டென்டல் கவர் உடன் கூடிய ஹெல்த் இன்சூரன்ஸ்

Zero Paperwork. Quick Process.

டென்டல் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது உங்களுக்குத் தேவையான பல் தொடர்பான சிகிச்சைக்கு ஏற்படக்கூடிய செலவுகளை ஈடு செய்ய உதவும்  ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் ஆகும். பல் சிகிச்சைகள் மற்றும் பல் பராமரிப்பதற்கு ஆகும் செலவுகளை பல ஸ்டாண்டர்ட் ஹெல்த் இன்சூரன்ஸ்கள் ஈடு செய்யாது. இது போன்ற செலவுகள் அனைத்தும் எங்கள் டிஜிட்-ன் 'டிஜிட் ஹெல்த் கேர் பிளஸ் பிளான்'-ன்  ஒரு பகுதியான ஓபிடி (OPD) பலனில் சேர்த்துள்ளோம்.

உங்களுக்கு ஏன் டென்டல் ஹெல்த் இன்சூரன்ஸ் தேவை?

1

புதுமைகள், விலை உயர்வு, விலை உயர்ந்த சாதனங்களின் பயன்பாடு மற்றும் ஆய்வு வேலைகள் போன்றவை காரணமாக பற்களுக்கான சிகிச்சைகள் எப்பொழுதுமே விலை உயர்ந்தாக இருக்கிறது.   (1)

2

இந்தியாவில் சிகிச்சைக்கு ஆகும் மொத்த மருத்துவச் செலவில் 62% வரையிலான தொகை  ஓபிடி (OPD)-க்கான செலவே ஆகும்! (2)

3

உலகளவில், 3.9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாய் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்று உலக பல் மருத்துவக் கூட்டமைப்பு (வேர்ல்ட் டென்டல் ஃபெடரேஷன்/World Dental Federation) கூறுகிறது! (3)

பல் சிகிச்சைகளுக்கு ஆகும் செலவுகளை ஈடு செய்யும் டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸின் சிறப்பு அம்சங்கள் என்ன?

எளிமையான ஆன்லைன் செயல்முறைகள்: பல் சிகிச்சைகளுக்கான செலவுகளை ஈடு செய்யும் ஹெல்த் இன்சூரன்ஸை வாங்குவது முதல் டென்டல் ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைம் செய்வது வரை அனைத்துமே  எளிதாக, டிஜிட்டல் முறையில், விரைவாக  மற்றும் சிக்கல் எதுவும்  இல்லாமல் பெற்றிடலாம்! நீங்கள் கிளைம் செய்யும் போது ஆவணங்கள் (பேப்பர்லெஸ்) எதுவும் சமர்ப்பிக்கத் தேவை இல்லை!

பெருந்தொற்றிற்கு காப்புறுதி வழங்குகிறது: “எதுவுமே நிரந்தரம் இல்லை” என்பதை 2020 ஆம் ஆண்டு நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. கோவிட் -19 அல்லது வேறு ஏதோ ஒரு வைரஸினால் ஏற்பட்ட  பாதிப்பாக  இருந்தாலும், அதாவது தொற்றுநோய்கள் எதுவாக இருந்தாலும் அதற்கான சிகிச்சைக்கு ஆகும் செலவுகள் யாவுமே இதில் அடங்கும்.

வயது அடிப்படையிலான  கோ-பேமெண்ட்  இல்லை: பல் சிகிச்சைக்கான செலவுகளை  ஈடு செய்யும் ஓபிடி-யோடு (OPD) கிடைக்கும் எங்கள் ஹெல்த் இன்சூரன்ஸில், வயது அடிப்படையிலான கோ-பேமெண்ட் எதுவும்  இல்லை. அதாவது நீங்கள் கிளைம் செய்யும் போது உங்கள் சார்பில் நீங்கள் எவ்வித பணமும் செலுத்த வேண்டியதில்லை.

