வு செய்து பார்ப்பது, நீங்கள் சரியான முடிவினை எடுத்து, உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவதற்கு உதவும்.

சலுகைகளையும் தள்ளுபடிகளையும் பெறவும்

சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய பைக் இன்சூரன்ஸ் பிளான்களுக்கு நல்ல தள்ளுபடிகளை வழங்குவார்கள், நீங்கள் ஒரு வேளை மேற்சொன்ன முறையில் ஆய்வும், ஒப்பீடும் செய்து பார்க்கவில்லையென்றால் அதனை இழக்க நேரிடும். நீங்கள் நிச்சயமாக தள்ளுபடிகளை இழக்க விரும்ப மாட்டீர்கள்!

ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸை ஒப்பிடும் போது நீங்கள் பரிசீலிக்க வேண்டிய காரணிகள்

  • காப்புறுதி: தேர்டு-பார்ட்டி லையபிலிட்டி(பொறுப்பு) பாலிசி மற்றும் காம்ப்ரிஹென்சிவ் பாலிசி ஆகிய இரண்டில் எது உங்களுக்கு வேண்டும் என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் தேர்டு-பார்ட்டி பாலிசி எடுப்பது கட்டாயமாகும், மற்றும் இன்சூர் செய்யப்பட்ட நபரை தேர்டு பார்ட்டி நபருக்கோ அல்லது சொத்திற்கோ ஏற்படுகின்ற சேதத்திலிருந்து பாதுகாத்து காப்புறுதி வழங்குகின்றது. இதன் பிரீமியம் தொகையானது, இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையினால் (ஐஆர்டிஏஐ - IRDAI) தீர்மானிக்கப்பட்டிருக்கிறது, மற்றும் என்ஜின் ஆற்றலையும் சார்ந்திருக்கிறது. காம்ப்ரிஹென்சி(விரிவான) பாலிசி என்பது சொந்த சேதத்திற்கும், தேர்டு பார்ட்டி (TP) லையபிலிட்டிக்கும்(பொறுப்பு) சேர்த்து காப்புறுதி வழங்குவதால். காம்ப்ரிஹென்சிவ் பாலிசியை குறைந்த பிரீமியம் தொகையுடன் வழங்குகின்ற இன்சூரரை கண்டறியவும்.

  • ஐடிவி: இன்சூர்டு டெக்லேர்டு வேல்யூ என்பது என்னவென்றால், டிப்ரிஸியேஷன்(தேய்மானம்) செலவினை தவிர்த்த உங்கள் பைக்கின் இன்றைய மதிப்பாகும். இன்சூரன்ஸ் நிறுவனமானது பிரீமியம் தொகையினை உயர்த்துவதற்கோ அல்லது குறைப்பதற்கோ ஏற்ற வகையில் ஐடிவி-ஐ(IDV) தனிப்பயனாக்குவதற்கு வாய்ப்பளிக்கிறதா என சரிபார்க்கவும். ஒரு வேளை நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையெனில், குறைந்த பிரீமியம் தொகையை கொடுப்பதாக சொல்லி உங்கள் ஐடிவி-ஐ(IDV) உங்கள் இன்சூரர் குறைத்து விடுவதற்கான வாய்ப்பிருக்கிறது. பைக் இன்சூரன்ஸில் ஐடிவி-ஐ(IDV) பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.

  • பிரீமியம்: இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்குகின்ற தோராய மதிப்பீடுகளை(quotes) ஒப்பிட்டுப் பார்க்கவும். அதன் பின், குறைந்த பிரீமியத்திற்கு அதிகமான காப்புறுதி வழங்குகின்ற டூ-வீலர் இன்சூரன்ஸினை தேர்வு செய்யவும். ஆயினும் குறைவான பிரீமியத்தினை தேர்வு செய்வதென்பது எப்போதுமே ஒரு சிறந்த தேர்வாக இருக்காதென்பதை நினைவில் கொள்ளவும்! எனவே விதிமுறைகளை படித்துப் பார்த்து, நன்றாக புரிந்து கொள்ளவும்.

