புதிய பைக் இன்சூரன்ஸ்

ஆன்லைனில் புதிய பைக் இன்சூரன்ஸிற்கான தோராய மதிப்பீட்டினைப் பெறவும்

Third-party premium has changed from 1st June. Renew now

புதிய பைக் இன்சூரன்ஸ் பற்றிய அனைத்தும் விவரிக்கப்பட்டுள்ளது

உங்களுக்கான டூ-வீலரை வாங்கி விட்டீர்களா? நாங்கள் அது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்! ஆனால், ஒரு எக்ஸ்பெர்ட் ஆக நீங்கள் உங்கள் பைக்கின் பாதுகாப்பு குறித்து சற்று இப்போதே சிந்துக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். அது மட்டுமல்ல, அதை செய்வது எளிதானதும் கூட, ஒரு இன்சூரன்ஸை வாங்கினால் போதும், உங்கள் வண்டி பாதுகாப்பாக இருக்கும். அது குறித்து உங்களுக்கு வழிக்காட்டவே நாங்கள் இங்குள்ளோம்.

முதலில் நீங்கள், இன்சூரன்ஸில் காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) பைக் இன்சூரன்ஸ் மற்றும் தேர்டு-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் என இரண்டு வகைகள் உள்ளன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவிலுள்ள புதிய பைக் இன்சூரன்ஸ் திட்டங்கள்

பைக் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வதில் ஐடிவி-ன் முக்கியத்துவம்

ஐடிவி, அதாவது இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ என்பது உங்கள் பைக் சேதமடைந்தாலோ அல்லது திருடப்பட்டு விட்டாலோ, அதற்கு உங்கள் இன்சூரர் உங்களுக்கு வழங்கும் அதிகபட்சத் தொகையைக் குறிக்கிறது. குறைந்த பிரீமியங்கள் ஒருவரை எளிதில் கவர்ந்து விடும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம் ஆனால், அது உங்களுக்கு அதிகபட்ச நிதிப் பலனைத் தராது. அதனால் தான், இன்சூரன்ஸ் வாங்கும் போது, நீங்கள் பிரீமியம் மட்டும் இல்லாமல், உங்களுக்கு வழங்கப்படும் ஐடிவி-யையும் எப்போதும் சரிபார்க்க வேண்டும்.

நாங்கள் உங்களை அதிக ஐடிவி-யைத் தேர்வு செய்யுமாறு பரிந்துரைக்கிறோம், ஏன் என்று தெரியுமா? உங்கள் பைக்கிற்கு முற்றிலுமாக இழப்பு ஏற்பட்டால், அதிக ஐடிவி இருப்பதால் அதிக ரீஇம்பர்ஸ்மென்ட் தொகை கிடைக்கும்.

டிஜிட்-ல் உங்கள் விருப்பப்படி நீங்கள் உங்கள் ஐடிவி-யைத் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம். எந்த சமரசமும் செய்யாமல் நீங்கள் ஒரு சரியான முடிவை எடுப்பதையே நாங்கள் விரும்புகிறோம்.

புதிய பைக் இன்சூரன்ஸை வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியவை

உங்கள் புதிய பைக்கிற்கு இன்சூரன்ஸ் வாங்கும் போது மனதில் கொள்ள வேண்டிய பல காரணிகள் உள்ளன. சிறந்த காபீட்டைப் பெற அவற்றில் கவனம் செலுத்துவது அவசியமாகும். இந்த காரணிகளில் சில பின்வருமாறு:

# கிளைம் செய்யும் செயல்முறை - இது மிகவும் முக்கியமானது; இந்த செயல்முறையானது எந்த சிரமும் இன்றி விரைவானதாக இருக்க வேண்டும். சோஷியல் மீடியா சேனல்கள், அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் யூசர் ரிவ்யூ போன்றவற்றில் இருந்து இன்சூரரின் கிளைம் வழங்கப்பட்ட வரலாற்றைச் சரிபார்க்கவும்.

