காலாவதியான பைக் இன்சூரன்ஸை புதுப்பிக்க

உங்கள் காலாவதியான வெஹிக்கிலுக்கான பைக் இன்சூரன்ஸ் கொட்டேஷனை பெறுங்கள்

Third-party premium has changed from 1st June. Renew now

காலாவதியான டூ-வீலர் இன்சூரன்ஸை ஆன்லைனில் புதுப்பிக்க

இந்தியாவில், டூ-வீலர்கள் மிகவும் பிரபலமான வாகனங்களில் ஒன்றாகும். இது செலவு குறைந்ததாக இருக்கிறது என்பது மட்டுமே காரணமல்ல; குறிப்பாக கடுமையான டிராஃபிக்குடன் போராடும் நகரங்களில் இது உண்மையில் மிகவும் வசதியான போக்குவரத்து முறைகளில் ஒன்றாகும். நம் தினசரி பயணங்களுக்கு மத்தியில், உங்கள் அன்புக்குரிய டூ-வீலரை ஓட்டுவதற்கு மிகவும் அவசியமான ஒன்று அதன் டூ-வீலர் இன்சூரன்ஸ்.

டூ-வீலர் இன்சூரன்ஸ் உங்கள் பைக்கை சாத்தியமான இழப்புகள் மற்றும் சேதங்களிலிருந்து கவர் செய்யவும் பாதுகாக்கவும் உதவுவதோடு மட்டுமல்லாமல், சட்டத்தின் குட்புக்கிலும் உங்களை வைத்துக்கொள்கிறது. இந்தியாவில் குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் வைத்திருப்பது கட்டாயம் என்பதால், இது ஒன்று இல்லாததற்காக நீங்கள் அதிக அபராதம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என்பதையும் உறுதிசெய்கிறது.

கடந்த மூன்று வாரங்களாக நாம் கடைபிடித்து வரும் ஊரடங்கின் காரணமாக, பெரும்பாலான பைக் உரிமையாளர்கள் தங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸை புதுப்பிக்க மறந்துவிடக் கூடும். சிலர் இது இப்போதைக்குத் தேவையில்லை என்று கருதலாம், அல்லது நாம் அனைவரும் விரும்புவதுபோல் - அடுத்த முறை டூ-வீலர்களைப் பயன்படுத்தும் வரை இதைத் தள்ளிப்போடலாம்.

இருப்பினும், அடுத்த முறை உங்கள் பைக் இன்சூரன்ஸை புதுப்பிக்கும்போது இது நீண்ட செயல்முறைகளுக்கு வழிவகுப்பதோடு, உங்கள் பைக் இன்சூரன்ஸ் ஏற்கனவே காலாவதியாகியிருந்தால், உங்களின் நோ க்ளைம் போனஸையும் இழப்பீர்கள். இதை தெளிவுபடுத்த, உங்கள் பைக் இன்சூரன்ஸ் காலாவதியாகும்போது என்ன நடக்கும் என்பதைப் அறிந்துகொள்வோம்.

உங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் காலாவதியானால் என்ன நடக்கும்?

உங்கள் பைக்கை உங்கள் வாழ்நாள் முழுவதும் இன்சூர் செய்வது முக்கியம், ஏனெனில் இது எல்லா நேரங்களிலும் பைக்குடன் தொடர்புடைய பல்வேறு ஆபத்துகளுக்கு எதிராகவும் உங்கள் பைக்கை பாதுகாக்க உதவுகிறது.

இழப்புகள் மற்றும் சேதங்களுக்கான பணத்தைச் செலுத்துதல்

உங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் காலாவதியாகி, காலாவதி தேதிக்குப் பிறகு ஏதேனும் நேர்ந்தால், அதன் இழப்புகள் மற்றும் சேதங்களுக்கான பணத்தை நீங்களே செலுத்த வேண்டும். இந்த ஊரடங்கின்போது நீங்கள் டூ-வீலரை பயன்படுத்தாவிட்டாலும், வெஹிக்கில் ஓவர் ஹீட்டிங், பைக் அல்லது அதன் பாகங்கள் திருடப்படுதல், பார்க் செய்யப்பட்டிருக்கும் போது பைக் மீது ஏதாவது மோதும்போது ஏற்படும் சேதம் முதலிய நிகழ்வுகளால் ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கும் நீங்களே பணம் செலுத்தவேண்டியிருக்கும்.

டிராஃபிக் போலீசாரால் தண்டிக்கப்படுதல்

உங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸை புதுப்பிக்க மறந்துவிட்டு, போலீசார் உங்களைப் பிடித்தால், உங்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும். உண்மையில் இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த அபராத தொகையை ஒப்பிடும்போது இன்சூரன்ஸ் செய்வதற்கு அதை விட குறைவான செலவே ஆகும். இன்சூரன்ஸ் தொகை ரூ.750 முதல் (உங்கள் டூ-வீலர் வகையைப் பொறுத்து) தொடங்குகிறது!