குமுலேடிவ் போனஸ்: குறிப்பிட்ட ஆண்டில் நீங்கள் எந்த கிளைமும் செய்யவில்லை என்றாலும் கூட இதனால் நீங்கள் பயனடையலாம்! நீங்கள் கிளைம் செய்யாத ஒவ்வொரு ஆண்டிற்கும் போனஸ் பெறுவீர்கள்.

வருடாந்திர இலவச ஹெல்த்  செக்அப்: அவ்வப்போது உடல் பரிசோதனைகள் செய்து கொள்வதன் மூலம் பல் சம்பந்தமான பிரச்சினைகள் உட்பட பெரும்பாலான உடல்நலப் பிரச்சினைகள் தவிர்க்கப்படலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த ஹெல்த் இன்சூரன்ஸ்-ஐ பெறுவதன் மூலம் நீங்கள் ஹெல்த் செக்அப்-ஐ இலவசமாக  செய்து கொள்ளும்  வாய்ப்பினை கூடுதலாக பெறுகிறீர்கள். இதன் மூலம் உங்கள் உடல் நிலை குறித்து நீங்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியும்!

நீங்கள் விரும்பும் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறலாம்: இந்தியாவில் உள்ள எங்கள் நெட்வொர்க்கில் இருக்கும் 10500+ மருத்துவமனைகளிலிருந்து உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்து, அதில் சிகிச்சை பெறுவதன் மூலம் கேஷ்லெஸ் கிளைம் அல்லது சிகிச்சைக்கான செலவுகளை திரும்பி பெறும் வசதியை அனுபவிக்கலாம்.

பல் சிகிச்சைக்கான செலவுகளை ஈடு செய்யும் ஓபிடி (OPD) கவருடன் கிடைக்கும் டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸில் எந்தெந்த செலவுகள் அடங்கும்?

ஸ்மார்ட் + ஓபிடி

டென்டல் ட்ரீட்மெண்ட்கள்

பல் மருத்துவர் மூலம் பல் வலியிலிருந்து உடனடி நிவாரணம் பெற எடுத்துக்கொண்ட வெளிநோயாளர் பல் சிகிச்சை; எக்ஸ்ரே எடுத்தல், பற்களை நீக்குதல், பற்களில் அமல்கம் கலவை கொண்டு நிரப்புதல்கள், பற்களின் வேர்களில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் மற்றும் இவற்றிற்காக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான பற்கள் சீரமைப்பு ஆகியவற்றிற்கு மட்டுமே நாங்கள் பணம் செலுத்துவோம்.

ஓபிடி (OPD) கவரேஜ்

தொழில்முறை கட்டணங்கள்

எந்தவொரு நோய் ஏற்பட்ட பின்னர் உங்கள் ஆரோக்கியத்தை பரிசோதிப்பதற்கு மருத்துவ பயிற்சியாளர்கள் உடன் நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருத்துவ ரீதியான ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகளுக்கான கட்டணம்.

நோய் கண்டறிவதற்கான கட்டணங்கள்

மருத்துவரீதியாக பரிந்துரைக்கப்பட்டு நோயறிதல் மையத்தின் மூலம் சிகிச்சைக்காக நோயறிதலை கண்டறிய பயன்படுத்தப்படும் பின்வரும் வெளிநோயாளிக்கான செயல்முறைகள்: எக்ஸ்ரே, நோயியல், மூளை மற்றும் உடல் ஸ்கேன் (எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன்) போன்றவைகளுக்கு காப்பீடு அளிக்கபப்டும்.

அறுவை சிகிச்சைகள்

POP, மருத்துவ தையல், விபத்தினால் ஏற்பட்ட காயத்திற்கு ட்ரெஸ்ஸிங் செய்தல் மற்றும் விலங்குகள் கடித்தல் தொடர்பான வெளிநோயாளர் நடைமுறைகள் போன்ற சிறிய அறுவை சிகிச்சைகள் மருத்துவப் பயிற்சியாளரால் மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்கான செலவுகள்.

மருந்துகளுக்கான பில்கள்

உங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கான செலவுகள்.