  • ஆட்-ஆன்கள்(மதிப்புக்கூட்டல்கள்: ஆட்-ஆன்களானது, காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் கூடவே தனிப்பட்ட முறையில், தனி விலையில், காப்புறுதியின் நன்மைகளை கூட்டும் பொருட்டு வருகின்றன. உங்கள் தேவையினையும், பட்ஜெட்டினையும் சார்ந்து ஆட்-ஆன்களை வழங்கக் கூடிய இன்சூரரை கண்டறியவும். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என்ஜின் புரொட்டெக்ஷன், ஜீரோ-டிப்ரிஸியேஷன், ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் முதலிய வெவ்வேறு ஆட்-ஆன்களை வழங்குகின்றன. நிபுணர் ஆலோசனை: ஒரு ஆட்-ஆன்-ஐ உங்களுக்கு அவசியமென்றால் மட்டுமே வாங்கவும், இல்லையென்றால் அது அனாவசியமாக பிரீமியம் தொகையை அதிகரித்து விடும். பைக் இன்சூரன்ஸில் ஆட்-ஆன் கவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.

  • கிளைம் நடைமுறை மற்றும் கிளைம் செட்டில்மெண்ட் விகிதம் : கிளைம் நடைமுறையானது எளிமையாகவும், விரைவாகவும் உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இது டிஜிட்டல் உலகமாக இருப்பதால், ஆன்லைனில் ஆவணங்களற்ற கிளைம் நடைமுறையை தேர்ந்தெடுக்கவும். பாலிசிதாரர்களின் முக்கியமான கவலை என்னவென்றால், அவர்கள் கிளைம் செய்யும் போது சரியான நேரத்தில் கிளைம் தொகை செட்டில் செய்யப்படுமா இல்லையா என்பது தான். கிளைம் செட்டில்மெண்ட் விகிதம் என்பது, பெற்ற கிளைம்களின் எண்ணிக்கையை, நிறுவனத்தால் செட்டில் செய்யப்பெற்ற கிளைம்களின் எண்ணிக்கையால் வகுப்பதின் மூலம் கணக்கிடப்படுகின்றது. ஆகவே, இந்த விகிதம் அதிகமாக இருக்கிறதென்றால், அந்த நிறுவனமானது அந்தளவு நம்பகத்தன்மையானது என்று பொருள்.

  • வாடிக்கையாளர் சேவை கிடைக்கப்பெறுவது: பிரீமியம் தொகையினை செலுத்திய உடனேயே, சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் திருப்தியடைந்து விடும் சூழ்நிலையும் காணப் பெறலாம். நாம் சில சமயங்களில் ஆர்வமாக சில பொருட்களை வாங்குகிறோம், ஆனால் நமக்குத் தேவையான சமயத்தில் அந்த பொருளுக்கான வாடிக்கையாளர் சேவை கிடைக்கப் பெறாமல் போகும் தருணத்தை நாம் அனைவருமே அனுபவித்திருப்போம். இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் இது பொருந்தக் கூடியது தான், நல்ல வாடிக்கையாளர் சேவை என்பது மிகவும் அவசியமான ஒரு அம்சமாகும்.

  • கால அவகாசம் அதிகரிக்கும் போது, பிரீமியம் தொகை குறைகிறது : இன்சூரன்ஸ் என்பது பலருக்கு சிக்கலான ஒன்றாக தோன்றும்! எனவே உங்களுக்குக் கிடைக்கப்பெறும் தள்ளுபடி எதுவாக இருப்பினும் அதனை பயன்படுத்திக் கொள்ளவும். ஒரு வருட பாலிசிக்கு பதிலாக, நீண்ட கால அவகாசத்திற்கு தேர்வு செய்யும் போது சிறிது தொகை குறைகிறது.

  • கேரேஜ் நெட்வொர்க் : நாடு முழுவதும் பரந்து விரிந்திருக்கும் கேரேஜ்களின் நெட்வொர்க் இருக்கும் போது, தேவை ஏற்படும் போது நீங்கள் கேஷ்லெஸ் வசதியை பயன்படுத்திக் கொள்வதற்கு உதவும். உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் இப்பேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கேரேஜ்கள் இருப்பது, உங்கள் டூ-வீலரை நீங்கள் பாதுகாத்துக் கொள்வதற்கு மிகவும் முக்கியமாகும்.

  • மதிப்புரைகள் (ரிவ்யூஸ்) : நீங்கள் வாங்குகின்ற எந்தவொரு பொருளையும் போலவே, இன்சூரன்ஸ் பாலிசிக்களுக்கும் கூட அவற்றை ஏற்கனவே உபயோகித்தவர்கள் ஆன்லைனில் வழங்கியிருக்கும் மதிப்புரைகளை ஆய்வு செய்வது அவசியமாகும். கூகிள் மதிப்புரைகள் மற்றும் முகநூல் ரேட்டிங்-களின் மூலம் அந்த தயாரிப்பை பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம், இதன் மூலம் நீங்கள் சுலபமாகவும், பண்பட்ட முறையிலும் முடிவு எடுக்கலாம்.