# பாலிசியின் வகை - பாலிசியின் வகைகளை அறிந்து கொள்ளுங்கள். ஆம், ஒரு சரியான முடிவை எடுக்க சாத்தியமான ஆப்ஷன்களை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். உங்கள் இன்சூரன்ஸ் தேவைகளைப் பொறுத்து தேர்டு பார்ட்டி அல்லது காம்ப்ரிஹென்சிவ் (விரிவான). பாலிசியைத் தேர்வு செய்யவும்.

# ஆட்-ஆன்கள் - சரியான பாலிசியுடன் சரியான ஆட்-ஆன்களைத் தேர்வு செய்வது உங்களுக்கு அதிகபட்ச பலன்களைத் தரும். அவற்றில் சில, ஜீரோ டிப்ரிஸியேஷன்‌ கவர், என்சிபி கவர், ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் கவர் மற்றும் என்ஜின் புரொட்டெக்ஷன் கவர். ஆட்-ஆன்களைப் பற்றி மேலும் தெரிந்து கொண்டு, சரியானவற்றைத் தேர்வு செய்யவும்.

# சரியான ஐடிவி - சரியான ஐடிவி உங்கள் பாலிசியை வாங்குவதில் மற்றும் புதுப்பிப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. எதிர்ப்பாராத சூழலின் போது, அதிக ஐடிவி இருந்தால் அதிக இழப்பீடு கிடைக்கும். டிஜிட்-ல் நாங்கள் முற்றிலும் வெளிப்படையாக உள்ளோம் மற்றும் உங்கள் ஐடிவி-யை தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்.

#ஆன்லைனில் விலையை ஓப்பிடவும் - கட்டணங்களை ஆன்லைனில் நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதோடு, உங்கள் பாலிசியை ஆன்லைனில் வாங்கலாம். அதற்கு பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன. ஆன்லைனில் பாலிசியை நீங்கள் வாங்குவதில் சிறந்த அம்சம் என்னவென்றால், எங்களிடம் வாங்கும் போது உங்களுக்கு பேப்பர்வொர்க் (ஆவணங்களை நேரடியாக சமர்ப்பித்தல்) இருக்காது. உங்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்தாலே போதும், மற்றவை தானாக முடிந்துவிடும். எங்கள் பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டரைப் பயன்படுத்தி நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியத்தைக் கணக்கிடலாம் மற்றும் பிற நிறுவனங்களுடன் பிரீமியத் தொகையை ஒப்பிட்டு பார்க்கலாம்.

டீலரிடம் இருந்து புதிய பைக் இன்சூரன்ஸை வாங்குவது நல்ல யோசனை தானா?

நாம் அனைவருமே சிரமம் மற்றும் அலைச்சல் என அதிகமாக உள்ள வேலைகளில் இருந்து தப்பிக்கத் தான் பார்ப்போம். ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் சரியான இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தேடுவதில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைப்போம். அதற்காக பைக் டீலர்கள் வழங்கும் இன்சூரன்ஸ் பாலிசியையே எடுத்துக் கொள்வோம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு உங்களுக்கும் வசதியாக இருக்கும்! ஆனால், நீங்கள் அவ்வாறு செய்வது சரி தானா? உங்கள் டீலரிடமிருந்தே பாலிசியை வாங்கும் போது நேரக்கூடிய சாத்தியமான பிரேச்சனைகளைப் பற்றி பார்க்கலாம்.