கேட்கும் கருவிகள்

தீவிர செவிப்புலன் நிலைகளுக்கான காது கேட்கும் கருவிகளுக்கு காப்பீடு அளிக்கப்படுகிறது.

பிற கவரேஜ்கள்

கொரோனா வைரஸ் தாக்குதல் உட்பட எந்த காரணத்திற்காகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பத்திருந்தால்

இது ஒரு நோய், விபத்து அல்லது ஒரு தீவிர நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான செலவுகளை ஈடுசெய்கிறது. உங்கள் காப்பீட்டுத் தொகைக்குள் மொத்தச் செலவுகள் இருக்கும் வரை, பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு இது பயன்படுத்தப்படலாம்.

டே-கேர் செயல்பாடுகள்

உடல்நலக் காப்பீடுகள் பொதுவாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மருத்துவச் செலவுகளை உள்ளடக்கும். தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் தேவைப்படும் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சைகளை இது உள்ளடக்குகிறது.

வயது அடிப்படையிலான கோ-பேமெண்ட் இல்லை

கோ -பேமெண்ட் என்பது, உடல்நலக் காப்பீட்டுக் கோரிக்கையின் போது, உங்கள் சேமிப்பிலிருந்து நீங்கள் செலுத்த வேண்டிய தொகையைக் குறிக்கிறது. எங்கள் திட்டங்களில், வயது அடிப்படையிலான கோ-பேமெண்ட் செலுத்துதல் எதுவும் இல்லை!

அறை வாடகைக்கு வரம்பு இல்லை

வெவ்வேறு வகை அறைகள் வெவ்வேறு வாடகைகளைக் கொண்டுள்ளன. ஹோட்டல் அறைகளுக்கு எப்படி கட்டணங்கள் உள்ளனவோ அது போல. டிஜிட்டில், சில திட்டங்களில் உங்கள் காப்பீட்டுத் தொகைக்குக் கீழே இருக்கும் வரை, அறை வாடகைக்கு வரம்பு இல்லை என்ற பயனை உங்களுக்கு வழங்குகிறது.

ஐசியு (ICU) அறை வாடகைக்கு வரம்பு இல்லை

ஐசியூ (தீவிர சிகிச்சை பிரிவுகள்) தீவிர நோயாளிகளுக்கானது. ஐசியூ-களில் கவனிப்பின் நிலை அதிகமாக உள்ளதால் அதற்கான வாடகையும் அதிகமாக உள்ளது. உங்கள் காப்பீட்டுத் தொகைக்குக் கீழே இருக்கும் வரை, டிஜிட் உங்கள் ஐசியூ வாடகைக்கு எந்த வரம்பையும் வரையறை செய்வதில்லை.

குமுலேடிவ் போனஸ்

ஒவ்வொரு கிளைம் செய்யப்படாத வருடத்திற்கும் இலவச வெகுமதியைப் பெறுங்கள். சில காப்பீட்டு திட்டங்கள், ஒரு வருடத்தில் நீங்கள் எந்த கிளைமும் செய்யவில்லை என்றால், அடுத்த வருடத்தில் உங்களுக்கு தள்ளுபடியை வழங்குகின்றன. இந்த கூடுதல் தள்ளுபடி குமுலேட்டிவ் போனஸ் என்று அழைக்கப்படுகிறது.

கிளைம் செய்யாத ஒவ்வொரு ஆண்டிற்கும் 10% போனஸ் (50 % வரை)

சாலை ஆம்புலன்ஸ் கட்டணங்கள்

சாலை ஆம்புலன்ஸ் கட்டணம் காப்பீடு அளிக்கப்படுகிறது

இலவச வருடாந்திர ஹெல்த் செக்அப்

உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை நீங்கள் அறிந்திருப்பதை உறுதிசெய்ய வருடாந்திர சுகாதார பரிசோதனைகள் முக்கியம். இது ஒரு பாலிசி புதுப்பித்தலின் பயனாகும், இதன் மூலம் நீங்கள் உங்கள் விருப்பப்படி எந்த மருத்துவமனையிலும் வருடாந்திர மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சோதனைகளுக்கு ஆகும் செலவினங்களுக்கு காப்பீடு பெற அனுமதிக்கிறது.