நோ கிளைம் போனஸ் இழப்பு

உங்கள் பாலிசி செயல்பாட்டில் இருந்தபோதும் நீங்கள் பைக் இன்சூரன்ஸ் கிளைம் செய்யவில்லை என்றாலும், குறிப்பிட்ட நேரத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ அதைப் புதுப்பிக்கவில்லை என்றால், உங்கள் நோ கிளைம் போனஸை இழப்பீர்கள்! அதாவது, உங்கள் பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் புதுப்பித்தல் தள்ளுபடிகள் கிடைக்காது.

மீண்டும் ஆய்வுக்கு செல்லவேண்டும்!

நீங்கள் ஒரு பைக் இன்சூரன்ஸை மேற்கொள்ளும்போது, குறிப்பாக ஒரு காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) அல்லது ஓன் டேமேஜ் இன்சூரன்ஸ் செய்யும்போது, உங்கள் பாலிசி செயல்படுத்தப்படுவதற்கு முன் சுய பரிசோதனை செய்யும் செயல்முறை உள்ளது. உங்கள் பைக் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் சரியான நேரத்தில் புதுப்பிக்கவில்லை என்றால், நீங்கள் மீண்டும் ஆய்வு செயல்முறைக்கு செல்ல வேண்டும், இதன் காரணமாக உங்கள் பாலிசியை புதுப்பிக்க அதிக நேரம் எடுக்கும்!

காலாவதியான பைக் இன்சூரன்ஸை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி?

உங்கள் பைக் இன்சூரன்ஸ் பாலிசி ஏற்கனவே காலாவதியாகிவிட்டாலோ அல்லது விரைவில் காலாவதியாகப் போகிறது என்றாலோ... ஆன்லைனில் உங்கள் பைக் இன்சூரன்ஸை எப்படி புதுப்பிப்பது என்பது குறித்த வழிமுறைகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

தற்போது, டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பித்தல் என்பது ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந்ததைப் போல் கடுமையாக இல்லை. காலாவதியான டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் இப்போது ஆன்லைனிலேயே புதுப்பிக்கலாம், இது புதுப்பித்தல் செயல்முறையை எளிதாக்குகிறது மற்றும் குறைந்த நேரத்தில் நிறைவேற்றுகிறது.

கூடுதலாக, பெரும்பாலான மக்கள் தங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை சரியான நேரத்தில் புதுப்பிப்பதில்லை என்பதையும் அவர்களின் பாலிசி எப்போது காலாவதியாகிறது என்பதையுமே உணராமல் இருக்கிறார்கள் என இன்சூரன்ஸ் டெவலப்மென்ட் அண்ட் ரெகுலேட்டரி அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (Insurance Development and Regulatory Authority of India) கண்டறிந்தது. அதனால்தான், உங்கள் பாலிசியை அதன் காலாவதி தேதிக்கு முன்பே புதுப்பிப்பதற்கு இப்போது உங்களுக்கு ஆப்ஷன் உள்ளது.

இதற்குப் பதிலாக நீங்கள் மல்ட்டி-இயர் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசிக்கு செல்லலாம். இதன்மூலம் நீங்கள் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு இன்சூரன்ஸ் பெறலாம்.

அப்படியானால், ஒருவர் எப்படி இதை மேற்கொள்வது? காலாவதியான டூ-வீலர் இன்சூரன்ஸை ஆன்லைனில் எப்படி புதுப்பிக்கலாம் என்பதை இங்கே காணலாம்:

டிஜிட் இன்சூரன்ஸ் மூலம் உங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸை புதுப்பித்தல்

  • உங்கள் வெஹிக்கிலுக்கான பிரீமியம் தொகையைக் கணக்கிட டூ-வீலர் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரை  செக் செய்யவும்.
  • டிஜிட்டின் பைக் இன்சூரன்ஸ் புதுப்பித்தல் பக்கத்தைப் பார்வையிடவும்.
  • உங்கள் டூ-வீலர் விவரங்களைப் பூர்த்தி செய்து, Get Quote பட்டனை கிளிக் செய்வதன் மூலம் இதைத் தொடரவும். நீங்கள் புதுப்பிக்கப்பட்ட சரியான தகவல்களை உள்ளிட்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.
  • நீங்கள் விரும்பும் பாலிசி வகையை அதாவது தேர்டு பார்ட்டி பாலிசி அல்லது காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) பாலிசியை தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் டூ-வீலருக்கான சரியான ஆட்-ஆன்களை தேர்ந்தெடுக்கவும் (விரும்பினால்).
  • தேவையான விவரங்களைப் பகிர்ந்து பணம் செலுத்துங்கள்.
  • பணம் செலுத்தியதும், PDF வடிவில் டிஜிட்டல் பாலிசியைப் பெறுவீர்கள். உங்களது தேர்டு பார்ட்டி பாலிசி உடனடியாகச் செயல்படுத்தப்படும். எவ்வாறாயினும், உங்கள் டூ-வீலரின் படங்களை/வீடியோக்களை ஆரம்பகட்ட ஆய்வுக்காக எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவீர்கள். ஒப்புதலுக்குப் பிறகு உங்கள் முழுமையான பாலிசியும் (ஓன் டேமேஜஸ் உட்பட) செயல்படுத்தப்படும்.
  • டிஜிட்டல் நகலுக்கு PDF-ஐ டவுன்லோடு செய்து பாதுகாப்பாக வைத்திருக்கவும்.