  • எதற்கெல்லாம் காப்புறுதி வழங்கப்படவில்லை: இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய இன்சூரன்ஸ் பாலிசியில் காப்புறுதி அளிக்கப்பட்டிருக்கும் விஷயங்களை பற்றி கொட்டை எழுத்தில் காண்பித்திருப்பார்கள், எனினும் எதற்கெல்லாம் காப்புறுதி ‘வழங்கப்படவில்லை’ என்பது குறித்தும் சிறிது ஆய்வு செய்வது முக்கியமாகும். யோசித்துப் பாருங்கள், நீங்கள் கிளைம் செய்யும் வேளையில் உங்களுக்குத் தேவையான ஒன்றுக்கு காப்புறுதி கிடைக்கப்பெறவில்லையென்றால், அது எவ்வளவு பெரிய அதிர்ச்சியாக இருக்கும்? 

  • டிடக்டிபிள்ஸ் : உங்கள் இன்சூரன்ஸ் காப்புறுதி வருவதற்கு முன்னரே தன்னிச்சையான மற்றும் கட்டாயமான டிடக்டிபிள்ஸ் வந்து விடுகிறது. இது அடிப்படையில், உங்கள் கிளைம் தொகையிலிருந்து கழித்து விடக் கூடிய ஒரு தொகையை குறிக்கிறது. ஆகவே, இன்சூரன்ஸ் பாலிசியில் டிடக்டிபிள் தொகை அதிகமாக இருப்பின், பிரீமியம் தொகை குறைவாக இருக்கும். அது போலவே, டிடக்டிபிள் தொகை குறைவாக இருப்பின், பிரீமியம் தொகை அதிகமாக இருக்கும். 

டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை எவ்வாறு ஒப்பிட்டுப் பார்ப்பது?

ஆன்லைனில் டூ வீலர் இன்சூரன்ஸினை ஒப்பிடவும் ஆஃப்லைனில் டூ வீலர் இன்சூரன்ஸினை ஒப்பிடவும்
உங்கள் வீட்டிலிருந்தபடியே, உங்கள் லேப்டாப்பில், பாலிசிக்களை ஒப்பிடுகின்ற வலைதளங்களில் லாக்-இன் செய்து பாருங்கள். உங்கள் ஏரியாவிலுள்ள ஒரு பிரபலமான, சுயேச்சை இன்சூரன்ஸ் முகவரை சந்திக்கவும். அவர் மூலம் கட்டுப்படியாகும் தரகு கட்டணத்திற்கு சரியான பாலிசிக்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் பைக்கின் விபரங்களை சுயமாகவே நீங்கள் பூர்த்தி செய்யவும். விவரக் குறிப்பீடுகள், ஐடிவி, ஆட்-ஆன்கள் போன்றவற்றை அவசியமேற்பட்டால் உள்ளிடவும். உங்கள் பைக் பற்றிய அனைத்து விபரங்களையும் முகவருக்குத் தெரிவிக்கவும், அப்போது தான் அவர் உங்களுக்கு ஏற்ற பாலிசிக்களை தேர்வு செய்து உங்களுக்கு உதவ முடியும்.
நியூ ஏஜ் ஃபின்டெக் நிறுவனங்களானது, நீங்கள் குறிப்பிட்ட தகவல்களுக்கு ஏற்றவாறு பாலிசிக்கள் மற்றும் அதன் விலைகளின் அட்டவணையிடப்பட்ட பட்டியலையும் காண்பிக்கின்றன. தரகர் தன் ஆய்வை செய்த பிறகு வெவ்வேறு நிறுவனங்களிலிருந்து பல தோராய மதிப்பீடுகளை(quotes) காண்பிப்பார்.

ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸை ஒப்பிடுவதின் நன்மைகள்

நேரத்தை மிச்சப்படுத்துகிறது

ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸை ஒப்பிட்டுப் பார்ப்பது சௌகரியமானது என்பது தான் முதன்மையான நன்மையாகும். உங்கள் விபரங்களை தயாராக வைத்துக் கொண்டு, நீங்கள் ஆன்லைனில் இலவசமாக தோராய மதிப்பீடுகளை(quotes) பெறலாம், பின்னர் வெவ்வேறு பாலிசிக்களை ஒப்பீடு செய்து பார்க்கலாம். இது நிச்சயமாக உங்கள் பொன்னான நேரத்தை மிச்சப்படுத்தும்.