போஸ்ட் ஹாஸ்ப்பிடலைசேஷன் லம்ப்சம்

அனுமதிக்கப்பட்ட பின்னர் உங்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் ஈடுகட்ட நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு பயன் இது. பில்கள் தேவையில்லை. இந்த பயனை பயன்படுத்த அல்லது திருப்பிச் செலுத்தும் செயல்முறையின் மூலம் ஸ்டாண்டர்ட் போஸ்ட் ஹாஸ்பிடலைசேஷன் பெனிஃபிட்டை நீங்கள் தேர்வு செய்யலாம்.

சைக்யாட்ரிக் இல்நஸ் கவர்

ஒரு அதிர்ச்சியின் காரணமாக, மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தால், அதுக்காகும் செலவு இந்த நன்மையின் கீழ் வழங்கப்படும். இருப்பினும், வெளிப்புற நோயாளி ஆலோசனைகளுக்கு ஆகும் செலவு இதன் கீழ் வராது.

பேரியாட்ரிக் சர்ஜரி (எடை குறைப்பு அறுவை சிகிச்சை)

உடல் பருமன் (பிஎம்ஐ > 35) காரணமாக உறுப்புப் பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கு இந்த கவரேஜ் உள்ளது. இருப்பினும், உடல் பருமன் உணவுக் கோளாறுகள், ஹார்மோன்கள் அல்லது வேறு ஏதேனும் சிகிச்சையளிக்கக்கூடிய நிலைமைகள் காரணமாக இருந்தால், இந்த அறுவை சிகிச்சை செலவு ஈடுசெய்யப்படாது.

நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய கூடுதல் கவர்கள்

நியூ பார்ன் பேபி கவருடன் கூடிய மெட்டர்னிட்டி பெனிஃபிட்

அடுத்த இரண்டு வருடங்களில் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டால், இதை நீங்கள் தேர்வு செய்யலாம். இது குழந்தைப் பிரசவம் (மருத்துவ ரீதியாக அவசியமான கரு-கலைத்தல் உட்பட), கருவுறாமைக்கான செலவுகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் முதல் 90 நாட்கள் வரை கவரேஜ் ஆகியவற்றை உள்ளடக்கியது.

சோன் அப்கிரேடு

ஒவ்வொரு நகரமும் சோன் A, B அல்லது C. சோன் A-இல் டெல்லி மற்றும் மும்பை உள்ளது. B சோனில் பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா போன்ற நகரங்கள் உள்ளன. மருத்துவ செலவின் அடிப்படையில் சோன்கள் பிரிக்கப்பட்டுள்ளன. சோன் A நகரங்களில் அதிக மருத்துவச் செலவுகள் இருப்பதால், இந்த நகரங்களில் உடல்நலக் காப்பீட்டின் கீழ் சிகிச்சை பெறுவதற்கான பிரீமியம் சற்று அதிகமாக உள்ளது. நீங்கள் வசிக்கும் இடத்தை விட பெரிய நகரத்தில் சிகிச்சை பெற விரும்பினால், அதற்கான திட்டத்தை நீங்கள் இந்த கவர் மூலம் நீங்கள் மேம்படுத்தலாம்.

Get Quote

இதில் எது அடங்காது?

காஸ்மெட்டிக் அறுவைசிகிச்சைகள், டெண்டுர்ஸ் (dentures), டென்டல் புரோஸ்தெசிஸ் (dental prosthesis), டென்டல் இம்பிளான்ட்ஸ் (dental implants), ஆர்த்தோடோன்டிக்ஸ் (orthodontics), ஆர்த்தோக்னாதிக் (orthognathic) அறுவை சிகிச்சைகள், தாடை சீரமைப்பு  (ஜா அலைன்மென்ட்) அல்லது டெம்போரோமாண்டிபுலர் (தாடை), மேல் மற்றும் கீழ் தாடை எலும்பு அறுவை சிகிச்சை மற்றும் கடுமையான காயம் அல்லது புற்றுநோயினால் ஏற்பட்ட காயங்களை சீர் செய்வதற்காக  டெம்போரோமாண்டிபுலர் (தாடை) அறுவைசிகிச்சை ஆகிய பல் சிகிச்சைகளுக்கு ஆகும் செலவுகள் எதுவும் இந்த இன்சூரன்ஸ் ஈடு செய்யாது