காலாவதியான டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை ஆஃப்லைனில் புதுப்பிக்க

டூ-வீலர்களின் ஆன்லைன் இன்சூரன்ஸ் ரினீவல் பாலிசி உங்களுக்கு வசதியாக இல்லை என்றால், நீங்கள் விரும்பும் இன்சூரன்ஸ் சர்வீஸ் ப்ரொவைடரின் அருகிலுள்ள கிளையையும் பார்வையிடலாம். இருப்பினும், தற்போதைய ஊரடங்கு மற்றும் தொற்றுநோய் பரவலைக் கருத்தில் கொண்டு, உங்களது டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை  ஆன்லைனில் புதுப்பிப்பதே சிறந்தது.

உங்கள் பைக் இன்சூரன்ஸ் பாலிசி காலாவதியாகும்போது மனதில் கொள்ள வேண்டியவை

உங்கள் காலாவதி தேதி நெருங்கியதும், உங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். இருப்பினும், சில சமயங்களில் இதற்கு உங்களுக்கு சிறிது நேரம் எடுத்துக் கொள்ளலாம், அதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

உங்கள் முடிவை எடுப்பதற்கு முன்பு சில கார் இன்சூரர்களை மதிப்பீடு செய்ய விரும்பலாம் அல்லது உங்கள் பின்னணி சரிபார்ப்பு மற்றும் சுய ஆய்வு செயல்முறை முடியும் வரை உங்களுக்கு நேரம் தேவைப்படலாம்.

உங்கள் பைக் இன்சூரன்ஸ் பாலிசி ஏற்கனவே காலாவதியாகிவிட்டாலோ அல்லது செயலில் இல்லாமலோ இருந்தால், உங்களையும் உங்கள் பைக்கையும் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் செய்யவேண்டிய சில விஷயங்கள்:

  • செல்லுபடியாகும் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி இல்லாமல் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். எல்லாவற்றிற்கும் மேலாக, என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் ஒரு போலீஸ்காரரிடம் பிடிபட்டால் அல்லது ஒரு சிறிய விபத்தில் சிக்கினால், இதுபோன்ற ஆபத்துகள் தேவையற்றவை!
  • உங்களின் முந்தைய பாலிசியில் இருந்து உங்கள் பைக் இன்சூரன்ஸ் ப்ரொவைடரை மாற்றுவதில் உங்களுக்கு குழப்பம் இருந்தால், ஆன்லைனில் உங்கள் விருப்பங்களை மதிப்பீடு செய்து, தகவலறிந்த முடிவை எடுங்கள்.
  • உங்களால் முடிந்தால், ஆன்லைனில் உங்கள் பாலிசியைப் புதுப்பிக்கும்போது, நீண்ட கால பாலிசியைத் தேர்வு செய்யவும். இந்த வழியில் புதுப்பித்தல்களைப் பற்றி நாம் சில காலம் கவலைப்படத் தேவையில்லை.
  • உங்கள் டூ-வலர் இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பிக்க, உங்கள் பைக்கின் ஆவணங்கள் சரியான இடத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு அந்த ஆவணங்களோ அல்லது அவற்றிலிருந்து சில விவரங்களோ தேவைப்படலாம்.

காலாவதியான பைக் இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பித்தல் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நீண்ட கால பைக் இன்சூரன்ஸ் பாலிசியை நான் அதிகபட்சமாக எவ்வளவு காலத்திற்குப் பெற முடியும்?

டூ-வீலருக்கு, ஒரே நேரத்தில் 5 ஆண்டுகள் வரை நீண்ட கால பாலிசியை பெறலாம்.

இந்தியாவில் பைக் இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டினால் என்ன அபராதம்?

இந்தியாவில் டூ-வீலர் இன்சூரன்ஸ்  இல்லாமல் நீங்கள் பயணம் செய்வது கண்டறியப்பட்டால், முதல் முறை ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். மீண்டும் பிடிபட்டால் ரூ. 2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

எனது பைக் இன்சூரன்ஸ் பாலிசியை காலாவதி தேதிக்கு முன் புதுப்பிக்க முடியுமா?

ஆம், புதுப்பிக்கலாம்! எந்த பாலிசி கவரும் இல்லாமல் இருப்பதைத் தவிர்ப்பதுதான் முக்கியமான விஷயம். உங்களின் தற்போதைய பாலிசி காலாவதியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு உங்கள் பாலிசியை புதுப்பித்துக்கொள்வது சிறந்தது.

எனது பைக் இன்சூரன்ஸ் பாலிசி காலாவதி தேதியை நான் எப்படி செக் செய்வது?

நீங்கள் உங்கள் பைக் இன்சூரன்ஸ் பாலிசியை டிஜிட்டுடன் வாங்கியிருந்தால், உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலில் உங்கள் பைக் இன்சூரன்ஸ் பாலிசி ஆவணத்தைப் பெற்றிருப்பீர்கள். அதிலேயே காலாவதி தேதியை நீங்கள் காணலாம்.