# நீங்கள் குறைந்த ஆப்ஷன்களைப் பெறுவீர்கள் - நீங்கள் டீலரிடமிருந்து டூ-வீலரை வாங்கியவுடன், அவர்கள் அடுத்து உங்களிடம் பைக் இன்சூரன்ஸை விற்க முயற்சி செய்வார்கள். என்னதான் இது வசதியாக இருந்தாலும், ஆன்லைன் ஆப்ஷன்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, இது குறைந்த இன்சூரன்ஸ் ஆப்ஷன்களையே கொண்டுள்ளது. கூடுதலாக, உங்கள் டீலர் குறிப்பிட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் டை-அப் வைத்துக் கொண்டு இந்த நிறுவனங்களால் வழங்கப்படும் இன்சூரன்ஸ் திட்டங்களையே உங்களுக்கு வழங்குவார்.

# சிறந்த ஆட்-ஆன்கள் - உங்கள் பைக்கிற்கு சிறந்த கவரேஜை வழங்கும் வகையிலான பரந்த அளவிலான ஆட்-ஆன்களில் இருந்து உங்களுக்கு வேண்டியதைத் தேர்வு செய்ய உங்களுக்கு சுதந்திரம் இருக்காது. ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸை வாங்குவது என்பது சரியான பிளானை தேர்ந்த்தெடுத்து, பல்வேறு ஆட்-ஆன்களும் சேர்த்து எடுத்துக்கொண்டுத் தனிப்பயனாக்கிக் கொள்ளும் நன்மையை வழங்குகிறது.

#விலையை ஒப்பிட இயலாது - இன்சூரன்ஸை வாங்கும் முன் இன்சூரன்ஸின் பிரீமிய விலையை ஒப்பிட்டுப் பார்த்து வாங்குவது மிக முக்கியமாகும். ஒரு டீலரிடம் இருந்து வாங்கும் போது அத்தகைய ஆப்ஷன் உங்களுக்கு கிடைக்காது.

ஆன்லைனில் ஆராய்ச்சி செய்து, பின்னர் சரியான ஒன்றை வங்கலாம். உங்கள் பைக் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனிலேயே வாங்கிவிடலாம். செயல்முறை விரைவாக முடிவதோடு பேப்பர்வொர்க் எதுவும் இருக்காது.  இதில் சிறந்தது என்னவென்றால் உங்கள் பைக் இன்சூரன்ஸில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள், ஏனெனில் நீங்கள் தானே அதைத் தேர்வு செய்கிறீர்கள்!

ஆன்லைனில் புதிய பைக் இன்சூரன்ஸை எவ்வாறு வாங்குவது?

ஸ்டெப் 1 - பைக் இன்சூரன்ஸ் பக்கத்திற்குச் சென்று, உங்கள் வண்டியின் தயாரிப்பு, மாடல், வேரியண்ட், பதிவு செய்த தேதி ஆகியவற்றை நிரப்பவும் (புதிய பைக்கைத் தேர்ந்தெடுக்கவும்). 'மதிப்பீட்டினைப் பெறவும்' என்பதை கிளிக் செய்து, உங்களுக்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

ஸ்டெப் 2 - தேர்டு பார்ட்டி லையபிலிட்டி மட்டும் அல்லது ஸ்டாண்டர்டு பேக்கேஜ் (காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) இன்சூரன்ஸ்) ஆகியவற்றிற்கு இடையே உங்களுக்கு வேண்டியதைத் தேர்வு செய்யவும்.

ஸ்டெப் 3 - நீங்கள் வைத்துள்ள முந்தைய நோ கிளைம் போனஸ் குறித்த விவரங்களை உள்ளிடவும்.

ஸ்டெப் 4 - உங்கள் பிரீமியத்திற்கான தோராய மதிப்பீட்டினைப் பெறுவீர்கள். நீங்கள் ஒரு ஸ்டாண்டார்டு பிளானைத் தேர்ந்தெடுத்து இருந்தால், தேவையான ஆட்-ஆன்களைத் தேர்ந்தெடுத்து, ஐடிவி-யை உங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து கொண்டு நீங்கள் அதனை மேலும் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம். இறுதியான, பிரீமியத்தை நீங்கள் அடுத்த பக்கத்தில் காண்பீர்கள்.