இதைத் தவிர கண்ணாடிகள், கான்டாக்ட் லென்ஸ்கள் மற்றும் பிசியோதெரபி, காஸ்மெட்டிக் செயல்முறைகள், வாக்கர்ஸ், பிபி (BP) மானிட்டர்கள், குளுக்கோமீட்டர்கள், தெர்மாமீட்டர்கள் போன்ற ஆம்புலேட்டரி சாதனங்கள், டயட்டீஷியன் கட்டணம், வைட்டமின்கள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் ஆகியவற்றுக்கான செலவுகள் எதுவும் இந்த ஓபிடி (OPD) கவரில் அடங்காது.  

கிளைம் செய்வது எப்படி?

ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைம்ஸ்  - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் 1800-258-4242 என்ற எண்ணில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம் அல்லது healthclaims@godigit.com இல் எங்களுக்கு இமெயில் அனுப்பலாம். மேலும் நீங்கள் சிகிச்சைக்கான செலவை பெறுவதற்காக உங்கள்  மருத்துவமனை பில்கள் மற்றும் அதற்கு தொடர்பான அனைத்து ஆவணங்களை எங்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு ஏதுவாக, அதை பதிவேற்றுவதற்கான லிங்க்-ஐ நாங்கள் அனுப்புவோம்.

கேஷ்லெஸ் கிளைம்ஸ்  -  நெட்வொர்க்கில் இருக்கும் மருத்துவமனைகளில் இருந்து ஒன்றை தேர்வு செய்யுங்கள். நெட்வொர்க் ஹாஸ்பிடல்களின் பட்டியலை இங்கே காணலாம். மருத்துவமனை உதவி மையத்தில் இ-ஹெல்த் கார்டைக் காட்டி, கேஷ்லெஸ் கோரிக்கைப் படிவத்தைக் கேட்கவும்.  அனைத்தும் சரியாக இருந்தால், உங்கள் கிளைமுக்கான செயல்முறைகள்  உடனடியாக தொடங்கும்.  

நீங்கள் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக கிளைம் செய்திருந்தால்,  புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனமான ஐசிஎம்ஆர் (ICMR)-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மையத்திலிருந்து தொற்று உறுதி ஆனதற்கான சோதனை அறிக்கை பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

பல் சிகிச்சைக்கான செலவுகளை ஈடு செய்யும் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் வைத்திருப்பதனால் ஏற்படும் நன்மைகள்

உங்கள் பல் சிகிச்சைக்கு ஆகும் செலவுகளை எளிதில் சமாளிக்க உதவுகிறது

பற்களுக்கான சிகிச்சைகள் அனைத்தும் விலை உயர்ந்ததாக இருக்கலாம். ஏன்னென்றால், இந்தத் துறையில் புதிய  கண்டுபிடிப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதாலும், சிகிச்சை அளிப்பதற்காக விலையுயர்ந்த சாதனங்கள்  தேவைப்படுவதாலும், ஆய்வகங்களின் பங்கும் அதிகமாக இருப்பதாலும், பல் சிகிச்சைகளுக்கான மருத்துவ செலவு அதிகாமாக இருக்கிறது. டென்டல் கவரேஜ் உடன் இருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸை பெறுவதனால் உங்கள் பல்  சிகிச்சைக்கு ஆகும் செலவுகளை எளிதில்  சமாளிக்கலாம். அதே சமயம் உங்கள் பற்களின் நலனை பாதுகாக்கலாம். 

உங்கள் பல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது!