எளிமையான நடைமுறை

ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு பின்பற்றும் நடைமுறை எளிதானது. உங்களுக்கு வசதியான நேரத்தில் நீங்கள் ஆய்வு செய்து பார்க்கலாம். ஏனென்றால் ஆன்லைனில் இன்சூரன்ஸை ஒப்பிட்டுப் பார்ப்பது, நீங்கள் பாலிசியை உங்களுடைய குறிப்பிட்ட தேவைகளுக்கேற்ப தேர்வு செய்து கொள்வதற்கான முழு சுதந்திரத்தையும் கொடுக்கிறது.

இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர்

பாலிசியை தேர்ந்தெடுக்கும் போது நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியான தேவைகள் இருக்கும். பிரீமியம் கால்குலேட்டர் போன்ற டூல்களை பயன்படுத்தி ஆன்லைனில் இன்சூரன்ஸை ஒப்பிட்டுப் பார்ப்பதென்பது மிகவும் சுலபமாகும். நீங்கள் விரும்பினால், நள்ளிரவு 2 மணிக்கு கூட உங்கள் பிரீமியம் தொகையை நீங்கள் கணக்கிட்டுப் பார்க்கலாம்.

சுலபமான மற்றும் அன்இன்ஃப்ளூயன்ஸ் செய்யமுடியாத முடிவு

ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸை ஒப்பிட்டுப் பார்ப்பது, இன்சூரன்ஸ் தரகரை நேரடியாக சந்திப்பதை விடவும் உங்களுக்கு நிறைய விருப்பத் தேர்வுகளை அளிக்கும். சரியான காப்புறுதியை தேர்வு செய்வதே அதி முக்கியமானது, உங்கள் பாலிசிக்கு ஏற்ற வெவ்வேறு ஆட்-ஆன்களை தேர்வு செய்து உங்கள் பாலிசியோடு பொருத்துவதற்கு இணைய வழியே சிறந்த வழியாகும்.

ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நம்பகத்தன்மை - ஏகப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சந்தையில் உள்ளன. இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பின்னணி குறித்து ஆய்வு செய்வதற்கு சிறிது நேரம் ஒதுக்குவது கட்டாயமாகும். ஆன்லைனில் மதிப்புரைகளை நீங்கள் பார்க்கலாம், அதே சமயத்தில் நிறுவனத்தின் கிளைம் செட்டில்மெண்ட் விகிதத்தையும் நீங்கள் பார்க்க வேண்டும்.

நீங்கள் செலுத்தக் கூடிய தொகை - இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர்களின் மூலம் நீங்கள் காப்புறுதி வாங்குவதற்கு செலுத்த வேண்டிய தொகையை குறித்து தெரிந்து கொள்ளலாம். நீங்கள் விபரங்களை பூர்த்தி செய்து, பொத்தானை அழுத்தியவுடன், உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையானது வந்து விடும். ஆட்-ஆன்களின் விலையை பார்க்கவும், ஏற்படக் கூடிய அபாயங்களை யோசித்துப் பார்த்து அவற்றின் விலை சரி தானா என்று ஆய்வு செய்யவும்.

உங்கள் தேவைகள் குறித்த தெளிவு - பாலிசி வாங்குபவராக, பைக் இன்சூரன்ஸ் வாங்கும் போது உங்களுக்கு எந்த மாதிரியான ஆட்-ஆன்கள் தேவைப்படும் என்று முடிவு செய்வது உங்களுடைய உரிமையாகும். உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பொருட்டு, சரியான ஆட்-ஆன்களுடன் கூடிய பாலிசியை பெறுவதற்கு தெளிவான யோசனை மிக முக்கியமானது.

டிடக்டிபிள்ஸ் - இது ஒரு சூதாட்டம் போன்றது, எனவே உங்கள் கார்டுகளை கவனமாக பார்த்து ஆடவும். நீங்கள் காப்புறுதி பெற விரும்பும் குறிப்பிட்ட ஆபத்துகள் குறித்து நீங்கள் மட்டுமே அறிவீர்கள். குறைந்த அபாயமுள்ள கவருக்கு அதிக தன்னிச்சையான டிடக்டிபிள்ஸை தேர்வு செயவ்தன் மூலம், உங்கள் பிரீமியம் தொகை குறையும்.