பெரும்பாலான மக்கள் பற்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவதில்லை. இதுவே நாளைடைவில் வாய் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. வருடத்திற்கு ஒரு முறையாவது பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம் என்று வல்லுநர்கள் பரிந்துரை செய்கின்றனர். இந்தியாவில், 67% மக்கள்  பல் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டிய அவசியம் வந்தால் மட்டுமே அவரை அணுகி ஆலோசனை பெறுகின்றனர் என்று தெரியவந்துள்ளது. எதிர்பாராமல் ஏற்படும் பல் பிரச்சனைகளுக்கான சிகிச்சைக்கு ஆகும் செலவுகளை ஈடு செய்ய டென்டல் ஹெல்த் இன்சூரன்ஸ் உதவி செய்யும். மேலும், சிகிச்சைக்கு ஆகும் செலவை பற்றி கவலைப்படாமல், சரியான நேரத்தில் அதற்குரிய சிகிச்சையைப் பெறுங்கள்!

ஸ்டாண்டர்ட் இன்சூரன்ஸ் அளிக்கும் பலன்களை காட்டிலும் அதிகமான நன்மைகள்

பெரும்பாலான ஸ்டாண்டர்ட் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் பல் சிகிச்சைக்கு ஆகும் செலவுகளை ஈடு செய்யாது. ஸ்டாண்டர்ட் இன்சூரன்ஸ் ஈடு செய்யாத பல செலவுகளை ஓபிடி (OPD) உடன் இருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் ஈடு செய்யும். ஒரு ஸ்டாண்டர்ட் ஹெல்த் இன்சூரன்ஸ் அளிக்கும் பலன்களோடு சேர்த்து பல் சிகிச்சைக்கு ஆகும் செலவுகள் உட்பட ஓபிடி (OPD ) -க்காக செய்த செலவுகளையும் திரும்பப் பெறலாம்.

டென்டல் ஹெல்த் இன்சூரன்ஸ் அளிக்கும் கூடுதல் நன்மைகள்

மேலே குறிப்பிட்டுள்ளபடி, பல் சிகிச்சைக்கான செலவுகளை ஈடு செய்யும் இன்சூரன்ஸ்  என்பது பல் சிகிச்சைகளுக்கான செலவுகளை  ஈடு செய்வதோடு மட்டுமல்லாமல் டே-கேர் செய்முறைகள், கோவிட் உட்பட வேறு ஏதேனும் நோய் பாதிப்பிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கான செலவுகள், இலவச செக்அப், வரம்பு இல்லாத அறை வாடகை போன்ற எண்ணற்ற கூடுதல் பலன்களைப் பெறலாம்.  

மற்ற ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் போன்று இதிலும் வரிச் சேமிப்பைப் பெறுங்கள்!

ஹெல்த் இன்சூரன்ஸின்  சிறப்பு அம்சம் என்னவென்றால், அது  உடல்நலத்தை பேணுவதற்காக நீங்கள்  செலவு செய்யும் தொகையை ஈடு செய்யும். மேலும்  நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸிற்காக செலுத்தும் பிரீமியத்தின் அடிப்படையில், ரூ. 25,000 வரையிலான வருடாந்திர வரிச் சேமிப்பு போன்ற பிற பலன்களையும் பெறலாம்! 

பல் சுகாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்துவது எப்படி?

நீங்கள் இதை குழந்தை பருவத்திலிருந்தே கேள்விப்பட்டிருக்கலாம், இது உண்மையும் கூட. ஆனால், இதை அடிக்கடி நினைவுபடுத்த வேண்டிய சூழல் இப்போது எழுந்துள்ளது. ஆதலால், இதை மீண்டும் பகிர்கிறோம். வாய் பகுதியை சுத்தமாக வைத்திருக்க ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பற்களை சுத்தம் செய்ய வேண்டும். மேலும்,  பற்களுக்கு இடையே உண்ணும் உணவால் வளரும்  பாக்டீரியாக்களை  விரட்ட அவ்வப்போது  ஃப்ளாஸ் (floss) செய்து கொள்ளலாம்.

பல் பிரச்சனைகள் ஏதுமில்லை என்றாலும், வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறையாவது  உங்கள் பல் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று சுகாதார வல்லுநர்கள் பரிந்துரை செய்கின்றனர். பல சமயங்களில், வலியை உணரும் வரை உள்ளே என்ன நடக்கிறது என்பது  நமக்கு தெரியாது!  வலிகளில் மிகவும் மோசமான ஒன்று பல் வலி என்று அதை அனுபவித்தவர்களுக்கு தெரியும். அவ்வப்போது பல் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் உங்கள் வாய் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்!·

நிறைய தண்ணீர் குடியுங்கள். இது  ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, பல் ஆரோக்கியத்ததை பாதுகாப்பதற்கான சிறந்த வழி ஆகும்.

உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் உடலின் சக்கரை அளவை சரியான அளவில் வையுங்கள். ஏனென்றால், அது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்கள் வாய் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இதை செய்வதன் மூலம்  நீங்கள் ஈறுகளில் ஏற்படும் நோய்களைத் தவிர்த்திடலாம், மேலும், நீங்கள் ஈறு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால்,  அதற்கான சிகிச்சையை உடனடியாக பெறுங்கள்!

புகைப்பிடித்தல் போன்ற புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். அவை உங்கள் நுரையீரலுக்கு மட்டுமல்ல, உங்கள் வாய் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்!

பல் சிகிச்சைக்கான செலவுகளை ஈடு செய்யும் ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

டென்டல் இன்சூரன்ஸ் பல் கால்வாய் சிகிச்சைகளுக்கான (ரூட்கெனால்) செலவுகளையும் ஈடு செய்யுமா?

ஆம், உங்கள் மருத்துவர் அதற்கான அவசியத்தை  வலியுறுத்தி இருந்தால் பல் கால்வாய் (ரூட்கெனால்) சிகிச்சைக்கு ஆகும் செலவுகளை இந்த பல் சிகிச்சைக்கான செலவுகளை ஈடு செய்யும் ஹெல்த் இன்சூரன்ஸ் கவனித்துக் கொள்ளும். 

பல் அகற்றுவதற்கு ஆகும் செலவுகளை இந்த டென்டல் ஹெல்த் இன்சூரன்ஸ் ஈடு செய்யுமா?

ஆம், கடுமையான வலி மற்றும் அசௌகரியம் காரணமாக பல் அகற்றுவதற்கான  சூழல்  எழுவதால், இந்த டென்டல் ஹெல்த் இன்சூரன்ஸ்  அதற்கான செலவுகள் அனைத்தையும் ஈடு செய்யும்.

டென்டல் ஹெல்த் இன்சூரன்ஸ் பல் பதியத்திற்கு (இம்பிளான்ட்ஸ்) ஆகும் செலவுகள் இதில் உள்ளடங்குமா?

இல்லை, இந்த டென்டல் ஹெல்த் இன்சூரன்ஸில் பல் பதியத்திற்கு (இம்பிளான்ட்ஸ்) ஆகும் செலவுகளை  ஈடு செய்யாது.

பிரேஸஸ்களுக்கான செலவுகளை இந்த டென்டல் ஹெல்த் இன்சூரஸ் வழங்கிடுமா?

ஆம்,  இளம் பருவத்தினருக்கான பல் சீரமைப்பபு சிகிச்சைக்கு ஆகும்  செலவுகளை மட்டுமே இந்த டென்டல் ஹெல்த் இன்சூரஸ் ஈடு செய்யும். 

ஓபிடி (OPD) என்றால் என்ன?

நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் எடுத்துக்கொண்ட அனைத்து சிகிச்சைகள் மற்றும் மருத்துவ நடைமுறைகளும் ஓபிடி (OPD-வெளிநோயாளர் பிரிவு) என்று கருதப்படுகின்றது. நீங்கள் எடுத்துக்கொண்ட அனைத்து மருத்துவ ஆலோசனைகளும், நோய்கண்டறிதலும் இதன் கீழ் வரும் 😊 OPD நன்மைகள் பற்றி மேலும் படிக்கலாம்.